என்னைப் பார்த்து கேள்வி கேட்பது போல இந்த ஆட்சியில் முதல்வர் விஜய் அவர்களை பார்த்து கேள்வி கேட்க முடியுமா?
ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் துறை வாரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கூட முதல்வர் பேசவில்லையே!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்களின் தலைமையில்,
விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வரும், த.வெ.க. அரசைக் கண்டித்து,
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#களத்தில்_அஇஅதிமுக
வீரபாண்டி சட்டமன்ற தொகுதி, முருங்கபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.கீர்த்திகா, நீட் தேர்வில் 519 மதிப்பெண்கள் பெற்று, 7.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், கழகப் பொதுச் செயலாளருமான புரட்சித் தமிழர் @EPSTamilnadu அவர்களை சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எம். துர்கா நீட் தேர்வில் 453 மதிப்பெண்கள் பெற்று, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி மல்லூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். சத்யா நீட் தேர்வில் 494 மதிப்பெண்கள் பெற்று, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனிசாமி அவர்கள், தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி மக்களின் பயன்பாட்டிற்காக இரண்டு ஆம்புலன்ஸ் வழங்குவதாகத் தெரிவித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்
புதிதாக வாங்கப்பட்ட இரண்டு ஆம்புலன்ஸ் சேவையை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
கர்நாடகாவில் அம்மாநில வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப் பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
இதைப்பற்றி எல்லாம் இன்றைக்கு நம்ம முதல்வரிடம் போய் யாரும் சொல்லக் கூட முடியாதோ?
Sunday JD Sir Leave-ohh?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற “ராஜ கோபுரங்கள் நினைவு உற்சவம்” நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று, மறைந்த திரை ஆளுமைகளான இயக்குனர் இமயம் திரு. பாரதிராஜா மற்றும் இயக்குனர் திரு. கே. பாக்யராஜ் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி உரையாற்றினார்கள்.
#Bharathiraaja #Bhagyaraj
தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் அன்புத் தம்பி திரு. K.S. மகேந்திரன் அவர்கள், தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அவரது ஒரு வயது மகன் பள்ளிப் படிப்பில் சேர்வது முதல், கல்விப் பயணம் முழுவதும் அவரின் கல்விச் செலவை @AIADMKOfficial ஏற்றுக்கொள்ளும். மேலும், அவரது குடும்பத்தாருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்
ரூ. 30 லட்சம், தஞ்சை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் ரூ. 25 லட்சம் குடும்ப நல நிதியாக வழங்கப்படும்.
என் உயிருக்கு உயிரான கழக உடன்பிறப்புகளே…
தயவு செய்து பொறுமையாக இருங்கள். எந்த ஒரு தவறான முடிவையும் எடுத்துவிடாதீர்கள். எத்தனையோ சோதனைகளை, சூழ்ச்சிகளை நாம் நேருக்கு நேர் சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம்.
“அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் பொன்மொழியை நெஞ்சில் ஏந்தி முன்நோக்கி செல்ல வேண்டிய நேரம் இது.
அன்புத் தம்பி திரு. K.S. மகேந்திரன் அவர்களின் தியாக உணர்வு கழகத்தின் ஒவ்வொரு தொண்டனுக்கும் உண்டு. ஆனால், அதை நாம் களத்தில், நமது செயலில் காட்டுவோம்.
நெருப்பாற்றில் எதிர்நீச்சல் அடித்தே வெற்றிக் கரை கண்ட இயக்கம் இது. அதனால், எதையும் வென்ற நாம், இந்த சூழலையும் வெல்வோம்!
தன் இறுதி மூச்சு வரை கழகத்தையே சுவாசித்து நேசித்த மாவீரன் K.S. மகேந்திரன் அவர்களின் நினைவாக, அனைத்து கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்களிலும் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திட வேண்டுமென அனைத்து மாவட்டக் கழகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், மறைந்த தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் திரு. KAS மகேந்திரன் அவர்களின் திருவுடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, அவர்தம் குடும்பத்தாரிடம் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்தார்கள்.
மேலும், அவரது குழந்தைகளுக்கான முழுக் கல்விச் செலவை @AIADMKOfficial ஏற்றுக்கொள்ளும் எனவும், மேலும் அவர்தம் குடும்பத்தாருக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளுக்கும் அஇஅதிமுக துணைநிற்கும் என்பதை மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.
@AIADMKOfficial
”மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா” எனக் கூறி
கண்கலங்கி அழுத அதிமுக எம்.எல்.ஏ! - பதவியேற்கும் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை பார்த்து கண்கலங்கி அழுதார் பண்ருட்டி எம்.எல்.ஏ மோகன்
#ADMK | #TNAssembly2026 | #TNAssembly
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சட்டப்பேரவை வந்தடைந்தார்கள்.
#TNAssembly#AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்கள்.
#TNAssembly#AIADMK
தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகரும், சிறந்த கார் பந்தய வீரருமான அன்புச் சகோதரர் பத்மபூஷன்
திரு. #அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
#HBDAjithKumar@AIADMKOfficial
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு கழக ஆட்சி மலர்வது நிச்சயம். திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது!
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்
உழைப்பில்தான் உடல் வலிமை உறுதி பெறும்; உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும்;
நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்!
உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய 'மே' தினத் திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'மே' தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
#MayDay
@AIADMKOfficial
மாற்றம் பிறந்திடவே,
மாநிலமே சிறந்திடவே,
வெற்றிப் பாதையிலே
மீண்டும் நாம் நடந்திடவே
அம்மாவைப் போல வந்து
அரவணைத்தார் உறவாடி
நல்லாட்சி வேண்டும்-னா
வரணும் எங்க @EPSTamilNadu! ✌️❤️
2026 சட்டமன்றத் தேர்தல்
அஇஅதிமுக பிரச்சாரப் பாடல் காணொளி!
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, அவர்தம் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#AmbedkarJayanti#JaiBhim
#திருச்சி மற்றும் #திண்டுக்கல் மாவட்டங்களில் அஇஅதிமுக ஆட்சி அமையப்போகும் வெற்றி அலையாக கூடிநின்ற மக்களிடையே கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
“உங்க கனவைச் சொல்லுங்க” என்று அரசின் திட்டமாக மக்களின் ஆதார் எண், தொலைபேசி எண் உள்ளிட்ட முக்கியமான தனிநபர் விவரங்களை சேகரித்து, அதை திமுக நடத்தும் PEN என்ற நிறுவனத்திடம் கொடுத்து, அந்த நிறுவனம் மூலம் திமுக ஆதரவு செய்திகளை மக்களுக்கு அனுப்புகிறது திமுக.
அரசை நம்பி மக்கள் கொடுத்த Private Data-வைத் திருடி, அதை சொந்த நிறுவனத்திற்கு அனுப்பியது எவ்வளவு பெரிய மோசடி?
இப்படி மோசடி செய்து மக்களை Brainwash செய்தால், உங்கள் ஆட்சியின் அவலங்களை எல்லாம் மக்கள் மறந்துவிடுவார்களா என்ன?
திரு. @mkstalin அவர்களே…
நீங்கள் எத்தனை தில்லுமுல்லு செய்தாலும் சரி,
#அண்ணாதிமுக_WINNING ! ✌️
#நல்லாட்சி_COMING ! 🌱
#Vote4AIADMK