FMB & Land Survey விவரங்கள் மற்றும் அதேபோல Map View-ல் பார்க்க இணையதளம் மற்றும் செயலி.
Website 👉 https://t.co/pe4pEBQstr
Website 👉 https://t.co/3F6cMn1VsE
App 👉 https://t.co/UkZaXoL6VB
#TamilNadu#Land
எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய், ஓட்ஸ், ஆளிவிதை, வால்நட், மாதுளை, பச்சை தேநீர், மஞ்சள் போன்ற இயற்கை உணவுகள் உங்கள் இதயத்தை பாதுகாக்க உதவும்.
இதயம் வலிமையாக, நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க – ஆரோக்கியமாக சாப்பிடுங்கள் 🍃
இதய நலத்திற்கு உகந்த உணவுகள் – ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவுகளை பராமரிக்க உதவும்! ❤️
⚠️முக்கிய குறிப்பு: இது மருத்துவ ஆலோசனை அல்ல. எந்த உணவு மாற்றங்களையும் செய்யும் முன் உங்கள் மருத்துவரை அல்லது நிபுணரை அணுகி ஆலோசனை பெறவும்.
10 வணிக உளவியல் விதிகள்
மூலம் உங்கள் தொழிலை மேம்படுத்துங்கள். உணர்ச்சிகளை விற்பனை செய்தல் மற்றும் கவனமாக கேட்டல் மூலம் வாடிக்கையாளர் நம்பிக்கையை வெல்லுங்கள்.
Sale Agreement' (கிரய உடன்படிக்கை) மூலம் ஏமாற்றப்பட்டால் என்ன செய்ய வேண்டும்
"2 லட்சம் Advance கொடுத்தேன் சார்... 2 வருஷமா இடத்த காணோம்!"
'Sale Agreement' வச்சு ஏமாத்துறாங்களே... என்ன பண்றது?
நிலம் வாங்குறோம், வீடு வாங்குறோம். "முதல்ல 2 லட்சம் Advance தாங்க, Agreement போட்டுக்கலாம்.
3 மாசத்துல மீதி பணம் கொடுத்து கிரயம் பண்ணிக்கலாம்"னு சொல்றான். நாமளும் நம்பி ஒரு 100 ரூபாய் Stamp Paper-ல Agreement போட்டு Advance கொடுத்துடுறோம்.
அப்புறம் என்ன? 3 மாசம் 3 வருஷம் ஆகும். "விலை ஏறிடுச்சு, இன்னும் 5 லட்சம் கொடு"ம்பான். இல்ல "அந்த இடத்தை வேற ஒருத்தனுக்கு வித்துட்டேன்"ம்பான்.
இப்போ நீங்க என்ன பண்ணுவீங்க? Advance போச்சா?
1. "Agreement மட்டும் இருந்தா நிலம் உங்களுக்கு சொந்தமாகாது சார்!"
சட்டம் சொல்லுது: வெறும் Sale Agreement வச்சு நீங்க Owner ஆக முடியாது. *கிரயம் = Sale Deed* தான் உண்மையான பத்திரம். Register Office-ல பதிஞ்சா தான் நிலம் உங்க பேருக்கு மாறும்.
அப்ப Agreement வேஸ்ட்-ஆ? இல்ல. அது ஒரு "Proof". "இவன் எனக்கு விக்கிறேன்னு ஒத்துக்கிட்டான், பணம் வாங்குனான்"னு நிரூபிக்க அது தான் ஆதாரம்.
2. "விக்க மாட்டேன்னு அடம்பிடிச்சா Case போடலாம்"
Specific Performance Suit-னு ஒரு Case இருக்கு. "ஐயா, இவன் Agreement போட்டு பணம் வாங்கிட்டான். இப்போ விக்க மாட்டேங்குறான். அவன கிரயம் பண்ணி தர சொல்லுங்க"னு கோர்ட்ல கேக்கலாம்.
Condition: நீங்க "மீதி பணம் Ready-ஆ வச்சிருக்கேன். எப்ப வேணா கொடுக்க தயார்"னு நிரூபிக்கணும். Bank Balance காட்டணும்.
