#NewsUpdate | சிறுபான்மையினர் நீக்கம் - SIR நடவடிக்கை குறித்து இந்திய அரசிடம் விளக்கம் கேட்டு ஐநா நோட்டிஸ்
தேர்தல் ஆணையம் SIR விவகாரத்தில் இந்திய குடிமக்களிடம் வெளிப்படையாக செயல்படுமா?
#SunNews | #SIR | #UN
மேற்கு வங்கத்தை சேர்ந்த 12 வயது முஸ்லிம் பெண் கடத்தி, கூட்டு வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜகவை சேர்ந்த ஷாந்தனு மண்டல் என்பவனும் அதில் ஒருவனாக கைது செய்யப்பட்டுள்ளான்.
இதில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.
https://t.co/TlRQBSDsTB
பாலஸ்தீனில் இஸ்ரேலிய இராணுவம் கொத்துக் கொத்தாக மக்களை கொல்லும் போது, தான் பொறுப்பு வகித்த கமால் அத்வான் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய மக்களை இஸ்ரேல் அரசின் எதிர்ப்புகளையும் மீறி காப்பாற்றியவர் தான் Dr.ஹுசாம் அபு ஸஃபியா.
இஸ்ரேல் அரசு டிசம்பர் 2024 ஆம் ஆண்டு அவரை கைது செய்தது. இன்றளவும் அவர் வெளியில் வரவில்லை. ஜூலை 2, 2026ல் அவரின் வழக்கறிஞர் அவரை சந்தித்த போது, மிக மோசமான நிலையில் காட்சியளித்த ஹுசாம் கூறுகையில்: இதுவே என்னை நீங்கள் பார்க்கும் கடைசி தருணமாக இருக்கலாம் என பேசியுள்ளார்.
இந்தளவிற்கு அப்பட்டமான மனித உரிமை மீறலை செய்யும், கொடுங்கோல் இஸ்ரேல் அரசின் அட்டூழியங்கள் ஏதேனும் ஒரு வகையில் நிறுத்தப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்
நடைபெற்ற SIR பணியின் முடிவாக 5 கோடி பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். அதில் மே.வங்கத்தில் மட்டும் நீக்கப்பட்டவர்களில் 27 இலட்சம் பேர் தீர்ப்பாய முடிவு கிடைக்காமல் வாக்காளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
உ.பி.ல் மூன்று இஸ்லாமிய பெண்களை (ஷாமா பர்வீன், ஷாய்ஸ்தா, ஃபாத்திமா) மாட்டுக்கறி சமைத்தார்கள் என கூறி கைது செய்துள்ளது காவல்துறை! கைப்பட்டப்பற்ற கறியை தடயவியல் ஆய்விற்கு அனுப்பியுள்ளார்களாம்!
https://t.co/GNlukyJNbQ
Israel News | "Israeli Forces Killed 20,000+ Gaza Children Since Oct 7, 2023":
UN Commission
சர்வதேச சட்டங்களின்படி, மோதல்களின் போது பொதுமக்களையும், குறிப்பாக குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆனால், தற்போதைய போரில் இந்த விதிமுறைகள் மீறப்படுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
சுற்றறிக்கை: 91/2026
தேதி: 26.06.2026
இறைவனின் திருப்பெயரால்...
இஸ்லாமியர்களின் இடஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பு :தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்!: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை
இஸ்லாமிய மதத்திற்கு மாறுபவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களுக்கான (BCM) இடஒதுக்கீட்டுச் சலுகையை கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை (G.O. Ms. No.31, 09.03.2024) சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று கூறி ரத்து செய்துள்ளனர்.
தனக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று ஷமீர் அஹமது என்பவர் தொடர்ந்த வழக்கில், மனுதாரரின் கோரிக்கையைத் தாண்டி, ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் பாதிக்கும் வகையில் அரசாணையை ரத்து செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் ஆளும் தவெக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள், இஸ்லாமிய சமூகம் நீண்டகாலமாகப் போராடிப் பெற்ற உரிமையைப் பாதுகாக்கும் வகையில் அமையவில்லை என்பதும் வேதனைக்குரியது.
