பாலியல் குற்றவாளியோடு மேடையை பகிர்ந்து ,குடும்ப நண்பர் என்று குதூகலம் செய்த அமைச்சர்களை விசாரிக்குமா சென்னை காவல்துறை ?
வீரமணி மீது வழக்கு போடப்பட்டது அக்டோபர் 2025
தவெக அமைச்சர்கள் மேடையில் உட்கார்ந்து குதூகலம் செய்தது ஜூலை 2026
தவெக அமைச்சர்களும் வீரமணியிடம் பணம் வாங்கினார்களா ?
இதுவரை வீரமணி வழக்கைப் பற்றி பக்காமாஸ் முதல்வர் பேசாதது ஏன் ?
#Tvkfails
நீ் படிச்ச நல்ல இடத்துக்கு வா.. ஆனா ஒண்ணு.,
உனக்கு அடுத்தவன் பண்ண எதையும் நீ அந்த இடத்துக்கு வந்து எவனுக்கும் பண்ணாத..ன்னு அசுரன் படத்தில climaxல ஒரு டயலாக் வரும்…
அது யாருக்கு பொருந்துமோ இல்லயோ வன்னியரசுக்கு பொருந்துகிறது…
திமுக ஆட்சியில் பட்டியலின மாணவர்கள் abroad போய் படிக்க உதவி செய்ய பண உதவி அளிக்கப்பட்டது.. அப்படி அந்த திட்டத்தில மலேசியா போன பையன் தான் பாரதிதாசன்..
நரம்பியல் மற்றும் மூளை சம்மந்தமான ஆராய்ச்சி படிப்புக்கு போன மாணவனுக்கு தவெக ஆட்சி வந்ததுல இருந்து எந்த பணமும் அரசின் சார்பா போகல..
இத அந்த பையன் வீடியோவா போட்டதும்.,
விசிக வன்னியரசா இருந்த மனுசன் வசீகரா வன்னியரசா மாறி அந்த பையன் bill settle பண்ணல.,யார்கிட்டயும் கேக்கல.யாரோ influence பண்ணி பேச வச்சுட்டாங்கறு சட்டசபையில சொன்னாப்ள
மறுநாளே அந்த பையன்
bill copy mail பண்ணதும்.,அதிகாரிகளுக்கு அனுப்புனதும்., வன்னியரசுக்கே அனுப்புனதும்னு screenshot share பண்ணதும் பச்ச பொய் சொன்னது ஊருக்கே தெரிஞ்சுட்டு
சும்மா இருக்குமா ஈகோ..!!
நான் அமைச்சர்.,நீ என்னையவே கேள்வி கேப்பியானு உள்ளூர ஒரு பகுரல் கேட்ருக்கும் போல..
இது நாள் வரை ஒரு ரூபா கூட அந்த பையனுக்கு பீஸ் போகல..
இப்ப திரும்ப அந்த பையன் எனக்கு fees கட்டல.. என்ன collegeஅ விட்டு expel பண்ணுவாங்க போலனு வீடியோ போட்ருக்கான்
அதிகாரகத்துக்கு வருகின்ற பட்டியலினமாவே இருந்தாலும் சொந்த சாதிகாரனுக்கே உதவி எனினும்....இல்லனு வச்சு கருவறுக்குறதுக்கு பேர் தான் பார்ப்பனிய புத்தி..
அசுரன் படத்தில வர டயலாக்கே வன்னியரசு மாதிரி ஆட்களுக்கு தான்
இப்ப அந்த வீடியோவ பாத்த திமுக தலைவர்.,
fees கட்ட முடியாதுனா நேராவே சொல்லிடுங்க..
திமுகவும் நானுமே கட்டி படிக்க வைக்கிறோம்னு அறிக்கை விட்ருக்கார்
படி.. படி..படிக்க மட்டும் செய்..!மிச்ச எல்லாம் நான் பாத்துக்கிறேன்னு தமிழ் புதல்வன்,புதல்வி, நான் முதல்வன்னு பாத்து பாத்து திட்டம் தீட்டி படிக்க வச்ச மனுசன் இத பாத்து கடந்தா போயிட போறாரு
திமுக தலைவர் நான் கட்டி படிக்க வைக்கிறேன்னு சொன்னவுடன் அலறி அடிச்சி நாங்க 2 நாளில் அனுப்பிடுறோம்னு பேட்டி கொடுக்கிறாதுங்க...
இப்ப எப்படி பில் வந்ததா?
அவர் கேட்டது உதவி தொகை அல்ல ...
அவரது கல்விக்கான அரசு ஒப்பு கொண்டு அரசணை வெளிட்ட உரிமை தொகை
பாரதிதாசா..!!
