இமையம் சரிந்தது..
தமிழ்த்திரையில் எளிய மக்களை, எளிய கிராமங்களை, ஊர்ப்புறங்களைக் காட்டி தமிழ்மக்களின் பண்பாட்டுக் கூறுகளைக் காட்சிப்படுத்திய இயக்குநர் இமயம். இவரது படங்களில் வரும் காதல் இளம் பருவத்தின் வடிகாலாக அமைந்தது. 80களில் விடலைப் பருவத்திலிருந்து இளைஞனாக மாறும் அந்த இனம்புரியாத மாற்றக் காலம் பாரதிராஜா, இளையராஜா இன்றி இல்லை. பாரதிராஜா, இளையராஜா, செல்வராஜ், நிவாஸ் கூட்டணி கலக்கிய காலக்கட்டம். புதுச்சேரி அஜந்தா தியேட்டரில் அலைகள் ஓய்வதில்லை படத்தைப் பலமுறைப் பார்த்த ஞாபகம். சாதிய முரண்களை, அது சொந்த சாதியாக இருந்தாலும் அதைக் காட்சிப்படுத்தி, மக்கள் சாதிய அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டுமென்ற எண்ணத்தை விதைத்தவர். இவரை எல்லாம் சந்திக்க முடியுமா என்ற ஏங்கிய காலம் உண்டு. காலையில் தோழர் காளிதாஸ் துக்கத்தில் எழுப்பி 'தோழர், பாரதிராஜா இறந்துவிட்டார். அவரோடு ராம் இண்டர்நேஷனல் ஓட்டலில் பேசியது நினைவிருக்கா?' என்றார். எப்படி மறக்க முடியும். ஈழத்தில் இறுதிப் போர் நடந்த காலம். சீமான் கைது செய்யப்பட்டு புதுச்சேரி சிறையில் இருந்தார். அவரைக் காண பாரதிராஜா, மணிவண்ணன் இரு ஆளுமைகளும் வந்திருந்தனர். அப்போது மூன்றரை மணிநேரம் உரையாடினோம். 'லோகு. அய்யப்பன் நல்ல விளைஞ்ச கள் கொடுத்தார்' என பாரதிராஜா பேச்சைத் தொடங்கி, அது ஈழப் போர், அதன் பின்னணி, சர்வதேச சதி, காங்கிரஸ் - திமுகவின் துரோகம், தமிழக அரசியல் கட்சிகள், அறிவுஜீவிகளின் நிலை என்று விரிவாக அலசினோம். தன் குருவின் முன் இயக்குநர் மணிவண்ணன் மிகுந்த மரியாதையுடனும், அடக்கமாகவும் பேசியது மறக்க முடியாதது. மதிய உணவு உண்டோம். மாலையில் விடைபெற்று சென்னை சென்றனர். இன்று நம்மோடு அவர் இல்லை. தன் மகனின் இறப்பு இவரின் மரணத்தை வேகப்படுத்தியது. புத்திரசோகத்தை மிஞ்சிய துயரம் வேறொன்றும் இல்லை. அவரது திரைக்காவியங்கள் காலத்தைத் தாண்டி நிற்கும் தகுதி வாய்ந்தவை. அதனுடன் 'என் இனிய தமிழ் மக்களே' என்ற அந்தக் கரகரக் குரலோடு பாரதிராஜாவும் நம்மோடு வாழ்வார். அவர் மறையமாட்டார். #ஆழ்ந்தஇரங்கல்
#கோ_சுகுமாரன்
#KoSugumaran
Federation urges Puducherry government to halt issuance of community certificates based on mother’s caste
Published - June 02, 2026 03:51 pm IST - PUDUCHERRY
The Hindu Bureau
The Federation for People’s Rights (FPR) has urged the Puducherry Government to take immediate steps to expedite the resolution of cases it had filed in the Supreme Court appealing against the order of the Madras High Court that directed issuance of community certificates based on the mother’s caste.
In a statement, G. Sugumaran, secretary of the Federation said the Madras High Court had ordered the issuance of certificates based on the mother’s caste in Puducherry at the commencement of the last academic year. The Puducherry Government had appealed against the order in the apex court. The cases have been pending in the Supreme Court for over a year.
Further, the Puducherry Government also sought the opinion of the Union Ministry of Home Affairs regarding the issuance of community certificates based on the mother’s caste. The MHA, citing various Supreme Court judgments, had clearly advised that certificates should not be issued.
The Federation said that a few individuals have obtained orders from the Madras High Court directing issuance of such community certificates. This has created anxiety among the local residents and raised concerns that persons from Tamil Nadu are undermining the opportunities of the locals.
The Puducherry government should expedite the cases in the apex court and also halt the issuance of community certificates based on the mother’s caste, he said.
#கோ_சுகுமாரன்
#KoSugumaran
#மக்கள்உரிமைக்கூட்டமைப்பு
#federationforpeoplesrights
ஊடக அறிக்கை
தாய்வழிச் சாதிச் சான்று வழங்குவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு தொடர்ந்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்:
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (01.06.2026) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் தாய்வழிச் சாதிச் சான்று வழங்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு தொடர்ந்த வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வலியுறுத்துகிறோம்.
சென்ற கல்வி ஆண்டின் தொடக்கத்தில் தாய்வழிச் சாதிச் சான்று வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், கல்வி, வேலைவாய்ப்பில் மண்ணின் மைந்தர்களாகிய பூர்வகுடி மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் என கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுகளை ரத்து செய்ய கோரி புதுச்சேரி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகள் கடந்த ஓராண்டுகளாக விசாரணைக்கு வராமல் நிலுவையில் உள்ளன.
