எனது தாத்தா #பழக்கடை_ஜெயராமன் எனது தந்தை #தீரர்_ஜெ_அன்பழகன் அவர்கள் காட்டிய கலைஞரின் பாதையில்..
என் உயிர் உள்ளவரை, என் உடலில் ஓடும் கடைசி சொட்டு உதிரம் உள்ளவரை
கழகம்.! தலைவர்..! இளம்தலைவர்…!
அவர்களின் வழியில்..🙏🏽
@mkstalin | @Udhaystalin
தமிழ்ச் சமூகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட தம் பொதுவாழ்வில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள், வெற்றி - தோல்விகள், விமர்சனங்கள் என அனைத்தையும் கடந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக அரசியலின் மையப் புள்ளியாகத் திகழ்ந்த மகத்தான ஆளுமை!
அரசியல் ரீதியாக ஏற்பட்ட அத்தனை எதிர்ப்புகளையும் -நெருக்கடிகளையும் முறியடித்து, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தொடங்கிய நமது திராவிட முன்னேற்றக் கழகம், உயிரோட்டமுள்ள, வலிமையான மக்கள் இயக்கமாக என்றும் நிலைத்திருக்கும் வகையில் வழிநடத்திய தன்னிகரற்றத் தலைவர்!
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளில், இன்று இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு வலுவான அடித்தளம் அமைத்திட்ட, தொலைநோக்கு பார்வை கொண்ட முதல்வர்!
இலக்கியம், நாடகம், திரைப்படம், பத்திரிகை எனப் படைப்புலகின் அனைத்துத் துறைகளிலும் தன் எழுத்துக்களால் அழியாத முத்திரை பதித்து, தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கும் பங்களிப்புகளை வழங்கிய மாபெரும் கலைஞர்!
நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கம் வகுத்தளித்த சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை இறுதிவரை உறுதியாக ஏந்தி நின்ற கொள்கை வீரர்!
தமிழினக் காவலர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவரதம் மகத்தான பொதுவாழ்வையும், பெரும்புகழையும் போற்றுவோம்.
வாழ்க கலைஞரின் புகழ்!
என் அரசியல் வாத்தியார்,
என் சிந்தனையின் வழிகாட்டி
🖤❤️🔥🗿
உங்கள் அரசியல் பயணமும், அரசியல் பேச்சுக்களும் எங்களுக்கு எப்போதும் ஊக்கமாக இருக்கும்.
( திமுக கொள்கைக்காரனுக்கு )
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்தியாரே! 🎂🖤❤️
@VijayRaghavavan
வம்சம் படத்துல கிஷோர்க்கு ஏன் விஷம் வைச்சேன்னு வில்லன் சொல்றப்ப எனக்கும் அவனுக்கும் எந்த பகையும் இல்ல,இந்த வம்சத்துல இவன் மட்டும் உயிரோட இருக்கானே இவன் செத்துட்டா இந்த வம்சம் அழிஞ்சுரும்னு நினைச்சு தான் கொண்ணேன்னு சொல்லுவான் அதே மனநிலை தான் இங்க பெருவாரியான மக்கள் மனசுல திமுக பத்தி இருக்கு.
வாரிசுகள் மூனு பேருக்கு அப்பன் ரெண்டு சென்ட் இடத்தை விட்டுட்டு போனா யாராவது ஒருத்தன் முழுசா அனுபவிக்கட்டும்னு விட்டு குடுக்காம ஆளுக்கு 200சதுரடியா பிரிச்சு அதுல வீட்டையும் கட்டி காலைல கோலம் போடுறதுல இருந்து நைட் பைக் நிப்பாட்ற வரைக்கும் பங்காளிகளோட சண்டை சச்சரவுனு நிம்மதி இல்லாம ஓடுற பெருவாரியான மக்களுக்கு வாழையடி வாழையா அதிகாரத்தையும் கட்சியையும் அது சார்ந்த சொத்துக்களையும் வாரிசுகளுக்கு எந்த இடையூறும் இல்லாம கை மாற்றி விட்டு செழிப்பா இருக்க கலைஞர் ஐயா குடும்பத்தை பாக்குறவனுக்கு இயல்பாவே ஆழ்மனசுல ஒரு வெருப்பு உருவாகும்.அதை வளர்த்து எடுத்து அணையாம பாத்துக்குறதுக்கு ஊடகங்களும் உயர்சாதி ஏழைகளும் தங்கள் வாழ்க்கையையே தியாகம் பண்ண தயார இருக்காங்க.
