சென்னை மாநகராட்சி 12-வது வார்டு மாமன்ற உறுப்பினராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டேன்.
மக்களின் முதல்வர் தலைவர் @mkstalin, இதயம் நிறைந்த அண்ணன் @Udhaystalin என் மீது வைத்திருக்கிற நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படுவேன்.
வாழ்க தலைவர்! வெல்க திராவிடம்!
#சென்னைமாநகராட்சி12ல்_கவிகணேசன்
இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் பங்கேற்று, ‘ஜீரோ ஹவர்ஸ்' என்று சொல்லக்கூடிய நேரமில்லாத நேரத்தில்..அவையில் பேசியபோது;
புதிதாய் பொறுப்பேற்றிருக்கும் முதன்மை
அமைச்சரின் புரிதலற்ற செயல்பாடுகள் குறித்தும்,
ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள்,
அடாவடித்தனங்கள் எதேச்சதிகார போக்கு ஆகியவௌ குறித்தும் விளக்கமாக எடுத்துக் கூறி
தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினேன்! 🔥🌄
@mkstalin@Udhaystalin@chennaicorp@arivalayam
#DravidianModel
#முதன்மை_அமைச்சர்
#நலமான_திருவொற்றியூர்
#DMK
கதாநாயகன் கனவிலிருந்து இன்னும் மீளாமல்
கதை வசனம் பேசுவதுபோல்,
சட்டசபையை சினிமா சபையாக்கி, உண்மைக்கு மாறான செய்திகளை உளறி கொட்டும் உடான்ஸ் முதல்வருக்கு பாயிண்டும் புரியவில்லை Point of Order-லும்
பதில் சொல்லத் தெரியவில்லை!🔥😡
@mkstalin@Udhaystalin@arivalayam#DMK#TVKFails
கொள்கை எதிரிகள் என்று சொல்லிக்கொண்டு #பாசிசபாஜக வை எதிர்த்துப் பேசுவதையோ, கண்டனக் குரல் எழுப்புவதையோ செய்யாமல்;
மௌனம் காப்பதையே கொள்கையாக வைத்திருக்கும் இந்த பொம்மை அரசாங்கம்;
நீட் விலக்கை கோருவதோடு மட்டுமில்லாமல் அதை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுமா? என்பதே நடுநிலையாளர்களின் கேள்வி!😡
@mkstalin@Udhaystalin@dmk_raja@arivalayam
#DMk
#TVKFails
மறக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் மக்கள் மனங்களை வென்றிருக்கும் திராவிட மாடல் திட்டங்களை; தாங்களே கொண்டு வந்த திட்டங்களைப் போல் 'Sticker' ஒட்டிக் கொள்ளும்
இந்த ஓடாநிலை அரசு;
தாங்கள் சொன்னதை எதையும் செய்யாமல், செய்வதை மட்டுமே சொன்ன திராவிடமாடல் அரசின் சாதனைகளை காப்பி அடிப்பதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்!🔥🌄🖤♥️
@mkstalin@Udhaystalin@arivalayam
#DMK
#TVKFails
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினோம்.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - அறிவிக்கப்படாத மின்வெட்டு - பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி பேசினோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான road map ஆளுநர் உரையில் இல்லை என்பதை உணர்ந்து, அரசின் தொலைநோக்கு திட்டங்களையும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் முதலமைச்சர் தனது பதிலுரையில் வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
#TNAssembly
'மாற்றம்' 'மாற்றம்' என்று சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சி பிடித்தவர்கள், தங்களின் தோல்விகளை மறைக்க ஊடகங்களை சந்திக்க மறுக்கிறார்கள். சந்திக்க மறுப்பதோடு ஜனநாயகம் படும் பாட்டை நேரலையில் காட்டவும் மறுக்கிறார்கள்;
ஒரு நாள் இரு நாள் அவர்களின் ஆசைகள் அரங்கேறலாம். ஆனால் மக்கள்;
அதே ஊடகங்களின் மூலம் தாங்கள் பொய்யான பரப்புரைகளின் மூலம் ஏமாந்து விட்டோமே என்ற ஆதங்கத்தை மறக்க மாட்டார்கள்!
