தமிழ்ச் சகோதரர்கள் ஒன்றாக, ஒற்றுமையாக வாங்க.. நம்மல்ள ஒருத்தர் மாபெரும் முயற்சி எடுத்து தமிழ்த்தேசிய நிகழ்வா இதை நடத்துறார்.. தவறாம கலந்துக் கொள்ளுங்க..
வாழ்க தமிழ் ❤️
மாவீரர் நாளில் ஒன்��ுகூடுவோம்!
இடம்: கே.கே.சாலை & பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பு, எம். ஜி. ஆர் நகர், சென்னை - 600078.
Google Map Location: https://t.co/21ltsc0Eg8
தேதி: கார்த்திகை-11 | 27-11-2026 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
தொடர்புக்கு : 9952003896
வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்!
உலகம் காடுகளால் சூழ்ந்து கிடந்த காலத்தில், எட்டு அடுக்கு மாடங்கள் கட்டி, உயர்ந்ததொரு நகர வாழ்வியலைப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழ்ந்த பேரினம் நம் தமிழினம்.
"இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய"
“தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்
செருவேட்டுப் புகன்று எழுந்து
மின்தவழும் இமய நெற்றியில்
விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்”
– சிலப்பதிகாரத்தில் தமிழ்நாடு!
"தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது
��ுன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்றமுண் டாகு மளவு."
– பரிபாடலில் தமிழ்நாடு!
"நும் நாடு யாதெனில் தமிழ்நாடு என்றல்"
– இளம்பூரணர்
"மணியாலோங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் ப��யர்திர் மாதோ"
– கம்பராமாயணம்
“தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவனார்”
– சேக்கிழார்
"கங்கைத் துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு இறைவன் திருப்பவனி என்றாள்”
– ஒட்டக்கூத்தர் (இராசராச சோழனுலா)
"செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே”
“தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே!”
– முண்டாசுக் கவி பாரதி
தமிழ்நாடு என்ற பெயரில், தமிழர்களின் இறையாண���மை கொண்ட இந்த நிலம் என்றென்றும் அழைக்கப்பட்டது என்பதற்கு இவ்வாறு பல்வேறு ஆதாரங்கள் நம் கண்முன்னே கொட்டிக் கிடக்கும்பொழுதும் கூட, தமிழ்நாட்டை எப்படியாவது திராவிட நாடாக மாற்றிவிட வேண்டும் என்று வஞ்சகம் வைத்துச் சிந்திக்கும் தமிழரல்லாதவர்களுக்குத் தாங்கள்தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தோம் என்ற வெட்டிப் பெருமை வேண்டும் என்பதற்காகவே, பெயர் வைக்கப்பட்ட நாளைத் தமிழ்நாடு ந��ள் என்று அறிவித்துக் கொண்டாடி மகிழ���ந்தார்கள்.
பெயரைச் சூட்டவாவது அவர்கள் முயற்சித்தார்களா?
தமிழ்நாட்டுக்கு அதிகாரப்பூர்வமாகத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்காகச் சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மண்ணில் மடிந்த வரலாற்றையும் மறைத்துவிட்டார்கள்!
யாரோ பெற்ற பிள்ளைக்கு இவர்கள் பெயர் சூட்டியதாகப் பெருமை கொண்டாடியவர்கள்...
மானத் தமிழர்களுக்குத் தமிழ்நாடு அதிகாரப்பூர்வம��க உருவான தினமே தமிழ்நாடு நாள்!
நவம்பர் 1 தான் தமிழ்நாடு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரு மாநிலமாக உருவான நாள்.
இந்நன்னாளே தமிழ்நாடு நாள்!
பல ஆயிரம் ஆண்டுகளாக நம் நாடு தமிழ்நாடுதான்!
அதை மனதில் ஏந்திக் கொண்டாடும் தினமாக, இன்றைய தினம் மகிழ்ச்சியோடு, இயற்கை நமக்குக் கொடுத்த அருட்பெரும் வரமான தமிழ்நாட்டை, நம் வீட்டை, நம் நாட்டைப் போற்றுவோம்!
வாழ்க தமிழ்! வ���ழ்க தமிழ்நாடு!
– பாரிசாலன்
தமிழ்த் தேசியவாதிகள் பல ஆண்டுகளாக நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடி வந்தனர்.
தமிழ்த் தேசியர்களின் உணர்வுகளுக்கும் கோரிக்கைக்கும் மதிப்பளித்து, நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாக முன்னெடுக்கும் தவெக தலைமையிலான தமிழக அரசின் முடிவைத் தமிழர்கள் வரவேற்கிறோம்!
