மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகள் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. ஆனால் தொடர்ந்து போடப்படும் சாலைக்களால், இன்று நமது வீடோ பள்ளத்தாக்கில். என்ன தான் செய்வது?,
எப்படித்தான் அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் புரியவைப்பது?, தொடரும் கேள்விகளுக்கு விடை தான் எப்போது?
அதிகார போதை MLA ரவிசங்கர் தலைக்கு ஏறி இருக்கிறது ! லோக்கல் காவல்துறை MLA ரவுடித்தனத்திற்கு அடியாள் வேலை பார்க்கிறது.
வன்முறை செய்த ரவிசங்கர் மற்றும் அதை மறைக்க உதவிய காவலர்கள் மீது FIR பதிய வேண்டும்.
ரவிசங்கரை கட்சியை விட்டுத் தூக்க வேண்டும் !
இதன் மீது நடவடிக்கை எடுத்தால் மற்ற MLAக்களுக்கு வன்முறை செய்யக் கூடாது என்ற பயம் வரலாம்!
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மற்ற MLA க்களும் ரவுடித்தனம் செய்வதை ஊக்குவிக்கும் !
என்ன செய்யப் போகிறார் @CMOTamilnadu ??
கட்சி வேறு , ஆட்சி வேறு அல்ல. ஊழல்வாதிகளை கட்சியில் சேர்த்து பிறகு MLA சீட் கொடுத்து மந்திரி ஆக்கினால் அவர்கள் மனிதர்களை சீரழிக்கும் குட்காவில் கூட Party Fund வாங்குவார்கள் !
*அமைதியான வழியில் போராட வந்த இளைஞர்களை மோடி அரசு கைது செய்ததை அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது*
நேற்றைய தினம் தலைமை தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் பதவி விலகக் கோரி தில்லி ஜந்தர் வந்தர் நோக்கி அமைதியான வழியில் போராட வந்த இளைஞர்களை மோடி அரசு மிக மோசமாக கையாண்டு கைது செய்ததை அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
நம் அரசியல் அமைப்பு சட்டம் பேச்சுரிமை, கருத்துரிமை மற்றும் ஒன்று கூடுதலுக்கான உரிமையை நமக்கு கொடுத்திருக்கிறது. இதை மறுக்க யாருக்கும் உரிமை கிடையாது.
தேர்தல் ஆணையர்களை நியமித்த குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கி விட்டு ஆளுங் கட்சி பெரும்பான்மை முடிவு செய்தது போல் சட்டத்தை உருவாக்கியதும், கியானேஷ் குமாரை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமித்ததும், SIR ஐ அவசர அவசரமாக தேர்தலுக்கு முன்பாக பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தி லட்சக்கணக்கான வாக்காளர்களின் ஓட்டுரிமையை பறித்ததும், தேர்தல் ஆணையக் குழுவின் பெரும்பான்மை இரண்டு தேர்தல் ஆணையர்கள் மாற்றுக் கருத்துக்களுடன் இருந்தும் கூட 14 முறை அதை சட்டவிரோதமாக தன்னிச்சையாக தலைமை தேர்தல் அதிகாரி முடிவெடுத்ததும்- இவை அனைத்தும் இந்தியாவில் நேர்மையாக மற்றும் தன்னிச்சையாக தேர்தல் நடப்பதை பெரிய அளவில் பாதிக்கிறது.
இதற்கெல்லாம் CJP மற்றும் பல இளைஞர்கள் பொறுப்புடைமை கேட்டு அமைதியான வழியில் போராட அக்டோபர் 10ஆம் தேதி ஒன்று கூடுவது அவர்களின் அடிப்படை உரிமை. ஆனால் மோடி அரசு காவலர்கள் மூலம் நேற்றைய தினம் இளைஞர்கள் மீது செய்த வன்முறை மற்றும் கைது நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கைது செய்யப்பட்ட அபிஜித் திப்கே, சவுரௌதாஸ், சந்தோஷ் ரங்கா ஆகியோரை உடனடியாக மோடி அரசு விடுவிக்க வேண்டும்
Arappor stands in solidarity with all the peaceful protectors and strongly codemns the violence and anti constitutional arrest/ detainment by Modi Government! @narendramodi
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU), 74 தனியார் கல்லூரிகளுக்கு 2023 - 2025 காலகட்டத்தில் வழங்கிய இணைவு அங்கீகாரத்தில் மோசடி
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU) 2023–24 மற்றும் 2024–25 கல்வியாண்டுகளுக்கான தனியார் ஆசிரியர் கல்விக் கல்லூரிகளின் இணைவு ஆய்வுப் மேற்கொண்டதில் கடுமையான மோசடி இருப்பதாக, RTI இல் தகவல் கிடைத்துள்ளது.
