காரத்தொழுவு கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகள் , முக்கிய தகவல்கள் என அனைத்தும் இந்த தளத்தில் பதிவு செய்யப்படும்.
@TANGEDCO_Offcl | கிணற்றில் போட்ட கல் கூட ஒருநாள் வெளியே எடுத்து விடலாம். ஆனால் , அரசு அதிகாரிகளிடம் முன்வைக்கும் புகார் மனுவை என்றும் திரும்ப எடுக்க முடியாது. இதுதான் தற்போதைய தவெக அரசின் நிலைப்பாடு!
தயவு செய்து பொதுமக்கள் பிரச்னையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க முன்வர கோரிக்கை!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு கிராமத்தில் நாள் ஒன்றுக்கு அதிகளவில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதுசம்பந்தமாக துறை சார்ந்த அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் சென்றால் அலட்சியம் காட்டுகின்றனர். பொதுமக்கள் மாணவர்கள் என பலர் பாதிக்கப்படுகின்றனர்.
@TVKVijayHQ
@TANGEDCO_Offcl | பொதுமக்கள் நலனிற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். அரசு அதிகாரிகள், அரசு பணியாளர்கள் மதிப்பளிக்க வேண்டும். ஆனால் அலட்சியம் காட்டுவது ஏற்புடையதாக இல்லை. நாள் ஒன்றுக்கு சுமார் 15 முறை மிட் வெட்டு ஏற்படுவதை சரிசெய்ய தமிழ்நாடு மின்வாரியத்துறை நடவடிக்கை எடுக்குமா ?
@TANGEDCO_Offcl | மின்சாதன பொருட்கள் பழுதடைவதால் பொதுமக்கள் தவிப்பு!
மின்வாரிய அதிகாரிகளிடம் தெடர்பு கொண்டு விபரத்தை கேட்டால் அலட்சியமாக பதில் கூறுவதால் பொதுமக்கள் ஏமாற்றம்.!
அலட்சியத்திலும் அலட்சியம்.!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு கிராமத்தில் அதிகாலை முதல் தொடர் மின் வெட்டு ஏற்படுவதால் பள்ளி - கல்லூரி செல்லும் குழந்தைகள் , வேலைக்கு செல்பவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
@TANGEDCO_Offcl
21.08.2026 வெள்ளிக்கிழமை இன்று காலை முதல் மின்தடையால் சிறு குறு வியாபாரிகள் பலர் அவதிக்குள்ளாகினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாதாந்திர பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது முன் அறிவிப்பு இல்லாததால் பொதுமக்கள் அவதி!
@TANGEDCO_Offcl@TVKVijayHQ
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முன் அறிவிப்பு இல்லாத மின்தடை மாணவர்கள், பொதுமக்கள் அவதி!
@TANGEDCO_Offcl@TVKVijayHQ
இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார். அவருக்கு வருது (84) தமிழ் சினிமாவில் பல புரட்சிகளை ஏற்படுத்தியவர். தமிழ் சினிமாவில் கிராமத்து மண் வாசனையை ஏற்படுத்திய நல்ல மனிதர். அவருடைய மறைவுக்கு காரத்தொழுவு கிராமம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயில் படங்குனி திருவிழாவை முன்னிட்டு நாளை 18.05.2026 திங்கட்கிழமை இரவு திருக்கோயில் நடை அடைத்து நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிலையில், அம்மனுக்கு அபிஷேகம் செய்ய திருமூர்த்திமலையிலிருந்து பக்தர்கள் புனித தீர்த்தம் எடுத்து வந்தனர்.