Had the most beautiful time with the dearest Thalapathy @actorvijay Sir.
Even after a long day he received us with so much love and shared such personal insights into life, work and the world.
One meeting and sir is already a favourite ❤️
Until next time,
My love and respect.
Vijay Deverakonda :)
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இன்று (11.10.2026) சென்னையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் புதுதில்லிக்குப் புறப்பட்டபோது, சென்னை விமான நிலையத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் வழியனுப்பி வைத்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இன்று (11.10.2026) சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் –IIன் முதல் 14.64 கி.மீ. உயர்மட்டப் பாதை உள்ளிட்ட ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை திறந்து வைத்து, இரயில்வே திட்டப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
#CMJosephVijay
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (11.10.2026) சென்னை, போரூர் புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II, வழித்தடம் 4-ன் முதற்பகுதியான 14.64 கிலோ மீட்டர் நீளத்திலான பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ இரயில் நிலையம் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் மெட்ரோ இரயில் சேவை மற்றும் 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடன் மெட்ரோ இரயிலில் பயணம் செய்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் –II வழித்தடம் 4-ன் முதற்பகுதியான 14.64 கி.மீ நீளத்திலான பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ இரயில் நிலையம் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் மெட்ரோ இரயில் சேவை மற்றும் 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
Inauguration of the Poonamallee-Vadapalani stretch of Chennai Metro Phase-2 ensures:
Faster, more convenient daily travel for commuters.
Better connectivity between Chennai’s fast-growing western suburbs and the city centre.
Unique 3.7-km double-decker corridor.
Also travelled on the Metro and interacted with upcoming StartUps, whose energy was as usual exceptional.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் துவங்கப்பட்ட பூந்தமல்லி -வடபழனி வழித்தடம், பயணிகளின் தினசரி பயணத்தை எளிதாக்கியுள்ளதோடு விரைவுப்படுத்தியும் உள்ளது.
இந்த வழித்தடம் அதிவேக வளர்ச்சி பெற்று வரும் சென்னையின் மேற்கு புறநகர் பகுதியோடு நகரின் மத்திய பகுதியை இணைக்க உதவுகிறது.
3.7 கி.மீ தொலைவிலான ஈரடுக்கு பாதை இவ்வழித்தடத்தின் சிறப்பம்சமாகும்.
வளர்ந்துவரும் புத்தொழில் நிறுவன பிரதிநிதிகளாடு மெட்ரோ ரயில் பயணத்தில் உரையாடினேன். அவர்களின் உற்சாகம் எப்போதும் போல அளவிடற்கரியதாய் இருந்தது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II-ன் வழித்தடம் 4-ன் முதற்பகுதியான பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ இரயில் நிலையம் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் மெட்ரோ இரயில் சேவையை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (11.10.2026) தமிழ்நாட்டிற்கு வருகை தந்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை, சென்னை விமான நிலையத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.
#CMJosephVijay
பெண் குழந்தைகளைக் கொண்டாடி, அவர்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தால் (UNICEF) சர்வதேச பெண் குழந்தை நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில், பெண் குழந்தைகள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள்! அவர்களின் மழலைச் சிரிப்பு, குடும்பத்தின் மகிழ்ச்சி! அவர்களின் துள்ளல், இயற்கையின் பேரழகு! ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது, அங்கே அன்பும், கருணையும், அளவிட முடியாத ஆளுமையும் சேர்ந்தே பிறக்கின்றன.
பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வு, தரமான கல்வி, பாதுகாப்பான சூழல், சம உரிமை, முழுமையான சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்வது நமது கடமையும், பொறுப்புமாகும். பெண் குழந்தைகளின் கனவுகளுக்குச் சிறகளித்து, முன்னேற்றத்திற்குத் துணை நின்று, பாகுபாடற்ற சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்!
#CMJosephVijay
#InternationalDayOfGirlChild