#Lingam - Watchable ⭐️⭐️⭐️ (3/5)
OTT: Jio Hotstar
Language: Tamil
நாகர்கோயில் லிங்கம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இந்தக் கதை குறித்து நிறைய Blog-கள் இருக்கின்றன. இல்லையென்றால் இந்த தொடரைப் பார்த்தே தெரிந்துகொள்ளலாம்.
ஒரு Blog படிப்பதற்கும், அதை காட்சிகளாக பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
சரி, தொடரைப் பற்றி பார்ப்போம்…
இந்த தொடரின் கதையை ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு கபடி வீரர் எப்படி ஒரு ரவுடியாக மாறினார் என்பதுதான்.
80-90களின் காலகட்டத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அந்தக் காலத்திற்கேற்ற உடை, தோற்றம் மற்றும் சூழலை நன்றாக உருவாக்கியிருக்கிறார்கள்.
Nivas K. Prasanna-வின் பின்னணி இசை சிறப்பாக உள்ளது.
கதாபாத்திரத்திற்கு கதிர் மிகவும் பொருத்தமாக இருக்கிறார். 🤝
இந்த தொடரின் மிகப்பெரிய பலவீனம் அதன் திரைக்கதை.
இது லிங்கத்தின் உண்மைக் கதையாக இருந்தாலும், இதே மாதிரியான கதைக்களத்தை பல படங்களில் ஏற்கனவே பார்த்த அனுபவம் இருப்பதால், பல இடங்களில் புதுமை குறைவாக உணரப்படுகிறது. அதுவே தொடரை சற்று சலிப்படைய வைக்கிறது.
திவ்யா பாரதி அழகாக இருக்கிறார். ஆனால், கதாபாத்திரத்திற்கு அவர் முழுமையாக பொருந்தியிருக்கிறாரா என்ற சந்தேகம் இருக்கிறது.
காதல் காட்சிகள் தொடரின் ஓட்டத்தை பல இடங்களில் தடை செய்கின்றன.
பூர்ணிமா ரவி கதாபாத்திரம் ஏன் வந்தது, எங்கு சென்றது என்ற குழப்பம் இறுதிவரை நீடிக்கிறது.
மேலும், பல காட்சிகளை இன்னும் சுருக்கமாக வைத்திருக்கலாம்.
தொடரில் அதிகளவில் இரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளும், ஆபாச வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. அதனால், தனியாக பார்ப்பது நல்லது.
கடைசியில், எந்த முடிவும் கொடுக்காமல் தொடரை அப்படியே நிறுத்திவிட்டார்கள். இது அடுத்த சீசனுக்கான வணிக நோக்கத்திற்காகவே என்பது தெளிவாக தெரிகிறது.
ஆனால், லிங்கத்தின் உண்மைக் கதை தெரிந்தவர்களுக்கு இந்தத் தொடர் எப்படி முடியும் என்பதும் தெரிந்திருக்கும்.
அதிக எதிர்பார்ப்புடன் பார்க்க வேண்டாம் மக்கா. அந்த எதிர்பார்ப்பை இந்த தொடர் முழுமையாக பூர்த்தி செய்யாமல் ஏமாற்ற வாய்ப்புகள் அதிகம்.
- Not part of the squad.
- Came as the replacement for Parag.
- Made the Vice Captain.
- Scored a Hundred on tricky pitch.
- Important Run out.
- Won the Player of the Match.
ONE & ONLY RUTURAJ GAIKWAD 🥶