அரசு பள்ளிக்கூடங்களில் முதல்வர் விஜய் பேசிய பேச்சு நேரலையில் மாணவர்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டதை பார்த்து அரசு பள்ளிக்கூடங்களில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும் அத்தனை பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்
எந்தவிதமான குறையும் சொல்ல முடியாத ஆட்சி என மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்!
நாளையிலிருந்து தினம்தோறும் ஒரு மணி நேரம் முதல்வர் விஜய் நடித்த திரைப்படங்களை ஒளிபரப்ப வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை வைப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிள்ளையார் பாளையம் பகுதியில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக தனியார் பள்ளி விடுமுறை அறிவித்துள்ளது
மாணவ மாணவிகள் பள்ளிக்கூடம் வந்ததற்கு பிறகும் மின்சாரம் வராமல் இருந்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது தொலைதூரங்களிலிருந்து வந்த மாணவர்கள் இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்
குழந்தைகள் நல மருத்துவமனையில் இப்படி FDFS தியேட்டரில் கூச்சல் போடுவது போல கத்துவது என்ன நாகரீகம்?
மருத்துவமனைக்கே இந்த கதியா? இதை எப்படி விஜய் அனுமதிக்கிறார்?
இனி இதுபோன்ற நிகழ்வு நடக்கவே கூடாது. அடிப்படை அறிவை பிரயோகிக்க வேண்டும்.
ராஜினாமா செய்ய சொல்லி தனக்கு மிரட்டல் விடுப்பதாக தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் மீது கோவில்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி புகார்
இதே போன்ற புகாரை தான் திமுகவினர் மீது தமிழக வெற்றி கழகத்தினர் முன்வைத்திருந்தனர். இதற்காக திமுகவினர் கைது செய்யப்பட்டது போல தமிழக வெற்றிக் கழகத்தினர் கைது செய்யப்படுவார்களா எனவும் எம் எல் ஏ கேள்வி
தற்போது வரை சாதி உள்ளது, அது தொடர்ந்து வளர பிரிட்டிஷ்காரர்கள்தான் காரணம்
சென்சஸ் மூலம் சாதியை கேட்டு இவர்கள் இந்த சாதி என தெரியப்படுத்தி பிரிட்டிஷார் பிரிவினையை ஏற்படுத்தினர்
- ஆளுநர் அர்லேகர்
வர்ணாசிரமங்களை உருவாக்கியது ஆங்கிலேயர்கள் தான் போல!
மனு சாஸ்திரம் உள்ளிட்டவற்றையும் எழுதியவர்களும் அவர்கள் தானோ?🤦🏻♂️🤦🏻♂️
ஜூன் மாதம் வழங்க வேண்டிய தண்ணீரில் 6.27 டிஎம்சி காவிரி நீரை விடுவிக்காமல் ஆரம்பத்திலேயே காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகா அரசு அடாவடியில் இறங்கி உள்ளது
பாசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களில் போதுமான தண்ணீர் இல்லாத நிலையிலும் தமிழ்நாடு விவசாயிகள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்
குடிநீர் பற்றாக்குறை அபாயம் இருந்தும் கூட பொதுமக்கள் மகிழ்ச்சி
Breaking
அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்குவதை ரத்து செய்ய முற்பட்ட அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிரடி உத்தரவை அமெரிக்க உச்சநீதிமன்றம் செல்லாது என அறிவித்து அதிரடியாக ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவில் பிறக்கும் கிட்டத்தட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் அந்நாட்டின் குடியுரிமை தானாகவே கிடைக்கும் என்ற 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப் பாதுகாப்பை உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உறுதி செய்துள்ளது.
திமுக சின்னத்துல ஜெயிச்ச 2 எம் எல் ஏ ராஜினாமா பண்ணணும். இதே திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு திருச்சியில் ஜெயித்த தன் மகன் மட்டும் MP பதவியை ராஜினாமா செய்ய மாட்டாராம். இதுக்கு பேர் என்ன.
போங்காட்டம். பெத்த பாசம். வாரிசு அரசியல். வெளங்கிடும்.
எம் எல் ஏ செந்தில் செல்வனை திமுக தங்கள் பக்கம் இழுத்துள்ளது இது குதிரை பேரம் இல்லையா என வைகோ கேள்வி
ஆனால் செந்தில் செல்வன் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இது எப்படி குதிரை பேரம் ஆகும்?
உயிர் இழக்கும் பிரபலங்களின் குடும்பத்தாரிடமிருந்து ஊடகங்கள் யாரும் வர வேண்டாம் என அறிக்கை வரவேண்டும்
அப்படி வந்ததற்குப் பிறகும் யாராவது நேரலை செய்கிறேன் பேட்டி எடுக்கிறேன் என்று அவர்கள் வீட்டு வாசலிலோ அல்லது சுடுகாட்டு வாசலிலோ இருந்தார்கள் என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
திரை பிரபலங்கள் மறையும் பொழுது ஏற்படும் வருத்தத்தை விட ஊடகங்கள் அதை வைத்து காசு பார்க்கும் வேலையை செய்யும் கேவலமான நிலையை நினைக்கும்பொழுது தான் கோபம் கோபமாய் வருகிறது
நானும் அதே துறையில் தான் இருக்கிறேன் ஆனால் ஒரு துளி கூட எனக்கு இதில் விருப்பம் கிடையாது
மறைந்த பாக்கியராஜின் மனைவி அழுதபடி வருகிறார் அதை நேரலை செய்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை ஆண்டுகளுக்கு அவர்களுக்கு இது ரணமான விஷயமாக இருக்கும் என்பதை இந்த ஊடகங்கள் ஏன் சிந்திக்க மறுக்கிறது
நடிகை ராதிகா தயவு செய்து கொஞ்சம் பிரைவசி கொடுங்கள் என கையெடுத்து கும்பிடுகிறார் பாக்யராஜ் வீட்டில் அழுதபடி ராதிகா என்ன சொன்னார் தெரியுமா என கேப்ஷன் போட்டு கேவலமான ஒரு வேலையை செய்கிறார்கள் இந்த ஊடகங்கள்!
களத்தில் இருக்கும் என் சக பத்திரிகையாளர் நண்பர்களிடம் பேசும் பொழுது பெரும்பாலானவர்களுக்கு இதில் விருப்பமில்லை ஆனாலும் கட்டாயத்தில் செய்கிறார்கள்.
செய்தி நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களோ அல்லது முதலாளிகளோ இதில் முடிவு எடுக்க வேண்டும்
அடித்து சொல்கிறேன் தார்மீகமாக எல்லாம் இவர்கள் திருந்தப் போவதில்லை தனி தனி உரிமை சட்ட பிரிவுகளை பயன்படுத்தி இதற்காக ஒரு சட்டம் ஒரு சட்டம் அல்லது அரசாணை உடனடியாக இயற்றப்பட வேண்டும்.
உயிர் இழக்கும் குடும்பத்தாரிடமிருந்து ஊடகங்கள் யாரும் வர வேண்டாம் என அறிக்கை வரவேண்டும் அப்படி வந்ததற்குப் பிறகும் யாராவது நேரலை செய்கிறேன் பேட்டி எடுக்கிறேன் என்று அவர்கள் வீட்டு வாசலிலோ அல்லது சுடுகாட்டு வாசலிலோ இருந்தார்கள் என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் நண்பர்கள் பணி புரிந்தவர்கள் என பிரபலங்கள் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்றால் ஊடகங்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று தாராளமாக தெரிவிக்கட்டும் இல்லையென்றால் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் வீடியோ வெளியிடட்டும்.
ஆனால் மக்களையும் இதில் குறை சொல்ல வேண்டி உள்ளது அவர்கள் பார்ப்பதால் தான் இவர்களும் காட்டுகிறார்கள் தமிழ்நாடு முழுக்க விவசாயிகள் போராடுகிறார்கள் நீட் தேர்வு பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது இதையெல்லாம் பற்றி வீடியோ போட்டாலும் செய்திகளாக எழுதினாலும் படிக்க அவர்களுக்கு ஆர்வம் இல்லை ஏனென்றால் மக்களுக்கு தேவைப்படுவது எமோஷனல் சென்சேஷன்!
Stop this nonsense right now!!!