#FIFAWorldCup ||
உலக கோப்பை கால்பந்துப் போட்டியில் அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
வரும் புதன்கிழமை நள்ளிரவு மணி 12.30க்கு #Dallas-ல் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - ஸ்பெயினை எதிர்கொள்கிறது.
வியாழக்கிழமை நள்ளிரவு மணி 12.30-க்கு #Atlanta-வில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா - இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
கர்பி நாட்டுப்புற இசைக் கலையைப் பாதுகாத்து வளர்த்ததற்காக, பிரபல நாட்டுப்புறப் பாடகி போகிலா லெக்தேபிக்கு ‘பத்மஸ்ரீ’ விருதை மத்திய அரசு அறிவித்து கௌரவித்துள்ளது.
#Peoplespadma2026#padmaawards2026#padmashri#art
அகண்ட பாரதத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த மாமனிதர், பாரதீய ஜனசங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் நினைவு நாளில், அவரது சேவைகளையும் தியாகங்களையும் போற்றி வணங்குவோம்.
"ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு, ஒரே தேசியக் கொடி" என்ற உறுதியான தேசிய சிந்தனையை முன்னிறுத்தி, நாட்டின் ஒற்றுமைக்காக இறுதி வரை போராடிய அவரது தியாகமும் தேசப்பற்றும் தலைமுறைகளுக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர்.
அவரது உயரிய இலட்சியங்களைப் பின்பற்றி, வலிமையான மற்றும் வளமான பாரதத்தை உருவாக்கிட உறுதியேற்போம்.
"திரு. ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் 74வது நினைவு நாளையொட்டி, அந்த மகத்தான தேசபக்தருக்கு நம்முடைய அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பிரிவினைக்கு எதிராக கருத்து கொண்டிருந்த அவர், நம் நாடு ஒருங்கிணைந்த தேசமாக இருக்க வேண்டும் என்று கவலை கொண்டு, அதற்காக தொடர்ந்து போராடினார்.
நாட்டின் விடுதலைக்குப் பிறகு பாகிஸ்தானில் வசித்து வந்த ஹிந்துக்கள் தொடர்ந்து சந்தித்து வந்த கொடுமைகளை தடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். அதையொட்டி மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அமைச்சராக வகித்து வந்த பதவியையும் ராஜினாமா செய்தார்.
ஒரு தேசத்தில் இரண்டு கொடி, இரண்டு பிரதமர், இரண்டு நாடாளுமன்றம் இருக்கக் கூடாது என்று போராடி வந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி அப்போதைய மத்திய கொண்டு வந்த சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று போராடி உயிர் நீத்த பெரும் போராளி ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்கள்.
தேசத்தின் இறையாண்மையை காத்திட வேண்டி அவர் செய்த உன்னதமான தியாகம், அவருடைய துணிச்சலான அரசியல் வாழ்வு, தேச நலனுக்கென அவர் காட்டிய அர்ப்பணிப்பு உணர்வு ஆகியன நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியது.
அது மட்டுமல்ல அசைக்க முடியாத தேசமாக, நம் பாரதத்தை உருவாக்கிட வேண்டும் என்ற சிந்தனைக்கான அச்சாணியே அவர்தான் என்றால் அது மிகையல்ல.
அரசியலில் அவர் கடைபிடித்திட்ட உழைப்பு, நேர்மை, துணிவு, தியாகம் என அனைத்தும் இன்றைய தலைமுறைக்கு எடுத்துக் காட்டாக விளங்கிடும் வாழ்வு அவருடையது என்றால் அது மிகையல்ல.
நம் தேசத்திற்கு ஓர் கலங்கரை விளக்கமாக திகழும் மதிப்பிற்குரிய திரு.ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களை, நம்முடைய முன்னுதாரணமாகக் கொண்டு, நாட்டின் முன்னேற்றத்தை மனதில் வைத்து, நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என நம் சகோதர சகோதரிகளைக் கேட்டுக் கொள்கிறேன்" - ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாடு ஆளுநர்
#ஷ்யாமாபிரசாத்முகர்ஜி #முகர்ஜிநினைவுநாள் #இந்தியஅரசியல்வாதி #தேசபக்தர் #தேசியஒற்றுமை #ஒன்றுபட்டஇந்தியா #தேசியபெருமை #நாட்டின்இறையாண்மை #நிலப்பரப்புஒற்றுமை #வலிமையானஇந்தியா #ஒற்றுமையுள்ளஇந்தியா #நாட்டின்முன்னேற்றம்
@rashtrapatibhvn@VPIndia@PMOIndia@HMOIndia@rajendraarlekar@KeralaGovernor@MIB_India@PIB_India@pibchennai@DDNewslive@airnewsalert@PTI_News@DDTamilNews@airnews_Chennai@CBCCHENNAI_MIB@ani_digital