மக்கள் நலனில் தொடர்ந்து பயணிக்கும் மாண்புமிகு அமைச்சர்! ❤️💛 16.10.2025 அன்று, மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 124-வது வட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பல்நோக்குக் கட்டிடத்தை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் அவர்கள் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் அமைச்சர் அவர்கள் மேற்கொண்ட இந்த மக்கள் சந்திப்பு, மக்கள் நலனில் அவர் கொண்டுள்ள அக்கறையை எடுத்துக்காட்டுகிறது. மக்களுடன் மக்களாக… மக்கள் நலனே முதன்மையாக!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
நேற்று (19.10.2026) திங்கட்கிழமை,
ஆயுத பூஜையை முன்னிட்டு தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள், தனது அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் சென்னை பசுமை வழிச்சாலையில் மழைநீர் தேங்கியிருப்பதைக் கவனித்தார்.!
இதையடுத்து, உடனடியாக அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாண்புமிகு அமைச்சர் அவர்கள், தேங்கியுள்ள மழைநீரை விரைந்து வெளியேற்றி, பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள் உடன் இருந்தார்.
மழை, வெள்ளத் தடுப்புப் பணிகளில் TVK அரசின் செயல்பாடுகள் குறித்து மக்களின் கருத்து!
மழை, வெள்ளப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மக்களிடம் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை அவர்களின் நேரடிக் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. பணிகள் தொடர்ச்சியாக நடைபெறுவதுடன், மக்களின் குறைகளுக்கும் விரைவான தீர்வு கிடைப்பதே முக்கியம்.
மக்களின் கருத்துகளே அரசின் செயல்பாட்டிற்கான உண்மையான அளவுகோல்!
#TVK #வெள்ளத்தடுப்பு #மக்களின்குரல்
மழைநீர் தேங்கிய பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, சீரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வரும் பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அவர்களின் களப்பணிகள் கவனிக்கத்தக்கவை!
மக்களின் அழைப்பை ஏற்று, புகார்களைப் பதிவு செய்து, அவற்றுக்குத் தீர்வு காண நேரடியாகச் செயல்படுவது மக்கள் நலனில் அக்கறை கொண்ட அணுகுமுறை. 👏
மக்களின் குறைகளைக் கேட்பதோடு மட்டுமல்லாமல், அவற்றைச் சரிசெய்யக் களத்தில் இறங்குவதும் முக்கியம்!
#Rajmohan #TVK #மக்கள்பணி #களப்பணி #சென்னைமழை #மழைநீர்வடிகால்
மக்களின் அழைப்பை நேரடியாக ஏற்று, அவர்களின் குறைகளைக் கவனமாகக் கேட்டு, உடனடியாகக் குறித்துக்கொண்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கும் அமைச்சருக்கு பாராட்டுகள்! 👏❤️
மக்களின் குரலுக்குச் செவிசாய்த்து, புகார்களைப் பதிவு செய்து, தீர்வு கிடைக்கும் வரை செயல்படுவதுதான் உண்மையான மக்கள் பணி!
#மக்களுக்கானஅரசு #மக்களின்குரல் #TVK #மக்கள்பணி #நல்லாட்சி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி,
இன்று (18.10.2026) ஞாயிற்றுக்கிழமை,
மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.N.ஆனந்த் MLA அவர்கள், தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை மற்றும் அவசரகாலப் பணிகளை விரைந்து மேற்கொள்ளும் வகையில், மூன்று அவசரகாலப் பயன்பாட்டு வாகனத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.!
இந்த வாகனத்தில் மாநகராட்சி ஊழியர்கள், தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி அலுவலக ஊழியர்கள் தொடர்ந்து பணியில் இருப்பார்கள். தியாகராய நகர் தொகுதியில் மழைநீர் தேங்குதல், மழைநீர் வடிகால் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட அவசரகாலப் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாகச் சென்று தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மழைக்காலப் பாதிப்புகளை விரைந்து சரிசெய்வதற்கும், மக்களின் குறைகளுக்கு உடனடித் தீர்வு காண்பதற்கும் இந்த அவசரகால வாகனம் பயனுள்ளதாக இருக்கும்.
இந்நிகழ்வில் மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள், சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு.K.அப்புனு (எ) வேல்முருகன் அவர்கள், பகுதி கழகச் செயலாளர் திரு.தர்மா, திரு.மகி, திரு.எழிலரசு, வட்டக் கழக செயலாளர் திரு.தரணி, திரு.நரேஷ், திரு.கார்த்தி, திரு.திலீப், திரு.ராஜேஷ் கண்ணா, திரு.சரவணா, திரு.தயாநிதி, திரு.காலி, திரு.முருகன், திரு.பாலாஜி, திரு.முத்தமிழ், சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பருவமழைக்கு முன்பே சரியான திட்டமிடல்… மழை பாதிப்புகளைக் குறைக்க முன்கூட்டியே நடவடிக்கை ! 💪
மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நீர்வளத் துறை அமைச்சர் @BussyAnand அவர்களின் முன்னேற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இன்று பலனளிக்கின்றன !
இதுதான் தொலைநோக்குப் பார்வை ! இதுதான் மக்கள் நல ஆட்சி ! 🔥
#CMJosephVijay
சென்னையில் பலத்த மழை பெய்தும், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், பல இடங்களில் மழைநீர் தேங்குவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து சீரையும் உறுதி செய்யும் வகையில் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
#சென்னைமழை #மழைநீர்வடிகால் #முன்னெச்சரிக்கைநடவடிக்கை #தமிழ்நாடு #TVK
போரூர் சந்திப்பில் தெற்கு வட்டார துணை ஆணையாளர் திரு. அஃதாப் ரசூல், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.
தற்போது போரூர் சந்திப்பில் மழைநீர் தேக்கம் ஏதுமின்றி, புதிதாகக் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் (SWD) மூலம் மழைநீர் சீராக வெளியேறி வருகிறது.
சென்னை முழுவதும் மழைநீர் தேங்காமல் விரைவாக வெளியேற வேண்டும் என்பதற்காக, கடந்த ஒரு மாதமாகவே 100 HP திறன் கொண்ட மோட்டார்கள் நிறுவப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதன் பலனாகவே தேங்கிய மழைநீரை விரைவாக வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன.
தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதிலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பாதுகாப்பதிலும் மாண்புமிகு முதல்வர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.
வெள்ளம் வந்த பிறகு அவசரமாகச் செயல்படுவதைவிட, வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்த நிர்வாகம். அதற்கேற்ப, தேவையான உபகரணங்களை முன்கூட்டியே நிறுவி, மழைநீர் வெளியேற்றும் பணிகளுக்கான தயார் நிலையை உறுதிப்படுத்தியிருப்பது முக்கியமான நடவடிக்கையாகும்.
சென்னை கனமழை - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேட்டி
➤ சென்னையில் 8 மணி நேரத்தில் 35.8 செ.மீ மழைப்பெய்துள்ளது
➤ தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை தங்க வைக்க சிறப்பு மையங்கள்
➤ மழைநீர் தேங்கினாலோ, உதவி தேவைப்பட்டாலோ '1913' எண்ணில் அழைக்கலாம்
➤ மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை சென்னையில் 35.8 செ.மீ மழை பெய்துள்ளது
➤ பழைய கட்டிடங்களில் தங்கியிருப்போரை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற நடவடிக்கை
சென்னை கனமழை - சென்னை மாநகராட்சி ஆணையருடன், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆய்வு