இயற்பியல் விதியை மிஞ்சி - ஒரே நாளில் 5 கல்லூரிகளில் ஆய்வு செய்ததாகப் பதிவு!
29.03.2023 அன்று Dr.M.Rajakumar - ஆய்வுக்குழுத் தலைவர்,
A)Sri Ramakrishna College of Education,பெரம்பலூர்,
B)E.S.Subramaniain Memorial College of Education,திருவள்ளூர்
C)TVM College of Education,திருவள்ளூர்
D)Punitha Ohm College of Education,தூத்துக்குடி
E)Institute of Education,திருச்சி ஆகிய ஐந்து கல்லூரிகளுக்கு நேரில் ஆய்வு மேற்கொண்டதாக பல்கலைக்கழகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. இக்கல்லூரிகளுக்கு இடையிலான பயணத் தூரம் சுமார் 560 கி.மீ. இருக்க்கிறது. பயண நேரம் சுமார் 11மணி நேரம் ஆகும் நிலையில் ஒரே நாளில் ஆய்வு எப்படி சாத்தியம்?.
இது போன்று 27 நபர்கள் ஒரே நாளில் 2 முதல் 5 கல்லூரிகள் வரை ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இவர்கள் மொத்தமாக 64 கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மேலும், ஒரே பெயர் மற்றும் பெயரின் முதல் எழுத்துகளைக் கொண்ட 37 பேராசிரியர், பல்கலைக்கழகத்தின் அங்கீகரித்த பேராசிரியர் பட்டியலில் 222 இடங்களில் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இவைகள் போலி பேராசிரியர்களாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அது போன்று 5 பேராசிரியர்களை, 10 கல்லூரிகளில் முதல்வராக அதாவது, ஒரு பேராசிரியரை, ஒரே நேரத்தில் இரு கல்லூரிகளில், கல்லூரி முதல்வராக அங்கீகாரம் செய்துள்ளனர்.
இந்த மோசடிகளின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் சட்டநடவடிக்கை மேற்கொள்ள கோரி இன்றைய தினம் அறப்போர் இயக்கம், உரிய ஆதாரங்களுடன் முதலமைச்சர் திரு.C.ஜோசப் விஜய், ஆளுநர் திரு.இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், உயர்கல்வித்துறை அமைச்சர்,திரு.P.விஸ்வநாதன், செயலாளர் திரு. தீரஜ் குமார், இ.ஆ.ப., திரு. பேராசிரியர் பங்கஜ் அரோரா - Chairman, NCTE, Delhi மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ளது. @CMOTamilnadu@Viswanathan_INC
பொதுத்துறை கீழ் வரக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரிவு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என்று தமிழ்நாடு அரசு விலக்கு அளித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பொதுத்துறையின் சட்ட ஒழுங்கு பிரிவில் உள்ள அனைத்து தகவல்களும் Intelligence சம்பந்தமானது என்ற வகைப்பாடு செய்வது அபத்தமானது.
இந்த ஆணையை தமிழ்நாடு அரசு உடனே பின்வாங்க வேண்டும். வெளிப்படைத்தன்மை கொண்டு வருகிறோம் என்று சொல்லி அதற்கு மேல் எதிராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது! @CMOTamilnadu
மலப்பம்பாடி ஏரியில் மண் திருடியதாக அறப்போர் லஞ்ச ஒழிப்புத் துறையில் தொடுத்த புகாரில் முன்னாள் அமைச்சர் எவ வேலு, அவர் மகன் எவ குமரன் மற்றும் பலர் மீது லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை இங்கே காணலாம்!