முன்னோர்களின் ஆன்மா உண்மைக்கு என்றும் துணை நிற்கும்!
போராளிகளின் அருளும் ஆசியும் தமிழருக்கு வெற்றியைப் பெற்றுத் தரும்!
உண்மை, ந���ர்மை, கடமை உணர்ச்சி, ஒழுக்கம் ஆகிய பண்புகளைக் கொண்ட நல்ல தமிழர்களால் மட்டுமே தமிழ்த் தேசியக் கனவு நிறைவேறும்!
அறத்தோடு களம் காண்போம்!
என்னை இழிவுபடுத்துவதாக எண்ணி, உயர்திரு மாசோ விக்டர் அவர்களின் ஆய்வுகளைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.
தமிழில் ஆய்வுகள் ஒவ்வொரு விதத்திலும் பலரும் செய்ய வேண்டிய ஒன்று. அதில் குற்றங்களும் குறைகளும் நாகரிகமான முறையில் விவாதிக்கப்படலாம். கேலி, கிண்டல் தமிழ் சமூகத்திற்கு பெருத்த பின்னடைவைதான் ஏற்படுத்தும்.
நீங்கள் மேற்கோள் காட்டிய இரண்டு வேர்ச்சொல் ஆய்வாளர்களும் ஈவெரா பக்தர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் தானே? அப்படி இருந்தும், அவர்களை முத���்மைப்படுத்தி மாசோ விக்டர் அவர்களின் ஆய்வுகளைக் கொச்சைப்படுத்துவது முறையா?
தமிழர்களை தமிழாட்சி செய்தவர்கள் "சேரர்கள்"
அவர்களின் முழுமையான வரலாறு, அறமான ஆட்சி முறைகள், வீரம்,
கொடை குணம், கலை திறன்கள் என அனைத்தையும் தமிழ் மாணவர்கள் நிச்சயம் தெரிந்துக் கொள்ள வேண்டும்!
தமிழ் நாடு பாடத்திட்டத்த��ல் சேரர்களை இணைத்திடுமாறு கோரிக்கை வைக்கிறேன் 💯
@imrajmohan
தமிழர்களின் நலனுக்காக தமிழினத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு தமிழனுக்கு உறுதுணையாக சக தமிழர்கள் இருப்பார்கள் 💯
குண்டாசு ரத்தாகி விடுதலையாகியுள்ள ஈ. க. சிலம்பரசன் அவர்களுக்கு எங்களின் புரட்சி வாழ்த்துகள் 🙏
உங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும் 💥
வாழ்க தமிழ் ❣️
தமிழினத்திற்காக உரிமைக் குரல் எழுப்பும் ஒவ்வொரு தமிழ் உணர்வாளருக்கும் சக தமிழனாக தோள் கொடுத்து தாங்கி நிற்க வேண்டியது தமிழ்த்தேசியவாதிகளின் கடமையாகும்!
திமுக அரசின் அடக்குமுறைகளில் இருந்து குண்டாசு ரத்தாகி விடுதலை பெற்றுள்ள திரு. ஈ. க. சிலம்பரசன் அவர்களுக்கு வாழ்த்துகள் 💐
கன்னட வாகனங்களில் கொடிகளை கட்டிக் கொண்டு தமிழக எல்லைக்குள் வந்தவர்களை தட்டிக் கேட்டதற்கு குண்டாசு போடபட்ட ஈ. க. சிலம்பரசன் விடுதலையானதற்கு வாழ்த்துகள்!
உங்களின் தமிழ் பணி தொடரட்டும், தமிழர்களுக்கான உங்கள் உரிமை குரல் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்!
வாழ்க தமிழ் 💯
மேகமலை மற்றும் 98 கிராம மக்களுக்கு ஆதரவாக ஆளும் தவெக அரச��� விரைந்து தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu அவர்களே அமைதிக் காக்காமல் அந்த மக்களை நேரில் சந்தித்து தமிழ் நாட்டு மக்களும் தமிழக அரசும் அவர்களுக்கு துணை இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்!
தவெகவின் தீவிர ஆதரவாளராக உறுப்பினராக காட்டிக் கொள்ளும் இந்த மைக்கேல் என்ற நபர், மதவெறியின் காரணமாக தமிழ்க் கடவுள் முருகன் மீது அருவருக்கத்தக்க, ���ழிவான, ஆபாசப் பதிவுகளைச் செய்து வருகிறார். திட்டமிட்டு தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்டும் விதமாகச் செயல்பட்டு வரும் இந்த நபரை காவல்துறையால் கண்டறிய முடியவில்லையா?
