இன்று (21.10.2026) மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட பீ.பீ. குளம் பகுதி வள்ளுவர் காலனியில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில், பொருட்களைக் கேட்கும் தாய்மார்களிடம் ஊழியர்கள் மரியாதைக் குறைவாகப் பேசுவதாகவும் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன.
இன்று நேரடியாக அந்த நியாயவிலைக் கடைக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டேன்.
விற்பனைப் பதிவேடுகள் மற்றும் இருப்பு விவரங்களை முழுமையாக ஆய்வு செய்து, தலைவர் தளபதியாரின் ஆட்சியில் எப்பொழுதும் பொதுமக்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும், அனைத்துப் பொருட்களும் தடையின்றி விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டோம்!
அப்பகுதித் தாய்மார்கள் மற்றும் பொதுமக்களிடம், "இனி ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் எனது அலைபேசி எண்ணிற்கு நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்; உடனே உங்கள் முன் நிற்பேன்!" என உறுதியளித்தேன்!
@CMOTamilnadu | @BussyAnand@TVKHQ_Madurai | @TVKITWingMaduri
#MaduraiNorth #BBKulam #ValluvarColony #RationShopInspection #FieldAction #MLAMaduraiNorth
As promised yesterday, the garbage accumulated along the stretch from Indian Oil petrol bunk to Golcha Complex in Anna Nagar has been completely cleared by Our Madurai Corporation sanitation team. The area has been thoroughly cleaned and disinfected with bleaching powder.
Regular monitoring will be ensured to maintain cleanliness here.
@CMOTamilnadu | @BussyAnand
#MLAMaduraiNorth #TVK
புதூர் ராமவர்மா நகர் மற்றும் சங்கர் நகர் பகுதிகளில் நேற்று கள ஆய்வு சென்றபோது, அப்பகுதி மக்கள் நம்மை அழைத்துச் சென்று, அருகில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலில் பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் தேங்கிக் கிடந்த குப்பைகளைக் காட்டினர். இதனால் கொசுத் தொல்லை, டெங்கு காய்ச்சல் அபாயம் ஏற்பட்டு தங்கள் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக முறையிட்டனர்.
தற்போது மழைக்காலம் என்பதால் நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க, தாமதிக்காமல் இன்றே மாநகராட்சி உயர் அதிகாரிகள், உதவிப் பொறியாளர் (AE) மற்றும் ஓயாது உழைக்கும் தூய்மைப் பணியாளர்களை இன்று (20.10.2026) நேரில் அழைத்துச் சென்று, வாய்க்காலில் இருந்த மொத்தக் குப்பைகளையும் போர்க்கால அடிப்படையில் முழுமையாக அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டது. விரைவில் இப்பணிகள் நிறைவுபெற்று, மழைநீர் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்.
@CMOTamilnadu | @TVKVijayHQ@BussyAnand | @KallanaiMLA@TVKHQ_Madurai | @TVKITWingMaduri
#DrainageCleaning #MaduraiNorth #FieldAction #MLAMaduraiNorth #TVKMaduraiNorth #மதுரை
@8787Harish@mdu_corp@MID_ASSOCIATION@UpdatesMadurai@TVKITWingMaduri Noted. I have escalated this immediately to the concerned Madurai Corporation officials to clear the accumulated garbage on priority and restore cleanliness in the area. Thank you for flagging this; our team will follow up until it is resolved.
நமது மதுரை வடக்கு தொகுதி புதூர் 14 வது வார்டுக்குட்பட்ட, ராமவர்மா நகர் மற்றும் சங்கர் நகர் 2 வது தெரு பகுதியில் கழிவுநீர் தேங்கி பொதுமக்கள் படும் அவதி குறித்து நேற்று கள ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்திருந்தோம்.
இன்று (20.10.2026) அந்த வாக்கினை நிறைவேற்றும் வகையில், இன்று மாநகராட்சி உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வின்றி உழைக்கும் மாநகராட்சி ஊழியர்களை நேரடியாக அழைத்துச் சென்று களப்பணியில் இறங்கினோம். மாநகராட்சியின் அதிநவீன கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் (Suction Vehicle) கொண்டு, சாலையில் தேங்கியிருந்த கழிவுநீர் முழுமையாக உறிஞ்சி அகற்றப்பட்டு அப்பகுதி முழுவதும் தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டது.
தலைவர் தளபதி அவர்களின் பொற்கால ஆட்சியில் சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று அல்ல! நேற்று ஆய்வு செய்தோம்... இன்றே மக்களின் சிரமத்திற்குத் தற்காலிகத் தீர்வு கண்டுவிட்டோம்!
மேலும், நாம் உறுதியளித்தபடி அடுத்த 10 தினங்களுக்குள் இப்பிரச்சனைக்கு முழுமையான நிரந்தரத் தீர்வு காணப்படுவதோடு, அப்பகுதி மக்களுக்குத் தரமான புதிய தார்ச்சாலை அமைத்துத் தரப்படும் என்பதையும் மீண்டும் உறுதியுடன் தெரிவித்தோம்.
— விஜய் அன்பன் கல்லாணை
சட்டமன்ற உறுப்பினர், மதுரை வடக்கு தொகுதி
மாவட்டக் கழகச் செயலாளர், மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்
@CMOTamilnadu | @BussyAnand@TVKVijayHQ | @KallanaiMLA@TVKITWingMaduri | @TVKHQ_Madurai
#PromptAction #FieldAction #Pudur #MaduraiCorporation #RoadWork #MaduraiNorthMLA #TVKMadurai
கேட்பதே எவ்வளவு பெரிய விஷயம்! மக்கள் தான் அதிகாரம் என்பதை உணர்த்தும் தருணம் இது 👌👌
மதுரையில் இனி எல்லா தொகுதிகளிலும் TVK வெல்லும் அளவுக்கு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் வேலை பாருங்க💪🔥
சூப்பர் bro @VijayAnban_offl 👏👏
மாணவர்களின் நலனைக் கருதி உடனடியாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் ஒரு தற்காலிகத் தீர்வு மட்டுமே இது!
இப்பகுதியில் சாலை குண்டும் குழியுமாக இருந்ததன் காரணமாக மழைநீர் அதிகளவில் தேங்கி, தினசரி பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் நமது மாணவ-மாணவியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனை முழுமையாகச் சரிசெய்யும் வகையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டோம். மாணவர்கள் எந்தவித இடர்ப்பாடுகளும் இன்றி பாதுகாப்பாகத் தங்கள் கல்வி நிலையங்களுக்குச் சென்று வர ஏதுவாக, இப்பகுதியில் மிக விரைவில் தரமான புதிய தார்ச்சாலை அமைத்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம்.
@CMOTamilnadu | @BussyAnand@KallanaiMLA | @TVKITWingMaduri@TVKVijayHQ | @TVKHQ_Madurai
இன்று (19.10.2026) மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட புதூர் பகுதி, ராம வர்மா நகர் மற்றும் சங்கர் நகர் 2வது தெருவில் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடித் தேங்கி நின்றதால், அப்பகுதிப் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாகப் புகார்கள் வந்தன.
மக்களின் இந்தத் துயரத்தை அறிந்த உடனேயே, மாநகராட்சி உயர் அதிகாரிகள் மற்றும் உதவிப் பொறியாளர் (AE) ஆகியோரை நேரில் அழைத்துச் சென்று அந்தப் பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
தாய்மார்கள் மற்றும் பொதுமக்களிடம் “இன்னும் ஓரிரு தினங்களுக்குள் இப்பகுதியில் தேங்கும் கழிவுநீரை முழுமையாக அகற்றி உடனடித் தற்காலிகத் தீர்வு செய்து தரப்படும்.” மேலும்
“அடுத்த 10 தினங்களுக்குள் இப்பிரச்சனைக்கு முழுமையான நிரந்தரத் தீர்வு காணப்படுவதோடு, புதிய தார்ச்சாலையும் முழுமையாக அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்” என உறுதியளித்தேன்.
— விஜய் அன்பன் கல்லாணை
சட்டமன்ற உறுப்பினர், மதுரை வடக்கு தொகுதி
மாவட்டக் கழகச் செயலாளர், மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்
@CMOTamilnadu | @BussyAnand@KallanaiMLA | @TVKHQITWingOffl@TVKITWingMaduri | @TVKHQ_Madurai
#TVKMadurai #FieldAction #Pudur #MLAMaduraiNorth #CivicAction
இன்று(19.10.2016) நமது மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட மாட்டுத்தாவணி 120 அடி சாலையில் இருந்து சர்வேயர் காலனி செல்லும் பாதையில், சாக்கடை கழிவுநீர் சாலையில் தேங்கி நின்றதால், அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
தகவல் அறிந்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் உதவிப் பொறியாளர்களை நேரடியாக அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று எப்போதும் களத்தில் அர்ப்பணிப்புடன் உழைக்கும் நமது மாநகராட்சிப் பணியாளர்களின் உதவியுடன் அதிநவீன கழிவுநீர் உறிஞ்சும் வாகனத்தைக் கொண்டு தேங்கிய கழிவுநீர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.
இனி அப்பகுதியில் கழிவுநீர் கசிந்து சாலையில் தேங்கி நிற்காத வகையில் உரிய வழிவகை செய்யப்பட்டு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.