அறப்போர் தொடரும்!
அறப்போர் இயக்கத்தின் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்னும் பிரச்சாரம் மதுராந்தகத்தில் இன்று துவங்கியது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்பதையும் ஓட்டுக்கு பணம் வாங்குவது மூலம் நம் தார்மீக உரிமையை எப்படி இழக்கிறோம் என்பதை மக்களிடையே வீடு வீடாக ஒரு உரையாடல் மூலம் கொண்டு செல்லும் விழிப்புணர்வு பிரச்சாரம் இது.
இதை முன்னெடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம் இம்முறையும் ஏனோ 100 சதவீத வாக்கு சதவீதத்தை மட்டும் முன்னிலைப்படுத்துகிறது. ஓட்டுக்கு பணத்தைக் குறித்து பேச மறுக்கிறது. @TNelectionsCEO
மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் வரும் அக்டோபர் 06,2026 அன்று நடைபெற இருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்ற ஜனநாயக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் நீங்களும் இணைய விரும்பினால் இங்கே பதிவு செய்யுங்கள் https://t.co/AHfUIEI13D
நேற்றைய தினம் அறப்போர் எழுப்பிய புகாருக்கு பிறகு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டதை வரவேற்று இருந்தோம் மேலும் மண்டல உதவி பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதையும் வரவேற்கிறோம். ஆனால் அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
CSR நிதியில் இருந்து அந்த வேலை செய்யப்பட்டதாகவும் அதற்குப் பிறகு டெண்டர் போட்டது ஒரு செயல்முறை குறைபாடு என்ற முடிவுக்கு அரசு ஆரம்ப கட்டத்திலேயே வருவதற்கான தேவை என்ன?? அரசின் வாதத்தில் இருக்கும் முரண்பாடுகளை கீழே விவரித்துள்ளோம்.
1. ஜூலை 14 ஆம் தேதி மாமன்றத்தில் பொருள் வைக்கப்பட்டு நிர்வாக அனுமதி பெறப்பட்டதாக அரசு வெளியீடு குறிப்பிடுகிறது. ஆனால் மாமன்ற சந்திப்பு ஜூலை மாதம் நடைபெறவில்லை என்று அறிகிறோம். ஜூன் 11க்கு பிறகு மாமன்ற கூட்டம் ஆகஸ்ட் 30ஆம் தேதி தான் நடந்ததாக தெரிகிறது.
2. ஜூலை 23 அன்று டெண்டர் இன்வைடிங் நோட்டீஸ் விட்ட பிறகு ஜூலை 24அன்று இந்த பணிகளை CSR நிதியில் செய்வதாக ஒரு நிறுவனம் கடிதம் கொடுத்ததாக தெரிவித்துள்ளீர்கள். அந்த நிறுவனத்தின் பெயர் என்ன?
3. அந்த நிறுவனத்திற்கு ஒப்புதல் கடிதம் தாம்பரம் மாநகராட்சி எப்பொழுது அளித்தது?
உடனடியாக 25ஆம் தேதியே அளித்திருந்தீர்கள் என்று எடுத்துக் கொண்டால் கூட அடுத்த மூன்றே நாட்களில் அவர்கள் எப்படி அசோகா தூண் சிலையை செய்து நிறுவி ஜூலை 29ஆம் தேதி திறந்தார்கள்?
4. CSR மூலமாக சிலையை அங்கு நிறுவிய நிறுவனம் சிலையை சுற்றி எங்கேயுமே அவர்கள் பெயரைக் கூட பதிவிடாமல் விளம்பரப்படுத்தாமல் இருக்கும் அந்த பாரிவள்ளல் யார் என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?
