ஆட்டோ ஓட்டுநர் சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்ட உணவு எப்போதும் என் நினைவில் இருக்கும் - அவர்களுடன் மேற்கொண்ட பயணமும், அவர்கள் பகிர்ந்து கொண்ட ஒவ்வொரு வார்த்தையும் என் நினைவை விட்டு நீங்காது.
"விலைவாசி உயர்வால் சில இரவுகளில் எங்கள் குழந்தைகள் பட்டினியோடு உறங்குகிறார்கள் - அரசாங்கம் எங்கள் குறைகளுக்கு செவிசாய்ப்பதும் இல்லை, எங்களைப் பற்றி சிந்திப்பதும் இல்லை."
நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நிலைமையை மாற்றுவோம், ஒன்றாக இணைந்து மாற்றத்தை உருவாக்குவோம்.
Rahul Gandhi
Heartiest birthday wishes to Hon’ble Chief Minister of Kerala, Thiru V. D. Satheesan
Wishing you strength, good health, and continued success in serving the people of Kerala.
@vdsatheesan
Questioning the government is not “hating India.”
It’s called accountability.
India’s strength has always come from its people — farmers, workers, youth — not PR campaigns.
If raising real issues makes you uncomfortable, maybe the problem isn’t the question.
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும்,
வணக்கம்.
இன்று சட்டமன்றத்தில் மக்கள் அரசு, அதாவது நமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்கள் நலன் விரும்பும் முதலமைச்சர் என்ற முறையில் நாம் கொண்டு வந்தோம். அதன் மீதான விவாதம் நடைபெற்றது.
மக்களே… நீங்கள் மிகப் பெரும் நம்பிக்கை வைத்துள்ள உங்கள் அன்பிற்குரிய அரசை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு சட்டமன்றக் கட்சியினரும் பேசினர். சிலர் நடுநிலை வகிப்பதாகவும் தெரிவித்தனர். சிலர் வெளிநடப்பும் செய்தனர்.
நம்பிக்கைத் தீர்மானம் மீதான ஆதரவு மற்றும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், எண்ணிக் கணக்கிடும் முறையில் அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பின்படி, உங்கள் அரசு மீது நம்பிக்கை வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 144. எதிர்ப்பு தெரிவித்தோர் 22. நடுநிலை வகித்தோர் 5. பங்கேற்காதோர் 60. இதன் மூலம், மக்கள் ஆதரவு பெற்ற தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் மகத்தான வெற்றி பெற்றதாக மாண்புமிகு பேரவைத் தலைவரால் பேரறிவிப்பு செய்யப்பட்டது.
நமது மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்த அனைத்து இயக்கங்களைச் சார்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல, நம்மை ஆதரித்த அனைத்து இயக்கங்களின் தலைவர்களுக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சட்டமன்ற நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்யும்போது, ஆளும் கட்சிக்கான ஆதரவை மட்டும் காட்டுவது ; எதிர்ப்பை மக்கள் யாரும் பார்க்க முடியாமல் செய்யும் வகையில் நேரலையை நிறுத்தி இருட்டடிப்புச் செய்வது என்பது போன்று சட்டமன்றத்தில் நாம் எதையும் ஒளிக்கவில்லை. மறைக்கவில்லை. அனைத்தையும் இன்றைய நேரடி ஒளிபரப்பில் உலகமே பார்த்ததுதான் அதற்கு உறுதியான சான்று.
தமிழக மக்களே… நீங்கள் அனைவரும் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க விரும்பினீர்கள் என்பது நமக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும், சில சூழல்களால், நமக்கு வாக்களிக்க இயலாமல் போனவர்கள், இப்போது மனம் வருந்துவதையும் நம்மால் உணர முடிகிறது. இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் உங்கள் தமிழக வெற்றிக் கழகம் பெறும் என்பதையும் உறுதியாக நம்புகிறோம்.
இன்று, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் சிலர் பேசியதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அது குறித்து, சில விளக்கங்களை நம் உறவுகளாகிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டியது மக்களின் முதல் மற்றும் உண்மைப் பிரதிநிதியான நமது கடமை.
பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வழக்கம் போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார்.
அது குறித்து, தமிழக மக்களான நீங்கள் அனைவரும், 2006-இல் 100 சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளிலும் வென்று, ‘தனிப் பெரும்பான்மை பெற்று(?)’ அமைந்த தி.மு.க. அரசை நினைத்துப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து இருப்பீர்கள் என்பதும் நாடே அறிந்ததுதான்.
எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை. ஆகவே, மக்களிடம் நாம் வாக்குகள் குறித்த சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம்.
நம் த.வெ.க.விற்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 34.92. அதாவது ஏறக்குறைய 35 சதவிகிதம். ஆனால், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் சார்ந்த கட்சியான தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளையும் பெற்றுத்தான் சில தொகுதிகளிலாவது வென்றது என்பது உண்மை என்றாலும், தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?. வெறும் 24.19 சதவிகிதம் மட்டுமே. அதாவது கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட நம் த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட 10 சதவிகிதத்திற்கும் கீழ். மிகவும் குறைவு.
அதேபோல, தி.மு.க. தனிக் கட்சியாகப் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 மட்டுமே. ஆனால், நம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகள். தி.மு.க.வை விட 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். ஏறக்குறைய அரைக் கோடிக்கும் அதிகமான மக்களின் வாக்குகள் அவை.
இவை எல்லாம் நாம் சொல்லும் கணக்கன்று. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு. இது தெரிந்தும், புள்ளிவிவரப் புலி தி.மு.க. எடுத்து வைக்கும் வாதத்தை என்னவென்று சொல்ல?
இது மட்டுமா? நம் த.வெ.க.வை 3 கோடியே 21 லட்சம் (இதில் சில லட்சம் வாக்குகள் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது) மக்கள் நிராகரித்ததாகத் தி.மு.க. சார்பாகக் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால், தி.மு.க. மட்டும் தனியாக வாங்கிய வாக்குகளின்படி 3 கோடியே 68 லட்சம் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிதான் தி.மு.க.
சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் த.வெ.க. 35 சதவிகிதம் எனில், தி.மு.க. 24 சதவிகிதம்தான். அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் தி.மு.க.வே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர்.
இப்படி தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன?
மக்கள் மீது கடன்சுமையை ஏற்றி வைத்துவிட்டு, அது வளர்ச்சிக்காகப் பெற்ற கடன் என்று வாய்வித்தைக் காட்டும் தி.மு.க., நம்மைப் பார்த்து ஆதரவைக் கடன் பெற்றதாகக் கூறி உள்ளதை என்னவென்று சொல்ல?
மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால்தான் நமது அரசைக் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரித்தன. அதை அக்கட்சிகளின் தலைவர்கள் ஊடகங்களிலும் வெளிப்படுத்தினர். இதையும் தி.மு.க. ஏளனமாகப் பேசி உள்ளது எந்தக் கணக்கில் என்று புரியவில்லை. அதையும் மக்களான உங்கள் பார்வைக்கும் முடிவுக்குமே விட்டுவிடுகிறோம்.
மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியான நம் த.வெ.க. ஆட்சி அமைத்துவிடவே கூடாதென, தி.மு.க. செய்த வேலைகளால் அதன் டீசண்ட் வெர்ஸன் அம்பலமான கதை ஒன்று நாடெங்கும் உலவுவதையும் நாம் நாட்டு மக்களிடமே விட்டுவிடுவோம். இதில் வேறு, த.வெ.க. ஆட்சிக்குத் தடையாக இருக்க மாட்டோம் என்ற பெருந்தன்மைப் பாடலைக் கீறல் விழுந்த ரெக்கார்டில் இசைக்க விடுவதெல்லாம் வேறு ரகம்.
நாம் இப்போதும் சொல்கிறோம். ஆதாரப்பூர்வமான குறைகளை யார் வைத்தாலும், அதை ஏற்று உடனடியாகத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களே நாம். ஆனால், நமக்கு எதிராகத் தன் சொத்தை வாதங்களை மக்கள் மன்றத்தில் வைத்துத் தோற்ற தி.மு.க., இப்போது அதையே சட்டமன்றத்திலும் தொடர்கிறது. அதையும் மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறோம்.
