2009 இறுதிப்போர் காலப்பகுதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டவர்களில் இதுவரை உறுதிப்படுத்தப்படாதவர்களில் தமிழீழ மாவீரர் பணிமனையால் அடையாளப்படுத்தப்பட்ட
22 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் வரும் 19/09/2026 அன்று
6 மணிக்கு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
“விடுதலைப் பேரொளி”
ஒரு கால்நூற்றாண்டுக்கும் மேலாக அடக்குமுறைக்கு முகம்கொடுத்து நின்ற ஒரு தேசிய இனத்தின் வரலாற்றையே மாற்றுகின்ற விருப்போடும், துணிவோடும்,நம்பிக்கையோடும் எதிரிக்கெதிரான விட்டுக்கொடுப்பற்ற ஒரு பெரும் விடுதலைப் போரை த��ைமையேற்று நடத்தியவர் எமது தேசியத் தலைவர்.
கற்பனைக்கும் எட்டாத தற்தியாகமும், கட்டுப்பாடும், வீரமும், ஒழுக்கமும் நிறைந்த, உன்னதமான ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்பி, பெரும் படையணிகளோடும் ஒரு தனித்த தேசத்திற்குரிய நிர்வாகக் கட்டமைப்புகளோடும் கனரக ஆயுத வல்லமைகளோடும் போராட்டத்தை வழிநடத்தியவர்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மீதும், தமிழக மக்கள் மீதும், உலகம் முழுவதும் பரந்து வாழும் உறவுகள் மீதும் அவர் கொண்டிருந்த பற்று மிகவும் ஆழமானது. தமிழர் போராட்ட வரலாறு நெருக்கடிகளை எதிர���நோக்கி, மீளமுடியாத கட்டத்தை எதிர்கொண்ட காலங்களில் அவற்றையெல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்டு விடுதலையை அடுத்த கட்டத்திற்கு வேகமாக நகர்த்தியவர் எமது தேசியத் தலைவர்.
தேசியத் தலைவரின் போராட்ட அனுபவமும், தற்துணிவும், வீரமுமே எவ்வித நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் உந்து சக்தியாக, எமது போராட்ட சக்கரத்தின் அச்சாணியாக இருந்திருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்து, சர்வதே��� சக்திகளின் துணையுடன் ஒரு பெரும் யுத்தம் மீண்டும் எம்மீது திணிக்கப்பட்ட போது, தலைவர் அவர்கள் அதனைத் துணிவுடனேயே எதிர்கொண்டார்.
போர் நெருக்கடியான கட்டங்களை எட்டி எமது நிலப்பரப்புகள் எதிரியால் சுற்றி வளைக்கப்பட்டு ஒரு பெரும் யுத்தம் எம்மக்கள் மீது ஏவிவிடப்பட்டபோதும் தலைவர், தான் வாழ்ந்த மக்களுடனேயே நின்றார். மக்களதும் தளபதிகளினதும் தொடர்ச்சியான வேண்டுகோள்களையும் மீறி அவலப்படும் மக்களை விட்டு வெளியேற மறுத்தார்.
எமது மக்கள் எதிர்கொண்ட அத்தனை வலிகளையும் தானும் சுமந்தார். இறுதியில், விடுதலைக்கான இந்த நீண்டபாதையில், எந்த மக்களுக்காக ஆயுதமேந்தி��ாரோ அம்மக்களுடனேயே கடைசி மணித்துளிவரை நின்று போராடி வீரச்சாவடைந்தார்.
வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை.
தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக
எம் தேசமெங்கும் அவர் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.
#தமிழீழ_தேசியத்தலைவர்
#தமிழினத்தலைவர்
#தமிழர்_வரலாற்று_நாயகன்
#தமிழர்_வழிகாட்டி
#TamilTiger
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
இறுதிப்போரின் களமுனைத் தளபதி.
கடற்புலி மாவீரன் சிறீராம்.
