Dmkians are known to create ..
Reels to reality series - 6
நம்ம குழந்தைகளை class room சினிமா பாடல்கள் மனப்பாடம் போல் பாட விட்டீர்களே..
நாங்கள் - stem lab
நீங்கள் - beast பாடல் class
MLA பல்லவி மீதுதான் தவறு என்று அன்றே நாம் சொன்னோம்.. ஆனால் பலரும் தவறு செய்த MLA பல்லவியை விட்டுவிட்டு தவறே செய்யாத மேயர் பிரியா அவர்களுக்கு வகுப்பெடுத்துக்கொண்டு இருந்தார்கள்.. இன்று சபாநாயகரே கொட்டு வச்சிருக்காப்ல..
ஈரோடு மாவட்ட அரசு மாதிரி பள்ளி மாணவரான (நான் முதல்வன்)எங்கள் பிள்ளையின் மதிப்பெண். இப்படியொரு மகத்தான திட்டம் தந்து எங்கள் பிள்ளையின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த தாயுமானவர் மாண்புமிகு கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி
@arivalayam@Udhaystalin@Anbil_Mahesh
இதுவரை நாம் அரசியல் சண்டை போட்டவர்கள் எல்லோருக்கும் 'மொழி' தெரியும். நாம் பேசுவோம். அவர்கள் பேசுவார்கள். கொள்கை முரண்கள் வரும். உண்மை வரும். பொய்கள் வரும். தரவுகள் வரும். சண்டை வரும். சமாதானம் வரும். புரிதல்கள் வரும். இப்போது, 'மொழி'யே தெரியாதவர்களிடம் எப்படிப் பேசுவீர்கள்? என்ன பேசுவீர்கள்? என்ன பேசினாலும் கேட்க மாட்டார்கள். கேட்டாலும் புரிய மாட்டார்கள். புரிந்தாலும் ஏற்க மாட்டார்கள். ஏற்றாலும் மாற மாட்டார்கள்.
முதல் நாளிலேலே கடன், கஜானா காலி என்ற பொய்யை பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள். கடன் vs GDP ratio என்றால் என்ன, தமிழ்நாடி எப்படி திமுக ஆட்சியில் முதல் இடத்தில் இருந்தது, நிதிநிலை என்றால் என்ன, பட்ஜெட் என்றால் என்ன, அது என்ன இது என்ன அதுவும் இதுவும் என்ன என எப்படி விளக்குவீர்கள்? எங்கிருந்து ஆரம்பிப்பீர்கள்? "கதறு கதறு" என சொல்லிவிட்டு போய்விடுவார்கள். அவர்களுக்கு பதில் அல்ல, கேள்வியே புரியாதே!!!
ஆனால், ஒரு ஒளிக்கீற்று இருக்கிறது. ஒரு நம்பிக்கை இருக்கிறது. என்ன தெரியுமா? தமிழ்நாட்டில் முதல்முறையாக மிகக்குறைந்த சதவிகித மக்களுக்கு மட்டுமே பிடித்த ஒரு முதல்வர் ஆட்சிக்கு வந்துள்ளார். ஆம். வாக்கு சதவிகிதப்படி தமிழ்நாட்டில் மூன்றில் ஒருவர் விஜய்யை முதல்வராக விரும்பவில்லை. அதாவது நீங்கள் பார்க்கும் மூன்று பேரில் ஒருவரிடம்தான் நீங்கள் அரசியல் பேச முடியாது. மற்ற இருவரிடமும் பேசலாம், பேச வேண்டும். பேசிக்கொண்டே இருக்க வேண்டும். 'மொழி' தெரிந்த இந்த சதவிகிதத்தைக் காப்பதில்தான் தமிழ்நாட்டின் வருங்காலம் இருக்கிறது.
மனதைத் தளர விடாதீர்கள். இனியும் apoliticalஆக காட்டிக்கொள்ளாதீர்கள், இருக்காதீர்கள். அரசியல் பதிவுகளைப் பகிருங்கள். அரசின் மீதான விமர்சனங்களைப் பகிருங்கள். நம் வரலாற்றை, சாதனைகளைப் பேசிக்கொண்டே இருங்கள். கட்சி அடையாளம் அசிங்கம் அல்ல. அவமானம் அல்ல. அரசியல் என்றால் சாக்கடை சாக்கடை என்று ஒரு தலைமுறையையே ஏமாற்றிதான் இன்று உண்மையிலேயே அப்படி ஆக்கிவிட்டார்கள். இனியும் அமைதியாக இருக்காதீர்கள்.
