திருவள்ளூரில், திமுக அமைச்சர்கள் திரு. MRK பன்னீர்செல்வம், திரு. பொன்முடி, திரு. நாசர் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்ட அரசு நி��ழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இரண்டு மொழிக் கொள்கை என்ற பெயரில், தமிழகத்தில் தமிழ் மொழியே இல்லாத தனியார் பள்ளிகள் கட்டமைப்பை உருவாக்கி, தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்கும் புதிய கல்வித் திட்டத்தைத் தங்கள் சுயலாபத்திற்காக எதிர்த்து, நாளொரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் திமுக,
தமிழ் மொழியை விய���பாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
தனது அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அவமதிக்கப்பட்டுள்ளதற்கு, புதியதாக என்ன நாடகம் அரங்கேற்றப் போகிறார் முதலமைச்சர்?
#DramaModel
காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்ற கடந்த 2004 - 2014 பத்தாண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ், தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி ரூ.1.52 லட்சம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் 2014 - 2024 பத்தாண்டு கால ஆட்சியில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட வரிப்பங்கீடு மற்றும் மானியங்கள் ரூ. 5.08 லட்சம் கோடி. இது கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகம். இது தவிர, தமிழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1.43 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்று பொய்களைப் பரப்புவதை நிறுத்திக் கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டால��னையும் அவரது மகனையும், நமது மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்கள் எச்சரித்தார்.(5/6)
நமது அன்புக்குரிய பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மற்றும் நமது தேசியத் தலைவர் திரு @JPNadda ஆகியோரின் தலைமையின் கீழ் @BJP4India பெற்றுள்ள அபரிமிதமான வளர்ச்சியானது, கோவையில் இன்று, நமது மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்கள் தமிழகத்தில் கோயம்புத்தூர், திருவண்ணாமலை, மற்றும் ராமநாதபுரம் ஆகிய மூன்று புதிய மாவட்டங்களில் @BJP4Tamilnadu அலுவலகங்களைத் திறந்து வைத்ததன் மூலம் புதிய உயரத்தை எட்டியுள்ளது. (1/6)
ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் நாம் பெற்ற 3 வெற்றிகள், ஹாட்ரிக் வெற்றிகள் பாஜக மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை நிரூபித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு தமிழ��த்தில் NDA அரசு அமையும் - நமது மத்திய அமைச்சர் திரு @AmitShah அவர்கள்.
மோடி அவர்கள், தமிழக மக்களுக்காகவும், வளர்ச்சிக்காகவும் கொடுத்த கோடிக்கணக்கான நிதி பற்றியும், தமிழ் பெருமைக்காக, தமிழ் மொழிக்காக, தமிழ் கலாச்சாரத்திற்காக மோடி அவர்கள் செய்த பணிகளை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மக்களிடம் கூற வேண்டும் - நமது மத்திய அமைச்சர் திரு @AmitShah அவர்கள்.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும், நமது பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. 700 நாட்களுக்கு பிறகும் வேங்கைவயல் சம்பவத்தின் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. கள்ளச்சாராய புகார்கள் பொறுத்தவரை, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், எதிர்ப்பு தெரிவித்த கல்லூரி மாணவர்கள் கொல்லப்படுகிறார்கள் - நமது மத்திய அமைச்சர் திரு @AmitShah அவர்கள்.