இந்த படைக்க, காக்க, அழிக்கனு அத்தனைக்கும் ஆம்பள கும்புட சொன்னவன் கூட 🥺🥺
பணத்துக்கும், படிப்புக்கும் கூட பொம்பளைய தான் காட்டி கும்புட சொன்னான்…..
ஏனா ஆற நூறாக்க நம்மால தான் முடியும் னு அந்த ஆம்பளைக்கே தெரியும்-ல.
25 வயசுல girl friend'டோட சுத்திட்டு ஜாலியா இருக்க வேண்டி புள்ள
பொறுப்பா படம் எடுத்து அவங்கம்மாவுக்கு உருதுணையா இருக்காப்ல
பசங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சு பேரன் பேத்திய பாக்க வேண்டிய 54-வயசுல இவங்கப்பன் கள்ளக்காதிலியோட ஊர் சுத்திட்டு இருக்கான்!
உணவு கொண்டு வந்த டெலிவரிபாய். ஹெல்மெட்டை கழட்டியதும் கண்ணீர் விட்ட பெண். நள்ளிரவில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை. இணையத்தை ஈர்க்கும் நெகிழ்ச்சி பதிவு.!!
ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த ஒரு இளம்பெண், தனது வீட்டிற்கு உணவைக் கொண்டு வந்த டெலிவரி பாய் வேறு யாருமல்ல, தனது சொந்தக் காதலன் தான் என்பதைக் கண்டு நிலைகுலைந்து போனார்.
ஒவ்வொரு இரவும் வேலைப் பளு காரணமாகப் பேச முடியாமல் ‘பிஸியாக’ இருப்பதாகக் கூறி வந்த காதலன், உண்மையில் தனது நண்பனுக்காகப் பதிலாக வேலையாகவும், கூடுதல் வருமானத்திற்காகவும் டெலிவரி செய்து வந்ததை அந்தப் பெண் தற்செயலாகக் கண்டுபிடித்தார்.
ஹெல்மெட்டை கழற்றச் சொல்லி வற்புறுத்திய போது, தன் முன்னே வியர்க்க விறுவிறுக்க நின்ற காதலனைப் பார்த்த அந்த நொடி, சில வினாடிகள் உலகம் ஸ்தம்பித்துப் போனது. பொய் சொன்னது ஏன் என்று கண்ணீருடன் கேட்ட காதலிக்கு, அந்த இளைஞன் அளித்த பதில் அங்கிருந்தவர்களின் இதயத்தைத் தொட்டது.
“இது ஒரு பொது இடம், எல்லாவற்றையும் விளக்க முடியாது; ஆனால் நான் என்ன செய்தாலும் அது நம் எதிர்காலத்திற்காகவும், உன்னைக் கவனித்துக் கொள்வதற்காகவுமே செய்கிறேன்,” என்று அந்த இளைஞன் உருக்கமாகத் தெரிவித்தார். விலை உயர்ந்த பரிசுகளையும், ஆடம்பரமான ஆச்சரியங்களையும் விட, தன் மீதான உண்மையான அன்பும், காதலனின் அர்ப்பணிப்புமே தனக்கு முக்கியம் என்பதை அந்தப் பெண் உணர்ந்து அவனைக் கட்டித் தழுவினார்.
உண்மையான காதல் என்பது வெறும் ரோஜாக்களிலும் வண்ணமயமான கொண்டாட்டங்களிலும் மட்டும் இல்லை; உலகம் அறிந்திராத இத்தகைய அமைதியான தியாகங்களிலும், அன்பிற்காக உழைக்கும் உன்னதத்திலுமே வாழ்கிறது என்பதை இந்தச் சம்பவம் நெகிழ்ச்சியுடன் உணர்த்துகிறது.
பகிர்வு...
குறைந்தபட்ச இருப்பு (மினிமம் பாலன்ஸ்) இல்லாததற்காக அபராதம் வசூலித்துவரும் நாட்டின் பொதுத்துறை வங்கிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைத்த ஒருவர் பாராட்டுக்குரியவர்.
பெங்களூருவில் தனியாக தொழில் நடத்திவரும் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் Parameswaran Krishnayya அவர்கள், பாராளுமன்ற மனு குழுவை அணுகி, மினிமம் பாலன்ஸ் இல்லாததற்கான அபராத வசூலை நிறுத்த வேண்டும் என்ற பரிந்துரையை பெறச் செய்தார்.
கடந்த நிதியாண்டில் ₹4,817 கோடி அபராதமாக வசூலித்த வங்கிகளுக்கு இது பெரிய பின்னடைவாக அமைந்தது. சாதாரண மக்களுக்கு இது மிகப்பெரிய நிம்மதியாக உள்ளது.
தனது ஊழியர்கள், “அக்கவுண்டில் பணம் அனுப்ப வேண்டாம்; மினிமம் பாலன்ஸ் இல்லையென்றால் அபராதம் பிடித்துவிடுவார்கள்” என்று கூறியபோதுதான், இந்த பிரச்சினையின் தீவிரத்தை அவர் உணர்ந்தார். அதற்கான தீர்வை காண முயற்சி எடுத்தார். அந்த முயற்சியின் பலன்தான் இன்று பொதுமக்களுக்கு கிடைத்துள்ளது.
ஒவ்வொரு மாத இறுதியிலும் ஒருவருக்கு ஏராளமான செலவுகள் இருக்கும் — EMI கட்ட வேண்டும், மின்சார கட்டணம் செலுத்த வேண்டும், பல தேவைகள் இருக்கும். அவற்றை கணக்கிட்டு தான் அவர் தனது கணக்கில் பணம் வைத்திருப்பார். ஆனால் அதே சமயம் மினிமம் பாலன்ஸ் இல்லை என்ற காரணத்தால் அபராதம் பிடித்துக் கொள்வது எப்படி நியாயம்?
நாம் பயன்படுத்துவது நம்முடைய சொந்த பணம் தான்; வங்கியின் பணம் அல்ல. ஒருவரின் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு கூட இல்லாத நிலைமை ஏற்கனவே கடினமானது. அதற்குமேல் “உங்களிடம் பணம் இல்லை, அதனால் அபராதம் கட்ட வேண்டும்” என்று சொல்வது எவ்வளவு முரண்பாடானது!
இதையே தான் நான் கேள்வி எழுப்பினேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மினிமம் பாலன்ஸ் இல்லாததற்காக அபராதம் வசூலிக்கக் கூடாது என்ற பாராளுமன்ற மனு குழுவின் பரிந்துரைக்கு பின்பு, நாட்டின் 6 பொதுத்துறை வங்கிகள் இந்த அபராத வசூலில் இருந்து பின்வாங்கியுள்ளன.
நாட்டின் சாதாரண மக்களுக்கு நிம்மதி அளித்த இந்த அனுமதியை பெற்றுத்தந்த பரமேஸ்வரன் சார் அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட். ❤️🙏