மாடு கூட இழ���க்கத்தயங்கும் செக்கினை மண் விடுதலைக்காக இழுத்த பெருமகன்..!
இந்த நாட்டின் மானம் கப்பலேறிவிடக்கூடாது என்பதற்காக கப்பலோட்டிய பெருந்தமிழன்..!
இந்தியாவில் முதல் தொழிற்சங்கம் அமைக்கப்படுவதற்கு முன்பே தொழிலாளர்களுக்குப் போராடி உரிமைப்பெற்று தந்த தொழிற்சங்கவாதி..!
மண் விடுதலைக்காக மக்களிடம் முழங்கிய ஆகச்சிறந்த சொற்பொழிவாளர்..!
பன்மொழிப் புலமைப்பெற்ற பேரறிஞர், திருக்குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்..!
கவிநயம் மிகுந்த தமிழ்செய்யுள் இயற்றும் ஆற்றல் பெற்ற தமிழ் இலக்கிய - இலக்கண வித்தகர்..!
தமிழ் ஓலைச்சுவடிகள் பலவற்றை அழியாமல் காத்த பெரும்புலவர்!
தமிழ் தேசம் என பொருள்படும் தமிழ் நேசன் இதழ் நடத்திய பத���திரிகையாளர்..!
ஏழை மக்களுக்கு இலவசமாக வாதாடிய நேர்மைமிகு வழக்கறிஞர்..!
தற்சார்பு பொருளாதாரம் போற்றிய புரட்சியாளர்..!
6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணைப்பெற்று கொடுஞ்சிறை கண்ட விடுதலை வீரர்..!
வணிகர், கட்டுரையாளர், நூலாசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், பதிப்பாளர், தத்துவவாதி என்று பன்முக ஆற்றல் பெற்ற நம்முடைய பெரும்பாட்டன் வ.உ.சிதம்பரனார் ��வர்கள் தாயக விடுதலைக்காக தம் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து, கடைசி காலத்தில் ஊர் ஊராய் சென்று மண்ணெண்ணெய் விற்கும் வறிய நிலையில் வாடினார் என்பதுதான் வரலாற்றுப்பெருந்துயரம்!
தாய் நிலத்தில் ஒரு பிடி மண்ணையும் அந்நியர் கொள்ளை கொண்டு போகக்கூடாது என்று செக்கிழுத்து, சிறைபட்டு, சொத்திழந்த பெருந்தமிழனின் ஈகப்பெருவாழ்வைப் போற்றுகின்ற இந்நாளில், நம்முடைய வீரமிகு பாட்டனார் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
அறிவுக் கருவறையாகத் திகழும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்..!
ஆசு என்றால் குற்றம்; இரியர் என்றால் அகற்றுபவர். ஆசு + இரியர் = ஆசிரியர் என்றால் குற்றங்களைக் களைபவர் என்று பொருள்.
நாம் படிக்கும் பாடங்களில் மட்டுமல்ல; நம் எண்ணங்களில், சொற்களில், செயல்களில் உண்டாகும் குற்றங்களைக் களைந்து நம் வாழ்வை நேர்வழிப் படுத்தும் உன்னதப் பணிபுரியும் உயர்ந்த உள்ளங்கள்தான் ஆசிரியப்பெருமக்கள்!
ஒரு தாய் தன் பிள்ளையைப் பத்து மாதங்கள்தான் கருவறையில் சுமக்கிறாள். ஆசிரியப்பெருமக்கள் அறிவுக்கருவறையில் பல ஆண்டுகள் சுமக்கிறார்கள். தாய் தன் குழந்தைக்கு இந்த உலகைக் காட்டுகிறார். ஆசிரியப்பெருமக்கள்தான் அந்தக் குழந்தையை இந்த உலகிற்கே காண்பிக்கிறார்கள்.
அறிவு விழியால் அனைத்தையும் தரிசிக்க கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள்தான் உலகம் இயங்குவதற்கான அச்சாணிகளாக அமைகிறார்கள்.
அறிவை விரிவாக்கி என்னை வளர்த்தெடுத்த என் ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் நன்றியோடும், மதிப்போடும் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நான் நினைத்து நெகிழ்கிறேன்!