தமிழ்நாடு அரசு 2024 மார்ச் 9-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி, BC, MBC, DNC மற்றும் SC பிரிவைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறினாலும், அவர்கள் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டுப் பலன்களை தொடர்ந்து பெறலாம் என்றும், தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஏழு முஸ்லிம் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அரசாணை இஸ்லாமியர்களின் பன்னெடுங்கால போராட்டங்கள் மற்றும் தொடர் கோரிக்கைகளின் காரணமாக கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட முக்கியமான உரிமையாகும்.
ஆனால், தற்போது அந்த அரசாணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதை மறைமுகமாகத் தடுக்கும் ஒரு வழிமுறையாக அமைகிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு முரணானதாகும்.
தீர்ப்பில், இஸ்லாத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லை என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்துள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இஸ்லாத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால், தற்போது இஸ்லாத்தில் உள்ள பெரும்பான்மையினரும், இஸ்லாத்தைத் தழுவுபவர்களும் கல்வி, சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இடஒதுக்கீடு என்பது சாதி உயர்வு தாழ்வை நிலைநிறுத்தும் திட்டமல்ல. மாறாக, சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய மக்களை முன்னேற்றுவதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஒரு சமூகநீதிசார் உரிமையாகும்.
எனவே, இந்த உரிமையை அவசரகதியில் பறிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு கண்டனத்திற்குரியது.
இந்த முக்கியமான தீர்ப்பு குறித்து இதுவரை ஆளும் தவெக அரசும், இந்த அரசில் நேரடியாகவும் வெளியிலிருந்தும் அங்கம் வகிக்கும் விசிக, IUML மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே, இவ்வழக்கை அரசு உரிய முறையில் கையாளத் தவறியதால் இஸ்லாமியர்களின் முக்கியமான இடஒதுக்கீட்டு உரிமை பாதிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை நீக்கும் வகையில், தமிழக அரசு உடனடியாக இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து, இஸ்லாமியர்களின் அரசியலமைப்புச் சட்டப்பூர்வ உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்குவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்து, நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் நிலுவையில் உள்ள நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களிடம் இதுபோன்ற மதம் தொடர்பான வழக்குகள் தொடர்ந்து ஒதுக்கப்படுவது, நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கும் சூழலை உருவாக்கக்கூடும்.
எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்கள், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கு ஒதுக்கப்படும் இத்தகைய வழக்குகள் குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
A. முஜீபுர் ரஹ்மான்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை (MGNREGA) மாற்றி VB- G RAM G என ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள திட்டத்தில்:
- வேலை செய்பவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிப்படுத்தும் சட்டங்கள் இல்லை.
- 100 நாள் முதல் 125 நாட்கள் வரை வேலை கிடைக்கும் என எழுத்தில் இருந்தாலும், இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் அதை வழங்க இயலாத நிலையே உள்ளதென சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்
- இதற்கான நிதியை 40% மாநில அரசு வழங்க வேண்டுமென்ற விதி, மாநில அரசுகளின் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும்
- வருகைப் பதிவேடு டிஜிட்டல் முறையில் செயல்படுத்தும் முறையிலேயே ஏகப்பட்ட சிக்கல்களை வேலை செய்பவர்கள் சந்திக்கும் நிலையில், மோசடிகளை களைய AI தொழில்நுட்பத்தை கொண்டு வரப்போகிறோம் என புதிய திட்ட வரைவில் கூறியிருப்பது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதை முன்னிட்டே, ஜூலை 1 முதல், நாடு முழுக்க கிராமங்கள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்த, உழைப்பாளர் சார் அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
அடித்தட்டு மக்களின் நன்மைக்காக கொண்டுவரப்பட்ட
MGNREGA திட்டத்தை, நீர்த்துபோக வைக்கும் வேலையைத் தான் ஒன்றிய அரசு செய்கிறது!
