தனது வாழ்க்கையை மக்களுக்காக தியாகம் செய்து இன்றளவும் போராடி வருகிறார்.
அவர் போடும் கால் செருப்பு தூசுக்கு கூட தகுதி இல்லாத நபர் @annamalai_k நீ
எங்கள் தலைவர் அரசியல் விட்டு ஒதுங்கனுமா.
எங்கள் தலைவர் வைத்து உன்னை நீ அடையாளம் காட்டுகிறாய்.
@thirumaofficial@VanniKural .
புதுக்கோட்டையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மறைந்த கே.ஆர்.எம்.ஆதிதிராவிடர் அவர்களின் படத்திறப்பு நிகழ்வில் இன்று பங்கேற்று அவரது படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தி உரையாற்றினேன்.
@annamalai_k@thirumaofficial அனைத்து தரப்பினருக்கும் ஆன தலைவர் அண்ணன் திருமா அவர்களின் காரை வழிமறிப்பது என்பதை நாங்கள் சும்மா பார்த்துக் கொண்டிருப்போமா, ஒரு தலைவரை ஒருமையில் பேசுவான், கார் இடித்து விட்டது என்ற பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வார்கள். பொது சமூகத்தின் சாதிய வன்மம் . ஆணவத்தின் உச்சம்.
கரூர் கொடுந்துயரத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கரூரில் தலா ரூ.50,000 ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கினோம்.
உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' என்பது தெரியவருகிறது.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில்உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபட தெரிகிறது.
எனவே, தமிழ்நாடுஅரசு இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும்.
அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக அய்யமற விசாரித்திடவேண்டுமென கோருகிறோம்.
#Highcourt @CMOTamilnadu@mkstalin@tnpoliceoffl
Trending Alert 🚨
மார்ச் -16 இன்று மாலை 3.00 மணியளவில் விழுப்புரத்தில் "தேர்தல் அங்கீகார வெற்றி விழா" நடைபெற உள்ளது...
இதனை நாம் ட்விட்டர் தளத்தில் கொண்டாடுவோம் வாருங்கள் தோழர்களே...🤗
Hashtag: #சிறுத்தைகளின்_அங்கீகார_பெருவிழா
நேரம்: 02:00 PM
இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை.
பாமக நிறுவனரும், அதன் தலைவரும் இதனை வைத்து வட மாவட்டங்களில் சமூகப் பதற்றத்தை உருவாக்கிட முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது.
விசிகவுக்கு எதிராக பாமக பரப்பும் வதந்தியை நம்ப வேண்டாமென
பொது மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
@CMOTamilnadu@tnpoliceoffl
#நெல்வாய்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இன்று இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
இந்திய ஒன்றிய அரசின் சுரங்கத்துறை அமைச்சர் மாண்புமிகு #கிஷன்_ரெட்டி அவர்களைச் சந்தித்து, மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள நாயக்கர்பட்டியில் "டங்க்ஸ்டன் சுரங்கம்" அமைப்பதைக் கைவிடக் கோரி இன்று மனு ஒன்றை அளித்தேன்.
அதனைப் பெற்றுக்கொண்ட அவர், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்திய ஒன்றிய அரசு எதுவும் செய்யப்போவதில்லை என உறுதியளித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தனது பார்வைக்கு வந்ததாகவும் கூறினார். அத்துடன், தமிழ்நாட்டு மக்களோடு நாங்கள் இருப்போம்; கவலை வேண்டாமென்றும் கூறினார்.
அமைச்சருடனான சந்திப்பு ஆறுதல் அளிப்பதாக இருந்தது.
@kishanreddybjp #VCK @MinistryofMines@PMOIndia
மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட மறுசீரமைப்பு பணிகள் குறித்து பின்வரும் அறிவிப்புகளை இன்று முகநூல் நேரலையில் அறிவித்தேன்
~~~~~~~~~~~~~~
√ தமிழ்நாடு முழுவதும் 234 மாவட்டச் செயலாளர்களை அறிவிக்க இருக்கிறோம். இவர்களோடு சேர்த்து மாவட்ட நிர்வாகமும் முழுமையாக அறிவிக்கப்பட இருக்கிறது.
√ தமிழ்நாடு முழுவதும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாக பொறுப்புகளை ஆய்வு செய்து தலைமைக்கு பரிந்துரை செய்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூன்று முதல் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட இருக்கிறது.
√ இந்தக்குழு ஆய்வு செய்து ஒவ்வொரு பொறுப்புக்கும் மூன்று பெயர்களை தலைமைக்கு பரிந்துரை செய்வார்கள். அப்படி பரிந்துரை செய்யப்படும் மூவரில் ஒருவர் ஒரு பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்.
√ இந்தக்குழு இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஒவ்வொரு வருவாய் (38) மாவட்டத்திற்கும் ஒரு குழு அமைக்கப்படும்.
√ 234 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் முழுமையாக அறிவிக்கப்பட்ட பிறகு, ஒன்றிய - நகர பொறுப்பாளர்களுக்கான பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டு முறையாக அறிவிக்கப்படும்.
√ 234 மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்ட பிறகு, நகர- ஒன்றிய நிர்வாகம் முழுமையாக அறிவிக்கப்படும்.
√ இதனைத் தொடர்ந்து மாநில நிர்வாக பொறுப்புகள் அறிவிக்கப்படும்.
√ இப்பணிகள் எல்லாம் மேற்கொள்வதற்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் தேவைப்படும் அதுவரை பொறுத்தருள வேண்டுகிறேன்.