மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
@CMOTamilnadu
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும், பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதும் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.
உயிராபத்து விளைவிக்கும் ரசாயனங்களைக் கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அலட்சியம் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்யவேண்டும்!!
மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்!
நேற்றைய சட்டமன்றக் கூட்டத்தின்போது இரங்கல் தீர்மானங்கள் வாசிப்பு, மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசின் தனி தீர்மானத்தின் மீதான விவாதங்கள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன.
ஆனால் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கவர்னர் உரையின் மீதான விவாதங்களுக்கு நேரலை தரப்படவில்லை. சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் இருக்கிறது. ஆகவே, இனிவரும் நாட்களில் சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. மேலும், நேரடி ஒளிபரப்பு குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி வருவதை நினைவு கூர்கிறோம்.
வெளிப்படைத் தன்மையோடு செயல்படவிரும்பும் தவெக அரசு இதனை உடனடியாகச் செயல்படுத்தும் என்று நம்புகிறோம்.
A.G.மெளரியா, I.P.S., (ஓய்வு)., @MouryaMNM
துணைத் தலைவர்,
மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
@balacivilphr சத்யா படத்தை பற்றி பேசுவதற்கு ஆயிரம் இருக்கு. ஆனால், இந்த சின்னபையன் பேசுவது 🤦
காதலா காதலா ஒரு வெற்றிப்படம். தயாரிப்பாளர் தேனப்பன் அவர்களே அதை பல பேட்டிகளில் சொல்லி இருப்பது கூட தெரியாமல் உளறுகிறார்.
#Kamal Ucham thottaru in INDIAN cinema .Adhavarjun u r talking about the Living Legend .Still today #KH behaves like a matured person appreciates if some good things happen s from your ruling government that’s Centrist 💐
Happy Birthday, Rahul ji.
You’ve walked the length of India, carrying a message of love, secularism, and progress, reminding us that politics must connect, not divide.
Keep walking, keep listening.
@rahulgandhi
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தன்னிச்சையாக முனையும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது.
தமிழ்நாட்டின் நீர் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேகதாது விவகாரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு அனைவரும் ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன்.
@CMOTamilnadu
ஆளுநர் உரை: எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்!
தங்கள் அரசின் அடிப்படைப் பணிகள் என்னவாகயிருக்கும் என்பதன் தொகுப்பாகத்தான் ஆளுநர் உரை அமைந்துள்ளது. உரையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்த அரசானது கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருதல், உச்சநீதிமன்றத்தின் அமர்வை சென்னையில் அமைத்தல், உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்குதல் போன்ற நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற முழுமூச்சுடன் பாடுபட வேண்டும். பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ‘‘தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம்’’ என்ற முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது.
ஒன்றிய அரசானது தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதிப்பகிர்வை சட்ட ரீதியாகப் போராடிப் பெறுவதற்கு சட்ட வல்லுனர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும் என்பது அவசியமானதொரு நடவடிக்கையாகும். அதேசமயத்தில் நிதிப்பகிர்வு உள்ளிட்ட ‘‘கூட்டாட்சி மற்றும் மத்திய மாநில உறவுகள்” குறித்து மறுஆய்வு செய்து தீர்வுகளைத் தருவதற்காக 2025ல் தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. திரு.குரியன் ஜோசப் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் வழங்கிய பரிந்துரைகளை தவெக அரசு பரிசீலித்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
நகரமயமாதல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் குடிநீர், உள்கட்டமைப்பு உள்ளிட்ட சில திட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக கூடுதல் நிதி மற்றும் கிராம சபைகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படுவது, உள்ளாட்சித் தேர்தல் குறித்து எந்தக்குறிப்பும் இல்லாதது வருத்தமளிக்கிறது.
ஆளுநர் உரையில் காவிரிப்பிரச்னை, போதை கலாச்சாரம் ஒழிப்பு, பாலியல் வன்முறை போன்றவற்றைக் கையாள்வதில் மென்மையான போக்கே காணப்படுகிறது. இவற்றில் கடுமையான நிலைப்பாட்டை - செயல்பாட்டை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரை என்பதால் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஆளுநர் உரை நிறைவேற்றவில்லை.
ஆ. அருணாச்சலம் MA., BL., @Arunachalam_Adv
பொதுச்செயலாளர்,
மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Finally DMK questioning right!
With many kids getting raped and killed..no proper response from ruling government too
It's shows poor governance by TVK
@sunnewstamil தேசிய கீதம் முதலில் பாடப்பட்ட போதே அது உண்மை என தெரிந்து விட்டது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து & இறுதியில் தேசிய கீதம் என்ற மரபை மாற்றி விட்டது TVK அரசு.
@PttvNewsX பேர் வச்சாலும் வைக்கமா போனாலும்
கூட நல்ல பாட்டு தான்.
மலேசியா வாசுதேவன் அவர்களில் காந்த குரலில்
மாமாவிற்கு ஒண்ணு கொடுமா கூட சிறந்த பாடல் தான்.
நடிகர் ஒருவர் 'அரசியலுக்கு வரவா' என அப்ளிகேசன் போட்டு, ' மக்கள் வரச்சொல்லிவிட்டார்கள்' என அவரே அறிக்கையும் கொடுத்துவிட்டார்.
இனி, ஒவ்வொரு சேனலும்,
'தன் கையாலே தன் விரல்களை உயர்த்தினார்'
'பறந்து வந்த துண்டு',
'கொஞ்சி மகிழ்ந்த மகான்'
'இவருக்கு பின்னால் இத்தனை உண்மைகளா'
'யாரும் அறியாத ரகசியம்'
'திடீரென வந்த போன்'
'இவரது சாதனை இத்தனையா'
என ரீல்ஸ் போட்டு அவரை சட்டசபைக்கு அனுப்பிவிடுவதில் குறியாக இருப்பார்கள்.
ஆரம்பத்தில் 'அம்மா செண்டிமெண்ட்'
அப்புறம் 'முருகன் செண்டிமெண்ட்'
அப்புறம் 'எளிமை செண்டிமெண்ட்'
என எம்.ஜி.ஆர் காலத்து ஆயுதங்களை வைத்து தாக்குவார்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்களை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க 'ஜஸ்டிஸ் ராஜேஸ்வரன்' கமிட்டிக்கு ஆதாரங்களையும், சாட்சிகளையும் கொடுத்துவிட்டு நீதிக்காய் 8 ஆண்டுகள் போராடுகிறோம். இது எந்த சேனலும் செய்தியாக்கியதில்லை. அந்த நடிகரும் அதில் பிரபலமானார், ஆனால் ஷமூக-விரோதிகள் எனச் சொல்லி பின்வாங்கிச் சென்றார். நீதிக்கும் வரவில்லை, வீதிக்கும் வரவில்லை.
ஆனால், கட்சிகளின் ஐ.டி -விங் கூலிப்படைகள் 'இத்தனை நாள் எங்கிருந்த' என அவதூறுகளை எங்களை நோக்கி குவிப்பார்கள். இந்த ஐடி கும்பல்கள் இதே கேள்வியை அந்த நடிகரை நோக்கி எழுப்பாது.
எத்தனையோ போராட்டங்களை நடத்தி, கைதாகி, சிறைப்பட்டு, வழக்கு வாங்கி, அலுவலகம் தாக்கப்பட்ட போதும் துணிந்து நின்ற இயக்குனர் இமையம் பாரதிராஜா என்றைக்கும் 'அரசியலுக்கு வரவா, உதவி செய்யவா' எனக்கேட்கவில்லை என்பதை மட்டும் நினைவில் வையுங்கள், 'என் இனிய தமிழ் மக்களே'!