https://t.co/m97NwfYAIU
கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் இந்தியா முழுக்க சுமார் 23 பள்ளிவாசல், அடக்கஸ்தலம், தர்கா ஆகியவை சட்டவிரோத கட்டிடங்கள் என்ற பெயரில் இடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்துள்ளது என அமெரிக்காவை சேர்ந்த Justice For All எனும் மனித உரிமை அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
அரசுத் துறைகள் அனைத்தும் முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையை நசுக்க ஒன்றாக செயல்படுவது ஜனநாயக விரோத செயல்!
https://t.co/s5cxJOnIzR
மேற்கு வங்கத்தில் ஜூன் 21 அன்று, மோடி பங்குபெறும் சர்வதேச யோகா தின நிகழ்விற்காக கொல்கத்தாவின் ரெட் ரோடு பகுதி 7 நாட்களுக்கு மக்கள் பயன்பாட்டிலிருந்து மூடப்படுவதாக அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரெட் ரோடு பகுதியில் முஸ்லிம்கள் பெருநாள் தொழுகை நடத்த ஒரு மணி நேரம் கூட அனுமதி வழங்கப்படவில்லை! ஆனால், யோகாவிற்காக ஒரு வாரம் சாலையை மூட பாஜக அரசு அனுமதிக்கிறது என TMC கட்சியை சேர்ந்த MP மஹுவா மோயித்ரா கேள்வி எழுப்பியுள்ளார்!
தங்களின் அரசியல் சுய இலாபத்திற்காக எவ்வித பாரபட்சமான செயலையும் பாஜக அரசு செய்யும் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது!
https://t.co/xJUDoO6Cep
#NewsUpdate | "பிரிட்டிஷ் அரசுக்கு சாவர்க்கர் 10 முறை மன்னிப்புக் கடிதம் எழுதினார்.."
-கொள்ளுப்பேரன் சத்யாகி சாவர்க்கர் வாக்குமூலம்
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் யார், ஆங்கிலேயனுக்கு அடிமை சாசனம் செய்தது யார் என்ற வரலாற்றை திரித்தாலும், உண்மையை மறைக்க முடியுமோ?
#SunNews | #Savarkar
#WATCH | கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கூகுள் CEO சுந்தர் பிச்சை உரையாற்ற வந்தபோது வெளிநடப்பு செய்த மாணவர்கள் 'Free Palestine' என முழக்கமிட்டனர்.
2021-ல் இஸ்ரேல் அரசாங்கம் கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு கூட்டாக 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒப்பந்தம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த போரட்டத்தை மாணவர்கள் நடத்தினர்.
பாலஸ்தினம் இனஅழிப்பு அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றே!
#SunNews | #SundarPichai | #FreePalestine
https://t.co/RXDOaqeTnE
மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ஹூக்லி மாவட்டத்தை சேர்ந்த 71 வயதான ஷேக் ஷா ஆலம் என்ற இஸ்லாமியரை, ஜூன் 15 அன்று அவரது வீட்டிற்கே சென்று அடித்து கொலை செய்துள்ளனர்.
ஷேக் ஷா ஆலம் TMC கட்சியின் ஆதரவாளர் என்ற விரோதத்தில்,
பாஜக ஆதரவாளர்கள் அவரை கொலை செய்துள்ளனர் என குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், அவர் TMC கட்சியில் இல்லை என்றும் குடும்பத்தினர் கூறுகின்றனர். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதலே முஸ்லிம்களுக்கு எதிரான சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ளன.
குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்!
https://t.co/rLsV0BpQC5
ம.பி.ல் ஆகஸ்ட் 3, 2022ல் மாடுகளை வண்டியில் ஏற்றிச் சென்ற நிசீர் அஹமத் மற்றும் இருவரை ஹிந்துத்துவ வெறியர்கள் தாக்கினர். நசீர் அஹ்மத் இதில் கொல்லப்பட்டார்.
இது குறித்த வழக்கு ம.பி.ல் நர்மதாபுரம் மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 14 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது!
மோடி ஆட்சியில் ஏராளமான முஸ்லிம்கள் ஹிந்துத்துவ வெறியர்களால் கொல்லப்பட்ட நிலையில், இவ்வழக்கில் வழங்கப்பட்டுள்ள நீதி இஸ்லாமிய சமூகத்திற்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் ஊட்டுகிறது!
குற்றவாளிகளின் பெயர் கீழ்வருமாறு:
Deepak(38), Ajju (36), Prakash Kaushal (33), Chetan Maratha (23), Pawan Bathav (31), Amar (38), Kanhaiya Bathav (32), Devendra (22), Sandeep (26), Anuj (24), Sanju (39), Akash (31), Gaurav Yadav (24) மற்றும் Akash Sarathe (33).
https://t.co/UpMFOXsMmG
மேற்குவங்க மாநிலத்தின் ரஜர்ஹாட் நியூ டவுன் பகுதியிலுள்ள 164வது பூத்தில் 88% முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அந்த பூத்தில் பதிவான 656 வாக்குகளில், பாஜக 637 வாக்குகளை பெற்றுள்ளது. CPI(M)-ISF கூட்டணி 1 ஓட்டும், TMC கட்சி 5 ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளன.
88% முஸ்லிம்கள் வசிக்கும் பூத்தில், 97% வாக்காளர்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளார்கள் என்பது நடக்காத செயல். மக்களின் வாக்குகளை ஏமாற்றி பாஜக வென்றுள்ளது!
https://t.co/7jb4xVSDW8
``உண்மையான நேர்மைன்னா
என்னனு தெரியுமா..!’’
"என் வெளிநாட்டு Client-ஐ சந்திக்கும் அவசரத்தில், ₹156 ஆட்டோ கட்டணத்திற்கு பதில் ₹15,682 அனுப்பிவிட்டேன். அது எனக்கே தெரியாது. இறுதியில் மீட்டிங் சொதப்பிய விரக்தியில் கீழே வந்தபோது, ஆட்டோ டிரைவர் அல்தாப் எனக்காக காத்திருந்து மொத்த பணத்தையும் திருப்பி கொடுத்தார். முதல் போணி எனக்கூறி அவரின் பணமான ரூ.156-ஐ கூட வாங்க மறுத்தார்
ஒரு வாரம் கழித்து அந்த பிசினஸ் டீல் ஓகே ஆன மகிழ்ச்சியான தருணத்திலும் எனக்கு அல்தாஃபின் முகம்தான் நினைவுக்கு வந்தது. உடனே அவருக்கு ₹500 அனுப்பி நன்றிக்கடன் செலுத்தினேன். நம்மை யாரும் கவனிக்காத நேரத்திலும் நேர்மையாக இருப்பதுதான் உண்மையான நேர்மை"
- மும்பையை சேர்ந்த `ஹிங்லீஸ்’ நிறுவனத்தின் CEO சுபம் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு வைரல்
உங்கள் செல்வங்களை, உங்களுக்கிடையே தவறான முறையில் உண்ணாதீர்கள்!
திருக்குர்ஆன் 2:188
ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 2072
#CEO #Mumbaibased #Hingleys #autofare #thanthitv
பக்ரீத் பண்டிகையை ஒட்டி, மே 11 - 29, 2026 வரை முஸ்லிம்களுக்கு எதிராக 46 வன்முறை சம்பவங்களை சங்பரிவார கூட்டம் நடத்தியுள்ளதாக, The Association for Protection of Civil Rights (APCR) அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாஜகவின் இசைவோடு சங்பரிவார கூட்டம் ஆடும் மதவெறியாட்டத்திற்கு, அரசுத்துறைகளும் அமைதி காத்து ஆதரவாக நிற்பது கண்டிக்கத்தக்கது.
https://t.co/VwgRzY8kmF
ம.பி.ல் மாடுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்றவரை, VHP மற்றும் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த ஆஷிஷ் தாகூர், ஆகாஷ் தாகூர் தலைமையிலான தீவிரவாத கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
பாஜக ஆளும் மாநிலங்களில், அரசு மற்றும் காவல்துறையின் அனுமதியுடனே இது போன்ற கொடுஞ்செயல்கள் நடப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
https://t.co/4ED5uAM9qb