கோட்டை மீறினால்
அபராதம்
அது சாலை விதி!!
இன்று
கோட்டை மீறினால்
"பிரமாதம்"
இது இலை விதி!!
பொதுவாக
பயணங்கள் முடிவதில்லை
இவர்கள்
விதிமீறியப் பயணங்களோ
காலத்திற்கும்
விடியப் போவதில்லை
மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
இன்று
ஜனநாயக விரோதிகளால்
தங்கள் பக்கம்
சேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக!!
"பேரம்"
இலைக்கு வலை
விரிக்கப்படுகிறது
ஜனநாயகம்
மண்ணில்
விழும் "நேரம்"
குறிக்கப்படுகிறது
காலம் பதில் சொல்லும்
#நிர்வாக_சந்திப்பு:
#BCM_சான்றிதழ் மற்றும் குர்பானிக்கு இடையூறு ஆகியவற்றுக்கு எதிராக....
தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்!
அமைச்சர் நிர்மல் குமாரை மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி MLA நேரில் சந்தித்து கோரிக்கை!
ஜுலை 01
கடந்த வாரம் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதி திரு.ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள், இஸ்லாமிய மார்க்கத்தை புதிதாக ஏற்றுக் கொண்டவர்கள், BCM சான்றிதழ் பெற முடியாது என தீர்ப்பளித்தார்.
இது கடும் சர்ச்சைக்கு உள்ளானது. இது அரசியல் சாசன சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளுக்கு எதிரானது என ஜனநாயக சக்திகள் குரல் கொடுத்தார்கள்.
இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், சட்ட நிபுணர்களுடன் இன்று சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. நிர்மல் குமார் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்!
இக்குழுவில் வழக்கறிஞர்கள் அமீன், சுவாதிஸ், ஹசன், பிரசன்னா, ஜோசப் ஆகிய ஐந்து சட்ட நிபுணர்களும் பங்கேற்றனர்.
அப்போது இந்த வழக்கு குறித்த விவரங்களும், இதில் எவ்வாறு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதற்கான சட்ட நுட்பங்களும் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.
இதனை முழுமையாக வாசித்த அமைச்சர் அவர்கள், இவ்விஷயத்தில் இந்த மனுவின் சாராம்சங்களை கருத்தில் கொள்வதாகவும், மேல்முறையீட்டு தொடர்பான நடவடிக்கையில் உறுதியாக இருப்பதாகவும், தேவைப்படும்போது இது குறித்து இதே குழுவை தொடர்பு கொள்வதாகவும் கூறினார்.
அதன் பிறகு பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுப்பது தொடர்பான அதே நீதிபதியின் சர்ச்சைக்குரிய தீர்ப்பு குறித்தும் மேல்முறையீடு செய்ய வேண்டும் என மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி MLA., கேட்டுக் கொண்டார்.
அது குறித்த பணிகளையும் கவனத்தில் கொண்டிருப்பதாகவும், மேல்முறையீட்டு பணிகளை துரிதப்படுத்துவதாகவும் அமைச்சர் உறுதி அளித்தார்.
இச்சந்திப்பின்போது மஜகவின் துணைப் பொதுச் செயலாளர் நாகை.முபாரக், மாநில துணைச் செயலாளர் அசாருதீன் ஆகியோரும் உடன் இருந்தனர் .
இடஒதுக்கீடு தொடர்பான விவாகரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் பயனுள்ள ஒரு முயற்சி மஜக சார்பில் முன் எடுக்கப்பட்டுள்ளது.
நிறைவாக சிதம்பரம் தொகுதி குறித்த கோரிக்கைகளையும் அமைச்சரிடம் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் எடுத்துரைத்தார்.
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
" நாம் யாருக்கும் மேலல்ல!
யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் ஐயர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது, தாயையும் ஆகாது, சேரியும் கூடாது, அக்ரகாரமும் ஆகாது, யோக யாக புரட்டுகள், புரோகித பித்தலாட்டம், மனுக்கொடுமை வேண்டாம்.
மனிதர் யாவரும் சரி நிகர் சமமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படி தம்மை இந்து என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித்தான் மனம் இடம் தரும்? எப்படித்தான் துணியும்? இந்து மதம் என்பதிலே உள்ளக் கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதைமுறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப்பார்த்த பிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் இந்து என்று கூறிக்கொள்ள மனம் இடம் தரும்?
பாம்பை எடுத்து படுக்கையில் விட்டுக்கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக் குப்பையை வீட்டுக்குள் கொண்டுபோய்ச் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களைவிட்டு மதிகெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீளாமார்க்கம் தேடுவதைவிட்டு, மாளவழி தேடிக் கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்ப மிடுவரா? கண் தெரியும்போது குழியில் வீழ்வாரா?
தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு, திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் இந்து மார்கத்தில் போய்ச் சேர இசைவாரா? வீரத்திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கிப் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!!
ஆரியமாயை
#அறிஞர்_அண்ணா
#அண்ணா #ANNA
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
கழக தலைவர் திரு. @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி மெஞ்ஞானபுரத்தில் நேற்று (28.06.2026) நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமைத் தொடங்கி வைத்து குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து கொண்டோம்.
#poliodrops
5,000 மாற்றுக் கட்சியினர் தி.மு.க-வில் இணைவு!
சென்னை, வானகரத்தில் கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மாற்றுக் கட்சியினர் 5,000 பேர் தங்களை தி.மு.க-வில் இணைத்துக் கொண்டனர்.
#MKStalin#DMK#Benjamin#Chennai