என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வண���்கம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மக்கள் மனத்தில் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் முதன்மைச் சக்திக்கான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
வாக்குகளுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம், ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று எந்த ஃபார்முலாவும் இல்லாமல் அன்பு, பாச, உறவு ஃபார்முலா மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலாவை வைத்து வென்ற தேர்தல் இது. தமிழகம், ஊழல் சக்திகளின் கோட்டை இல்லை. மாறாக, மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை, மக்கள் மனத்தில் நீங்கா இடம் ப��ற்ற அன்பு மிக்க தூய சக்தியின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பணநாயகச் சூத்திரத்தையே அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள வெற்றியே இது.
கண்டகண்ட பேரங்கள் நடந்ததாக அவதூறு பேசிய மிருகக் குணப் பேச்சுக்கு எல்லாம் மக்கள் தகுந்த பதிலடியைத் தரமாகத் தந்துள்ளனர். அப்படிப் பேசியவர்களை மக்கள் வெகுதூரத்தில் ஒதுக்கி வைத்து, அவர்கள் மனத்தில் மீண்டும் தோ��்வி பாரத்தை ஏற்றி உள்ளனர்.
இரண்டு தொகுதிகளிலும் நாம் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொண்டதை நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசியவர்களுக்குத்தான் இப்போது மக்கள் பதிலடி தந்துள்ளனர். இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்ய அன்றைய தீய சக்தி தி.மு.க., நம்மை அனுமதித்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்.
நம்மைப் பொறுத்தவரை, என்றைக்கும் நாம் மக்கள் பக்கம்தான் நிற்போம். மக்களோடு மக்களாகத்தான் இரண்டறக் கலந்து இருப்போம். அது நம் கடமை மட்டுமன்று. மக்களுக்கான நமது நன்றிக் கடன் அது. எப்போதும் நம் தமிழக மக்களுக்காக முழுமூச்சுடன் நன்றி விசுவாசத்துடனேயே இருப்போம் என்பது நூறு சதவீதம் உறுதி.
இந்த வேளையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்களித்து வெற��றி பெறச் செய்துள்ள நம் சொந்தங்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவாக நன்றி சொல்வதில் மனம் மகிழ்கிறேன். நெஞ்சம் நெகிழ்கிறேன்.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் மதிப்பிற்குரிய தலைவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்��ொள்கிறோம்.
மேலும், எப்போதும் போலச் சிறப்பாகக் களப் பணியாற்றிய நம் மாண்புமிகு அமைச்சர்களுக்கும் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை த.வெ.க. நிர்வாகிகளான நம் தோழர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த இடைத்தேர்தலில், வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நம் வேட்பாளர்களான சகோதரி திருமதி மரகதம் கு��ரவேல் (மதுராந்தகம் தொகுதி), சகோதரி திருமதி சத்தியபாமா (தாராபுரம் தொகுதி) ஆகியோருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்போதும் சொல்கிறேன். இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெ��்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி.
மொத்தத்தில், அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்���ுக் கிடைத்த வெற்றி. இது இனிமேலும் தொடரும். தொடர்ந்தேதான் தீரும். மீண்டும் மீண்டும் இனிவரப் போகும் வெற்றிகளுக்கும் சேர்த்து இப்போதே நன்றி.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை குறித்தும், நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (14.5.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (14.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை குறித்தும், நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவைத் தலைவர் அறையில், சட்டமன்றப் பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்��ு தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் சட்டமன்றப் பேரவை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. எம். ரவிசங்கர் ஆகிய���ரை வாழ்த்தி உரையாற்றினார்.
#CMJosephVijay
டெல்லியில் தொடங்கிய பிரச்சாரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ��டையும் நாள் நெருங்கிவிட்டது.
