@dmk_raja 🙏 அண்ணா!
நெருப்பாற்றை கடந்து வந்திருக்கிறீர்கள். தந்திரமாக நாட்டையே பேச வைத்த அந்த குற்றச்சாட்டு பொய் என நிரூபித்து நிமிர்ந்து நின்றது மிகப் பெரிய விசயம். 🙏🙏🙏
'கழகம் வில்லாம், நின் அணியே கணையாம்' என முத்தமிழறிஞர் கலைஞரால் போற்றப்பட்ட தி.மு.கழகத்தின் இதயமாம் இளைஞரணி
தொடங்கப்பட்ட நாள் இன்று.
திராவிடத் தலைவர்களின் வழியில் செயலாற்றிடுவோம் - தமிழ்நாட்டின் உரிமைகளை காத்திடுவோம்!
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.
இந்திய அரசியல் களம் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், வெளிநாட்டுப் பயணம் முடித்து தாய் மண்ணுக்குத் திரும்பிய திராவிட நாயகர் நம் கழகத் தலைவர் அவர்களை சென்னை விமான நிலையத்தில் கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் திரண்டு வந்து வரவேற்று மகிழ்ந்தனர். வாழ்த்து முழக்கங்கள் விண் அதிர ஒலித்தன.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி கழகத் தொண்டர்களை கட்டிப்போட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் இன்று!
சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் அயராது உழைப்போம். மீண்டு எழுவோம் - மீண்டும் வெற்றிக் கொடி ஏற்றுவோம்!
ஓங்குக கலைஞர் புகழ்!
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
எம் பெயருக்குப்
பின்னாலே
பெருமையாய் பட்டம்
அதை யாம் பெற்றிடவே
நீ தந்தாய்
இடஒதுக்கீடு சட்டம்
ஊரென்ன சொன்னாலும்
கவலையில்லை
உந்தன் புகழ் பாடித்
திரிவதே
என் முழுநேர வேலை தாத்தா
எங்களுக்கு சமூக நீதி ,மொழி உணர்வு,சுயமரியாதை,
இனஉணர்வு அனைத்தும் கற்றுக்கொடுத்த எங்கள் தலைவரே
மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மறைக்க, சி.பி.எஸ்.இ. தலைவரையும் செயலரையும் மாற்றி ‘மிகப்பெரிய’ தீர்வை கண்டுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
ஆன்லைன் முறையில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கிய போதே பல்வேறு எதிர்ப்புகள் வந்தன. சர்வாதிகார ஒன்றிய அரசு வழக்கம்போல அக்குரல்களை மதிக்காத காரணத்தால், தேர்வு முடிவுகளுக்குப் பிறகு மாணவர்கள் பலர் தங்களின் மதிப்பெண் குறித்து புகார் அளித்தார்கள்.
அதோடு மாணவர்களுக்கான சோதனை முடியவில்லை! விடைத்தாள் கேட்ட மாணவர்களுக்கு வேறொரு மாணவரின் விடைத்தாள் வழங்கப்பட்டது. மறுமதிப்பீட்டிற்கான கட்டணம் செலுத்துவதிலும் சிக்கல்கள் எழுந்தன. இவை அனைத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய ஒன்றிய கல்வி அமைச்சரும், ஒன்றிய அரசும் மிகப்பெரிய தீர்வை கண்டது போல இப்போது தலைவர் மற்றும் செயலரை மாற்றியுள்ளார்கள்.
மாணவர்களுக்கு எப்போது மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கும்? அவர்கள் எப்போது தங்களின் மேற்படிப்பிற்கு விண்ணப்பம் செய்வது?
NEET மற்றும் CUET நுழைவுத்தேர்வுகளிலும் இதே நிலைதான் இருந்தது. “தொழில்நுட்பக் கோளாறு” என்றார்கள். கல்வி சார்ந்த விஷயத்திலாவது எடுத்தோம் கவிழ்த்தோம் என சர்வாதிகார போக்கில் நடந்துகொள்ளாமல், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களைக் காது கொடுத்து ஒன்றிய அரசு கேட்க வேண்டும். விரைவில் மாணவர்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டும்.
Watch | "காவல்துறை உங்க பொறுப்புல இருக்கும் போது, சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு பொறுப்பேற்காதது ஏன்? அவர்கிட்ட ஒருத்தர் கூட கேட்க மாட்டீங்களா?”
#SunNews | #Vijay | #TVK | #DMK
அல்லு சில்லுனு சொல்ல தெரிஞ்ச உங்களுக்கு அவுங்களுக்கு சால்வை போட்டு போய் கால்ல விழுந்தீங்களே ??
அதையும் சொல்லுங்க ..
ஏன் சார் அதை மட்டும் சொல்ல மறந்துட்டீங்க
- அண்ணன் ராசா