எம்ஜிஆர்க்கு இத்தனை மனைவிகள் இருந்தும் வாரிசு இல்லாதது திமுகவோட தப்பு கிடையாது.ஆனால் அவர் வாரிசு அரசியலை ஊக்குவிக்கலைனு வித்தியாசமா வருவாங்க, ஜெயலலிதா திருமணம் செய்யாததும் விஜய் மனைவிய விரட்டி விட்டு தனியா இருக்கதும் 45+ ஆண்ட்டிகளுக்கு யாருமே இல்லாம தனியா நிக்குறாங்க,இவங்க பாரு கொப்பும் குலையுமா குடும்பமா நின்னு ஒடுக்க பாக்குறாங்கனு ஒரு அனுதாபம் அவங்க மேலயும் காரணமே இல்லாத வெருப்பு திமுக மேலயும் தன்னால தோன்றும்.
உயர்சாதியினருக்கு தன் பக்கத்துல சூத்திரனை உக்கார வைச்சது பிரட்சனை,சூத்திரனுக்கு தனக்கு சமமா தலித்களை உக்கார வைச்சது பிரச்சனை,தலித்துக்கு தன்னை மாதிரியே பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் மீட்பராய் இருக்கது பிரட்சனை. எடப்பாடி இன்னும் பத்து தேர்தல்ல தோற்றாலும் அவரோட MLA என்னிக்கை 30க்கு கீழ போகாது.அந்த மாதிரி அரசியல் புரிதல் இல்லாத பிளைன்ட் ஓட்டர்ஸ் திமுகவுக்கு கிடையாது.
ஆணுக்கு பெண் சமம்னா ஆணுக்கு ஈகோ பிரட்சனை, அம்மா வீட்டு சொத்துரிமைய விட தன் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் உரிமையை பெருசா நினைக்குறதும் தன் கணவர் வழி இழக்கும் சொத்துக்களின் மதிப்பும் பெண்களுக்கு வெருப்பை விதைக்குது.
தமிழ்நாட்டுல ஆன்மீகத்துக்கு அடுத்தபடியாவோ அதைவிட ஒருபடி மேலயோ கொண்டாடுற சினிமால கூட காட்டுற கெட்ட அரசியல்வாதிகள் எல்லாரும் திமுகவையே பிரதிபளிப்பாங்க.அதையும் பிரிவியூ ஷோ போய் பார்த்து நல்லா இருக்குனு பாராட்டுற திமுகவோட நாகரீக அரசியலும் கூட வெருப்புக்கு ஒரு காரணம் தான்.
பத்துருபா பிட்ச்சை போடுறப்ப கூட வாங்குறவனுக்கு ரெண்டு காலும் இல்லாம இருக்கனும்னு எதிர்பாக்குற பொது புத்தில தன்கிட்ட ஓட்டு வாங்கி அதிகாரத்துக்கு வர்றவன் எதாவது ஒருவகைல ஊனப்பட்டு நம்ம கிட்ட இறைஞ்சி கெஞ்சுற நிலைல இருக்கனும்ங்குற எதிர்பார்ப்பு மனநிலை இருக்கவனுக்கு திமுககாரனோட சுயமரியாதை கோட்பாடு பாக்க திமிராவும் ரவுடிதனம் மாதிரியும் தெரியிறதும் ஒரு காரணம்...
ஓஹோ இதன் விஷயமா🤣😂 அதான் krishaish லிருந்து madangowri வரை வரிசையாக வராங்களா🤣 இவனுங்களக்கு தான் அல்காரிதம் மாற்றம் நடந்திருக்கு போல😂🤣கமெண்ட் செக்ஷன்ல சிதைக்கிறாங்கடா🤣
முதல்வர் விஜய் அவர்களின் முதல் டெல்லி பயணம் தோல்வி அடைந்தது என நான் குறிப்பிட்டதற்கு மேலே விழுந்து நிறைய பேர் கடிக்கிறார்கள்.
Narrative set செய்கிறேன் என புழுதி வாரி தூற்றுகிறார்கள்!
கீழ விஷயங்களை பட்டியல் இடுகிறேன் படிப்பவர்கள் புரிந்து!
1. தமிழ்நாடு முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே. அதற்கு முந்தைய தினம் கேரளா மாநில முதல்வர் சதீஷன் சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது.
2. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்திக்க இருந்தது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. ( சிலர் நேரம் கேட்கப்படவே இல்லை என உருட்டுவார்கள் தமிழ்நாடு அதிகாரப்பூர்வ அரசு அதிகாரிகள் அனுப்பிய குறுஞ்செய்தி இப்பொழுதும் என்னிடம் இருக்கிறது. அதில் மிகத் தெளிவாக பிரதமரத்தை சந்திப்புக்கு பிறகு உள்துறை அமைச்சரின் சந்திப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
3. தமிழ்நாடு முதல்வரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரள மாநில முதல்வரை அதே நேரத்தில் சந்தித்து இருக்கிறார் அதுவும் முக்கியமான அலுவல் கூட்டம் இருந்தபோதும் கூட கேரள முதல்வருக்காக நேரம் ஒதுக்கி சந்தித்திருக்கிறார். ஆனால் தமிழ்நாடு முதல்வரை சந்திக்க அவர் விரும்பவில்லை
4. இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருடன் சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்தது இது 100% உண்மை காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் இரு தலைவர்களின் வீடுகளிலும் சரிபார்ப்பு அதைத்தான் உறுதி செய்து இருந்தார்கள். ஆனால் சந்திப்பு நடக்கவில்லை
5. ஒரு மாநில முதல்வர் முதல் முதலாக டெல்லி வருகிறார் ஆனால் கூட்டணி கட்சித் தலைவர்களை இப்படி சந்திக்காமல் போவது இதுதான் முதல் முறை. இது நிச்சயமாக அரசியல் ரீதியிலான சிக்கல்களை வெளிக்காட்டுகிறது.
6. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசால் நிர்மாணிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கும் அந்தத் திட்டமும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
7. வழக்கமாக முதல்வர்கள் டெல்லி வந்தால் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மரியாதை நிமித்தமாக சந்திப்பார்கள் தங்களது கோரிக்கைகளை நேரில் சந்தித்து எம்பிக்கள் வலியுறுத்துவார்கள் ஆனால் அதுபோன்ற எந்த ஒரு சந்திப்புகளும் நடக்கவில்லை.
8. தமிழ்நாடு முதல்வர் முன்வைத்திருக்கக்கூடிய கோரிக்கைகளுக்கு கூட மத்திய அரசு ஏதாவது பதில் சொல்லுமா என்பது குறித்த எந்த விதமான தகவல்களும் இல்லை
பத்திரிக்கையாளர் #துக்ளக்_இதயா அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டியில், திருச்சி திருவரங்கம் தொகுதியின் 91வது வாக்குச்சாவடியில் திமுக வெறும் 5 வாக்குகள் மட்டுமே பெற்றதாக கூறிய கருத்தை எடுத்துக்கொண்டு, திமுக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளவர்களே கழகத்தின் முதன்மைச் செயலாளர் @KN_NEHRU அவர்களையும், நிர்வாகிகளையும் கடுமையாக விமர்சித்து வருவது ஏற்புடையதல்ல.
அந்த 91வது வாக்குச்சாவடி வடக்கு சித்திரை வீதியை உட்படுத்திய பகுதியாகும். மொத்தம் சுமார் 300 வாக்குகள் மட்டுமே கொண்ட அந்த பகுதி, இப்போது மட்டும் அல்ல கடந்த காலங்களிலும் திமுகவிற்கு சாதகமான பகுதியாக இருந்ததில்லை.
2021 சட்டமன்றத் தேர்தலில் அங்கு திமுக பெற்ற வாக்குகள் — 15.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அங்கு திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் — 13.
எனவே, தற்போது அந்த பகுதியில் திமுகவினர் அதிருப்தியால் திமுக வாக்குசாவடி நிலைய நிர்வாகிகளே வாக்களிக்கவில்லை அல்லது முதன்மை செயலாளர் அல்லது வேட்பாளர் மீதான எதிர்ப்பின் வெளிப்பாடு என பரப்பப்படும் தகவல்களில் உண்மை இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
கழகச் சார்பும், அரசியல் பொறுப்புணர்வும் கொண்டவர்கள், முழு பின்னணியை அறியாமல் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி விவாதிப்பதை தவிர்க்க வேண்டுகிறேன்.
@mkstalin | @Udhaystalin | @dmk_youthwing | @DMKITwing | @Civilerbala1979 | @IlovemyNOAH2019
அவர் திமுக மீது அவதூறு பரப்பும் அதே நாளில் வாழ்த்து.
திமுக மீது அவதூறு பரப்புவதையே முழு நேர வேலையாக செய்து கொண்டிருக்கும் @Ahmedshabbir20 க்கு பிரத்யேக பேட்டி . திமுக தொண்டர்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படி தோன்றுகிறது @KanimozhiDMK அவர்களே !