Time Limit: Agreement போட்ட தேதில இருந்து 3 வருஷத்துக்குள்ள Case போடணும். 3 வருஷம் தாண்டிட்டா உங்க உரிமை போய்டும்.
3. "Advance-அ திரும்ப வாங்க முடியுமா?"
முடியும். ஒருவேளை உங்களுக்கு அந்த இடமே வேண்டாம், பணம் மட்டும் போதும்னா, "பணத்த திருப்பி கொடு"னு Case போடலாம்.
ஆனா கவனம்: Agreement-ல "Advance திருப்பி தர மாட்டேன்"னு எழுதி இருந்தா கஷ்டம். அதனால Agreement போடும் போதே "விற்பவர் கிரயம் பண்ணி தரலனா, Advance-அ இரட்டிப்பா திருப்பி தர வேண்டும்" னு ஒரு வரி சேர்த்துக்கோங்க.
ஏமாறாம இருக்க 3 Golden Rules சொல்றேன்:
1. வில்லங்கம் பாருங்க:
EC போட்டு பாருங்க. அந்த நிலம் அவன் பேர்ல தான் இருக்கா? Bank-ல அடமானம் இருக்கா?
2. Register பண்ணுங்க:
100 ரூபாய் Stamp Paper போதாது. *Sale Agreement-அ Register Office-ல பதிவு பண்ணுங்க.* 4% Stamp Duty, 1% Reg Fee கட்டினாலும் பாதுகாப்பு. அப்போ தான் அவன் வேற ஒருத்தனுக்கு விக்க முடியாது.
3. Time Fix பண்ணுங்க:
"3 மாசத்துல கிரயம்"னு Date குறிப்பிட்டு எழுதுங்க. "வாய்தா" கேட்டுட்டே இருந்தா உடனே Lawyer-அ பாருங்க.
மொத்தத்துல:
Advance கொடுத்துட்டு "அப்பாவி"யா நிக்காதீங்க. Agreement ஒரு ஆயுதம். அத முறையா Use பண்ணா உங்க பணமும் வரும், இடமும் வரும்.
உங்களுக்கோ, உங்க சொந்தக்காரங்களுக்கோ இப்படி 'Agreement Fraud' நடந்திருக்கா?
எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை:
Sale Agreement என்பது சொத்தின் உரிமைக்கான ஆவணம் அல்ல, அது சொத்தை வாங்குவதற்கான ஒரு 'உறுதிமொழி' மட்டுமே.
விற்பனை ஒப்பந்தத்தை உரிய முத்திரைத்தாளில் (Stamp Paper) எழுதி, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது நல்லது.
ஒரு வழக்கறிஞரை (Civil Advocate) சந்தித்து உங்கள் ஒப்பந்த ஆவணத்தை காண்பித்து, உரிய சட்ட ஆலோசனையின்படி மேல் நடவடிக்கைகளைத் தொடலாம்.
#இண்டையதகவல் #தெரிந்துகொள்வோம் #அறிவோம்சட்டம் #SaleAgreement
#GoldLoan | வங்கியில் அடமானமாக வைத்த நகைகள் தொடர்பாக மோசடி, நகை மாற்றம், நகை காணாமற்போவது அல்லது போலி நகை திருப்பிக் கொடுக்கப்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால், கீழ்க்கண்ட சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்:
1. உடனடியாக வங்கியில் எழுத்துப்பூர்வ புகார் அளிக்கவும்
• கிளை மேலாளருக்கு (Branch Manager) எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்கவும்.
• புகாரின் நகலைப் பெற்று, பெறப்பட்டதற்கான ஒப்புதலை (Acknowledgement) வாங்கி வைத்துக் கொள்ளவும்.
•அடமான ரசீது, நகை விவரங்கள், புகைப்படங்கள் இருந்தால் இணைக்கவும்.
