சரியான தொடர்புகள் உங்கள் வாழ்க்கையை மாற்றும்!
ஒரு IT Professional என்ற முறையில், எனக்கு வரும் தெரிந்த பர்சனல் மின்னஞ்சல்களில் பெரும்பாலானவை வேலை தேடி வரும் கோரிக்கைகள் தான். இயல்பாகவே அணுகுவதற்கு இலகாக இருப்பவன் என்ற முறையில் புதிதாகப் படிப்பை முடித்தவர்கள் முதல், அனுபவம் வாய்ந்தவர்கள் வரை பலரும் தங்களின் Job Change அல்லது Career Guidance-க்காக என்னை அணுகுவார்கள்.
அப்படி ஒரு முறை, 2010-ல் ஒரு professional Training-ல் எனக்கு அறிமுகமான ஒருவர், அவ்வப்போது வாட்ஸ்அப்பில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை வாழ்த்துச் செய்திகளை அனுப்புவார். எங்களுக்கிடையே பெரிய தொடர்பு எதுவும் இல்லை. கடந்த மாதம், அவர் தனது Resume-ஐ அனுப்பி உதவி கேட்டார். 45 வயதைக் கடந்தவர், பள்ளி செல்லும் குழந்தைகள், வீட்டுக் கடன் EMI எனப் பல பொறுப்புகளுடன், ஒரு முன்னணி IT நிறுவனத்திலிருந்து திடீரெனப் Layoff செய்யப்பட்டிருந்தார். அவருடைய நிலையைப் புரிந்துகொண்டு உதவ வேண்டும் என நினைத்தேன்.
என் நல்ல Network மற்றும் சில நிறுவனங்களின் Advisory Board-ல் நான் இருப்பதாலும், ஒரு நிறுவனத்தில் Chief Technology Officer (CTO) பதவிக்கான தேவை இருப்பதை அறிந்தேன். அந்த வாய்ப்பு அவருக்கு மிகச் சரியாகப் பொருந்தியது. நான் அவரைப் பரிந்துரைத்தேன், அவரும் நேர்காணலில் வெற்றிபெற்று உயர்ந்த சம்பளத்துடன் வேலைக்கான Offer Letter-ஐ பெற்றார்.
இந்தக் கதையின் நீதி என்னவென்றால், வாழ்க்கையில் சரியான நபர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதன் அவசியம்.
அவர் சில நிமிடங்கள் மட்டுமே என்னுடன் பழகியிருந்தாலும், அவர் தொடர்ந்து வைத்திருந்த நட்பு, அவருக்கு ஒரு நல்ல வேலையைப் பெற்றுத் தந்தது. மேலும், அவருக்கு இருந்த திறமையும், சரியான நேரத்தில் கிடைத்த வாய்ப்பும் அவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
எனவே, எப்போதும் நல்லிணக்கத்தையும், நேர்மறை தொடர்புகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு திறந்த மனதுடன் பழகுங்கள். சரியான நேரத்தில், சரியான நபர்கள் உங்களுக்குக் கைகொடுப்பார்கள்.
There is no need to elevate ! That’s that reality, in terms of interval elevation for Thalaivar #Coolie is > #Jailer. Also the negative reviews are driven by specific tharkuri group, and everyone know that ! 😀
Guys, you have seen World of #KGF , #Kalki2898AD and #Salaar . And now time to immerse ourself into the WORLD of #Coolie with stylish, camera work, high octane and yet arresting screenplay 🔥💥🔥💥
🔥 50 YEARS. 1 MAN. 1 LEGEND.🔥
From bus conductor to the Superstar of Indian Cinema - Thalaivar is not just an actor, he’s my pride,my inspiration,my forever Superstar!
Thank you for 50 years of unforgettable magic. #50YearsOfRAJINISM#CoolieFDFS#CoolieUnleashed#GetRajinified