அறிவின் அதி உயர்ந்த
பண்பாகப் பிறப்பதுதான் எளிமை.,
தன்னலமும்,தற்பெருமையும்
அகன்ற நற்பண்பாக
எளிமை தோன்றுகிறது.
இந்த எளிமை
ஒருவரை அழகான மனிதராக,
பண்பான மனிதராக
எங்களின் தலைவராக
வீற்றிருக்கு....
@DrKrishnasamy@PTpartyOfficial@DrShyamKK
அதிமுகவினர் கைது;
பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை அவர்கள் கைது; அதைத் தொடர்ந்து பாஜக போராட்டங்களை தடுத்தார்கள்;
நேற்று போராடிய விஜய் அவர்களின் த.வெ.க கட்சி நிர்வாகிகளைக் கைது செய்தனர்;
இன்று அதே வேகத்தில் ஆர்ப்பாட்டத்திற்குச் சென்ற சீமான் அவர்களையும் கைது செய்து இருக்கிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழகக் கழகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையைக் கண்டிக்கும் வகையில் எந்த எதிர்க்கட்சி போராடினாலும் அதைத் தடுப்பதிலேயே தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது.
அதே சமயம் திமுக கூட்டணி கட்சியினரின் போராட்டங்களுக்கு காவல்துறை துணை புரிகிறது; மாலை 6 மணிக்கு மேலும் போராட அனுமதி அளிக்கிறது. இது எவ்வித ஜனநாயகம்? இதுபோன்ற அராஜகங்களை இந்திய அரசியல் சாசனம் அங்கீகரிக்கிறதா?
ஆட்சியாளருக்கு எதிராக சுழற்ற வேண்டிய ‘சாட்டையை’
தனக்குத்தானே சுழற்றி மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பதா?
பல்கலைக்கழக மாணவி பலாத்காரத்திற்கு எதிரான
மக்களின் கோபத்தை மடை மாற்றம் செய்வதா?
குண்டூசி முனையளவு பிரச்சனைகளையும் பூதாகரமாக்கி 10 ஆண்டுகள் குறிப்பாக கடைசி இரண்டு ஆண்டுகள் அரசியல் செய்து ஆட்சிக்கு வந்தவர்களே இன்றைய ஆட்சியாளர்கள். இந்த ஆட்சியில் நடக்கும் ஒவ்வொரு அவலங்களையும் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி மக்களின் மனங்களை ஆட்சி மாற்றத்திற்காக சூடேற்றுவதற்குப் பதிலாக அவற்றைத் தணிக்கும் வகையில் செயல்படுவது ஒரு வகையில் மக்களை ஏமாற்றுவதற்கு ஒப்பான பிழையாகும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்தது எளிதாக கடந்து செல்லக் கூடியது அல்ல; தமிழ்நாடு எங்கும் பொதுமக்கள், மாணவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பதிலாக மீண்டும் மீண்டும் அடையாளப் போராட்டங்களே நடைபெறுகின்றன. அதுபோன்ற போராட்டங்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவி பிரச்சனையைத் தீர்ப்பதற்கோ, வருங்காலங்களில் மாணவிகள் தங்களின் தன்மானத்தை பாதுகாப்பதற்கோ உதவாது. இந்நிலையில் அவற்றிற்கு நேர் எதிர் மாறாக தங்களை வருத்திக் கொள்வதாகச் சொல்லிக் கொண்டு வேடிக்கை போராட்டங்கள் நடத்துவது பிரச்சனைகளின் தன்மையை நீர்த்துப்போகச் செய்வதற்கும், அதை மடைமாற்றம் செய்வதற்குமே உதவும்.!
தமிழக அரசியல்வாதிகள் ஆட்சியில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்டும் அதே வேளையில், அவற்றை அரசியலாகவும் தனிமனித புகழை நிலைநாட்டுவதற்கான தளமாகவும் கருதாமல் - மக்களைப் பாதுகாக்க மானசீகமாக தமிழக அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து போராட முன் வர வேண்டும்.
சாட்டைகளை ஆட்சியாளர்களுக்கு எதிராகச் சுழற்றுங்கள்!
மாணவிகள், மக்களின் போராட்டங்களை,
மழுங்கடிக்க மடை மாற்றம் செய்ய சுழற்றக் கூடாது.!
டாக்டர் கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
27.12.2024
தமிழக அரசியல்வாதிகள் ஆட்சியில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்டும் அதே வேளையில், அவற்றை அரசியலாகவும் தனிமனித புகழை நிலைநாட்டுவதற்கான தளமாகவும் கருதாமல் - மக்களைப் பாதுகாக்க மானசீகமாக தமிழக அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து போராட முன் வர வேண்டும்.
சாட்டைகளை ஆட்சியாளர்களுக்கு எதிராகச் சுழற்றுங்கள்!
மாணவிகள், மக்களின் போராட்டங்களை,
மழுங்கடிக்க மடை மாற்றம் செய்ய சுழற்றக் கூடாது.!
நெல்லை நீதிமன்ற வாசலில் நடந்த கொலை - தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதி மன்றம்.
தென் தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கூலிப்படையினரால் 60க்கு மேற்பட்ட சாதிய கொலைகள் நடந்தபோது எந்த நீதிமன்றமும் விசாரிக்க தாமாக முன்வராதது ஏனோ?
கீழநத்தம் ராஜாமணியை கொலை செய்த மாயாண்டி உட்பட பல கொலைகள் செய்த கூலிப்படை கும்பல்களுக்கு சில மாதங்களிலேயே பினை கொடுப்பதும், வழக்கிலிருந்து விடுதலை செய்வதும் இதே நீதிமன்றங்கள் தானே?
மாஞ்சோலையிலிருந்து மக்களை வெளியேற்றும் காரணிகளாக 1,100 பக்கங்களைக் கொண்ட கோப்புகளை,மாவட்ட நிர்வாகம் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் வழங்கியது
ஆனால் நான் மாஞ்சோலை மக்கள் இந்த மண்ணிற்கு சொந்தக்காரர்கள் என்கிற 6,000 பக்கங்களைக் கொண்ட கோப்புகளை வழங்கியுள்ளேன்
https://t.co/US2GsDyK2p
ஆட்சியில் எல்லாம் பங்கு தர முடியாது,
வேனும்னா TASMAC பார் நடத்துவதில பங்கு தாரேன்,
போய் வழக்கம்போல மத்திய அரசுக்கு எதிரா மாநாடு போடுனு முதலமைச்சர் சொல்லி அனுப்பியிருப்பார் போல 😅
கள்ளச்சாராயத்தால் 60 பறையர்கள் உயிரிழந்தபொழுது அரசை விமர்சிக்காமல் உருட்டிக்கொண்டிருந்து கும்பல்,
இப்போது அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுப் பிரச்சனையில் பறையர்களுக்கான பாதிப்பை திசைதிருப்ப மது ஒழிப்பு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது! தேசிய அளவிலாம்.
திராவிடத்திற்குச் சிறந்த அடிமை!
In reference to a representation from Puthiya Tamilagam party chief Dr K Krishnasamy,
National Tiger Conservation Authority has sought a factual status and action taken report from Tamil Nadu Forest Department, on forced eviction of forest dwelling people from Manjolai Villages which comes under Kalakkad Mundanthurai Tiger Reserve.
Earlier BBTC - a pvt Tea estate company and district administration used nefarious ways to evict people who have lived there for 6 Generations.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்கு இந்த திமர் எங்கு இருந்து வருகிறது? @karthi_kp
தனியார் கம்பெனி கொடுத்த கையூட்டா?
இல்ல உதயநிதியுடன் நெருக்கம் என்ற தைரியமா?
சமத்துவமும், சமநீதியும் அரசு வழங்கும் வேலைவாய்ப்புகள் மூலம் மட்டுமே வந்துவிடாது
தொழில் நிறுவனங்கள் அனைத்தும் சென்னையை சுற்றியே அமைந்துவிட்டால் தென்தமிழகம் எப்படி வளர்ச்சி பெறும்?
இனிமேலாவது தொழில் நிறுவனங்களை தென்தமிழகத்தில் தொடங்க அரசுகள் முன்வர வேண்டும் !
- @DrKrishnasamy
சமீப காலமாக அரசியல் குழப்ப நிலையில் இருந்த தேவேந்திரகுல வேளாளர்களை ,மீண்டும் புதிய தமிழகம் கட்சியின் கீழ் ஒருங்கிணைத்த பெருமை பாஜக-வையே சாரும்!
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எடுத்த அரசியல் முடிவு, தேவேந்திரகுல வேளாளர்களை தாங்கள் யாரென்று நிரூபித்துக் காட்ட உதவியிருக்கிறது!!
@krish_itz@DrKrishnasamy யோவ் அறிவுகெட்டவனே! அப்புறம் உங்களுக்கு ஆட்சி பொறுப்பு ஒரு கேடா?
பாதிக்கப்பட்டவர்களை ஒரு தமிழக குடிமகனாக நினைச்சு கூட என்னனு நீங்க கேட்க மாட்டீங்களா?
யோவ், ED அலுவலகத்துக்குள்ள புகுந்து சோதனை நடத்த தெரியுது,ED அனுப்பின நோட்டிசை என்னனு கேட்க துப்பில்லையா உங்களுக்கு?