இதுவரை சட்டரீதியான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணம் என்ன?
இந்த நிகழ்வில் தமிழக அரசு தாமதம் காட்டுவது பெருத்த ஏமாற்றத்தைத் தருகிறது.
மைக்கேல் என்ற நபரை உடனடியாகக் கைது செய்து, முறையான விசாரணை நடத்தி, ச��்டரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
@tnpoliceoffl @CMOTamilnadu
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. வேல்முருகன் அவர்களோடு 2024 மாவீரர் தினக் கூட்டத்தில் ஒன்றாகக் கலந்துகொண்டேன் என்ற காரணத்திற்காக ஒரு கூட்டம் அன்று என்னைக் கடித்துக்கொண்டிருந்தது 😄
ஆனால், அவர்களுக்கு உண்மையில் வேல்முருகன் என்றுமே பிரச்சனை இல்லை.
உண்மையும் நேர்மையும் தமிழ்த் தேசியர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்பு��ள்!
தேசியத் தலைவரைப் பற்றி பேசுவது மட்டும் தமிழ்த் தேசியம் அல்ல!
தேசியத் தலைவரின் வழியில், ஒழுக்கத்தோடும் அறத்��ோடும், உண்மையுடனும் நேர்மையுடனும் நம் இனத்திற்காக வாழ்வதுதான் சரியான தமிழ்த் தேசியம்!
காவி நிறத்தில் வானவி��்!
வாய் கிழிய இந்து மதம், கலாச்சாரம், பண்பாடு என்று பேசுவார்கள். ஆனால், இறுதியில் உலக வல்லாதிக்க சக்திகளின் சதிச் செயல்களை, வாழ்வியல் சிதைவுகளை அப்படியே நடைமுறைப்படுத்துவார்கள்.
இவங்களோட மதமும் கலாச்சாரமும் அவ்வளவுதான்.
உண்மையாக மானுட வாழ்வியலைக் காக்க வேண்டும் எனில், மானுடத்திற்கு வாழ்வியலைக் கற்றுக்கொடுத்த தமிழினத்தால் மட்டுமே அது ம���டியும்!
அந்த தமிழினத்தின் அரசியல்தான் தமிழ்த் தேசியம்!
எனது பிறந்த நாளில் என்னை வாழ்த்திய அனைத்து தமிழ���த் தேசியர்களுக்கும், நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 🙏
குறிப்பாக எனக்கு வாழ்த்து தெரிவித்த தம்பி தென்னகம் விஷ்ணு அவர்களுக்கு எனது சிறப்பு நன்றி.
தமிழ்த் திரைத்துறையின் தனிப்பெரும் சகாப்தமாக விளங்கிய இயக்குநர் இமயம் திரு பாரதிராஜா அவர்களின் மறைவு செய்தி மிகுந்த மனவேதனையை அளித்தது.
பாரதிராஜா என்ற தமிழ்மகன், தமிழர்களின் இயல்பான வாழ்வியல் நடைமுறைகளை எதார்த்தமாகத் தமிழ்த் திரைத்துறைக்குள் கொண்டு வந்த பெருமகனார். பாரதிராஜா திரைத்துறைக்குள் கால்பதிக்காமல் இருந்திருந்தால், தமிழ்த் திரைத்துறையின் ந��லை என்னவாக இருந்திருக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை.
அவர் நம்மைவிட்டு பிரிந்தாலும், அவரது படைப்புகள் என்றென்றும் தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு காலக்கண்ணாடியாகவும், கலைத்திறனின் பெட்டகமாகவும் நிலைத்து நிற்கும்.
பாரதிராஜா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது உறவுகளுக்கும், தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரலாற்று நிகழ்வுகளை விமர்சிக்கலாம், விவாதிக்கலாம். ஆனால் வரலாற்று நி��ழ்வுகளைக் காரணமாகக் கொண்டு பாண்டியர்களை "லொடுக்கு பாண்டி" என்று இழிவுபடுத்தும் இந்த ராஜகம்பளத்து பாலகிருஷ்ணன், என்றாவது ஒருநாள் அவரது சமூகத்தைச் சேர்ந்த மன்னர்கள் செய்த கொடுமைகளைப் பற்றி பேசியிருக்கிறாரா? விமர்சித்திருக்கிறாரா?
சாதிய உணர்வோடு வரலாற்றில் பாகுபாடு காட்டும் இத்தகைய நபர்களை தமிழர்கள் அடையாளம் காண வேண்டும்!