அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு எந்தளவிற்கு அலட்சியப் போக்குடனும், சட்டத்திற்குப் புறம்பான வழிகளிலும் செயற்பட்டு வருகிறது என்பதைச் சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்தின் மூலம் அறியலாம். 'ஒரு மாணவி தைரியமாக முன்வந்து தனக்கு நடந்ததை புகாரளிக்கும்போது காவல்துறை பதிவு செய்த FIR பொது வெளியில் பரப்பப்பட்டதற்கு யார் பொறுப்பு?, விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் குற்றவாளி ஒருவர்தான் என்று காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார்?, காவல் ஆணையர் தன்போக்கில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து வழக்கின் விவரங்களைப் பகிரலாமா?' போன்ற நீதிமன்றத்தின் கேள்விகள் ஒரு பாலியல் குற்றத்திற்குரிய அனைத்து சட்ட வழிமுறைகளையும் தமிழ்நாடு அரசு மீறியதை வெளிப்படுத்துகிறது.
பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளாக்கும் போக்கு தொடர்ந்து நடந்துவருகிறது. அந்தப் பெண் தைரியமாகப் புகாரளித்த பிறகே அண்ணா பல்கலைக்கழகத்தில் இப்படி மோசமான குற்றங்கள் தொடர்ந்து நடந்துவருகிறதோ என்கிற சந்தேகம் நமக்கு எழுகிறது.இந்த சம்பவத்தை மறைக்க, பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல்களைப் பரப்புவது, அவர் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்குவது போன்ற அருவெறுப்பான, கேடுகெட்ட, முட்டாள்தனமான செயலாகவே கருத வேண்டியுள்ளது. திமுக-வின் பொறுப்பாளர் ஒருவர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ‘அந்த பெண் தேர்வு செய்த ஆண் நண்பர் சரியானவரா?’ என்கிற ரீதியில் பழமைவாத, பகுத்தறிவுக்கு ஒவ்வாத வகையில் கருத்துக்களை பேசியது அபத்தமானது.பெண்கள் சுதந்திரமாகப் பல சாதனைகளைப் படைத்து வரும் நிலையில் பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகச் சொல்லும் கட்சியின் நபர்கள் இவ்வாறு பேசுவது அபத்தத்தின் உச்சம். அவர்கள் பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானால்?' நூலைப் படிப்பது அவசியம்.
நாங்கள் வழக்கை 48 மணிநேரத்தில் முடித்துவிட்டோம் என்று பேட்டிக் கொடுத்துவரும் காவல்துறை அரசியல் அதிகார வர்கத்தின் அழுத்தத்திற்கு பணிந்து செயல்படும் நிலைமை இனியும் தொடரக்கூடாது. தமிழ்நாடு அரசு ஆரம்பம் முதலே பிரச்சனையை மூடிமறைக்கவும், தன் விளம்பரத்திற்குப் பாதிப்பு ஏற்படாதவாறு வழக்கைச் சரிக்கட்டவும் முயல்கிறதே தவிர, நியாயமான விசாரணை மேற்கொண்டு உரிய நீதியையும் தீர்வையும் அடைய முயலவில்லை. இறுதியாக, நீதித்துறை வந்து தீர்வை எட்ட வேண்டியுள்ளது. காலம் காலமாகப் பெண்ணின் உடலை வைத்தே கட்டமைக்கப்பட்டுள்ள பண்பாட்டு அடக்குமுறையின் தொடர்ச்சியாக இன்று தொடரும் பிரச்சாரங்களுக்கு நீதிமன்றம் தக்க பதிலடி கொடுத்தது அறச்சீற்றத்தின் வெளிப்பாடே.
அரசின் போக்கைக் கண்டித்து அதன் தவறுகளுக்காக மாணவிக்கு உரிய இழப்பீட்டை வழங்க தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு வழக்கை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. அரசின் அனைத்துவிதமான அடக்குமுறைகளையும் எதிர்த்து வாதாடிய வழக்கறிஞர்கள், மாணவர்கள், நேர்மையாக இந்த செய்தியை மக்கள்மன்றத்திற்கு கொண்டு சென்ற ஊடகத்துறையினர் மற்றும் எதிர்க்கட்சியினர் அனைவரின் பங்களிப்பும் வரவேற்கத்தக்கது .