ஆம், உங்கள் நட்புவட்டம் கடிக்கும். சுற்றம் கடிக்கும். அநாகரீகமாகப் பேசுவார்கள். நண்பர், உறவினர் என்றுகூட பார்க்க மாட்டார்கள். பாய்வார்கள். கண்டுகொள்ளாதீர்கள். பதில் சொல்லாதீர்கள். நாம் பேசுவது அவர்களுக்காகவும்தான், ஆனால் அவர்களுடன் அல்ல.
தமிழ்நாடு ஜனநாயக சதவிகிதத்தில் தோற்றிருக்கலாம். அறிவு சதவிகிதத்தில் தோற்கவில்லை.
நினைவில்கொள்ளுங்கள். அமைந்திருக்கும் அரசு மூன்றில் இருவருக்குப் பிடிக்காத அரசு. இவ்வளவு பெரிய 'ஆர்கனைஸ்டு பொய் பரப்பலுக்குப்' பிறகும் இது சாத்தியப்பட்டுள்ளது. அதுதான் ஒளிக்கீற்று. அதையும் அணையவிடப் பார்ப்பார்கள். மொத்த ஆன்லைன் வித்தையையும் காட்டுவார்கள். நாம் விடக்கூடாது. விட்டுவிடவே கூடாது. Social media சக்தியை நாம் மதித்தோம், வேலை செய்தோம், ஆனால் குறைவாக எடைபோட்டுவிட்டோம். விஜய்க்காக வேலை பார்த்தவர்கள் எல்லாம் காசு வாங்கிதான் வேலை பார்த்தார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் அவர் ரசிகர்களும் கூட. இங்குதான் நாம் கோட்டைவிட்டோம். திமுகவுக்காக வேலைபார்த்த 3rd party நிறுவனங்களில் நம் கட்சிக்காரன் எங்கே இருந்தான்? கட்சிக்காரர்களின் விசுவாசம் சம்பளத்துக்காக மட்டுமே வேலை பார்ப்பவனிடம் எப்படி வரும்? இந்த அடிப்படையை சரிசெய்யாமல் நாம் ஜெயிக்க அல்ல, தொடங்கவே முடியாது. கழகம் இதை சரிசெய்யும் என நம்புகிறேன்.
ஆனால் தனிநபர்களாக நமக்கும் கடமை இருக்கிறது. நாம் சண்டையில் தோற்கலாம் தோற்றுக்கொண்டே கூட இருக்கலாம். ஆனால் உண்மையான தோல்வி என்பது சண்டையில் தோற்பதல்ல. சண்டை போடாமல் இருப்பது. அப்படி ஒருநாளும் ஒதுங்கிவிடக்கூடாது.
சலிப்பும் ஓய்வும் மரணத்திற்குச் சமம் என்றார் பெரியார்.
மீண்டு வருவோம். மீட்டெடுப்போம்.
மீண்டும் வருவோம்.
-டான் அசோக்
மே 10, 2026
If Vijay wants to become CM, he have only 2 options now.
1 : He should go to Kamalalayam and close the deal.
2: He should come to Arivalayam and close the deal.
#ஆரியதிராவிடப்போர்#Vijay
According to “தலைவரின் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு”
திராவிடத்தை விரும்பும் மக்களின் தீர்ப்பு: 22,388,290 votes (2.23 crore) ❤️🔥
TVK alone: 17,226,209 votes (1.72 crore)
அவ்ளோதான்… மக்கள் தீர்ப்பை ஏற்போம் தலைவரே. 🤷🏻♀️🙏🏻
I may be right or wrong, but this is genuinely my personal POV and I wholeheartedly accept the controversy that comes with expressing it. 🤷🏻♀️
Note: “மரபு” என்ன ஆகும்னு தூக்கிட்டு வரும் உடன்பிறப்புகளுக்கு அது outdated. Keep aside all your boomer thoughts and come to reality pls 🙂
எங்கள் குரலை நசுக்க நினைக்காதே! எங்கள் உரிமைகளை ஒருபோதும் தாரைவார்க்க மாட்டோம்.
'தொகுதி மறுவரையறை' என்ற பெயரில் அரங்கேறும் அரசியல் சூழ்ச்சியை வீழ்த்துவோம்! சதியைச் சட்டமாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#SayNoToNDA