@mkstalin@Udhaystalin@arivalayam
#TVKFails
"ஆகாத மாமியாருக்கு கைபட்டாலும் கால் பட்டாலும் குற்றம்" என்பதைப் போல திராவிட நாயகர் கொண்டு வந்த திட்டங்களை பெயர் மாற்றம் செய்வதனால் இவர்கள் தற்காலிக இன்பமடையலாம்;
கல்வெட்டாய் சாசனமாய் மக்கள் மனங்களில் நின்றுவிட்ட, நிலைத்து விட்ட திராவிட மாடல் திட்டங்களை எவராலும் அழிக்கவோ அகற்றவோ ஒருக்காலும் முடியவே முடியாது!🔥😡
@mkstalin@Udhaystalin@arivalayam
#DMK
#TVKFails
கான்வென்ட் குழந்தையைப் போல் நேரத்திற்கு செல்வது,கோட்டு அணிந்து கொள்வது, உணவு உட்கொள்வது, என சிறுபிள்ளைத்தனமாய் ரீல்ஸ்களில் வாழாமல்;
நம்பி வாக்களித்த மக்களுக்கு
நன்றியாளனாய், தன்னை
சுற்றி நடக்கும் தவறுகளுக்கு உரிய தீர்வு காண்பவனாய் இருக்க வேண்டும் இல்லையென்றால்
மக்கள் நிராகரிப்பார்கள்!
@mkstalin@Udhaystalin@arivalayam
#DMK
#TVKFails
பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ள பிள்ளை பிடிக்கும் ஆசாமிகளைப் போல்
அடுத்தக் கட்சியிலிருந்து
ஆள் பிடிக்கும் வேலையை அரங்கேற்றி வருகிறார்கள்;
வாக்களித்த மை மறைவதற்குள்ளே அவர்களை ராஜினாமா செய்ய வைத்து தங்கள் சின்னத்தில் போட்டியிடச் செய்து
பலத்தை கூட்ட நினைக்கும் அவர்களின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது.
@mkstalin@Udhaystalin@arivalayam
#வாயை_திறங்க_CM
#TVKFails
வண்ணக் கனவுகள் சுமந்த வருங்கால தலைமுறையின் சின்ன சின்ன ஆசைகளை சிறகடிக்க வைக்கவும், சிகரங்களில் ஏற்றிடவும் வளமான எதிர்காலம் உருவாக்கிட
நம்பிக்கை விதைகளோடு
நாடி நலம்புரியும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் இளம்
தலைவர் அவர்கள்!🙏♥️💐
@mkstalin@Udhaystalin@arivalayam
#DravidianModel
#DMK
தான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே தலைகீழாய் மாறிவிடும் என்று தம்பட்டம் அடித்துக் கொண்ட தற்பெருமை முதல்வருக்கு மாநிலத்தில் அரங்கேறும் மட்டமான சம்பவங்களைப் பார்த்து மனம் பதறவில்லையா?;
எந்த ஆணியும் புடுங்காத புடுங்கவும் தெரியாத இந்த ஆர்வக்கோளாறுகளை ஆட்சியில் அமர்த்தி விட்டோமே என்று மக்கள் புலம்புவதும் செவிகளில் விழவில்லையா?