5. சிலை நிறுவிய பிறகு ஆகஸ்ட் 6 ஆம் தேதி டெண்டர் கோரியது ஒரு செயல்முறை குறைபாடு மட்டுமே என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள்? அப்படியாக இருந்தால் நாங்கள் புகார் அளிப்பதற்கு முன்பாகவே அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு இருக்கும். ஆனால் நாங்கள் நேற்று புகார் அளித்த பிறகு தான் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதி பாலச்சந்தர் ஐஏஎஸ் ஆல் டெண்டர் ரத்து செய்யப்பட்ட ஆணையை நீங்கள் இங்கே காணலாம். 24 காம் தேதி வரை ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றதாகவும் ஒப்பந்த புள்ளிகள் வரப்பெற்றதாகவும் டெண்டர் ரத்து ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது . எனவே நேற்றைய தினம் புகார் அளிக்கவில்லை என்றால் அந்த டெண்டரில் பில் பேமென்ட் நடந்திருக்க வாய்ப்பு உண்டு.
6. மேலும் பணி ஆணை வழங்கப்படவில்லை என்று எதன் அடிப்படையில் முடிவுக்கு வருகிறீர்கள். நேற்றைய தினம் புகார் கொடுத்த பிறகு பணி ஆணை கிழித்து போடப்பட்டதா அல்லது பணி ஆணையே வழங்கப்படவில்லையா என்பதெல்லாம் விரிவான விசாரணையில் கண்டுபிடிக்க வேண்டிய விஷயம். அரசு ஆரம்ப கட்டத்திலேயே இந்த முன்முடிவுக்கு வரும் நோக்கம் என்ன?
7. CSR நிதி என்பது உண்மையா அல்லது அந்த நிறுவனத்திடம் இருந்து நேற்றைய தினம் முன் தேதியிட்டு கடிதம் வாங்கப்பட்டு இடையில் சொருகப்பட்டதா என்பதெல்லாம் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட வேண்டிய விஷயம்.
8. CSR நிதி என்று எடுத்துக் கொண்டாலும் அதன் பிறகு டெண்டர் போடப்பட்டு நேற்று வரை ரத்து செய்யாதது எதை காண்பிக்கிறது? ஏற்கனவே வேறு நிறுவனம் செய்த வேலைக்கு டெண்டர் போட்டு இரண்டு முறை கணக்கு காண்பித்து 45 லட்சத்தை கொள்ளையடிப்பதற்காக டெண்டர் போடப்பட்டதா ?
9. எனவே செயல்முறை குறைபாடு என்று அரசு இதை சுருக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் மக்கள் அனைவரும் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் மற்ற அரசுகள் போல கொஞ்ச நாள் கழித்து காத்திருப்பு பட்டியலில் இருந்து அவருக்கு போஸ்டிங் கொடுத்து செயல்முறை குறைபாடு என்று சொல்லி விசாரணையை முடித்து இதை ஒன்றும் இல்லாமல் செய்யப் போகிறீர்களா அல்லது இதில் இருக்கும் அப்பட்டமான விதிமீறல்களை விசாரணை செய்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப் போகிறீர்களா என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! @TNDIPRNEWS@CMOTamilnadu
Who exposed corruption during AIADMK regime : Arappor Iyakkam.
Who exposed corruption during DMK regime: Arappor Iyakkam.
Who has exposed corruption during TVK regime: Arappor Iyakkam.
More power to you @JayaramArappor and your team.
தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் இன்று அனுப்பியுள்ளது.
*முறைகேட்டின் பின்னணி மற்றும் ஆதாரங்கள்:*
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு (Contractors) சட்டவிரோதமாக டெண்டர்களை வழங்குவதற்காக, சுமார் ரூ. 45,90,000 மதிப்பிலான இரண்டு பணிகள் டெண்டர் வழங்கும் செயல்முறை முடிவடைவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்திரன் IAS மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. D. சரத்குமார் ஆகியோர் இந்த பணிகளைத் திறந்து வைத்து திறப்பு விழா நடத்தியுள்ளனர்.
