நான் விஜய் ஃபேனு..
FDFS பாத்துட்டு வந்துருக்கேன் னு சொன்னா, கூட்டம் கைதட்டி விசில் அடிப்பாங்கனு நெனச்சு வந்திருக்காங்க மேடம்..😏
இங்கு பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் இவர்களின் கொள்கைகள் தான் அரசியல்..!
விஜய் பிம்பம், கானல் நீர் மட்டுமே..
CPI அலுவலகத்தில நடக்குற மாணவர்கள் போராட்டத்துக்கு வர celebrityலாம் தவெக ஆட்சிய கிழிக்கறாங்க
என்ன பண்றதுனு புரியாம அத அழகா டைவர்ட் பண்ண மேடம அனுப்பிருக்காங்க..
அதுவும் உள்ள வந்து மாணவர்கள் போராட்டமா நடத்துங்க, கட்சிய திட்டாதீங்க, அஜன்டா பேசாதீங்கனு பேசுது..
கடைசில மைக்க புடுங்கி அசிங்கப்படுத்தி அனுப்பிவிட்டாங்க.😂
தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் பிரச்சனை தீர்ந்துவிடுமா?
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது நீட் தேர்வு பிரச்சனைக்கான தீர்வு அல்ல: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேட்டி
ஆர் எஸ் எஸ் அமைப்பு மற்றும் பாஜக எழுப்பும் அதே குரல்
தாக்குதல் நடத்தும் போலீசை தடுத்து நிறுத்தம் தைரியலட்சுமியின் பெயர் தோழர் சரண்யா SFI யின் டெல்லி தலைவர்.
டெல்லி, ஒரிசா, மேற்குவங்கம், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு எல்லா இடங்களிலும் SFIயின் வீரமிக்க பெண்கள் போரட்ட களத்தில் தங்கள் உறுதியை நிருபித்து வருகிறார்கள். 🔥
நடிகர் ஆவலோடு எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ் திரைக்கு வெளியே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
அது ஒரு நீண்ட, (நடிகருக்கு) ஏமாற்றம் நிறைந்த உச்சக்கட்டம். A prolonged but disappointing climax. ஏனெனில் அது பக்கத்துத் திரையில், பொது வெளியில், அவரில்லாமல், யாருக்கோ இயற்கையாகவே நடந்தேறுகிறது.
காத்திருந்து, காக்கவைத்து பொய்களைச் சொல்லி, போலியான நெருக்கடியைக் கட்டமைத்து (ஷபீர், மணி, பெருமாள் மணி, புதிய தலைமுறை, நியூஸ் 7 போன்றோர் ஆதரவுடன்), திமுக வெறுப்பை வளர்த்து, தள்ளிவைத்து, உண்மையை மறைத்து மூடி வைத்து, நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று வெளிடப்பட்ட ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி நிகழும் போது தமிழக இளைஞர்கள் - நடிகரின் கவர்ச்சிக்குப் பின்னால் நிற்காமல் - நீட் தேர்வுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
ஜனநாயகன் படத்தில் நாயகனின் சாகசத்திற்காகப் பொங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இளைஞர்கள் உண்மையான அரசியல் போராட்டத்தைத் தெருவில், தன்னெழுச்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
திரை நாயகன் தமக்காகப் போராடுவார் என்று ஏமாறுவார்கள் என கருதப்பட்டோர் தங்களையே நாயகர்களாக வெளிப்படுத்துகிறார்கள்.
இது நடிகருக்கு, அவரது அகங்காரத்திற்கு, எல்லாவற்றையும் தீர்மானிக்க முடியும் என்று இறுமாப்பு கொண்ட ஆலோசகர்களுக்குக் கிடைத்த பெருந்தோல்வி.
இது தவெகவிற்கு எதிராகப் போய்விடக்கூடாது என்று நினைக்கும் பா ரஞ்சித், தமது நீலம் பண்பாட்டு மையம் மூலம் தமது ஆதரவாளர்களின் மயக்கத்தைத் தொடர, தமது பங்கிற்கு ஒரு சம்பிரதாய ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்.
ஆனால் தமிழ்நாடு இந்த குறுகிய அரசியலுக்குள் சிக்காமல் திமிறி எழுகிறது.
இது நடிகரோ, பா ரஞ்சித்தோ, ஆதவ் அர்ஜூனாவோ விவரிக்க முடியாத, அடக்க முடியாத வெகுமக்கள் அரசியல்.
வடக்கில் பொது மக்கள் நீட் தேர்வில் நடந்த முறைகேட்டுக்காகப் போராடும் போது தமிழ்நாடு வழக்கம் போல இன்னும் ஒரு படி மேலே போய் நீட் தேர்வே வேண்டாம் என்று போராடுகிறது.
இது தவெக நடிகர் எதிர்பாராத திருப்பம்.
அவர்களை கைது செய்து அடைப்பதைத் தவிர நடிகருக்கு வேறு வழி தெரியவில்ல.
இவ்வளவு விரைவில் தவெகவின் அரசியல் போதாமை வெளிப்படும் என்று நான் நினைக்கவில்லை.
இயற்கையும் உண்மையும் இந்த சதிகாரக் கூட்டத்தின் பிடியில் எப்போதும் சிக்காது.
Written by Director Amudhan
ஒரு அரசின் கொடூரமான கைகள் எந்த அளவிற்கு மோசமாக இருக்கும் என்பதற்கான உதாரணம் இது
டெல்லியில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் சட்டம் ஒழுங்கைப்பராமரிக்கவும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில், ஆப் வழியிலான சேவைகளுக்கும் பொதுமக்களின் நடமாட்டத்திற்கும் டெல்லி காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆன்லைன் உணவு டெலிவரி, இ-காமர்ஸ் மற்றும் வாடகை வாகனச் சேவைகளைத் தடை செய்யப்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ சேவை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலை கொடுத்தது டெல்லி காவல்துறை காரணம் டெல்லி ஜந்தர் மந்திரி போராடக்கூடிய இளைஞர்களுக்கு பலரும் ஸ்விக்கி zomato மூலமாக உணவுகளை ஆர்டர் செய்து கொடுக்கின்றனர் அதை தடுக்கும் முயற்சிகளில் ஒன்று தான் இது!