Hard work never fails nu evanchum vantha seruppalaaye adippen
Nov @chiyaan Olunga commercial panni box office la yachum ellaraiyum oda vituda intha cinema ulagam collection thaa pakurainga experimental la v director ah thiruppi anuppitu #chiyaan63#goatlife#nationalawards
சிறந்த நடிகர் - பிரதீப் ரங்கநாதன் (டிராகன், டியூட்)
நம்மிலிருந்து வந்த ஒருவர் பெறும் பெருவெற்றி நமக்கும் முன்னெழுந்து ஓடுவதற்குத் தேவையான தெம்பைக் கொடுக்கிறது.
பிரதீப் ரங்கநாதனின் திரைப் பயணம் அப்படியானது.
ஐ.சி.யூ-வில் போராடிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவுக்குத் தன் தொடர் வெற்றிகள் மூலம் பிரதீப் புகட்டியது ஆயிரம் டன் ஆக்ஸிஜன்.
கனவுத் தொழிற்சாலை அழகுக்கென வகுத்துவைத்திருக்கும் கட்டுப்பெட்டித்தனங்களையெல்லாம் உடைத்து இவர் அடைந்திருக்கும் உயரம் பல்லாயிரம் சாமானியர்களுக்கான வெளிச்சம்.
தனக்காக மட்டுமே படைக்கப்பட்டது இந்த உலகம் என நார்சிச இழைகள் ஓடும் முன்பாதி டிராகனையும், தன் தவறுகளுக்காகத் தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் பின்பாதி ராகவனையும் வசனங்கள் இல்லாமல் முக பாவனைகளிலேயே வேறுபடுத்திக்காட்ட முடிந்தது இவரால்!
‘இழந்த எல்லாவற்றையும் மீட்டெடுக்கலாம், அப்பாவின் நம்பிக்கையைத் தவிர’ என்பதை உணர்ந்து தனபாலன் மடியில் ராகவன் சரணடையும் இறுதிக் காட்சி, பிரதீப் அந்தக் கதாபாத்திர வரைவுக்கு எழுதிய திருத்தமான நிறைவுரை.
ராகவனுக்கு அப்படியே நேர்மாறாய் தனக்குப் பிடித்தவளுக்காக எல்லாவற்றையும் உதறித்தள்ளும் கதாபாத்திரம் அகன் சிதம்பரம்.
'தாலி மற்றுமொரு நகையே’ எனவும், 'பெற்றெடுக்காவிட்டாலும் மனைவியின் குழந்தை தன் பிள்ளையே’ எனவும் வெகுஜனப் போக்குக்கு எதிரான அத்தனை அம்சங்களும் இருந்தன ‘டியூட்’ படத்தில்.
அதற்கு பிரதீப் சொன்ன ஒற்றை ‘யெஸ்’ இனிவரும் தமிழ் சினிமாவுக்கான புதிய பாதை.
இதுநாள்வரை வில்லன்களை துவம்சம் செய்யும் இன்டர்வெல் ‘ஆண்மை’ தனத்துக்காக ஆரவாரித்த அதே கூட்டம், காதலிக்காகத் தன் சுயத்தை தியாகம் செய்துவிட்டு நடைபோட்ட அகனுக்கும் ஆர்ப்பரித்ததே அதற்கு சாட்சி.
தனக்கென ‘பி.ஆர் ஜானர்’ என புதுப் பிரிவையே உருவாக்கி, அதில் வெற்றிகள் குவிக்கும் பிரதீப் நாளைய சினிமாவின் விடிவெள்ளி.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #PradeepRanganathan | #Dragon | #Dude | #BestActor
Kadaisiya nalla colourfull ah frame by frame njoy panna movie na athu rajini murugan thaa atha follow panni neriaya village movie antha colour tone use pannainga