மாவீரர் நாள் 2026
வீரவணக்கப் பொதுக்கூட்டம்
வீரவணக்வுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி
நாள்: (கார்த்திகை 11) 27.11.2026 மாலை 04 மணியளவில்
இடம்: அகஸ்தியர்பட்டி - அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி மாவட்டம்
நிதி அளிக்க;👇
https://t.co/7jHflyBVIQ
மாவீரர் நாள் 2026
வீரவணக்கப் பொதுக்கூட்டம்
வீரவணக்வுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி
நாள்: (கார்த்திகை 11) 27.11.2026 மாலை 04 மணியளவில்
இடம்: அகஸ்தியர்பட்டி - ��ம்பாசமுத்திரம்
திருநெல்வேலி மாவட்டம்
நிதி அளிக்க;👇
https://t.co/7jHflyBVIQ
மா��ீரர் நாள் 2026
வீரவணக்கப் பொதுக்கூட்டம்
வீரவணக்வுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி
நாள்: (கார்த்திகை 11) 27.11.2026 மாலை 04 மணியளவில்
இடம்: அகஸ்தியர்பட்டி - அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி மாவட்டம்
நிதி அளிக்க;👇
https://t.co/7jHflyBVIQ
மாவீரர் நாள் 2026
வீரவணக்கப் பொதுக்கூட்டம்
வீரவணக்க உரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி
நாள்: (கார்த்திகை 11) 27.11.2026 மாலை 04 மணியளவில்
இடம்: அகஸ்தியர்பட்டி - அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி மாவட்டம்
நிதி அளிக்க;👇
https://t.co/7jHflyBVIQ
மாவீரர் நாள் 2026
வீரவணக்கப் பொதுக்கூட்டம்
வீரவணக்வுரை:
செந���தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி
நாள்: (கார்த்திகை 11) 27.11.2026 மாலை 04 மணியளவில்
இடம்: அகஸ்தியர்பட்டி - அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி மாவட்டம்
நிதி அளிக்க;👇
https://t.co/7jHflyBVIQ
மாவீரர் நாள் 2026
வீரவணக்கப் பொதுக்கூட்டம்
வீரவணக்வுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி
நாள்: (கார்த்திகை 11) 27.11.2026 மாலை 04 மணியளவில்
இடம்: அகஸ்தியர்பட்டி - அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி மாவட்டம்
நிதி அளிக்க;👇
https://t.co/7jHflyBVIQ
ஆபாச நதி ஓடுகிறது எனப் பொதுக்கூட்ட மேடையிலும், சட்டமன்றத்திலும் ஆவேசமாக முழங்கிய முதல்வர் @TVKVijayHQ அவர்களே!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு உங்கள் MLA குறுஞ்செய்தி அனுப்பியபோது ஆபாச நதி ஓடவில்லையா?
சத்யாபாமாவை திமுகவின் தலைவர் ஸ்டாலின் உருவக்கேலி செய்தபோது பொங்கி எழுந்த நீங்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா பாதிக்கப்பட்டதற்கு எதிராக ஏன் வாய்திறக்கவில்லை? ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்���வில்லை?
பெண்களுக்கு அண்ணனாக இருப்பேன் என மேடையில் பேசியதெல்லாம் வெறும் ஊளை உதார்தானா?
குற்றமிழைத்தத் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, சமூக ஊடகப் பதிவுகளுக்காக தம்பி சாட்டை துரைமுருகன் மீது வழக்குத் தொடுப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
தவெகவைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விமர்சித்ததற்காக நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ள தவெக அரசின் செயல் அடக்குமுறையின் உச்சமாகும். அரசை விமர்சிக்கும் எளிய மக்களின் குரல்வளையை அரசதிகாரத்தின் மூலம் நெரிக்க முயலும் ஆளும் அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
த��்ணீர்ச் சிக்கலை எடுத்துரைக்க வந்தவரைத் தாக்கி அச்சுறுத்தி, மிரட்டிக் காணொளி வெளியிடச் செய்த துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்ற சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வக்கற்ற முதல்வர் விஜய் அவர்கள், ஆளும் அரசை விமர்சிப்போர் மீது வழக்கைப் பாய்ச்சுவது வெட்கக் கேடானது இல்லையா? வழக்குப் பதிவு செய்து சிறைப்படுத்த வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்றும் முதல்வர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சியினரின் ச��ூக ஊடகப் பதிவுகளுக்கும் காணொளிக்கும் மட்டும் இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்? மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் காட்டப்படாத வேகம், யூடியூபில் பேசியதற்காக காட்டப்படுவதன் அரசியல் நோக்கம் என்ன? சமூக ஊடகங்களில் ஆபாசம், அவதூறு, வசைச்சொற்கள், உருவக்கேலி ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், தவெகவினர் மொத்தப் பேரும் சிறையில்தான் இருக்க வேண்டும். அந்தளவில்தான் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. கருத்தைக் கருத்தால் மோத வழியற்ற தவெகவினர், அவதூறையும், ஆபாசத்தையும், தனிமனித தாக்குதலையுமே இணையம் முழுமையாக முன்வைக்கிறார்கள்.
என்னையும், என்னுடைய தம்பி, தங்கைகளையும் குறிவைத்து, தவெகவைச் சேர்ந்தவர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளத்தில் நடத்தும் அந்தவகை ஆபாசத் தாக்குதல்களும், அவதூறுப் பரப்புரைக��ும் காவல்துறையின் கண்களுக்குத் தெரிவதில்லையா? அதுவெல்லாம் குற்றமாகப் படவில்லையா? முதல்வர் விஜய் அவர்களுக்கு அதுவெல்லாம் உறுத்தலாக இல்லையா? எழுதாதப் பதிவுக்காக பேராசிரியர் கலையரசனைக் கைதுசெய்த காவல்துறை, அவதூற���க, ஆபாசமாக எழுதும் தவெகவினர் யாரையாவது கைதுசெய்து இருக்கிறதா?
காரைக்குடியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வெளியான காணொளியில் இடம்பெற்றவரை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக ஊடகங்களில் அவதூறுப் பரப்பினர். அதனைக் காவல்துறை தரப்பே மறுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் அவரைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? அந்தப் பதிவுகளை நீக்கவும், தவறான தகவலுக்கு மறுப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வரே? தம்பி துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்வதில் காட்டும் அதே வேகத்தை, இந்த விவகாரத்திலும் காட்டுவீர்களா?
நாம் தமிழர் கட்சி குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். ந���திமன்றம் அறிவுறுத்திய விவகாரங்களில் தவெக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தொடர்புடைய புகார்களின் தற்போதைய நிலை என்ன? காவல்துறை வெளிப்படையாகப் பதிலளிக்குமா? எங்கள் புகார்களில் நீடிக்கும் தாமதமும், எங்கள் மீதான புகார்களில் காட்டப்படும் அவசரமும் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்றும் அணுகுமுறையைத்தானே வெளிப்படுத்துகின்றன. ஆளுங்கட்சியினர் அவதூறுப் பரப்பினால் கண்டுகொள்ளாது அமைதி காப்பது; எதிர்க்கட்சியினர் பதிவிட்டால் உடனடியாகப் வழக்குப் பதிவு என்பதுதான் இந்த ஆட்சியின் நீதியா?
சட்டம் அனைவருக்கும் பொதுவானது. கட்சிக் கொடியைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்காகக் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஓர் அரசு என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டுமே ஒழிய, தனது கட்சியினரின் செயல்களுக்குப் பாதுகாப்பு அரணாக இர��க்கக்கூடாது. இதனை வலியுறுத்தி, தம்பி கலையரசன் கைதுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த கண்டனக்குரல் முதல்வர் விஜய்யின் செவிகளில் விழவில்லையா?
வழக்குகளைக் காட்டி ஒருநாளும் எங்கள் குரலை ஒடுக்க முடியாது! அதிகாரத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து எங்கள் குரல் இன்னும் இன்னும் வீரியமாய் ஒலிக்கும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் அவர்கள் மதுரை ���யர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றம் தீர்ப்பு.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 'செல்பி பாயிண்டு' களில் பெயர் பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.
@thirumuruganntk
#NTK
#seeman
நாம் தமிழர் கட்சியின் மீன���ர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் அவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் ராமநாதபுரம் பனைக்குளம் கிளை நூலகம் தரமற்ற முறையில் கட்டபட்டுள்ளது இடிந்துவிழும் சூழலில் உள்ளது அதனை உடனடியாக இடித்து புது நூலகம் கட்டித்தர வேண்டும் தற்காலிகமாக வேறு இடத்தில் நூலகம் செயல்பட உத்தரவிடவேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கில் பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரர் நேரில் ��ஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.
#NTK
#seeman
வெள்ளைய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சுதேசிக் கப்பல் விட்டுப் பொருளியல் போர் புரிந்த பெருந்தகை!
தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி சிறைசென்று மாடுகூட இழுக்கத் தயங்கும் செக்கினை இழுத்தச் செம்மல்!
சேர்த்து வைத்த செல்வங்களையெல்லாம் விடுதலைப்போருக்கு ஈ���்து வறுமையில் வாடிய வள்ளல்!
தமிழ் இலக்கியங்களைப் பழுதற கற்றுணர்ந்த தமிழ்ப்பேரறிஞர்!
நமது தியாகமிகு பாட்டனார் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவுநாளில் பெருமிதத்துடனும் அவர் பெரும் புகழ் போற்றுவோம்!
வழிவழியே வரும் மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய நாம்,நமது ��ாட்டனார் வ.உ.சி அவர்கள் காட்டிய வழியில் தாய் மண்ணிற்கும் மக்களுக்கும் உண்மையும், நேர்மையுமாகத் தொடர்ந்து அயராது பாடுபட உறுதியேற்போம்!
கப்பலோட்டிய தமிழர்
நமது பாட்டனார் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு புகழ் வணக்கம்!
கண்ணீர் வணக்கம்!
ஈழத்தாயகத்தின் மூத்த அரசியல் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்கக்காலம் தொட்டு தம��ழின விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துப் போராடியவருமான பெருமதிப்பிற்குரிய ஐயா ம.க. சிவாஜிலிங்கம் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற து��ரச்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் அடைந்தேன்.
தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த வீரமிகு வல்வெட்டித்துறை மண்ணில் பிறந்து, இளம்வயதிலேயே தமிழீழ விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, தமிழினத்தின் விடுதலைக்காகப் போராட்ட வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர் ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தொடக்கக்காலப் போராளியாக, தமிழ்��் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக, வடக்கு மாகாண சபை உறுப்பினராக, வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராக எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தபோதும், பதவிகளைக் கடந்து தமிழின விடுதலையே தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு இறுதிமூச்சுவரை பயணித்த பெருந்தகை அவர்.
தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது அளவற்ற பற்றும் பெருமதிப்பும் கொண்டிருந்த ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள், தேசியத்தலைவரின் தமிழீழ விடுதலை இலட்சியத்திற்கு உறுதுணையாக நின்றவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான அரசியல் ஆதரவையும், தமிழினத்தின் தன்னாட்சி உரிமைக்கான குரலையும் எந்தச் சூழலிலும் கைவிடாதவர். எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும், எத்தனை அச்சுறுத்தல்கள�� எழுந்தாலும், தமிழினத்தின் உரிமைக்காக உரக்கக் குரலெழுப்புவதிலிருந்து ஒருபோதும் பின்வாங்காத பெருந்துணிச்சலுக்குச் சொந்தக்காரர்.
குறிப்பாக, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்பேரழிவுக்குப் பின்னர், ஈழத்தாயகமே அச்சத்திலும் அடக்குமுறையிலும் உறைந்திருந்த காலத்தில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நினைவுகளை அழித்தொழிக்க முயன்றவர்களுக்கு எதிராகத் துணிந்து நின்றவர் ஐயா சிவ��ஜிலிங்கம் அவர்கள். மாவீரர் நாள் நினைவேந்தல்கள், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்கள், ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டங்கள் என எதற்கும் அஞ்சாது முன்னின்று களமாடியவர். விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை அழித்துவிடலாம் என்று நினைத்தவர்களுக்கு, அதை நினைவுகூர்ந்து காப்பதும் ஒரு போராட்டம்தான் என்பதைத் தன் வாழ்வால் உணர்த்தியவர்!