தொடர்ந்து இதுபோன்று நிகழ்ந்துவரும் சம்பவங்களைப் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் விசாரித்து அதனைக் கண்காணிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கதக்கது.'நீதிமன்றம் தலையிட்டுத்தான் விவகாரங்களைத் தீர்க்குமா?' என்ற நிலையில் அரசு நிர்வாகத்தின் மீது பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரிய அச்சம் எழுந்துள்ளது.
ஒரு பெண்ணை அடையாள சிதைப்பு செய்வதால் சாதித்துவிடலாம் என்று நினைக்கும் ஆதிக்கத்தின் சிந்தனை புதிய தலைமுறையின் சிந்தனையால் அடித்து வீழ்த்தப்படும். இதனால், துயருறப்போவது அந்தப் பெண் அல்ல, அவரை சிதைக்க நினைத்தவர்களே என்பதை விரைவில் உணர்வார்கள்.. அப்போது, பாதிக்கப்பட்டவரை சக தோழியாக, சகோதரியாக ஏந்தி சமூகம் ஒன்றுபட்டு நிற்கும்.
குற்றம் நடைபெறாத வண்ணம் மக்களை காக்கும் அரசு சிறந்த அரசு. ஏதேனும் குற்றம் நடந்தாலும் அந்த குற்றத்தின் காரணிகளை வெளிப்படைத்தன்மையுடன் அணுகும் அரசே நேர்மையான அரசு. இன்றைய நிலையில் தமிழக அரசின் செயல்பாடு சிறந்த அரசாகவும் இல்லை… நேர்மையான அரசாகவும் இல்லை என்பதுதான் வேதனை!
#யார்_அந்த_SIR #VoiceOfCommons
பெறுநர்;
எழுச்சித் தமிழர் திரு.தொல். திருமாவளவன்,
தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,
பொருள்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக விலகுவது தொடர்பாக,
நான் என்றும் மதிக்கும் அன்புத் தலைவருக்கு வணக்கம்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். தங்களுடைய சீரிய எண்ணத்தின்பால் எனக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தீர்கள். அந்த பொறுப்புகளோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் கட்சி பணியாற்றினேன். சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய கட்டமைப்புகள், அதன் அடித்தளம், தொடர்ந்து நீளும் அதன் அதிகாரக் கரங்கள், பாதிக்கப்படும் மக்களின் துயர்கள் ஆகியவற்றை நான் ஆற்றிய களப்பணிகளில் உணர்ந்தேன். அதற்கு எதிரான செயற்திட்டங்களைக் கொள்கை ரீதியாக வகுத்து என்னைச் செயற்பட வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
எளிய மக்கள் குறிப்பாக, 'சாதிய ஆதிக்கத்தினால் காலம்காலமாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தை அடைய வேண்டும்' என்ற நோக்கில்தான் நான் என்னை நமது கட்சியில் இணைத்துக்கொண்டேன். விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை.
ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன்.
இனி வருங்காலங்களில், புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதை போல “அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புங்கள்” என்கிற அடிப்பையில் 'சாதி ஒழிப்பு, சமூக நீதி, எளிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் என்ற நிலைப்பாட்டோடு மதப் பெரும்பான்மைவாதம், பெண்ணடிமைத்தனம், மக்களை வஞ்சிக்கும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும்' அரசியல் போராட்டங்களில் தங்களுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன். எனவே, என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன்.
அரசியல் களத்தில் என்னைப் பயணப்பட வைத்து, நேரடியாகக் களமாடச் செய்த தங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன். இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்த்துகளுடன், மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும்...
வாய்மையே வெல்லும்!
நன்றி!
ஆதவ் அர்ஜுனா
நான் 15 வயதில் அரசியல் அறிவியலில் ஈர்க்கப்பட்டு, பிறகு சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் அந்த பயணத்தைத் தொடங்கியது முதல் தற்போது வரை பாதை விலகியது இல்லை. எனது கொள்கை வழிகாட்டியாகப் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரைத் தேர்ந்தெடுத்ததன் அடிப்படையில் தேர்தல் அரசியல் பிரச்சார வியூக வடிவமைப்பில் ஈடுபட்டு சமத்துவம், சமூகநீதி, சமூக விடுதலை எனச் சமரசமற்று ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி -பொருளாதார வளர்ச்சிக்காக இயங்கிக்கொண்டிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் திருமாவளவன் உடன் என்னை இணைத்துக் கொண்டேன். எனது நோக்கம் பாகுபாட்டிற்கு எதிரானது. எங்கள் குரல் சாமானிய மக்களின் குரலாகப் பிரதிபலிக்கும்.