இந்த சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட்டியே முடித்த ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்யவும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்தர் IAS கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை https://t.co/O7UnoQXig4 இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
*ஒப்பந்தம் 1 - பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_2):*
இங்கு அசோகத் தூண் அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 27,30,000 மதிப்பிலான டெண்டர் இணையதளத்தில் (TN Tenders portal) ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது, இந்த டெண்டர் திறக்கப்பட வேண்டிய தேதி ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், டெண்டர் அறிவிப்பு வெளியாவதற்கு 8 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜூலை 29, 2026 அன்றே இப்பணி முடிக்கப்பட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்கள் அமைச்சர் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் அதே நாளில் பதிவேற்றப்பட்டுள்ளன.
*ஒப்பந்தம் 2 - சிட்லபாக்கம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_1):*
தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 18,60,000 மதிப்பிலான டெண்டரும் ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது. இதன் டெண்டர் திறப்பு தேதியும் ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், ஆகஸ்ட் 10, 2026 அன்றே இந்த சிலை திறக்கப்பட்டு, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதே நாளில் பகிரப்பட்டுள்ளன. டெண்டர் திறக்கப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பாகவே பணி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது இது அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையேயான சட்டவிரோத கூட்டணியை உறுதி செய்கிறது.
*அதிகாரிகளின் திட்டமிட்ட இருட்டடிப்பு:*
இந்த இரண்டு டெண்டர்களுக்கான நிதி ஏலங்கள் (Financial bids) ஆகஸ்ட் 24, 2026 அன்று திறக்கப்பட வேண்டிய நிலையில், இன்று வரை இணையதளத்தில் அவை "To_be_opened" என்ற நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் மற்றும் வெற்றி பெற்றவர் (L1 Bidder) யார் என்ற விவரங்களை மக்களிடம் இருந்து மறைக்கவே அதிகாரிகள் இவ்வாறு செய்துள்ளனர்.
மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (சுமார் 54.69%) இதே போல இணையதளத்தில் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை (AOC) அடைந்துள்ளது. இது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையின்றி, முறையான டெண்டர் நடைமுறைகளை திட்டமிட்டு புறக்கணிப்பதை காட்டுகிறது.
*அறப்போர் இயக்கத்தின் கோரிக்கைகள்:*
இது அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை துரோகம் மற்றும் டெண்டர் சட்டங்களை அப்பட்டமாக மீறும் குற்றச் செயலாகும். எனவே, அரசு உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது.
1.உடனடி பணியிடை நீக்கம் (Suspension): தாம்பரம் மாநகராட்சி ஆணையர் S. பாலச்சந்தர் IAS மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை
2.துறை சார்ந்த உயர்மட்ட விசாரணை
3.DVAC கிரிமினல் வழக்கு .
4.பணப்பட்டுவாடா தடை (Stop Bill Payment):
5. ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்த்தல் (Blacklisting):
6.டெண்டரில் வெளிப்படைத்தன்மை
முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதம் டெண்டர் போட்ட அவலம் . ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS இது போன்ற டெண்டர் முறைகேடுகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் இன்று முதல்வர், லஞ்ச ஒழிப்பு துறை உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது. தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் IAS மீது நடவடிக்கை பாயுமா ? Chief Minister of Tamil Nadu
Remainder: இன்று மாலை 5 மணிக்கு சந்திப்போம்!
இவ்வளவு லஞ்சமும் ஊழலும் செய்த ஊழல்வாதிகளே பயப்படாத பொழுது எந்த தப்பும் செய்யாத நேர்மையான சமூகம் அமைய வேண்டும் என்று போராடும் நாம் ஏன் பயப்பட வேண்டும் ??
This defines Arappor Iyakkam's Journey of 11 years!
Let get together, reflect and march forward with more strength. We will also release our road height audit report tomorrow
Date: 30.08.2026, Sunday
Time: 5 Pm to 7 Pm
Venue: Arappor office, Nungambakkam
Map: https://t.co/Rknlz0qHQT
திருச்சி ஆற்றங்கரை பகுதியில் மூட்டைகட்டி வீசப்பட்ட குழந்தையை இன்று (24/09/2020)
உயிரோடு மீட்ட ஆட்டோ ஓட்டுநனர்கள்
# உனக்கு ஆயுசு கெட்டிடா
ஆனால்...
பெற்றவங்க பாசம்தான்டா செத்துப் போச்சு😭