Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் @CMOTamilnadu 🙏🏻❤️
நான் பாஸ்போர்ட்க்கு ₹1500 கட்டினேன். அதற்குப் பிறகு பாஸ்போர்ட் verificationக்கு போலீஸ் வழக்கமாக ₹500 கேட்பார்கள் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். அதனால் நானும் ₹500 எடுத்துச் சென்றேன்.
ஆனால் போலீஸ் ₹500 கேட்கவே இல்லை. சரி, என்கிட்ட தான் கேக்கலையோ என்று என் fiancée-யிடம் கேட்டேன்; அவர்களிடமும் கேட்கவில்லை💯
இதுதான் மக்கள் மற்றும் நாங்கள் எதிர்பார்த்த மாற்றம். நன்றி அண்ணா. லஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை வந்து விட்டது🫡💯
யாரையுமே நம்பல...✋️🛑
ஆதவ் - VCK
நிர்மல் குமார் - BJP
செங்கோட்டையன் ஐயா - ADMK
ஜான் ஆரோக்யசாமி - வேறு கட்சி ஆலோசகராக இருந்தவர்
இப்டி TVK-வில் இணைந்த நிறைய பேர் எதோ ஒரு கட்சில முன்னாடி இருந்தவங்கதா
இவங்கலாம் TVK-வில் இணைறப்ப ஏகப்பட்ட விமர்சனம் பண்ணாங்க
சிலபேர் ஆலோசகர் சரியில்ல, strategy தப்பா இருக்கு, கட்சில இவங்க ஆதிக்கம் இருக்கு அவங்கள ஓரம் கட்றாங்கன்னும் விமர்சனங்கள் வந்தது
ஆனா எனக்கு யார் சொன்னதையும் நம்பலாமா வேண்டாமாங்கறத தாண்டி...நா நம்பனது ஒரே ஒருத்தர... என் தளபதிய...
என்ன சுத்தி இருக்கறவங்க கிட்டயும் 2026 தேர்தலுக்கு அப்றம் முடிவு பண்ணலாம்...அதுவரைக்கும் தளபதியையும் அவரோட தலைமையையும் மட்டும் முழுசா நம்புவோம்னு சொன்னேன்
நானும் அப்டிதான் இருந்தேன்
கடைசில 25- 30% ஓட்டு & எதிர்க்கட்சிங்கற நிறையபேரோட உச்சபட்ச எதிர்பார்ப்பையே மீறி ஜெயிச்சாரு என் தலைவன்
விமர்சனம் பண்ணவங்கெல்லாம் அமைதி ஆயிட்டாங்க
இப்ப அடுத்து அதிமுக MLA வந்து இணைறப்பயும் விமர்சனம் பண்றாங்க
இது குதிரை பேரம் - இனிமே தூயசக்தினுலா சொல்லாதீங்கன்னு சொல்றாங்க
என்னோட தலைவன் ADMK-ல இருக்க MLA-க்கு minister பதவி தரன்னு சொல்லிருந்தாலே சின்ன சின்ன கட்சி office-க்கு நடக்காம சுலபமா strong govt அமச்சுருக்கலாம்
ஆனா இடதுசாரிபக்கம் போனாரு...போனப்பயும் ADMK-க்கு minister பதவி தரல...Resign பண்ணிட்டு திருப்பியும் தேர்தல்ல நின்னு மக்கள் சக்திய முடிவு பண்ண விட்றாரு...இதுதான் ஜனநாயகம்
இந்த அளவு நேர்மை இதே நிலைமைல வேற கட்சி ஆட்சி அமச்சுருந்தா பண்ணினுப்பாங்கலானா சத்தியமா இல்ல
நமக்கு தேவ சமரசமே இல்லாத நிலையான நல்ல ஆட்சி.
எந்த அளவுக்கு பெரும்பான்மை இருக்குமோ அந்த அளவுக்கு strong ஆ கொடுக்கலாம்.