அதிகாரத்தால் நம்மை முடக்க நினைத்தார்கள், அவதூறுகளால் நம்மை அழிக்க நினைத்தார்கள். ஆனால் மக்கள் ஆதரவு எனும் மகத்தான சக்தி முன் இவை அனைத்தும் தோற்றுப் போனது. இனி நம்மை முடக்க நினைத்த அதே சாலைகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் முழக்கம் ஓங்கி ஒலிக்கும். எந்த மக்களிடையே நம் மீது வெறுப்பை பரப்ப அதிகார வர்க்கம் முயன்றதோ அதே மக்களின் ஆதரவோடு இனி ஒவ்வொரு ஊரிலும் நம் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழும்.
இனி விசில் சத்தம் வீதிகளெங்கும் ஒலிக்கட்டும்.
மாற்றத்திற்கான மக்களின் கனவு பலிக்கட்டும்.
எளியவர்களுக்கான மக்களாட்சி மலரட்டும்.
Let the battle to reclaim the people's power begin!
23 ஏப்ரல் 2026 🔥
04 மே 2026 🚩
துருபிடிச்ச ஆட்சியாளர்களின் கைகளில் மாட்டிக்கொண்டு தவிக்கும் தமிழக மக்களின் வாழ்வில் பேரொளி தந்து மகிழ்விக்க ✨
தமிழக வெற்றிக் கழகத்தின் வழியாக தலைவரு வராரு! 💪😎 @TVKVijayHQ@TVKPartyHQ
பண்டிகையை கொண்டாடுங்க மக்கா! ��🔥🚩
கடந்த 10 நாட்கள்
ஒரு மாநிலம்…
ஒரு அரசு…
ஆனால் முடிவில்லாத குற்றச்சம்பவங்க���்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு எங்கே?
🔸2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த திமுக நிர்வாகி.
🔸விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறிய திமுக கவுன்சிலர்.
🔸 நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை பகுதிகளில் தொடர்ந்து அரிவாள் வெட்டு கொலை சம்பவங்கள்.
🔸 நாமக்கல்லில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை.
🔸 மானாமதுரை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் காவல் மரணம்.
🔸 சென்னை காசிமேட்டில் இளம்பெண்ணை வயிற்றிலும் பிறப்புறுப்பிலும் எட்டி உதைத்த திமுக நிர்வாகி.
🔸 கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரை கொன்றுவிட்டு அவரது 60 வயது மனைவிக்கு பாலியல் வன்கொடுமை.
🔸 ச���ன்னை திரிசூலத்தில் இரட்டைக் கொலை.
🔸 செங்கல்பட்டில் 14 வயது சிறுமி கூட்டு பா*லியல் வன்கொடுமை; குற்றவாளிகளை திமுக கொடி கட்டிய காரில் அழைத்து வந்தது.
🔸 கோவை அரசு பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டு 43 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.
🔸 திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைவர்கள் ப. சிதம்பரம் மற்றும் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு.
🔸 ��ூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வெட்டி ��ொலை.
நிரந்தர டிஜிபி நியமனம் செய்ய வக்கில்லாத முதலமைச்சரை
கேள்விகேட்காத ஊடகங்கள் திரிஷா, நயன்தாரா என மக்களை முட்டாள் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
Credits : @Whistle4TN
அச்சம் தவிர்! அதிகாரம் கொள்!
ஆளப் பிறந்தவள் நீ... உன்னை அரணாய்க் காக்கும் நம் தளபதியின் படை!
நாளை நமதே! மீண்டும் ஒருமுறை என் அன்புத் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் நெஞ்சார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்!
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி
கழக பொதுச்செயலாளர் நமது வழிகாட்டி அண்ணன் N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி தெற��கு ஒன்றியம் காமராஜ் நகரில் நேற்றைய தினம் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் மற்றும் நமது வெற்றிச் சின்னமான விசில் வழங்கி வாக்கு சேகரிக்கப்பட்டது.
இதில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ந��்றி 🙏
S. பாலா
மாவட்ட கழகச் செயலாளர்
lமாநில நிர்வாகக் குழு உறுப்பினர்
தூத்துக்குடி மாவட்டத் தேர்தல் இணைக் கண்காணிப்பாளர்