கடைசி மனிதனுக்கும் சனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்ற சமரசமற்ற கோட்பாட்டுடன் இயங்கும் தலைவரே என்னை அங்கீகரித்திருப்பது, எளிய மக்களுக்கான தேர்தல் அரசியல் அதிகாரத்தை நோக்கிச் செயல்படும் எனது இந்த அரசியல் பயணத்தை உற்சாகப்படுத்துகிறது. எனது பயணம் என்றும் எளிய மக்களுக்கான தேர்தல் அரசியலை உறுதிப்படுத்துவதிலும், அதற்கான வியூக பங்களிப்பிலும் தொடரும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
At the age of 15, I was drawn to political science, and from the time I began my journey at Madras Christian College, I have never strayed from the path. Inspired by revolutionary leaders Ambedkar, Periyar, and Anna, I got involved in election campaign strategy design, working uncompromisingly for equality, social justice, and the educational and economic development of the oppressed. My association with Thalaivar Thirumavalavan, the leader of the VCK, who is uncompromising in his commitment to these causes, has been purely ideological. I am committed to fighting against discrimination. Our voice will amplify the voices of the common people.
Being recognized by a leader who is unwavering in his belief in democracy for the last man and power for the common people is truly inspiring. This encourages my political journey towards electoral politics that works for the empowerment of the ordinary people. My journey will forever be dedicated to securing electoral politics for the common people and contributing strategically towards that goal.
என்னுடைய பதவியை ஒரே ஒரு எம்பியை தகுதி நீக்கம் செய்தீர்கள்..இப்போ உங்களின் 63 எம்பிக்களை காணவில்லை
எங்கடா போனானுங்க?
கழுவி கழுவி ஊத்துகிறார்
ருத்ர தாண்டவமாடிய மேற்கு வங்கத்தின் பத்ரகாளி....🔥
#WATCH | நான் என்னுடைய பதவியை இழந்துவிட்டேன், வீட்டை இழந்துவிட்டேன். ஒரு அறுவை சிகிச்சையின்போது எனது கர்ப்பப்பையை இழந்துவிட்டேன்.
நான் எதைப் பெற்றேன் என தெரியுமா?
ராகுல் சொன்னது போல பயத்தில் இருந்து விடுதலை பெற்றேன். உங்களை பார்த்து நான் பயப்படமாட்டேன்!
-மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா பேச்சு!
#MahuaMoitra | #LokSabha | #KalaignarSeithigal
'ஒரு சமூகம் முன்னேறக் கல்வியில் முன்னேற வேண்டும்' என்ற அம்பேத்கரின் கனவை நிறைவேற்றப் போகிறவர்களாகச் சிதம்பரம் அருகேயுள்ள கிள்ளை பேரூராட்சி கிராமத்தின் இருளர் சமூக குழந்தைகள் இருக்கிறார்கள். 'டாக்டர், கலெக்டர், இன்ஜினியர்...' என தங்கள் கனவுகளை இருளர் சமூக குழந்தைகள் மைக் பிடித்து சொன்னபோது வியந்து போனேன். அவர்கள் ஆர்வத்தை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகப்படுத்தினேன். அவர்களின் நாளைய வெற்றிப் பயணத்திற்கு எல்லா வகையிலும் நான் துணை நிற்பேன் என்கிற உறுதியை அவர்களுக்கு 'உளமாற' வழங்கினேன். அவர்களிடமிருந்து நான் விலகி வர முடியாத அளவிற்கு அவர்களின் அன்பும், மகிழ்ச்சியும் என்னை நெகிழ வைத்தது...
'குரலற்றவர்களின் குரலாக இருக்க வேண்டும் ' என்கிற என் அரசியல் வாழ்வின் லட்சியத்திற்கு உரமிடும் வகையில் எனது முதல் தேர்தல் பிரச்சாரமே இருளர் இன மக்களோடு தொடங்கியதை நினைத்து என்றும் மகிழ்வேன்.