#NewsUpdate | சிறுபான்மையினர் நீக்கம் - SIR நடவடிக்கை குறித்து இந்திய அரசிடம் விளக்கம் கேட்டு ஐநா நோட்டிஸ்
தேர்தல் ஆணையம் SIR விவகாரத்தில் இந்திய குடிமக்களிடம் வெளிப்படையாக செயல்படுமா?
#SunNews | #SIR | #UN
மேற்கு வங்கத்தை சேர்ந்த 12 வயது முஸ்லிம் பெண் கடத்தி, கூட்டு வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜகவை சேர்ந்த ஷாந்தனு மண்டல் என்பவனும் அதில் ஒருவனாக கைது செய்யப்பட்டுள்ளான்.
இதில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.
https://t.co/TlRQBSDsTB
பக்ரீத் பண்டிகையை ஒட்டி, மே 11 - 29, 2026 வரை முஸ்லிம்களுக்கு எதிராக 46 வன்முறை சம்பவங்களை சங்பரிவார கூட்டம் நடத்தியுள்ளதாக, The Association for Protection of Civil Rights (APCR) அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாஜகவின் இசைவோடு சங்பரிவார கூட்டம் ஆடும் மதவெறியாட்டத்திற்கு, அரசுத்துறைகளும் அமைதி காத்து ஆதரவாக நிற்பது கண்டிக்கத்தக்கது.
https://t.co/VwgRzY8kmF
அமெரிக்கா, ஈரான் போர் துவங்கப்பட்ட நாளான மார்ச் 1, 2026 முதல் மே 12 வரை, 12 மாநிலங்களில் 53 ஊர்களுக்கு சென்று 81 கூட்டங்களில் மோடி பங்கெடுத்துள்ளார்!
இவற்றில் வெறும் 13 கூட்டங்கள் மட்டுமே அரசு சார்ந்த நிகழ்வாகும். மற்ற அனைத்தும் கட்சி சார்ந்த கூட்டங்கள். அதிலும் பெருபாலானாவை 5 மாநில தேர்தல் பரப்புரைக்காக நடத்தப்பட்டவை தான்.
எரிபொருள் சேமிப்பை வலியுறுத்தி மக்களுக்கு உரையாற்றியவர், பல இலட்சங்களை அரசியல் நிகழ்வுகளுக்காக செலவழித்துள்ளது தற்போது அம்பலமாக்கியுள்ளது. மோடி நாட்டு நலனில் துளியும் அக்கறை இல்லாதவர் என்பதையே இது வெளிக்காட்டுகிறது!
https://t.co/coNkgwpc36
எல்லா மதரஸாக்களிலும் இனி வந்தே மாதரம் பாடப்பட வேண்டுமென மேற்குவங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருப்பதை, மத வெறுப்பின் வெளிப்பாடாகாவே பார்க்க வேண்டியுள்ளது.
ஒருவரின் மத உரிமைக்கு எதிரான செயலை செய்யச் சொல்லி நிர்பந்தப்படுத்துவது சட்டவிரோதமானது!... (1/2)
போதுமான அளவிற்கு நேரம் கொடுக்காமல், சரியான செயல் திட்டம் இல்லாமல் அவசரகதியில் மேற்கு வங்கத்தில் SIR ஐ அமல்படுத்தி, CEC மூலம் 91 இலட்சம் மக்களின் வாக்குரிமையை பறித்து ஆட்சியை பிடித்த பாஜக, தற்போது அவர்களுக்கு அரசு நலத்திட்டங்களை வழங்க மாட்டோம் எனக் கூறுவது அதிகார விதிமீறல்..(1/3)
குஜராத் மாநிலத்தின் சோம்நாத் கோயில் மீண்டும் கட்டப்பட்டு 75 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்ற வேலையில், அந்நிகழ்வை கோலாகலமாக கொண்டுடாடுகிறோம் எனும் பெயரில் இந்திய வானூர்த்தி படையின் சாகசங்கள் நடத்தப்பட்டுள்ளது!... (1/3)
5 மாநில தேர்தல் முடிவடைந்து, முடிவுகள் வெளிவந்த நிலையில், அதிகமான Road Showக்கள், விமான பயணங்களை தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திவிட்டு, இப்போது மக்களிடம் வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள், பயணங்களை குறையுங்கள், தங்கம் வாங்காதீர்கள் என மோடி கூறுவது ஏமாற்று வேலை!... (1/2)
100 ஆண்டுகள் பழமையான தர்ஹாவை, அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ளது எனக் கூறி Delhi Development Authority (DDA) இடித்துள்ளது. முறையான நீதிமன்ற விதிமுறைகளை பின்பற்றாமல் இடித்துள்ளதாக தர்ஹா நிர்வாகம் கூறியுள்ளது... (1/2)
உ. பி.ல் மதரசாவில் பயிலும் 14 வயது மாணவியை கடத்தி மானபங்கப்படுத்தி, நெத்தியில் பொட்டு வைத்து திருமணம் செய்தது போன்ற வேலையை தீபு என்பவன் செய்துள்ளான்.