நம்பிக்கை இல்லாததால்தான் நாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகக் கூறினார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும்கூடவா புரியவில்லை? அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட தி.மு.க. அமைச்சர்கள் 15 பேரின் தோல்வியைப் பார்த்தும்கூடவா இன்னும் புரிந்துகொள்ளவில்லை? இயல்புநிலை புரியாமல் இப்படியே தொடர்ந்தால், மக்களே இனி வரும் காலங்களில் தி.மு.க.விற்கு இன்னும் நன்றாக, ஆழமாக உணர்த்திப் புரிய வைப்பர்.
நம் மக்களுக்கு, ஒட்டுமொத்தமாக நாம் நன்றி சொன்னதை மறந்துவிட்டு, நன்றி சொல்லவில்லை என்று நாம் போட்டியிட்ட தொகுதிகளைப் பிரித்துப் பேசி, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது புரிதலே இல்லாத தி.மு.க.
நம் மக்களை நாம் விரைவில் சந்திப்போம் என்பது நம் மக்களுக்கும் தெரியும். நமக்கும் தெரியும். ஆகவே, அதற்காகத் தி.மு.க., அக்கறையாக இருப்பதுபோல டிஜிட்டல் முறையில் தேம்பி அழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நாகரிகமான பதிவு (டீசண்ட்டான வெர்ஸன்) குறித்துத் தி.மு.க. பேசியது. நம்முடைய அரசியல் நாகரிகமும் டீசண்ட் வெர்ஸனும் எப்படிப்பட்டது என்பதைத் தமிழகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏன், அவர்களும் பார்த்தார்கள். தி.மு.க. என்னதான் நம்மை அர்த்தமற்ற முறையில் ஏளனமாகப் பேசினாலும், நாம் எப்போதும் நாகரிகம் காக்கும் நயத்தகு இயக்கமாகவே இருப்போம். அதிலே மாற்றமே இல்லை. அறிஞர் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலிலும் நாம் பின்பற்ற விரும்புகிறோம்.
இன்று, நமக்கு ஆதரவு அளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்துப் பேசுகையில், தி.மு.க. ஏதோ தாங்கள் சுத்தம் சுயம்பிரகாசம் போலப் பேசியதுதான் மிகப் பெரிய நகைச்சுவை. 1999இல் பா.ஜ.க. கூட்டணியைத் திடீரென நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்த கதையை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதன் பிறகு, அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி போட்டு வென்று, பேரம் பேசி, மந்திரி பதவிகள் பெற்றதையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை.
சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், பா.ஜ.க.வுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்துவிட்டே நமது அரசை ஆதரித்து வாக்களித்தனர் என்பது தி.மு.க.வின் அவதூறு கண்களுக்கு வேண்டுமெனில் தெரியாமல் போகலாம். ஆனால், மக்கள் நமது தூய எண்ணத்தை உணர்ந்தே இருக்கின்றனர்.
தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 1999-இல் சேஞ்ச் என்று கூறி எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டது என்ன என்பதை நாடே அறியும். ஆனால், நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆகவே, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை.
மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
மக்களே… உங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் புண்படுத்தட்டும். நமக்கு எதிராகப் புறம் பேசட்டும். புலம்பல் பாடல்கள் இசைக்கட்டும். நாம் அதைப்பற்றிக் கவலைப்படவே போவதில்லை. மக்கள் பணியும் மக்கள் நலனும் மட்டுமே நமக்கு முக்கியம்.
