#BREAKING | கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையின் இருதவியல் துறையில் புதிய மைல் கல்.
இருதயவியல் துறை தொடங்கிய 6 மாதங்களில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு உள்ள 1000க்கும் அதிகமான நோயாளிகளுக்கு ஆஞ்சியோ, ஆஞ்சியோ பிளாஸ்டி, பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்��ட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதன் மதிப்பு மொத்தம் ₹40 கோடி. இவை ��ுழுவதுமாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமே செய்யப்பட்டுள்ளது.
#SunNews | #KalaignarHospital | @mkstalin | @Subramanian_ma
அண்ணன் திருமாவை பெருன்மையான திமுககாரர்களுக்கு அவர் கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிடித்திருக்க காரணம் ஒன்று தான், தமிழ்தேசிய அரசியலோடு திராவிட சிந்தனை அரசியலையும் அவர் தூக்கி பிடித்தார்..! அவர���ன் அங்கிருந்து தான் தொடங்கியது...
இனிய அகவை நாள் வாழ்த்துக்கள் ணா..! 💐💐💐
A Child with Birth Weight 900 gms (Normal weight is around 3 kgs) has been cared for 38 days in Government #Periyar District Headquarters Hospital, #Mayiladuthurai,
Please note that this is not Chennai. This is not even a Medical College. This is a District Headquarters Hospital in Mayiladuthurai
Mayiladuthurai is a town with Population of 85,632
But, it has a functioning Govt Hospital with facilities to care for a baby with birth weight 900 gms and then save the life. That is the Level of #Neonatal Care in #TamilNadu #Medical #Services
And the Treatment is totally Free.
Often we see comments in Social Media that Doctors don't work in GH. If doctors are not working, if nurses are not working, if pharmacists are not working how are lives saved daily
Think Think Think
#NeonatalCare
#Neonatalogy
#LBW
#LowBirthWeight
#TNMS
இதுதான் முதலமைச்சருடைய அறிக்கை. இதுல உள்ள ஒன்றியன்றத மத்தியனு மாத்திபோடறது நம்மூர் ஊடகபிராத்தல் நிறுவனங்களுடைய வழக்கம். அதை வெச்சு உருண்டுட்டு இருப்பது அடிமைகளுடைய நகைச்சுவை.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்
கலைஞர்தான் தமிழ்நாடு தமிழ்நாடுதான் கலைஞர்♥️🖤
அனைத்து சாதியினர் அர்ச்சகர்கள் திட்டத்தில் பயன்பெற்றவர்கள்
பேரலையில் திரு ரவிக்குமார் கொடுத்திருக்கும் நேர்காணல் இந்த விவாதத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
சப்கேடகரைசேசன் என்பது தலித��துகளில் சமூகப் பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய நிலையில் இருக்கும் சமூகங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய பங்கீட்டை உறு��ிசெய்வதற்கு என்று சொல்லப்பட்டாலும் அதில் இருக்கும் பிரச்சனைகள் என்று அவர் பட்டியலிடுபவை பின்வருமாறு.
சப்கேடகரைசேசன் என்பதே கிரிமிலேயர் தான்.
முன்னேறியவர் பின் தங்கியவர் என்று பொருளாதார ரீதியில் ஒபிசிகளை வகைப்படுத்துவது போல, சமூக நிலையை வைத்து பட்டியல் சாதியினரையும் வகைப்படுத்துகின்றனர். எனவே இதையும் கிரீமிலேயராகத்தான் பார்க்க வேண்டும் என்கிறார்.
நமக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்னும்போது சமூக நிலையை வைத்து அட்டவணைப்படுத்திப் பெற்றுக் கொள்கிறோம். முன்னேறிய வகுப்பார் இடப்பங்கீட்டில் பொருளாதாரத்தை அளவுகோலாகக் கொண்டுவருவதை எதிர்க்கிறோம். ஆனால் நமக்கடுத்து இருப்பவர் நலனை யோசிக்கச் சொன்னால் மட்டும் நமக்கு மேலிருப்பவன் சொல்லும் அதே சுயநல யோசனையையே முன்வைக்கிறோம் என்றால் நம் நேர்மையை என்னவென்று சொல்வது?
தலித் ஓர்மையை சிதைத்து நமக்குள�� சண்டையிட வைக்கிறார்கள்.
தலித் ஓர்மை என்பதை முக்கியமாக நினைக்கும் அரசியல் இயக்கம்; இடப்பங்கீட்டில் மக்கள் தொகைக்கு ஏற்ப உள் ஒதுக்கீட்டைப் பெறும் தலித் சமூகங்களை நோக்கி இவ்வளவு தீவிரமாக களமாடத் தேவை இருக்கிறதா? தலித் ஓர்மை என்னும் உன்னத நோக்கத்துக்காக நாம் செய்யத் தயாராக இல்லாத ஒன்றை அடுத்தவரிடம் எதிர்பார்ப்பதில் நியாயம் இருக்கிறதா? இட ஒதுக்கீடு என்பதே இந்து ஓர்மையை சிதைப்பதாக இதையேதானே வேறுவிதமாக இந்துத்வர்கள் பலகாலமாகச் சொல்���ி வருகின்றனர்?
மற்ற பிரச்சனைகளை எல்லாம் ஒழித்துவிட்டீர்களா? இதில் மட்டும் திடீர் கருணை ஏன்?
தலித்துகளின் ஒடுக்குமுறையை ஒழிக்காத, தலித்களின் இடப்பங்கீட்டு வரம்பை உயர்த்தக் குரல் கொடுக்காதவர்கள் இந்த உள் ஒதுக்கீட்டுக்கு மட்டும் குரல் கொடுக்கிறீர்களா? உங்களை நாங்கள் நம்ப வேண்டுமா? என்று கேள்வி எழுப்புகிறார்.
ஒரு அளவுக்குமேல் உள் ஒதுக்கீட்டின் சமூக நீதி நியாயத்தை எதிர்க்க முடியாதபோது, தலித்களே ஆட்சியதிகாரத்தில் அமர்ந்தபோதும் இந்தியச் சமூகத்தில் தீர்க்க முடியாமல் இருக்கும் பல்வேறு சாதிய ஒடுக்குமுறைப் பிரச்சனைகளை நோக்கி ��ரையாடலை நகர்த்திக்கொள்கிறார். இட ஒதுக்கீட்டு வரம்பை உயர்த்துவது குறித்து இந்த உள் ஒதுக்கீடு விவகாரத்துக்கு முன்பு வரை யார்தான் வலிமையாகக் குரல் கொடுத்து வந்திருக்கிறார்கள்? 69% இட ஒதுக்கீடுதான் நாட்டிலேயே இப்போதைக்கு அதிகபட்சமானது. அதனையும் உயர்த்தலாம் என்றால் நிச்சயம் செய்யலாம். ஆனால் அதையே எப்படி உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பதற்கான குற்றச்சாட்டாக வைக்கிறீர்கள்?
இந்த மொத்�� உரையாடலிலும் ஒரே ஆறுதலான விசயம் தமிழ்நாட்டில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு மக்கள் தொகைக்கேற்ப கொடுக்கப்பட்டிருக்கிறது எனவே நான் அதை எதிர்க்கவில்லை என்னும் குரல் தான்.
ஆனால் இதை எதிர்க்கவில்லையே தவிர, இந்தியா முழுமைக்கும் எந்த மாநிலத்திலும் உள் ஒதுக்கீடே கொடுக்க முடியாதபடி, அந்த உரிமையை ஒன்றிய பாராளுமன்றத்தில் மட்டுமே சட்டமாக்க முடியும் என்னும் விதத்தில் மாற்றவேண்டும் எ���்கிறார்.
அதுதான் அம்பேத்கரின் vision என்கிறார்.
ஒன்றியம் தலித் உரிமையைப் பாதுகாக்கும்; மாநிலங்கள் சிதறடிக்குமா? இதற்கென்ன உத்திரவாதம் என்ற வினாவுக்கு அவர் சொன்னதுதான் உள்ளதிலேயே அட்டகாசமான பதில்.
உள் ஒதுக்கீடு ��ொடுக்கும் உரிமை பாராளுமன்றத்தில் இருந்தால் அங்கே அதை சட்டமாக்க விடமாட்டோம். உள் ஒதுக்கீட்டை எதிர்க்கும் எண்ணிக்கை பலம் மிக்க சாதிகளுக்கு பாராளுமன்றத்தில் பலம் இருக்கும். அத்வாலே போன்றவர்களே அதை வரவிடாமல் செய்வார்கள். மோடியாகவே இருந்தாலும் மறுநாளே பின் வாங்க வைப்பார்கள் என்கிறார்.
பாராளுமன்றத்தில் உடைக்க முடியும் ஒரு சட்டம் ஏன் சட்டமன்றத்தில் உடைக்கப்பட முடியாது என்ற ���ேள்வி எழுகிறதா? அதில் தான் சூட்சுமம் இருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரிய தரவுகளோடு நியாயமான முறையில் வழங்கப்பட்டிருக்கும் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்களாக மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்படுவர்.
ஆனால் பாராளுமன்றத்தில் பாஜகவோ காங்கிரசோதான் ஆளுங்கட்சியாக இருக்கும். அவர்களுக்கு எண்ணிக்கை பலம் மிகுந்த சாதிகள��ப் பகைத்துக் கொண்டு உள் ஒதுக்கீடு என்னும் சமூக நீதியை உறுதி செய்யவேண்டிய அவசியமே கிடையாது.
மீறிச் செய்தாலும் அத்வாலே, பஸ்வான், மாயாவதி போன்றவர்களுக்கு தங்களது வாக்கரசியல் வெற்றிக்கான சாதி அரசியல் தான் பிரதானமே தவிர முற்போக்கு சமூக நீதி அரசியல் பற்றிக் கவலையும் இல்லை. அவர்கள் அப்படியொரு முற்போக்கு முகத்துக்க���க மெனக்கெடுவதும் இல்லை. ஆகவே வெளிப்படையாக பாராளுமன்றத்தில் உள் ஒதுக்கீட்டுச் சட்டத்தை உடைத்துவிடுவார்கள்.
நமக்குத் தேவையானதும் கிடைத்துவிடும். நம் மீது பழியும் வந்து சேராது. Simple.
ஆகமொத்தத்தில்,
எஸ் சி இட இதுக்கீட்டின் வரம்பை உயர்த்த வேண்டுமா? அந்த உரிமை மாநிலத்திடம் இருக்க வேண்டும். ஏனென்றால் மாநிலம் தான் அதைச் செய்யும்.
எஸ் சி உள் ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் உரிமை ஒன்றிய���்திடம் இருக்க வேண்டும். ஏனென்றால் ஒன்றியம் அதை எப்போதும் செய்யாது
என்று சுபம் போட்டுவிட்டார். 😁