@mkstalin@Udhaystalin@arivalayam
#TVKFails
நமது திருவொற்றியூரில் நடைபெற்ற சென்னை பெருநகர மாநகராட்சி 1-வது மண்டலக்குழு கூட்டத்தில் பங்கேற்று,ஒன்றிய மாநில அரசுகளைக் காட்டிலும் உள்ளாட்சி அமைப்புகளின் அரசுதான் மக்களோடு இயங்கும் அரசென்றும்,
நாள்தோறும் மக்களை சந்திக்கும், மக்களோடு பயணிக்கும் அதிகாரப் பரவலை உறுதிப்படுத்தும் அரசென்றும்;
பேரிடர் காலங்களிலும் பெருமழை காலங்களிலும் முன்கள வீரர்களை வழிநடத்தவும் நகரங்களை நல்வழிப்படுத்தவும் களத்தில் இறங்கி செயலாற்றும் மாமன்ற உறுப்பினர்களின் மகத்தான பணியையும், நல்க வேண்டிய ஒத்துழைப்பையும் சுட்டிக்காட்டி வலியுறுத்தி பேசினேன்!🙏🌄🖤♥️
@mkstalin@Udhaystalin@arivalayam
#நலமான_திருவொற்றியூர்
#DravidianModel
#DMK
நம்ம திருவொற்றியூரில்
மண்டலக் குழுத்தலைவர் தி.மு.தனியரசு அவர்களின் தலைமையில் நடைபெற்ற பெருநகர சென்னை மாநகராட்சி மாதாந்திர 1 -வது மண்டலக் குழு கூட்டத்தில் நிகழ்ச்சிக்கு வருகை தராத தவெக எம் எல் ஏ க்கு
மண்டலக் குழு தலைவருக்கு நிகராக இருக்கை போடப்பட்டிருந்ததை
எதிர்த்து கண்டனக் குரல் எழுப்பினேன்.
இதுவரை இல்லாத மரபை பின்பற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நம்முடைய உறுதியான நிலைப்பாட்டால் அந்த இருக்கை அங்கிருந்து அகற்றப்பட்டது.
ரீல்ஸ் ஆட்சிக்கு எதிரான
நம் கழகக் குரல் எப்போதும் ஒலிக்கும்!🔥🌄🖤♥️
@mkstalin@Udhaystalin@arivalayam
#நலமான_திருவொற்றியூர்
#DravidianModel
#DMK
2026 தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற சென்னை மண்டலம் 1-க்கான பெருநகர சென்னை மாநகராட்சி மாதாந்திர கூட்டத்தில் பங்கேற்று;
கழக அரசு கொண்டு வந்த நலத்திட்டங்களையும், அதனால் விளைந்த நன்மைகளையும்,
புதிய ஆட்சியாளர்களால் அனைத்துப் பணிகளும் முடங்கிப் போய் ஸ்தம்பித்து நிற்கும் நிர்வாக சீர்கேட்டையும் எடுத்துக்கூறி,
அன்றாடம் மக்களோடு பயணிக்கும் மக்களைச் சந்திக்கும் மக்கள் குறைகளை நேரடியாக கேட்டறியும் மாமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் தொய்வின்றி தொடர உரிய ஒத்துழைப்பு நல்குமாறு வலியுறுத்தினேன்.
@mkstalin@Udhaystalin@arivalayam
#நம்ம_திருவொற்றியூர்
#DravidianModel
#DMK
மேகதாட்டில் அணை கட்டுவதற்கு அனைத்து முன்னெடுப்புகளையும் மும்முரமாய் எடுக்கிறது
கர்நாடக அரசு!கடந்த கழக ஆட்சியில் நம்முடைய கடுமையான எதிர்ப்புகளால் அதைப் பற்றி பேசக்கூட தயங்கிய காங்கிரஸ்காரர்கள்;
இப்போது குளிர்விட்டுப் போனதால் கூவத் தொடங்கி இருக்கிறார்கள், நமக்கு வாய்த்த கோமாளி அரசோ அதைக் கண்டு கொள்ளவும் இல்லை
காட்டமான எதிர்வினையும் ஆற்றவில்லை இந்த லட்சணத்தில் இவர்களுக்குள் கூட்டணி ஒரு கேடு!😡
@mkstalin@Udhaystalin@arivalayam
#TVKFails
பொய்யையும், புரட்டையும்,
ஆதாரமற்ற அவதூறுகளையும்
அள்ளி வீசி
அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி கவர்ச்சியால் அடைந்த வெற்றியென்பது காட்சிப்பிழையால் நடந்த ஆட்சிப் பிழை!
விரைவில் பொய் வேஷம் கலையும், உண்மைகள் புரியும்,
அவசர கதியில் மக்கள்
அளித்த தீர்ப்பை அவர்களே பரிசீலனை செய்யும் நாள்
வெகு தொலைவில் இல்லை!
@mkstalin@Udhaystalin@arivalayam
#TVKFails
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel