"ஓர் அடிப்படை சமூக மாற்றத்திற்காகப் போராளியாக உருவெடுத்த என்னால், என் உயிரைக் காக்க கருனை மனு கொடுக்கும் அளவுக்குத் தாழ்ந்து போகமுடியவில்லை" என்று தூக்கு கயிற்றின் முன் கொள்கை உறுதிகுலையாது முழங்கிய தமிழ்த்தேசியப் பொதுவுடமைப் போராளி புலவர் #கு_கலியபெருமாள் நினைவைப் போற்றுவோம்!🙏🏾
"தமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான் தமிழ்ப் பகையாளனும் தானே பெயர்வான் தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும் அறிவுயரும் அறமும் ஓங்கும்!"
என்று முழங்கிய தமிழ்த்தேசிய இனத்தின் தலைமைப் பாவலன் புரட்சிப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் நினைவைப் போற்றுவோம்! 🙏🏾❤️💛
#பாவேந்தர்#பாரதிதாசன்
தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றி, திருக்குறள், நாலடியார், திருவாசகம் போன்ற இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களைப் பதிப்பித்த கனடிய தமிழறிஞர் சி.யூ.போப் நினைவைப் போற்றுவோம்!🙏🏾
#சியூபோப்
5 ஆண்டுகள் ஆட்சியில் கண்டு கொள்ளாததை இப்போது எழுப்புகிறார் ஐயா கோ.க.மணி, அதற்கு இனிமேல் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்கிறார் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்! இது தெரியாமல் தான் 5 ஆண்டுகள் அரசு நடத்தினீர்களா @mp_saminathan?
கூலி உயர்வு கேட்டு போராடியதால் பச்சிளங்குழந்தைகள், பெண்கள் உட்பட 44 பேர் எரித்துக் கொல்லப்பட்ட கீழ்வெண்மணிப் படுகொலையின் 53-ஆவது நினைவு நாள் இன்று. இறந்தவர்களை நினைவு கூறுவோம்! 🙏🏾
வர்க்க-வர்ண பேதமற்ற தமிழர் தாயகம் படைக்க உறுதியேற்போம்! 💪🏾
#கீழ்வெண்மணிப்படுகொலை
தேசியத் தலைவர் பிறந்தநாள்!
தமிழர் தலை நிமிர்ந்த நாள்!
பேரினத் தமிழரின் முதல்வனுக்குப் பிள்ளைகளின் பிறந்தநாள் வாழ்த்து! 🙏🏾❤️💛
#தமிழினத்தலைவர்71#TamilsLeaderPrabhakaran
தற்சார்பு, பொருளாதார மேம்பாடு, வேளாண் மேலாண்மை, தமிழ்ச் சுவடிப் பதிப்பு, சித்த மருத்துவம், எழுச்சியூட்டும் மேடைப் பேச்சு - இதழியல் எழுத்து என்று பன்முகத்தன்மை வாய்ந்த நம் பெரும் பாட்டன் தமிழினத் தலைவர் கப்பலோட்டிய தமிழறிஞர் வ.உ.சிதம்பரனாரின் நினைவைப் போற்றுவோம்.
#வஉசிதம்பரனார்
தமிழீழப் போராட்ட வரலாற்றிலே அக்டோபர் 10, 1987இல் முதன் முதல் களத்தில் வீரச்சாவடைந்த பெண் போராளி இரண்டாம் நிலைப் படைஞர் மாலதி!
முதற் பெண் மாவீரர் சமர்க்கள நாயகி மாலதி நினைவைப் போற்றுவோம்! 🙏🏾 வீரவணக்கம் செலுத்துவோம்!
💪🏾❤️💛
#மாலதி#முதற்பெண்மாவீரர்