எல்லாவற்றிற்கும் மேலாக, நமது தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த அன்னை பார்வதி அம்மையார் அவர்கள் உடல்நலிவுற்று மருத்துவச் சிகிச்சைக்காகத் தவித்தபோது, அவருக்கு உரிய மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள் மேற்கொண்ட விடாமுயற்சிகள் எவராலும் மறக்கவியலாதவை. அன்னையார் தமிழகத்திற்கு வந்து சிகிச்சை பெறுவ���ற்காகப் பல்வேறு தடைகளையும் அரசியல் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு தொடர்ந்து போராடியதோடு, இறுதிக்காலத்தில் அவரை அன்போடும் அக்கறையோடும் கவனித்துக்கொண்ட அவரது மனிதநேயப் பேருள்ளம் என்றும் போற்றுதலுக்குரியது.
தமிழீழ விடுதலைக்காக மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலனுக்காகவும் அக்கறைகொண்டு செயல்பட்ட ஐயா அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மீதும் அதன் கொள்கை இலட்சியங்���ளின் மீதும் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டிருந்தவர். தமிழ்த்தேசிய அரசியல் தமிழகத்தில் வலுப்பெற வேண்டும் என்பதில் பெருவிருப்பம் கொண்டிருந்தவர். என் மீதும் தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பையும் பாசத்தையும் அக்கறையையும் கொண்டிருந்தவர். அரசியல் உறவையும் கடந்து ஓர் அன்புமிகு மூத்த உறவாக அவர் காட்டிய நேசமும், என் மீது கொண்டிருந்த அக்கறையும் என் நெஞ்சில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, ஓர் அரசியல் தலைவராக, ஒரு விடுதலைப் போராட்ட வீரராக மட்டுமல்ல; தமிழீழ விடுதலை எனும் உயரிய இலட்சியத்தை இறுதிமூச்சுவரை இதயத்தில் சுமந்த தமிழினத்தின் உண்மையான பற்றாளராக வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார் ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள்!
தமிழினத்தின் விடுதலைக்காகத் தனது வாழ்நாளையே அர்ப்பணித்துப் போராடிய பெருமதிப்பிற்குரிய ஐயா சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவால் பெருந்துயருற்றுள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ��ழத்தாயக மக்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ்த்தேசிய உறவுகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு, அவருக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
"நான் ஜீரோ.. HERO கிட்ட கேளுங்க"
கர்நாடக மேகதாது அணை குறித்த கேள்விக்கு சீமான் பளிச் பதில்!
Seeman | Mekedatu Dam | Karnataka
#NaamTamilar#NewsTamil24x7
அன்புக் குழந்தைகளே!
தாய்த்தமிழை நேசியுங்கள்! உயிர்களிடத்தில் இரக்கம் கொள்ளுங்கள���! அறிவோடும் அறத்தோடும் வளருங்கள்!
நீங்கள் எண்ணித் துணியும் நற்செயல்களிலிருந்தே ஒரு புதிய உலகம் பிறக்கட்டும்!
என் உயிருக்கினிய அன்புக் குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
குழந்தைகளின் சின்னஞ்சிறு விழிகளில் ஆயிரம் கனவுகள்!
கள்ளமில்லாச் சிரிப்பில் உலகின் அத்தனை அழகுகள்!
அன்பும் அறிவும் நிறைந்து, அச்சமின்றி விளையாடி, விரும்பியதைக் கற்று, கனவுகளை நோக்கி மகிழ்வுடன் வளரட்டும் நம் குழந்தைகள்!
அ��ர்களின் கேள்விகளுக்குச் செவிகொடுப்போம்; திறமைகளை ஊக்குவிப்போம்; பாதுகாப்பான, சமத்துவமான உலகை அவர்களுக்காக உருவாக்குவோம்!
குழந்தையின் கையில் புத்தகமும், நெஞ்சில் துணிவும், விழிகளில் கனவும் இருக்க வேண்டும்! பசியும் வறுமையும் அச்சமும் அவர்களின் பிஞ்சுப் பருவத்தைப் பறிக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது!
சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து சக மனிதரை நேசிக்கவும், தாய்மொழியைப் போற்ற��ும், இயற்கையைக் காக்கவும் நம் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்போம்!