தமிழீழ விடுதலைக்காய்
தன் ��ுடும்பத்தை விட்டு,
தான் பெற்ற ஐந்து மாதம் நிரம்பாத மகளையும் இறுதி யுத்தத்தின் பாதிப்பால் பறிகொடுத்து,காதலித்து மணம்முடித்த மனைவி இசைப்பிரியாவையும் இழந்து
2009 இறுதிப்போரில் கடைசிவரை ஒலித்த கட்டளைக்குரலாய்…18/05/2009 நந்திக்கடலோரம் நடைபெற்ற பெருஞ்சமரில்
சரிந்து விழு��்தது இந்த எரிமலை.
#நந்திக்கடல்
#கடற்புலிகள்
வீரவணக்க நிகழ்வு 🪔💐-02.05.2026.
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்கள் உட்பட ஒரு த��குதி மாவீரர்களின் #வீரவணக்க_நிகழ்வு.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்கள் உட்ப�� முள்ளிவாய்க்கால் வரையான இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ஒரு தொகுதி மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு - 02.05.2026.
போராட்டம் மூலமாகவே நாம் தேசவிடுதலையையும்,பெண்கள் விடுதலையையும் வென்றெடுக்க முடியும்.
தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே பிரபாகரன்.
#தமிழீழப்பெண்கள்_எழுச்சிநாள்
இந்தப் புகைப்படம் தேசிய தலைவரின் அறிவுறுத்தலின்படி எடுக்கப்பட்டது தமிழீழத்தில் ஒவ்வொரு வீடுகள��� தோறும் இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பிள்ளைகள் வரிச் சீருடை அணிய தலைவர் அனுமதி வழங்கி இருந்தார்.
வரலாற்றை நன்று விளங்கிக் கொள்வதும்,தலைவரது தூரநோக்கு சிந்தனைகளை புரிந்து கொள்வதும் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்.
அடுத்த தலைமுறை இன்னும் வேகமாக போராடும் என்பது தலைவரின் தீர்க்க தரிசமான சிந்தனைக் கருத்து.
#சந்ததி_தூங்காது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைச் சீருடையான வரிச்சீருடையினை அலங்காரத்துக்கோ அல்லது நிகழ்வுகளில் எழுச்சிக்கொடிக்கு பதிலாகவோ பாவிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறோம்.
#ITWingமேதகு#தமிழீழ_விடுதலைப்_புலிகள்
இந்தியத் துரோகமும் தியாகதீபம் லெப் கேணல் திலீபனின் இழப்பும்.
—————————
இந்திய-இலங்கை உடன்படிக்கை கையெழுத்தாகி அதனைத்தொடர்ந்து இந்திய அமைதிப்படை இலங்கையில் அடியெடுத்து வைத்தபொழுது எம்மக்கள் ஆராத்தியெடுத்து,திலகமிட்டு,மாலைசூட்டி,ஆரவாரத்துடனும்,அளவில்லாத மகிழ்ச்சியுடனும் அவர்களை வரவேற்றார்கள்.சிங்களப் பேரினவாதத்தின் பிடி��ிலிருந்து தங்களைக் காக்கவந்திருக்கும் இரட்சகர்களாக இந்திய அமைதிப்படையை எம்மக்கள் கருதினார்கள்.
இந்தியாமீதும்,இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மீதும் எம்மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும்,மரியாதையும் இமயம்போல் உயர்ந்து நின்றது.ஆனால் ஒன்றரைமாத காலமாவதற்குள் அந்த நம்பிக்கையும்,மரியாதையும் அதளபாதாளத்திற்குச் சரிந்துவிட்டது.
எதிர்பார்த்ததைவிட மிகக் குறுகிய காலத்திலேயே ர���ஜீவ்-ஜெயவர்த்தனா உடன்படிக்கை உடைந்து நொருங்கத் தொடங்கிவிட்டது.
தியாகதீபம் திலீபன் அவர்களின் போராட்டம் உண்மையில் இந்தியாவுக்கு எதிரான போராட்டம் அல்ல.
ராஜீவ்-ஜெயவர்த்தனா உடன்படிக்கையை எமது இயக்கம் ஏற்று��்கொள்ளவில்லை.எனினும் இந்தியாவுக்கு எதிரான ஒரு நிலையெடுக்கவும் எமது இயக்கம் விரும்பவில்லை.இந்த உடன்படிக்கை எமது தலைமைக்கு திருப்தியளிக்கவில்லையென்பதுதான் உண்மையான நிலையாகும்.இந்த உடன்படிக்கையை ஏற்காவிடினும் அதனை நிறைவேற்ற இந்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக ஒப்புக்கொண்டு அதன்படி ஆயுதங்களை இந்திய அமைதிப்படையிடம் ஒப்படைத்தது எமது இயக்கம்.தமிழீழ மக்களின் பாதுகாப்ப��� இனி இந்தியா பார்த்துக்கொள்ளும் எனும் நம்பிக்கையோடு ஆயுத ஒப்படைப்பு நடைபெற்றது.ஆனால் இந்த அரைகுறை உடன்படிக்கையைக்கூட ஜெயவர்த்தனா தலைமையிலான சிங்கள அரசு முழுமையாகச் செயற்படுத்தவில்லை.
1-அவசரகால சட்டம் நீக்கப்படவில்லை
2-தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை
3-அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் தடுக்கப்படவில்லை.
4-சிங்கள ஊர்காவல்படையியிடமிருந்து ஆயுதங்கள் மீளப்பெறவில்லை.
5-சொந்த இடங்களில் தமிழர்கள் குடியேற்றப்பட இராணுவம் அனுமதிக்காது விரட்டியது.
6-இடைக்கால அரசு அமைவதற்குமுன் தமிழர் பகுதிகளில் சிங்களக் காவல் நிலையங்களைத் திறக்க முயற்சிகள் நடைபெற்றது.
7-சமூகவிரோத இயக்கங்களின் செயற்பாடுக���ுக்கு இந்திய அதிகாரிகள் ஊக்கமளித்தனர்.
8-தமிழர் பகுதிகளில் உள்ள சிங்கள இராணுவப்படை முகாம்கள் அகற்றப்படவில்லை.
9-இந்திய வானொலியும்,தொலைக்காட்சியும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொண்டது. இவற்றின் விளைவாக எமது இயக்கத்திற்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது.
தியாகதீபம் திலீபன் அவர்களின் உண்ணாவிரதம் திடீரென்று ஏற்பட்ட நிகழ்ச்சி அல்ல.
ஒன்றரைமாத காலமாக தமிழீழ மக்களிடம் இந்த உடன்படிக்கை குறித்து நம்பிக்கை ஏற்படுத்துவதற்குப் பதிலாக எம்மக்களின் சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையிலும்,ஆத்திரமூட்டும் வகையிலும் இந்திய அதிகாரிகளின் போக்கு அமைந்துவிட்டது.
உடன்படிக்கையை ஏற்கும்படி தமிழர் தரப்பை வலியுறுத்தும் இந்திய அதிகாரிகள் இந்த உடன்படிக்கையின் பல அம்சங்களை சிங்களம் மீறியபோது அதைக்கண்டும் காணாதவர்கள்போல் இருந்தார்கள்.
சிங்கள இராணுவ உதவியுடன் திருகோணமலையிலும்,மட்டக்களப்பிலும் பல்லாயிரக்கணக்கான சிங்களவர்கள் குடியேற்றப்பட்டபொழுது அதைத் தடுக்க இந்திய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அமைதி திரும்பிவிட்டதென நம்பித் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பமுயன்ற எம்மக்களை சிங்கள இராணுவம் விரட்டியடித்தபோது அதை ஏன் என்று கேட்க இந்திய அதிகாரிகள் முன்வரவில்லை.
��மிழ் அரசியல் கைதிகளை முழுமையாக விடுவிக்க ஜெயவர்த்தனா மறுத்தபொழுது அதிலும் இந்திய அதிகாரிகள் தலையிடவில்லை.மாறாக எமது இயக்கத்திடமிருந்து ஆயுதங்களைப் பறிப்பதிலும்,சமூக விரோத இயக்கங்களை வளர்த்துவிடுவதிலும் இந்திய அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தினார்கள்.
தாங்கள் சொன்னபடி கேட்கும் இயக்கங்களின் பிரதிநிதிகளைக்கொண்ட ஒரு பொம்மை இடைக்கால அரசை அமைத்துக்கொண்டு தமிழீழத்தை ஆள்வ��ையே இலங்கைக்கான இந்தியத் தூதுவர் டிக்ஷித் விரும்பினார்.
அவருடைய இந்த ஆணவப்போக்கு நிலைமையை மேலும் சீர்கேடடைய வைத்தது.
உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள ஐந்து அம்சங்களையும் உடனடியாக நிறைவேற்றவேண்டுமென்று வற்புறுத்தியே திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
இந்தக் குறைந்தபட்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜெயவர்த்தனாவை டிக்சிற் வலியுறுத்தவில்லை.அக்கறைகாட்டவுமில்லை.
1987 ச��ப்டம்பர் 15ஆம் நாளன்று திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் தொடங்கினார்.
அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நிலைமையை விளக்கி எமது தேசியத் தலைவர் அவர்கள் டிக்ஷிற்றிக்கு கடிதம் எழுதினார்.
#தியாகதீபம்_திலீபன்
#லெப்_கேணல்_திலீபன்
🔴தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக சிறிலங்கா கடற்படையின் பாரிய யுத்தக் கட்டளைக் கப்பல் ஒன்றின் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்காக கடற்கரும்புலிகளான மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோரைப் பயிற்றுவித்து, நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதலொன்றை செய்துமுடித்தவர் கேணல் சங்கர் அண��ணை.
🔴தமிழர்களின் வான்படை வரலாறானது கேணல் சங்கர் அண்ணையின் பெயருடன் ஒட்டி இணைந்தது. விடுதலைப்புலிகள் விமானப் படையணி ஒன்றைத் தொடங்கியபோது அதன் தளபதியாக கேணல் சங்கர் அண்ணா நியமிக்கப்பட்டிருந்தார்.
🔴இந்தியாவிலும்,தொடர்ந்து கனடாவின் விமானப் பொறியியல் கல்லூரியிலும் தனது வான்படைக்கான கற்கைநெறியை நிறைவுசெய்த கேணல் சங்கர் அண்ணா பின்னாளில் உலகமே வியந்த தமிழீழ வான்படையணியை உ���ுவாக்குவதில் அத்திவாரமாக இருந்தார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது தலைவருடன் இணைந்து பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியிருந்தார்.
தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்கள் நினைவுதினத்தில் தலைவர் உணவுதவிர்ப்பது வழமை. அன்றைய தினம் தலைவரைச் சந்திப்பதற்காகச் சென்றுகொண்டிருந்த சங்கர் அண்ணாவின் வாகனம் சிறிலங்காப் படைகளின் ஆழஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலுக்கு உள்ளானது. சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது இன்னொரு முனையில் எமது தளபதிகளையும் தலைவரையும் கொல்வதற்கான சதித்திட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் இறங்கியிருந்தன.
26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஆழ ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்ப��்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அண்ணா அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
கேணல் சங்கர் அண்ணா மீது சிங்கள ஊடுருவல் படை மறைந்திருந்து தாக்குதல் நடத்தி மண்ணில் சாய்த்ததானது, தமிழீழ மக்களினதும் போராளிகளினதும் நெஞ்சங்களில் என்றும் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டேயிருக்கும்.
நினைவுகளுடன்...
புலவர்.
#தமிழீழ_வான்படை_சிறப்புத்தளபதி
#கேணல்_சங்கர்
#தமிழீழ_வான���படை
கிளாலிக் கடல் நீரேரியில், தமிழர்களின் பிணங்களை மிதக்கச் செய்தவர்களை அதே கடல் நீரேரியிலேயே பிணங்களாக மிதக்கச் செய்துவிட்டு, உப்பு நீராக உருமாறிப் போன #கடற்கரும்புலிகள்.
#உயிராயுதங்கள்