தலைவர் இருக்கிறார்…
நல்லதே நடக்கும்.
Not Arrogance . Not Attitude 🤞
Just a man who believes his people and fans deserve respect wherever they go 😇
That’s THALA AJITH For You All ❤️
#Ajithkumar
தல கேட்பது ஒன்றே ஒன்றுதான் — பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள், அனைவரையும் மதியுங்கள். ❤️👏
ஏனென்றால் ரசிகர்களின் ஒவ்வொரு செயலிலும் தல மட்டுமல்ல… நம் நாட்டின் பெயரும் பிரதிபலிக்கிறது. 🇮🇳
ரசிகராக இருப்பதில் பெருமை மட்டும் போதாது… பொறுப்பு, ஒழுக்கம், மரியாதை — இவைதான் முதலில். ❤️🙏
தல-யை பிரதிபலிக்கும் ரசிகர்கள்… செயலிலும் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே அவரது நீண்ட நாள் ஆசை! 🫡🔥
#AjithKumar #Gladiators #DareDevil #AjithKumarRacing
THALA #AjithKumar requesting his fans 🙏🙏
"Excuse me, I’m trying to do something very important. This is a restricted area, Orama nilunga. A lot of cars will be coming through here. Please don’t hurt yourself"
#Daredevil#Gladiators
பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு?
கொலை, கொள்ளை, போதை ஆட்டம் எனத் தமிழ்நாடு தொடர்ந்து சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. வீட்டை விட்டு வெளியே சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை இருந்தது; இப்போது வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பு இல்லாத சூழல் வந்துவிட்டது.
குற்றங்களைத் தடுக்க வேண்டிய அரசோ, "எனக்கென்ன" என்று வெட்டிக் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. பொய் புரட்டு பேசாமல் தமிழ்நாட்டு மக்களைக் காக்கப் பாருங்கள் முதலமைச்சர் அவர்களே!
கந்து வட்டி கும்பலால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி பிரதீப்ராஜ் என்ற இளைஞர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில்,
திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தகுந்த பாதுகாப்பு வழங்காமல், கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாகத் தன்னை அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்வேன் என்று மிரட்டியதாகவும் இளைஞர் பிரதீப்ராஜ் செய்தியாளர்களிடம் பேட்டியளித்திருந்த நிலையில், அதற்கு மறுநாளே அடையாளம் தெரியாத கும்பலால் பிரதீப்ராஜ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவத்திற்குக் காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் @CMOTamilNadu வெட்கி தலைகுனிய வேண்டும்.
தமிழகத்தில் நடக்கும் கொலைகளுக்குத் தனிப்பட்ட விரோதங்கள் தான் காரணமே தவிர, அதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது என்ற ரீதியில் சட்டப்பேரவையில் பேசிய @CMOTamilNadu , இளைஞர் பிரதீப்ராஜ் படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவத்திற்கும் என்ன பதில் சொல்லப் போகிறார்?
தலைநகர் சென்னையில் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்ட இளைஞர் மறுநாளே படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்து போய் உள்ளது என்பதற்கு நேரடி சான்று.
#பொய்க்கால்_குதிரை_அரசு
உயிருக்கு எதாவது ஆபத்துனா காவல் நிலையம் போனா விஜய் காப்பாற்றுவார்.காரணம் அவர் ஆட்சியில் நாதஸ் எல்லாம் திருந்திட்டாங்கனு ரீல்ஸ் எல்லாம் சொல்லுச்சே!
அப்படினு நம்பி போயிருப்பார் என நினைக்கிறேன்
நேற்று பேட்டி கொடுத்தவர் இன்று உயிரோடு இல்லை.
இன்ஸ்பெக்டர் கொலை மிரட்டல் விடுப்பதாக சொன்னவர்
மர்ம நபர்களால் நடு ரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்
'நீ CM கிட்ட வேணாலும் போய் சொல்லு.." என்று காவல்துறை மிரட்டியதாக சொல்கிறார்
விஜய் ஒரு டம்மி CM என்று காவல்துறையே சொல்கிறதா ?
அம்பாசமுத்திரத்தில் திருமண மண்டப உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள மற்றுமொரு அதிர்ச்சிச் செய்தி வந்திருக்கிறது.
முந்தைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று மக்களிடம் வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்துவிட்டு, இன்று மக்களை உயிர் பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளியிருக்கிறார் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்.
முதலமைச்சருக்கு காவல்துறையை கையாளத் திறனில்லை என்றால், அதைத் திறம்பட கையாளக்கூடிய வேறு யாரிடமாவது ஒப்படைத்துவிட்டுப் போகட்டும். மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம்!
உயிருக்கு ஆபத்து என காவல்நிலையத்தில் புகார் கொடுத்த மறுநாளே இளைஞர் வெட்டிக் கொலை: இது தான் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் அழகா?
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பிரதீப் ராஜ் என்ற துறைமுக ஒப்பந்த பணியாளர் அவரது வீட்டிற்கு அருகிலேயே கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். சென்னையில் இத்தகைய கொலைகள் அதிகரித்து வருவது அச்சமும், கவலையும் அளிக்கிறது. கொல்லப்ப்பட்ட பிரதீப் ராஜின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதீப் இராஜின் பெற்றோர் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கியது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பகை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் தரப்பிலிருந்து தமக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக காவல் துறையில் பிரதீப் இராஜ் புகார் செய்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன் இது தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்திலும், துணை ஆணையரிடமும் அவர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினர், பிரதீப் இராஜையே பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து நேற்று முன்நாள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் தமது உயிருக்கு அச்சுறுத்தல் விடப்படுவது குறித்து பிரதீப் இராஜ் மீண்டும் புகார் செய்துள்ளார். அப்போதும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர், தமக்கு கொலை மிரட்ட்ல் விடுப்பதாக ஊடகங்களிடம் பிரதீப் இராஜ் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு அடுத்த நாளான நேற்றிரவு பிரதீப் இராஜ் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
பிரதீப் இராஜ் அளித்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்களுக்கு ஆதரவாக பிரதீப் இராஜையே காவல் ஆய்வாளர் மிரட்டியது தான் எதிரிகளுக்கு துணிச்சலைக் கொடுத்துள்ளது. உயிருக்கு பாதுகாப்பு கேட்பவர்களுக்கு ஆதரவாக இல்லாமல், கொலை மிரட்டல் விடுப்பவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது தான் காவல்துறையின் கொள்கையா? இந்த விஷயத்தில் கடமையை செய்யத் தவறிய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன் ஆளும் தவெக நிர்வாகி உள்ளிட்ட இருவர் ஒரே நாளில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அந்த பதட்டம் தணியும் முன்பே அடுத்தக் கொலை நிகழ்ந்துள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள், இது தான் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் அழகா? என வினா எழுப்புகின்றனர். சென்னையில் இனியும் இத்தகைய கொலைகள் நடக்காத வகையில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu
சட்டசபையில் வீரவசனம் பேசுவது மட்டும் போதாது திரு. ஜோசப் விஜய் அவர்களே; வீதியில் நடக்கும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்துங்கள்!
தலைநகர் சென்னையில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து, கந்துவட்டி மாஃபியாக்களின் கூடாரமாகத் தமிழகம் மாறிவிட்டதற்குத் திருவொற்றியூரில் நிகழ்ந்த இளைஞர் பிரதீப்பின் கொடூரப் படுகொலையே அப்பட்டமான சாட்சியாக இருக்கிறது. "என்னை ரவுடிகள் கொல்லப் பார்க்கிறார்கள், காப்பாற்றுங்கள்" என்று காவல் நிலையத்தின் வாசலிலேயே நின்று ஊடகங்களிடம் கதறிய பிரதீப், அடுத்த நாளே நடுரோட்டில் விரட்டி விரட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கந்துவட்டிக் கொடுமையால் தவித்து, உயிருக்கு அஞ்சிக் காவல் நிலையத்திற்குப் பாதுகாப்பு தேடிச் சென்ற இளைஞரைக் காப்பாற்ற முடியாத இந்த ஆட்சிக்கு எதற்கு ஒரு காவல்துறை? உதவி கேட்டுச் சென்றவரைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, காவல் ஆய்வாளரே கந்துவட்டிக் கும்பலுக்கு ஆதரவாக நின்று மிரட்டியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது.
ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே சமூக விரோதிகளிடம் அமைதியைத் தாரைவார்த்த திரு. @TVKVijayHQ அவர்களின் அரசே இந்தப் படுகொலைக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். நடுரோட்டில் கதறும் அந்த ஏழைத் தாய்க்கு நீதி கிடைக்க, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதுடன், ரவுடிகளுக்குத் துணைபோன காவல் ஆய்வாளர் மீதும் பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், சட்டசபையில் வீரவசனம் பேசுவதை விடுத்து, வீதியில் நடக்கும் கொலைவெறியாட்டங்களைத் தடுத்து மக்களின் உயிரைக் காப்பதில்தான் ஓர் ஆட்சியாளரின் உண்மையான நிர்வாகத் திறமை அடங்கியிருக்கிறது என்பதை முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் உணர வேண்டும்.
தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
‘CM-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?
காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா,, ED என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று Divert செய்யும் முதலமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.
இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்.