கேள்வி கேட்கும் குழந்தைகளை ஊக்குவிப்போம்! அவர்களின் தனித்திறனை மதிப்போம்! நம் ஆசைகளை அவர்கள் மீது திணிக்காமல், அவர்களது கனவுகளுக்குத் துணை நிற்போம்!
அன்புக் குழந்தைகளே!
தாய்த்தமிழை நேசியுங்கள்! உயிர்களிடத்தில் இரக்கம் கொள்ளுங்கள்! அறிவோடும் அறத்தோடும் வளருங்கள்!
நீங்கள் எண்ணித் துணியும் நற்செயல்களிலிர��ந்தே ஒரு புதிய உலகம் பிறக்கட்டும்!
என் உயிருக்கினிய அன்புக் குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
"மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் என கூறும் காங்கிரசுடன் தவெக எதற்கு கூட்டணி வைத்துள்ளது?" - சீமான்
Mekedatu Dam | TVK | Congress | Cauvery Issue | Kallakurichi MLA
#Newstamil24x7#Seeman#NTK
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கும் கோரிக்கையை நிறைவேற்றாமல் 20 ஆண்டுகளாகக் கிடப்பில் வைத்திருக்கும் மத்திய அரசின் அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில், தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க வேண்டுமென்ற நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.
இந்திய அரசியலமைப்பின் கூறு 348(2) மற்றும் மொழிச் சட்டத்தின் பிரிவு 7 ஆகியவை குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் மாநில மொழிகளை உயர்நீதிமன்ற மொழியாக்குவதற்கு வழிவகை செய்கின்றன. இதன் அடிப்படையில் 1950, 1969, 1971, 1972 ஆகிய ஆண்டுகளில் முறையே ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் இந்தி உயர்நீதிமன்ற மொழியாக ஆக்கப்பட்டது.
ஆனால், மேற்குறிப்பிட்ட மாநிலங்களைப் போலவே வங்காளம், தமிழ்நாடு, குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களும் முறையே 1997, 2006, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் தங்களது மாநில மொழிகளை உயர்நீதிமன்ற மொழியாக்கக் கோரிக்கை வைத்தும், உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி, அக்கோரிக்கைகளை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் மத்திய அரசு தொடர்ந்து முடக்கி வைத்திருப்பது மொழிச் சமத்துவத்திற்கு எதிரான செயலாகும்.
1965ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கூட்டத்தில், மாநில மொழிகளை உயர்நீதிமன்ற மொழியாக்குவது தொடர்பாக மாநிலங்கள் கோரிக்கை விடுத்தால் அதனைப் பரிசீலிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 21.05.1965 அன்று மத்திய அமைச்சரவையிலும் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தகைய தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலிக்கப்ப���ாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழக சட்டமன்றம் 06.12.2006 மற்றும் 03.09.2026 ஆகிய தேதிகளில் தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவதற்கான தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. இருப்பினும், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படாமல், தமிழ்நாடு அரசின் கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் கிடப்பில் போடப்பட்டிருப்பது தமிழ்மொழிக்கும் தமிழர்களுக்கும் இழைக்கப்படும��� அநீதியாகும்.
நீதிமன்றத்தில் வழக்காடும் தமிழர்கள் தங்களது தாய்மொழியிலேயே வழக்காடவும், நீதிமன்ற நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ளவும், நீதியை எளிதாகப் பெறவும் தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குவது இன்றியமையாததாகும். தாய்மொழியில் நீதி பெறுவது என்பது மக்களின் அடிப்படை உரிமையோடு தொடர்புடையதாகும்.
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவது என்பது வெ��ும் மொழி சார்ந்த கோரிக்கை மட்டுமல்ல; அது தமிழர்களின் மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, நீதிக்கான உரிமை ஆகியவற்றை நிலைநாட்டும் வரலாற்றுக் கடமையாகும்.
மேலும், தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கக் கோரி MHAA தாக்கல் செய்துள்ள W.P. No. 43981/2026 பொதுநல வழக்கில், தமிழ்நாட்டின் பெருமை வாய்ந்த வழக்கறிஞர் சங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து தங்களைத் தரப்பினராக இணைத்துக்கொண்டு, தமிழின் உரிமைக்கான சட்டப் போ���ாட்டத்தை வலுப்படுத்த முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
எனவே, தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவதற்கான கோரிக்கையை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி