உண்மையில் சரக்கு அடிக்க காரணமெல்லாம் எதுவுமில்லை
அவர்களுக்கு சரக்கு பிடித்திருக்கிறது
அவ்வளவுதான்
சரக்கு வசூலை அதிகரிக்க
நினைக்கும் அரசாங்கத்திற்கும்
அதுதான் பிடித்திருக்கிறது
முடிவு இனிதாக முடிவுற்றிருந்தால் ஏன் உன்னை நினைத்து பிதற்றிக் கொண்டிருக்கப் போகிறேனென நினைப்பதுண்டு;
அன்பை புதுப்பித்துக் கொள்வதாய் நினைத்து எவ்வாறாயினும் பிதற்றத்தான் செய்திருப்பேன்;
உன்னோடு நான் போன பாதை நீளாமல் உரையாடல்கள் தீர்ந்து போனாலும் உன் மௌனமே போதுமென இருக்கமுடியவில்லை