மேஜிக்கல் நம்பர் நமக்கு இல்லை என்று கூறும் தி.மு.க., அவர்கள் செய்ய முடியாத மக்கள் நலன் சார்ந்த பலவற்றை மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும் நமது அரசு செய்து காட்டப் போவதைப் பார்க்கத்தான் போகின்றனர். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நாம் சாதித்துக் காட்டத்தான் போகின்றோம். அப்போதும் சொத்தைக் காரணங்களைக் கூறி, இந்தத் தி.மு.க. தப்பிக்கத்தான் பார்க்கும். அதையும் நம் மக்கள் பார்க்கத்தான் போகின்றனர்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி நாம் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை நம்பி மட்டுமே நாம் இருக்கிறோம். இது புரியாமல், ரீல்ஸ் என்றும் ரியல் என்றும் தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே தி.மு.க. திமிராகப் பேசுகின்றது. ஆனால், இப்படிப் பேசிக்கொண்டே ரீல்ஸ் உலகில் மிதக்கத் தொடங்கி உள்ளதும் ரியாலிட்டி அறியாத இதே தி.மு.க.தான்.
மக்களே… தோல்வியில் மூழ்கித் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க., நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும். அதைப் பற்றி நாம் கண்டுகொள்ளவே போவதில்லை. நாம் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த செயல்களிலும் திட்டங்களிலும் சட்டங்களிலும்தான் ஈடுபடப் போகிறோம். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி.
முன்னாள் பாரதப் பிரதமர், பாரத் ரத்னா ராஜீவ் காந்தி மற்றும் 16 அப்பாவிகள் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
இச் சம்பவத்தில் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பேரறிவாளனின் கருணை மனு,
நீண்ட நாள் நிலுவையில் இருந்தது என்கிற ஒரே காரணத்தின் அடிப்படையில் விடுதலையானர்.
இந்நிலையில் தீவிரவாத அமைப்பைச்சார்ந்த கொலைக் குற்றவாளி பேரறிவாளன், வழக்கறிஞராக தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார்.
தீவிரவாத குற்ற செயலில் ஈடுபட்டவரும் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டவரும், இந்திய தேசத்தின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியவரும்,
இந்தியாவின் வல்லரசு ஆகவேண்டும் என்கிற கனவையும் மக்களின் நம்பிக்கையையும் தகர்த்தெறிந்த கொலைக் குற்றவாளியை, வழக்கறிஞராக பதிவு செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில்
இன்று இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.
இதுகுறித்து
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளி பேரறிவாளன், வழக்கறிஞர் ஆனது குறித்து விளக்கம் அளிக்க கோரி தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கும்,
@BCI அகில இந்திய பார் கவுன்சிலுக்கும், @HMOIndia உள்துறை அமைச்சகம்,சட்டத்துறை மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
I attended an assembly election review meeting chaired by AICC Tamil Nadu incharge Shri. Girish Chodankar ji in the presence of our TNCC President at the PCC Office in Chennai.
@girishgoaINC@INCTamilNadu@INCIndia
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு @SPK_TNCC அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் திரு @girishgoaINC அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு @nivedithalva ஆகியோர் தலைமையில், காங்கிரஸ் சட்டமன்ற வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
Statement by the Honorable Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay, urging the Union Government to cancel the NEET based admissions in medical courses and to permit the respective States to fill up seats based on Class 12 marks.
1/2
அரசுகள் மாறலாம் . ஆனால் நீட் தொடர்பான தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்றும் மாறாது என்பதை மோடி அரசு புரிந்துகொள்ள வேண்டும். உடனடியாக NEET,CUTE தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். #NEET
Dimwits who are reporting on the reduced size of PM’s convoy were completely silent when he did 3 roadshows in 2 days after making an appeal to conserve fuel!
Not a squeak!
BTW how many cameras were deployed to shoot Modi’s reduced convoy?
Just asking! 🤔🤦♀️
NEET scam getting worse 🚨
“Big people are being protected” — says a BJP leader after arrest.
So…
Who are these “big people”?
Why is the Modi government silent?
What are they hiding?