அதுக்காக ஜனநாயகரீதியா என்ன பண்ணாலும் ok
அததாண்டி யார கட்சில சேத்துக்கராரு யாருக்கு பதவி தராரு இதெல்லாம் அவரோட விருப்பம். அதுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கணும்
வாய்ப்பு கொடுத்து பாத்து சரிவரலனா கேள்வி கேட்டு விமர்சனம் பண்றதுல ஒரு நியாயம் இருக்கு
மத்தபடி இந்த குதிரைபேரம்னு விமர்சனம் பண்றவனையும் சரி நீங்க தூயசக்தி இல்லன்னு சொல்றவனையும் சரி மக்கள் ஒரு பொருட்டா கூட மதிக்காம கடந்துதா போவாங்க
ஊரே ஒண்ணு சேந்து விமர்சனம் பண்ணப்பயே விஜய் கூட இருந்த மக்கள்,
இப்ப ஒரு தூய ஆட்சி குதிரை வேகத்துல நடந்துட்டு இருக்கறத பாத்துட்டு இன்னும் எத்தன மக்கள் கூட நிக்க வருவாங்கன்னு நா சொல்லி தெரியனுமா என்ன !
அதும் தளபதிலா இந்த மாதிரி வெத்து வேட்டு விமர்சனத்த கண்டுக்க கூட மாட்டாரு
நதி போல அவரோட வேலைய செஞ்சுட்டு போயிட்டே இருப்பாரு
அவருக்கு அரசியலும் தெரியும் ஆட்சியும் தெரியும்....
இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து, லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள். மாண்புமிகு முதலமைச்சர் திரு @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
The people’s wish has come true, and you’re off with a banger start. Onwards and upwards brother ♥️
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை
1/2
C. ஜோசப் விஜய் எனும் நான்...
உளமாற உறுதி கூறுகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.
#CMJosephVijay
பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு திட்டங்களுக்கு வரவேற்பு: 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சமூகநீதி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்!
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் அவர்கள், பெண்களுக்கு எதிராக குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள்கள் புழக்கத்தை ஒழிக்க காவல்துறையில் தனி அலகுகள் ஆகியவற்றை அமைப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறார். தமிழ்நாட்டின் இன்றைய தலையாயத் தேவைகள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், மாநிலம் முழுவதும் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டியதும் தான். அவற்றுக்கு வகை செய்யும் திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஒழிக்கப்பட வேண்டிய போதைப் பொருள்கள் கஞ்சா, அபின், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் மட்டுமல்ல... அரசின் சார்பில் விற்பனை செய்யப்படும் மது வகைகளும் தான். மதுவால் தான் ஆண்டுக்கு 20 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன; லட்சக்கணக்கான குடும்பங்கள் தலைவர்களை இழந்து நடுத்தெருவுக்கு வருகின்றன. எனவே டாஸ்மாக் மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழகத்தின் இன்றைய முக்கியத் தேவைகளில் இன்னொன்று சாதிவாரி சர்வே எனப்படும் சமூகநீதி கணக்கெடுப்பை நடத்துவதாகும். சமூகநீதியில் தமிழகத்தை தனித்துவப்படுத்தி காட்டுவது 69% இட ஒதுக்கீடு தான். ஆனால், உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் கூட சாதிவாரி சர்வே எனப்படும் சமூகநீதிக் கணக்கெடுப்பு நடத்தப்படாததால், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் காரணமாக, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதைத் தடுக்க சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
ஆளும் த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையின் முதல் வாக்குறுதியே,’’ ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூகநீதி என்பது த.வெ.க.வின் கொள்கை. இதை உறுதி செய்ய சாதிவாரி கணக்கீட்டு சர்வே மேற்கொள்ளப்படும்” என்பது தான். அந்த வகையில் சமூகநீதியைக் காப்பதில் ஆளும் த.வெ.க.வும் உடன்படுகிறது.
எனவே, இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி சர்வே எனப்படும் சமூகநீதி கணக்கெடுப்பை நடத்தவும், அதனடிப்படையில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பது, உரிய அளவில் அனைத்து சமூகங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அளிப்பது ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் புதிய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
#SocialJustice
@CMOTamilnadu@TVKVijayHQ