கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy!
மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள்.
கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும்.
ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மாண்புமிகு திரு.V.S.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தோம்,
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர்,
தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்🙏💔
Deeply saddened by the passing of Thiru. V.S. Babu, Hon’ble MLA of Kolathur. His demise is a great loss. May his soul rest in peace. My heartfelt condolences to his family, friends and supporters during this difficult time.
எப்போதும் சிரித்த முகம்!
அரசியல் களத்தில் துணிந்த மனம்! - என மக்களுக்காக பொது வாழ்வில் உன் வாழ்வை அர்ப்பணித்துப் பயணித்தாயே அண்ணா!
அரசியல் களத்தில் நீ காணாத சாதனைகளும் இல்லை; சோதனைகளும் இல்லை. அவற்றையெல்லாம் 'எதையும் தாங்கும் இதயத்தோடு கடந்து, இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தாயே அண்ணா!
அரசியல் பயணத்தில் - கடினமான காலத்தில் எங்களின் தோளோடு தோள் தந்து, தேர்தல் பிரச்சாரங்களில் எதிரிகள் தந்த தொல்லைகளை துணிந்து நின்று முறியடித்து, தேர்தல் நேரத்தில் நம் தோழர்களோடு எளிய தொண்டராய்ப் பணியாற்றி, எதிரிகள்கூட வியந்து பார்க்கும் வெற்றியைப் பெற்றாயே அண்ணா!
நெடிய வரலாறு படைக்க வாய்ப்பிருந்தும் இடையில் இப்படி எங்களைத் தவிக்கவிட்டு சென்றுவிட்டாய்! நம் தோழர்களையும் உன் தொகுதி மக்களையும் உன் குடும்பத்தினரையும் என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவோம்; யார் ஆறுதல் சொல்லி எங்களைத் தேற்றிக் கொள்வோம்?
நீ ஏற்றிருந்த பொறுப்பினையும் அந்தப் பொறுப்பிற்குரிய கடமைகளையும் கண்ணியம் குறையாமல் நிறைவேற்றுவதே உனக்கு நாங்கள் செய்யும் இறுதி மரியாதையாக இருக்கும்! உறுதி மரியாதையாக நிலைக்கும்!
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கழகத்தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள், கொளத்தூர் தொகுதி மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் தமிழக வெற்றிக் கழக தோழர்கள் தோழிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@CMOTamilnadu | @TVKVijayHQ