மாணவர்களின் அறிவையும், ஆற்றலையும் வளர்த்து அவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் ஒவ்வொரு ஆசிரியருமே நல்லாசிரியர்தான். அந்த வகையில் நம் தேசத்தின் வருங்காலமான இளைய சமூகத்தை உருவாக்கித் தரும் அறிவுக் கருவறையாகத் திகழும் ஆசிரியப் பெருமக்களை ஆசிரியர் நாளில் வணங்கி மகிழ்கிறேன்!
ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
நாட்டின் விடுதலைக்கு சுதேசி உணர்வையும், தமிழின் மேம்பாட்டிற்கு இலக்கண–இலக்கிய நூல்களைப் பதிப்பித்தலையும் தனது வாழ்வின் பணியாகக் கொண்டு, தமிழுக்காகவும் நாட்டுக்காகவும் தன்னை அர்ப்பணித்த மாபெரும் வழக்கறிஞரும், செக்கிழுத்தச் செம்மலுமான ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளில், அவரது தியாகத்தையும் தொண்டையும் போற்றிப் பெருமையுடன் நினைவுகூர���வோம்.
வாழ்க வ.உ.சி. புகழ்!
தெளிவான எதிர்காலத் திட்டமிடலுடன் களமிறங்கிய நன்கு படித்த இளைஞர்களை கைவிட்டு, ஒட்டுமொத்தமாக குற்றப் பின்னணி கொண்ட நபர்களாக பார்த்து பா��்த்து சட்டமன்றத்திற்கு அனுப்பிய நம் மக்களை நினைத்து கண்ணீர்தான் வருகிறது.
எனக்குத் தமிழ் பிடிக்கும் என ரகசியமாகச் சொல்லக் கூடாது. தமிழ் தெரியாது என்று தமிழ்நாட்டி��் சொல்வது போன்ற அவமானம் வேறெதுவும் இல்லை - ஐகோர்ட் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்
#TamilLanguage | #JusticeAnandVenkatesh
3 மாதங்களில் முப்பத்தி மூன்றாயிரம் கோடி கடன் வாங்கி மக்கள் வரிப்பணத்தில் மஞ்ச குளித்த #தற்குறி_தவெக ஆட்சி
100 நாள் ஆட்சி
தமிழ்நாடு நாசமா போச்சி
இதுல பெரும மயிறு வேற
#தற்குறி_தவெக_அரசு
தகுதி இருந்தும் தான் விரும்பிய கல்வியைக் கற்க முடியவில்லையே என்ற துயர்மிகுச்சூழலில், தன்னைப்போன்ற கையறு நிலை வேறு எந்தப் பிள்ளைக்கும் வந்து விடக்கூடாது என்று அன்புத்தங்கை அனிதா தன் இன்னுயிரை ��ந்து இனத்தின் வலியை உலகிற்கு உணர்த்திய நாள்!
'தீக்குச்சி இல்லாமல் தீபங்கள் இல்லைதான்!’ ஆனால் ஒவ்வொரு முறையும் யார் தீக்குச்சியாக்கப்படுகிறார்கள்? என்பதுதான் கேள்வி; அப்படி ஒரு தீக்குச்சியாகி கல்வி உரிமை மீட்புக்கான புரட்சித்தீயைத் தமிழ் மண்ணில் பற்ற வைத்த மானமறத்தி அன்புத்தங்கை அனிதா!
அந்த எளிய மகள் ஏற்படுத்திய தாக்கம் தமிழ்நாட்டில் பேரதிர்வை உண்டாக்கிய போதிலும், அவரை���்தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட தமிழ்ப்பிள்ளைகள் தங்கள் இன்னுயிரை இழந்துவிட்ட போதிலும், இன்றுவரை நீட் தேர்வினை இம்மண்ணை விட்டு அகற்றமுடியவில்லை என்பதுதான் சமகால வரலாற்று பெருங்கொடுமை!
ஆட்சிகள் மாறுகிறது. காட்சிகள் மாறுகிறது. அவலங்கள் என்றும் மாறுவதே இல்லை. மக்கள் துயரங்கள் மட்டும் தீருவதே இல்லை.
அன்புத்தங்கை அனிதாவின் ஈகத்தைப் போற்றுகின்ற இந்நாளில், அவருடைய உடன் பிறந்தா��ாகிய நாம் தொடர்ச்சியாகப் போராடி, அவர் கண்ட பெருங்கனவை நிறைவேற்றுகின்ற உறுதியை ஏற்போம்!
கல்வி உரிமைப்போராளி அன்புத்தங்கை அனிதா அவர்களுக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!