மத்திய புலனாய்வுத்துறையின் இயக்குநர் பிரவீன் சூட் அவர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர், மத்திய அமைச்சர், எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் பங்கேற்று பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். ஆனால், தேர்வுக் குழுவிற்கு முழுமையான பட்டியலை அனுப்பாமல் 69 பெயர்கள் கொண்ட பட்டியல் பரிசீலனைக்கு வழங்கப்பட்டது. இதில் பிரவீன் சூட் என்பவரின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டுமென்பது பிரதமர் மோடியின் விருப்பமாகும். ஏற்கனவே, பிரவீன் சூட் அவர்களுக்கு இரண்டு ஆண்டு கால பதவிக்காலம் முடிந்து கடந்த மே 2025 இல் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. மறுபடியும் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் கடுமையாக எதிர்த்தார். ‘எனக்கு முழுமையான பட்டியல் தரப்படவில்லை. 69 பேர் கொண்ட பட்டியல் மட்டுமே வழங்கப்பட்டது. முழு விவரங்களும் எனக்கு தெரிவிக்கப்படாமல் பிரவீன்சூட் அவர்களை மீண்டும் பதவி நீட்டிப்பு செய்வது தேர்வுக் குழுவின் நடைமுறைக்கு எதிரானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அந்த எதிர்ப்பை புறக்கணித்து விட்டு பிரவீன் சூட் அவர்களுக்கு மீண்டும் ஓராண்டு சி.பி.ஐ. இயக்குநராக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலாகும்.
மத்திய புலனாய்வுத்துறையை ஒன்றிய பா.ஜ.க.வின் கைப் பாவையாக வைத்துக் கொண்டு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூலமாக எதிர்கட்சித் தலைவர்களை, பத்திரிகையாளர்களை, விமர்சனம் செய்பவர்களை அரசியல் ரீதியாக பல்வேறு பொய் வழக்குகளை புனைந்து சிறையில் அடைப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். பா.ஜ.க. அரசின் ஜனநாயக, சர்வாதிகார நடவடிக்கைளுக்கு சி.பி.ஐ. அமைப்பை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் தான் பிரவீன் சூட் அவர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும். எதிர்கட்சிகள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை ஏவிவிடுவதற்கு துணை போகிற அமைப்பாக சி.பி.ஐ. அமைப்பை பயன்படுத்துகிற முயற்சியாக கருதி இதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
அதேபோல, நீட் தேர்வு முறையினால் அதிகமாக வஞ்சிக்கப்பட்டு வருபவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள். அதை எதிர்த்து சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முடியாமல் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 22 லட்சம் மாணவர்கள் கடந்த மே 3 ஆம் தேதி எழுதிய நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பல மாதங்களாக மாணவர்கள் தீவிரமாக படித்து, தங்களை தகுதிப்படுத்திக் கொண்டு தேர்வு எழுதிய பிறகு ரத்து செய்வது எந்தளவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பார்த்தாலே மிகுந்த வேதனையை தருகிறது. நீட் தேர்வுக்கான வினாத் தாள்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே கசியவிடப்பட்டு மாணவர்கள் அதை அடிப்படையாகக் கொண்டு தேர்வு எழுதியிருக்கிறார்கள். வினாத் தாள் கசிவு உறுதி செய்யப்பட்டதும் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டு, தற்போது 15 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் மூலமாக நாடு முழுவதும் நீட் தேர்வை நடத்துவதில் தேசிய தேர்வு முகமை படுதோல்வியடைந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்ட பிறகும் நீட் தேர்வை நடத்த வக்கற்ற அரசாக பா.ஜ.க. இருந்து வருகிறது.
எனவே, நாடு முழுவதும் ஒரே நீட் தேர்வு நடத்தாமல் மருத்துவ, பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையை அந்தந்த மாநில அரசுகளின் உரிமைகளுக்கே விட வேண்டுமென நீண்டகாலமாக தலைவர் ராகுல்காந்தி உட்பட அனைவரும் கோரிக்கை விடுத்து வந்தார்கள். அதே கோரிக்கையை இன்றைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களும் மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.
மத்திய பா.ஜ.க. அரசு, எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்காக சி.பி.ஐ. இயக்குநர் பிரவீன் சூட் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஓராண்டு பதவி நீட்டிப்பையும், நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே தேர்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்க மறுக்கிற மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக நாளை (15.05.2026) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர் திரு @SPK_TNCC
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகம் சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்து, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
@girishgoaINC@nivedithalva
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (12.5.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சட்டமன்றப் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களை, சட்டப்பேரவை தலைவர் இருக்கையில்,
1/2