தீபு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவனுடன் சேர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்ட சஞ்சீவ், திராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டு, கடும் தண்டனை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
RSS தலைவர் மோகன் பகவத்திற்கு 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் அரசு பாதுகாப்பிற்கு இதுவரை எவ்வளவு செலவாகியுள்ளது என RTI மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8(1)(g) & 8(1)(j) பிரிவுகளின் கீழ் பதில் தர தேவையில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது... (1/2)
மாட்டை அறுத்தார் என குற்றச்சாட்டை(!) கூறி, விலக இயலாத அளவிற்கு பிடித்து வைத்துக்கொண்டு ஒரு முஸ்லிம் இளைஞரை மிருகத்தனமாக நடுவீதியில் தாக்கும் குஜராத் காவல்துறை.
இந்தியாவில் முஸ்லிம்களின் வாழ்க்கை என்பது அச்சத்திலும், பாதுக்காப்பற்ற சூழலிலும் தான் நகர்கிறது!
https://t.co/jFxV08iQWV
மேற்குவங்க மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, பாஜக குண்டர்களே புல்டவ்சரை எடுத்து வந்து கொல்கத்தாவின் மார்க்கெட் பகுதியில் உள்ள கறி கடைகளை இடித்துள்ளனர். TMC அலுவலகத்தையும் இடித்துள்ளனர்.
இந்த அராஜகங்களை காவல்துறை அமைதியாக வேடிக்கை பார்க்கவும் செய்தது. ஆட்சியை துவங்கும் முன்பே கலவரத்தை துவங்கியுள்ளது சங்பரிவார் கூட்டம்.
https://t.co/rrhScauGB8
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 31 பேர் உயிரிழந்தனர், 300 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். சுமார் 20 ஆண்டுகள் நடந்த வழக்கில் எஞ்சிய நான்கு பேரான ஹிந்துத்துவ அமைப்பை சேர்ந்த மனோகர் நர்வாரியா,ராஜேந்திர சவுத்ரி, தான் சிங், லோகேஷ் ஷர்மா ஆகியோர் மீது சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகள் என சொல்லப்பட்ட உத்தரவை பாம்பே உயர்நீதிமன்றம் தற்போது ரத்து செய்துள்ளது!
இப்போது இவ்வழக்கில் குற்றவாளிகளாக ஒருவரும் இல்லை!
இதே போன்று 2008 ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலும் பிரக்யா சிங் தாகூர், பிரசாத் புரோஹித் உட்பட 7 பேர் NIA நீதிமன்றத்தால் விடுதலையாகினர். இந்த குண்டுவெடிப்பில் 6 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், 100 பேர் காயமடைந்தனர். சுதந்திர இந்தியாவில் சிறுபான்மையினரின் உயிர்களும், உரிமைகளும் மலிவாகிப் போய்விட்டது.
https://t.co/t51wqYr22I
மேற்குவங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் பகுதியில், ராம் நவமி ஊர்வலத்தின் போது முஸ்லிம்களின் கடைகளை அடித்து நொறுக்கி அட்டூழியத்தில் ஈடுபடும் ஹிந்துத்துவ தீவிரவாதிகள்.
பாதையோர கடை வியாபாரிகளின் கடைகளில் பொருட்களை திருடி அதையே உண்ணும் மனித மிருகங்கள்! மே.வ அரசு இவர்கள் ஒவ்வொருவரையும் கைது செய்து, சட்டப்படி தண்டிக்க வேண்டும்.
https://t.co/d95peKdrzM
பிஹார் மாநிலம் மதுபானி எனும் ஊரில், கிராம தலைவரான குமாரி தேவியை சந்தித்து புகார் அளிக்க வந்த ரோஷன் காதூன் என்ற இஸ்லாமிய பெண்ணை கம்பத்தில் கட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர்.
நோன்பு வைத்திருந்த அவர் வலி தாங்க இயலாமல் தண்ணீர் கேட்ட போது, சிறுநீரை குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார். கிராம தலைவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.
https://t.co/SdAugcZvlS
உ. பி.ல் வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்வதற்கு தல்மண்டி எனும் சாலையை விரிவுபடுத்த ₹224 கோடி ஒதுக்கிய பாஜக அரசு, சுமார் 180 கடை வீடுகள் மற்றும் 6 பள்ளிவாசல்களை இடிக்க குறைந்த காலத்தில் நோட்டிஸ் வழங்கி பிப்ரவரி மாதத்தில் இடித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை முஸ்லிம்களுக்கு சொந்தமானது.
நில உரிமையாளர்களுக்கு அவர்களின் இடிக்கப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டு தொகை கூட 2019 ஆம் ஆண்டின் விலையை மையப்படுத்தியே நிர்ணயிக்கப்படுள்ளது. வாடகை வீடு, கடைகளில் இருந்தவர்களுக்கு எந்த இழப்பீடும் மாற்று ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படவில்லை.
இடிக்கப்பட்ட 6 பள்ளிவாசல்களில் பெரும்பாலானவை நூற்றாண்டுகளாக அங்கே இருந்துள்ளது.
மோடியின் தொகுதியான வாரணாசியில், தல்மண்டி எனும் இப்பகுதியில் இருக்கும் சுமார் 10000 முஸ்லிம்களின் வாக்குகளை அபகரிக்கவே இதை பாஜக அரசு மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கொந்தளிக்கின்றனர்.
https://t.co/HwfWI5aYl7