பல்லாயிரம் ஆண்டு கால பரிணாம வளர்ச்சி, தொழில் நுட்ப, தொலைத் தொடர்புப் புரட்சி, ஆயிரமாயிரம் மதம், தத்துவங்கள், ராணுவங்கள், மேதாவிகள் வாழும் உலகில் சக மனிதன் உணவில்லாமல் வாழும் சூழல் இருப்பதைப் போல் துயர் தரும் செய்தி ஒன்று இருக்காது. ஒரு இனமாய் நம் படுதோல்வியை பறைசாற்றுவதுதான் இது
பொ.செ. வாரத் தொடராக கல்கியில் வந்தப்போ ராரா சோழன் பற்றிய கதையாதான் ஆரம்பிச்சாராம். ஆனால் வந்தியத் தேவன் பாத்திரம் பெரும்பாலான ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிச்சுப் போய் அது பற்றி நிறைய கடிதம் எழுதுனாங்களாம். அதான் வந்தியத்தேவன் பாத்திரம் முன்னிலை பெற்றதுனு கேள்விப் பட்ருக்கேன்.
இயற்கைக்கு மு��ு எதிரான ஒரே பிராணி மனிதன் தான். பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் படி இயற்கை தன் சமநிலைக்கு எதிராக எதையும் பிழைக்க, தளைக்க விடாது. அப்படிப் பார்த்தா மனுஷனே ஒரு ஏலியன் இன்வேஷனோட விளைவா இருக்கலாம்!
மனுஷ நம்பிக்கைகளில் ஒரு பெரிய சிக்கல் என்னன்னா ஒரு கட்டத்துக்கு மேல் உண்மை உரைச்சு அந்த நம்பிக்கையை மாற்ற யத்தனிச்சா அவ்ளோ நாள் நம்பினது முட்டாள் தனம்னு நிரூபணம் ஆகிருமேனு இன்னும் மூர்க்கமா அந்த நம்பிக்கையை கடைபிடிப்பாங்க, பரப்புவாங்க, அது தவறுதான்னு ஒத்துக்க மாட்டாங்க.
உட்கார வச்சு எல்லா பக்கமும் அணைகட்டி lock பண்ணோம்ன்னா ஏங்க அடுத்தவங்க நம்பிக்கையை காயப்படுத்துறீங்க? ஏன் உங்க கருத்தை திணிக்கிறீங்க? இது என்னோட நம்பிக்கை அவ்ளோதான் ன்னு சொல்லிடுவாங்க.
ஆக மொத்தம் நாம எவ்ளோ point point ஆ எடுத்து சொன்னாலும் அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்ன்னு போய்டுவாங்க.
பெண் உடலுக்கு இப்படியான அதீத பிரமிப்புகளும், கொண்டாட்டங்களும், விலைகளும் இருப்பது மக்கள் தொகை பிறப்பு விகிதம் குறைவதால் மட்டும் சமன் படுத்தப் படாது என்று தெளிவு படுத்துகிறது. #மாத்தியோசி 😅
முழுசா என்கேஜ் செய்யத் தக்க ஒரு சீரிஸ் அல்லது படம் எதுவும் அகப்பட மாட்டேங்குது. நல்ல படம், சீரிஸ் எல்லாத்தையும் லி���்ட் போட்டு காலி செஞ்சிரக் கூடாது. எப்போவும் கொஞ்சம் விட்டு வச்சிருக்கனும்..#ந��ட்டூசெல்ஃப்