— விஜய் அன்பன் கல்லாணை
சட்டமன்ற உறுப்பினர், மதுரை வடக்கு தொகுதி
மாவட்டக் கழகச் செயலாளர், மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்
@CMOTamilnadu | @BussyAnand@KallanaiMLA | @TVKITWingMaduri
#FieldWork #MaduraiNorthMLA #VijayAnbanKallanai #TVKMadurai
உழைப்பின் உன்னதத்தையும், தொழிலின் நேர்த்தியையும் கொண்டாடும் புனிதம் நிறைந்த ஆயுத பூஜை மற்றும் புதிய தொடக்கங்களுக்கு வழிகோலும் விஜயதசமி நன்னாளை முன்னிட்டு..
இன்று மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் அதன் வளாகத்தில் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் இயங்கி வரும் இ-சேவை மையத்திலும், மக்கள் பணிகளுக்குத் துணையாக நிற்கும் சாதனங்களை வணங்கி எளிய முறையில் வழிபாடு செய்தோம்.
நமது மக்கள் முதல்வர் தலைவர் தளபதி அவர்களின் பொற்கால வழிகாட்டலில், நாம் தொடும் காரியங்கள் யாவும் வெற்றியாக மாறட்டும்; மக்களின் வாழ்வில் நலமும் அமைதியும் நிலைக்கட்டும்!
@CMOTamilnadu | @BussyAnand@KallanaiMLA | @TVKITWingMaduri
#AyuthaPooja #Vijayadashami #MaduraiNorth #மதுரை #மதுரைவடக்கு
அதிகாரிகளின் மேஜையில் உங்கள் மனுக்கள் தூங்காது; மக்களின் குறைகளை வெறும் மனுவாகப் பார்க்காமல், அவர்களின் உரிமைக்கான குரலாகக் கொண்டு தீர்வு காண்பதே எங்கள் தளபதியின் வழி!
- @VijayAnban_offl ❤️
@CMOTamilnadu | @BussyAnand@KallanaiMLA | #மதுரை
நமது மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட புதூர், கற்பக நகர் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் 6 வார்டுகளுக்குரிய பிரதான மையமாக இயங்கி வருகிறது. இந்த 6 வார்டுகளின் கழிவுநீரும் பம்பிங் ஸ்டேஷனைச் சென்றடையும் பிரதான மெயின் குழாயில் (Main Pipeline) திடீரென உடைப்பு ஏற்பட்டு அப்பகுதியில் பெரிய பள்ளம் உருவானது.
பொதுமக்கள் தொடர்ந்து தெரிவித்த புகார்களை கவனத்தில் கொண்டு, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டேன்.
சுமார் 26 அடி ஆழத்தில் உள்ள மூன்று பிரதான குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு, கடந்த 3 நாட்களாக மாநகராட்சி ஊழியர்களால் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
களத்தில் நின்ற ஊழியர்களிடம் பணிகளின் தீவிரத்தைக் கேட்டறிந்து, இது போன்று எதிர்பாராமல் ஏற்படும் பாதிப்புகளால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதை உணர்ந்து பணிகளை முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டேன்.
பொதுமக்களுக்கு எவ்வித சுகாதாரக் கேடும் ஏற்படாமல், இப்பிரச்சனைக்கு மிக விரைவில் நிரந்தரத் தீர்வு காணப்படும்!
பொதுமக்களுக்கு எவ்வித சுகாதாரக் கேடும் ஏற்படாமல், இப்பிரச்சனைக்கு மிக விரைவில் நிரந்தரத் தீர்வு காணப்படும்!
— விஜய் அன்பன் கல்லாணை
சட்டமன்ற உறுப்பினர், மதுரை வடக்கு தொகுதி
மாவட்டக் கழகச் செயலாளர், மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்
@CMOTamilnadu | @BussyAnand@KallanaiMLA | @TVKITWingMaduri
#MaduraiNorth #Pudur #FieldInspection #KarpagaNagar #PumpingStation
லஞ்சம் தவிர்!!
நெஞ்சம் நிமிர்!!
தமிழக முதல்வர் தலைவர் தளபதி அவர்களின் எண்ணத்தை செயலாக்கும் முயற்சியில்!!
மதுரை வடக்கு தொகுதியில் அரசு துறைகளில் லஞ்சமற்ற ஊழலற்ற மக்கள் சேவையை கட்டமைக்க உறுதியேற்போம்!!
மதுரை விஜய் அன்பன்
#AntiCorruption#PeopleCM#ThalapathyCmVijay
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதி அவர்கள் நல்லாசியுடன்,
இன்று பிறந்தநாள் காணும் எனது குரு தளபதியாரின் நம்பிக்கை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அன்பிற்கினிய பொதுச்செயலாளர் N. ஆனந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அழகிய தருணம்!
@CMOTamilnadu | @BussyAnand
@VijayAnbanMLA | @tvkitwingmaduri
#தமிழகவெற்றிக்கழகம் #மதுரை