மனம் பொருந்திய மனிதர்களோடு
உறவாக இருங்கள்;
அப்போது தான்
வாழ்வின் அழகு என்னவென்று தெரியும்.
#Vannadasan Sivasankaran S
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் அப்பா ...
பக்கத்தில் இருக்கும் பெட்டிக் கடையில்
வெட்டும் புலி தீப்பெட்டி புத்தம் புதிதாய்
வாங்கி உங்கள் கையில் கொடுப்பேன்.
அப்புறம் நீங்கள் எனக்காகக் கட்டிய
அரக்கு மாளிகையின் கதவைத் திறப்பேன்.
இதைக் கூட உங்களுக்கு நான் செய்யாவிட்டால் எப்பட��?
#வண்ணதாசன்
"ஒரு வங்கியையே சொந்தமாக வைத்திருப்பவர், ஐந்துக்கும் பத்துக்கும் அடுத்தவரிடம் கையேந்துவது போலத் தமிழ்மொழி என்னும் வங்கியில் ஏராளமான கலைச் சொற்கள் குவிந்திருக்க, நாம் அடுத்த மொழியிடம் சொற்களை பிச்சை எடுக்கிறோம்"
- சு. தியோடர் பாஸ்கரன்
#வெதக
எதுவும் புரியாமல் இல்லை.
ஒரு கட்டத்தில் மிகச் சுலபமாக
எல்லாம் புரிந்து விடவே செய்கிறது.
இந்த வாழ்க்கை சிக்கல்கள் நிறைந்தது.
ஆனால் சிக்கல்கள் மட்டுமே அல்ல.
சந்தோஷமும் நிறைந்தது.
எது எப்படி ஆயினும் இந்த வாழ்க்கை
வெறுப்புக்குரியதாகி விடவில்லை...
#வண்ணதாசன்
பக்கத்தில் இருக்கும் பெட்டிக் கடையில்
வெட்டும் புலி தீப்பெட்டி புத்தம் புதிதாய்
வாங்கி உங்கள் கையில் கொடுப்பேன்.
அப்புறம் நீங்கள் எனக்காகக் கட்டிய
அரக்கு மாளிகையின் கதவைத் திறப்பேன்.
இதைக் கூட உங்களுக்கு நான் செய்யாவிட்டால் எப்படி?
#Vannadasan