2. வங்கியின் உயரதிகாரிகளிடம் முறையிடவும்
• கிளை அளவில் தீர்வு கிடைக்காவிட்டால், வங்கியின் Regional Office அல்லது Grievance Redressal Cell-க்கு புகார் அனுப்பவும்.
• பெரும்பாலான வங்கிகளில் ஆன்லைன் புகார் வசதியும் உள்ளது.
3. காவல்துறையில் புகார் அளிக்கவும்
• மோசடி, நம்பிக்கை மோசடி (Criminal Breach of Trust), போலி ஆவணம், திருட்டு போன்ற குற்றங்கள் இருந்தால் FIR பதிவு செய்ய கோரலாம்.
• FIR பதிவு செய்ய மறுத்தால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அல்லது நீதிமன்றத்தை அணுகலாம்.
4. RBI வங்கி குறைத்தீர்பாளரை அணுகலாம்
• வங்கியில் புகார் அளித்து 30 நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால், RBI Integrated Ombudsman Scheme மூலம் புகார் அளிக்கலாம்.
5. நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்
• வங்கியின் அலட்சியத்தால் நஷ்டம் ஏற்பட்டிருந்தால், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடரலாம்.
• நகையின் மதிப்பு, மன உளைச்சல், வழக்குச் செலவு ஆகியவற்றுக்கான இழப்பீடும் கோரலாம்.
6. முக்கிய ஆதாரங்களை பாதுகாக்கவும்
• அடமான ரசீது
• நகை வாங்கிய பில்
• நகையின் புகைப்படங்கள்
• வங்கியுடன் நடந்த கடிதப் பரிமாற்றங்கள்
• நகை மதிப்பீட்டு சான்றுகள்
சட்ட ரீதியாக முக்கியமானது
வங்கி அடமானமாக பெற்ற நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு வங்கிக்கே உண்டு. வங்கியின் அலட்சியம் அல்லது ஊழியர்களின் மோசடி காரணமாக நஷ்டம் ஏற்பட்டால், வங்கி பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.
#KHByte #GoldLoan
விற்பனையாளர்களே தவறியவர்கள் என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியது.
மேலும், “காலம் குறிப்பிடப்பட்டிருந்ததால் மட்டும் அது ஒப்பந்தத்தின் உயிராகிவிடாது” என்றும் நீதிமன்றம் கூறியது. குறிப்பாக, பல வழக்குகள் நிலுவையில் இருந்த சூழலில், தாமதத்தை வாங்குபவருக்கு எதிராக பயன்படுத்த முடியாது என்று கூறப்பட்டது.
இதற்காக, Nirmala Anand Vs Advent Corporation Pvt Ltd தீர்ப்பும் மேற்கோள் காட்டப்பட்டது. அந்தத் தீர்ப்பில், சொத்து மதிப்பு உயர்ந்ததால் மட்டும் குறித்தவகை பரிகாரத்தை மறுக்க முடியாது; யார் தவறிழைத்தவர் என்பதை நீதிமன்றம் முதலில் பார்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இறுதியாக, உயர்நீதிமன்றம் மிக முக்கியமான சட்டக் கொள்கைகளை உறுதிப்படுத்தியது:
✔ விற்பனை ஒப்பந்தமும் பெரும்பான்மை முன்பணமும் ஒப்புக்கொள்ளப்பட்டால், வாங்குபவரின் உரிமை வலுப்படும்
✔ காலக்கெடு குறிப்பிடப்பட்டதால் மட்டும் அது ஒப்பந்தத்தின் உயிராகாது
✔ விற்பனையாளர்களே வழக்குகள் மற்றும் சிக்கல்களை உருவாக்கியிருந்தால், தாமதத்தை வாங்குபவருக்கு எதிராக பயன்படுத்த முடியாது
✔ நிலுவை வழக்குகள் மற்றும் தடை உத்தரவுகள் இருந்தால், வாங்குபவர் காத்திருப்பது நியாயமானதாக இருக்கலாம்
✔ வாங்குபவரின் பொருளாதார திறன் ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்படலாம்
✔ சொத்து மதிப்பு உயர்ந்ததால் மட்டும் குறித்தவகை பரிகாரம் மறுக்கப்படாது
✔ தவறிழைத்த தரப்பை கருத்தில் கொண்டு தான் நீதிமன்றம் தனது விருப்பஅதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்
என்று கூறி, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, விசாரணை நீதிமன்றம் வழங்கிய குறித்தவகை பரிகார தீர்ப்பை உறுதிப்படுத்தியது.
____________________________________
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
https://t.co/yvf5HE5tHP.101 of 2012
Ponnammal Vs Kandhaswamy
Date : 11.02.2026
Coram : Justice C.V.Karthikeyan & Justice K.Kumaresh Babu
Citation : 2026:MHC:981
————-
ℹ️ Budding Lawyers
தகவலுக்காக இங்கு பகிரப்படுகிறது.
விற்பனை ஒப்பந்தத்தில் காலக்கெடு குறிப்பிடப்பட்டிருந்தாலும், வாங்குபவர் தாமதமாக வழக்கு தொடர்ந்ததால் மட்டும் குறித்தவகை பரிகாரம் மறுக்கப்படுமா?
மேலும், விற்பனையாளரே வழக்குகள் மற்றும் சிக்கல்களை உருவாக்கியிருந்தால், அந்த தாமதத்தை வாங்குபவருக்கு எதிராக பயன்படுத்த முடியுமா?
இந்த தீர்ப்பு, விற்பனை ஒப்பந்தங்களில் “காலமே ஒப்பந்தத்தின் உயிர்” என்ற கொள்கை, வாங்குபவரின் தயார்நிலை மற்றும் விருப்பம், விற்பனையாளரின் தவறான நடத்தை, இடைப்பட்ட வழக்குகளின் தாக்கம், மற்றும் சொத்து மதிப்பு உயர்ந்ததால் மட்டும் குறித்தவகை பரிகாரத்தை மறுக்க முடியுமா என்பதைக் குறித்து மிக முக்கியமான சட்டக் கொள்கைகளை விளக்குகிறது.
இவ்வழக்கில், மறைந்த வெள்ளப்ப கவுண்டரின் மகள்களான பொன்னம்மாள், சின்னம்மாள் மற்றும் கண்ணம்மாள் ஆகியோர், 10.06.2006 அன்று கந்தசாமியுடன் விற்பனை ஒப்பந்தம் செய்தனர். 4.07 ஏக்கர் நிலம், ஏக்கருக்கு ரூ.20,90,000/- என்ற விலையில் விற்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஒப்பந்த நாளிலேயே ரூ.12,00,000/- முன்பணம் வழங்கப்பட்டது. பின்னர், 15.07.2006 அன்று மேலும் ரூ.18,00,000/- வழங்கப்பட்டு, மொத்தமாக ரூ.30,00,000/- முன்பணமாக பெறப்பட்டதை விற்பனையாளர்கள் ஒப்புக்கொண்டனர்.
ஒப்பந்தத்தில், ஐப்பசி மாத முடிவுக்குள் விற்பனைப் பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், நிலத்தை அளந்து, பழைய ஆவணங்கள் வழங்கப்பட்ட பிறகு பத்திரம் பதிவு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.
பின்னர், விற்பனையாளர்கள் வாங்குபவருக்கு பொது அதிகாரப் பத்திரமும் வழங்கினர். ஆனால், அதை பின்னர் ரத்து செய்தனர். வாங்குபவர் பலமுறை விற்பனைப் பத்திரம் பதிவு செய்து தரக் கோரியதாக கூறப்பட்டது. இறுதியில், 30.04.2009 அன்று சட்ட நோட்டீஸ் அனுப்பி, 15.05.2009 அன்று சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், விற்பனையாளர்கள் வரவில்லை.
இதையடுத்து, குறித்தவகை பரிகாரம் கோரி வழக்கு தொடரப்பட்டது. விசாரணை நீதிமன்றம், வாங்குபவரின் கோரிக்கையை ஏற்று, விற்பனைப் பத்திரம் பதிவு செய்து தர உத்தரவிட்டது.
இதையே எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேல்முறையீட்டில், விற்பனையாளர்கள், “ஒப்பந்தத்தில் காலக்கெடு தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது; வாங்குபவர் குறிப்பிட்ட காலத்திற்குள் மீதித் தொகையை செலுத்தவில்லை; அவர் தயார்நிலையிலும் விருப்பத்திலும் இல்லை; மூன்று ஆண்டுகள் தாமதமாக வழக்கு தொடர்ந்துள்ளார்” என்று வாதிட்டனர்.
ஆனால், வாங்குபவர் தரப்பு, “விற்பனையாளர்களே நிலுவையில் இருந்த பாகப்பிரிவு வழக்கையும் தடை உத்தரவையும் மறைத்து ஒப்பந்தம் செய்தனர்; மேலும், பின்னர் வேறு நபருக்கு சொத்தை விற்றதால் பல வழக்குகள் உருவானது; இதனால் தான் தாமதம் ஏற்பட்டது” என்று வாதிட்டது.
உயர்நீதிமன்றம் முதலில், ஒப்பந்தமும் ரூ.30,00,000/- முன்பணம் பெற்றதும் விற்பனையாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதை முக்கியமாக எடுத்துக் கொண்டது. இதற்காக, R.Ramasubbamma Vs V.Vijayalakshmi என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மேற்கோள் காட்டப்பட்டது. அந்தத் தீர்ப்பில், ஒப்பந்தமும் பெரும்பான்மை முன்பணமும் ஒப்புக்கொள்ளப்பட்டால், வாங்குபவர் தனியாக மேலும் பல ஆதாரங்கள் அளிக்க தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றம் மேலும், இவ்வழக்கில் பல இடையூறு சூழ்நிலைகள் இருந்ததை கவனித்தது. ஒப்பந்தம் செய்யும் நேரத்திலேயே, சொத்தைப் பற்றிய பாகப்பிரிவு வழக்கும் தடை உத்தரவும்நிலுவையில் இருந்தது. இதை விற்பனையாளர்கள் வாங்குபவரிடம் மறைத்திருந்தனர்.
மேலும், விற்பனையாளர்களின் சகோதரர்களின் குடும்பத்தினர், 20.12.2006 அன்று அதே சொத்தை மாரப்பன் என்பவருக்கு விற்றனர். இதனால், வாங்குபவர் அந்த விற்பனை செல்லாது என அறிவிக்க தனி வழக்கும் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த சூழ்நிலைகளே வாங்குபவர் உடனடியாக மீதித் தொகையை செலுத்தாமல் காத்திருக்க காரணம் என்று நீதிமன்றம் கூறியது. ஏனெனில், சொத்து பல வழக்குகளில் சிக்கியிருந்த நிலையில் உடனடியாக முழுத் தொகை செலுத்துவது பாதுகாப்பானதாக இருக்காது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
நீதிமன்றம் மேலும், வாங்குபவர் சொத்துகள் வைத்திருப்பது, போக்குவரத்து தொழில் நடத்துவது, வாகனங்கள் வைத்திருப்பது போன்ற ஆவணங்கள் மூலம், அவர் மீதித் தொகையை செலுத்தும் பொருளாதார திறன் கொண்டவர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறியது.
அதோடு, வாங்குபவர் 30.04.2009 அன்று அனுப்பிய சட்ட நோட்டீஸில், குறிப்பிட்ட நாளும் நேரமும் குறிப்பிடப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வருமாறு அழைத்திருந்தார். ஆனால், விற்பனையாளர்களே வராமல் தவிர்த்தனர் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதனால், ஒப்பந்தத்தை நிறைவேற்ற தவறியவர்கள் வாங்குபவரல்ல
1/2 👇🏻
#KHbyte
"2 கைகள் இல்லையென்றாலும் தன்னம்பிக்கையால் சாதித்த வீரர்.."
ஆசிய பாரா டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற தமிழக வீரர் அரசுக்கு வைக்கும் கோரிக்கைகள்..!
News: Polimer News