சிறந்த நகைச்சுவை நடிகர் - ஹர்ஷத் கான் (டிராகன், ஆரோமலே)
வாய் மு��ுக்கச் சவடால் பேச்சும், உடல் முழுக்க அதிகப்பிரசங்கித்தனமுமாய் உதார்விட்டுத் திரியும் நம் கல்லூரிக்கால ஜூனியரை அப்படியே நகலெடுத்து கண்முன் கொண்டுவந்து நிறுத்தினார் ‘குட்டி டிராகன்’ ஹர்ஷத் கான்.
தன் மலர் டீச்சருக்காக ஓயாமல் ஹார்ட்டின் பலூன்களைப் பறக்கவிட்டு மொக்கை வாங்குவதாகட்டும், இடம் பொருள் ஏவல் தெரியாமல் வாய்விட்டு சீனியர்களிடம் மொத்து வாங்குவதாகட்டும்… கேம்பஸில�� இவர் அடித்த அத்தனை லூட்டிகளும் அரியரே இல்லாமல் ஆல் பாஸ் ஆகின.
'டிராக’னில் ஹீரோ முதுகில் தொங்கியபடி தொணதொணக்கும் வேடிக்கையான வேதாளம் என்றால் ‘ஆரோமலே’வில் கூடவே இருந்து நம் வாழ்க்கையில் கும்மியடிக்கும் ரகளையான நண்பன்.
ஆர்ப்பாட்டமான உடல்மொழியில் மட்டுமல்ல, சீனிப்பட்டாசாக வெடிக்கும் ஒன்லைனர்களாலும் இவரால் குலுங்கிச் சிரிக்கவைக்க முடியும் என்பதை எடுத்துச் சொன்னது ‘ஆரோமலே.’
டிஜிட்டல் இளைஞர்களுக்கு, கலையின் தீவிரத்தன்மை புரிவதில்லை எனும் கருத்தை மறுதலித்து காமெடிக்கு சீரியஸாகத் தன் உழைப்பைக் கொடுக்கும் ஹர்ஷத் கான், நம்பிக்கையூட்டும் நட்சத்திரம்.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #HarshathKhan | #Dragon | #Aaromaley | #BestComedian
Inda maari city life ah villanize panaama evlo azhagaa avanoda lifestyle and choices ah embrace pannirukaan
Idly kadai nu oru kandraaviya edutaanunga 🙏
SK about JN : Celebrate JN on Jan 9
Result :JN didn't release yet
SK about Dhoni : The OG is back di..
Result : Dhoni didn't play single match
SK about Cibi : Thalaivar Movie
director Cibi..
Result : Cibi got removed
Jinx king SK😭