மேலும், புதுச்சேரி அரசு தாய்வழிச் சாதிச் சான்று வழங்குவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கருத்துரைக் கேட்டது. மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும், மத்திய அரசின் உத்தரவுகளையும் சுட்டிக்காட்டி தாய்வழிச் சாதிச் சான்று வழங்கக் கூடாது என தெளிவுபடுத்தி கருத்துரை வழங்கியது.
இந்நிலையில், இந்த ஆண்டும் சிலர் உயர்நீதிமன்றத்தை நாடி தாய்வழிச் சாதிச் சான்று வழங்க உத்தரவுப் பெற்றுள்ளனர். இது மண்ணின் மைந்தர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவம், பொறியியல் படிப்புகள் உள்ளிட்ட உயர்கல்வி பறிபோகும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பலரும் தாய்வழிச் சாதிச் சான்று பெற்று மண்ணின் மைந்தர்களின் கல்வி, வேலைவாய்ப்பை கபளீகரம் செய்ய வழிவகுக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் ஓராண்டாக வழக்கை நடத்தி முடிக்காத அரசு வழக்கறிஞரை மாற்றி வேறு ஒரு அரசு வழக்கறிஞரை பணியமர்த்தி வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒருவரை (Designated Senior Advocate) நியமித்து தாய்வழிச் சாதிச் சான்று வழக்கை நடத்த வேண்டும். அதுவரையில் தாய்வழிச் சாதிச் சான்று வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
இதுகுறித்து முதலமைச்சர், தலைமைச் செயலர், வருவாய்த்துறைச் செயலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்ப உள்ளோம்.
#கோ_சுகுமாரன்
#KoSugumaran
#மக்கள்உரிமைக்கூட்டமைப்பு
#federationforpeoplesrights
திருவள்ளுவருக்குக் காவி வண்ணம் பூசி ஒரு மதத்தைச் சார்ந்தவராக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. திருக்குறள் உலகப் பொது மறை. திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். தமிழின் அடையாளம், தமிழரின் பெருமை அவர்.
#கோ_சுகுமாரன்#KoSugumaran
பழங்குடி இருளர் 7 பேரை பிடித்துச் சட்டவிரோதக் காவலில் வைத்து, அடித்துத் துன்புறுத்திப் பொய் வழக்குப் போட்டு, சிறையில் அடைத்தார் புதுச்சேரி காட்டேரிகுப்பம் காவல்நிலையப் பெண் உதவி ஆய்வாளர். இதுகுறித்த உண்மை அறியும் குழுவில் இடம்பெற்று, மனித உரிமைப் பணியில் மறைந்தப் பேராசிரியர் மு.திருமாவளவன்..
#கோ_சுகுமாரன்
#KoSugumaran
https://t.co/DXlOVv6YnY
பேராசிரியர் மு.திருமாவளவன் : தொப்பியும், ஜோல்னா பையுமே இவரது அடையாளம். ஓய்வுப் பெற்ற கல்லூரிப் பேராசிரியர். மார்க்சிய இலெனினிய கட்சியின் (வினோத்மிஸ்ரா அணி) செயல்பாடுகளில் முன்னணியில் இருந்தவர். கவிஞர் இன்குலாப் உடன் நெருங்கிப் பயணித்தவர். கல்லூரி ஆசிரியர் சங்கத்தில் செயல்பட்டவர். பேராசிரியர் சிவக்குமார் இவரும் இரட்டையர்கள் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கம். மாணவர்கள் நலனுக்காக அரும்பாடுபட்டவர். பேராசிரியர்கள் சிவக்குமார், அ.மார்க்ஸ், கல்யாணி, கோச்சடை, பழமலய், மறைந்த கேசவன் என இடதுசாரி சிந்தனையாளர்கள், செயற்பாட்டார்களுடன் நெருக்க இருந்தவர். நேரில் பார்த்தால் அந்தச் சிரிப்புடன் தோளில் தட்டி பேசித் தோழமையை வெளிப்படுத்துவார். மனித உரிமைச் செயற்பாடுகளை வெகுவாகப் பாட்டுவார். எங்கள் (அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்) இருவரையும் 'நீங்கள் Fire Brandயா' என்று சொல்லி ஊக்கப்படுத்துவார். 1965-இல் இந்தி எதிர்ப்புப் போரில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஊர்வலத்தின் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர் இராசேந்திரன் கொல்லப்பட்டு ஈகியானார். அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களில் இவரும் ஒருவர். இதுகுறித்து உங்களைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று கைப்பேசியில் அழைத்துப் பேசியது கடைசிப் பேச்சாக அமைந்துவிட்டது துயரம். அன்று மாணவப் பருவத்தில் உள்ளிருந்துக் கிளம்பிய போராட்டத் தீ நேற்று அணைந்துவிட்டது. உடல்நிலைக் காரணமாக அவரது இறுதி நிகழ்வில்கூட கலந்துகொள்ள முடியாமல் போனது துயரத்திலும் துயரம். தோழருக்கு #செவ்வணக்கம்
#கோ_சுகுமாரன்
#KoSugumaran
வரவேற்போம்!
தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது 69 விழுக்காட்டைக் காக்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் அறிக்கைக் கேட்டார். அப்போது ஆணையத்தின் தலைவராக இருந்த நீதிநாயகம் திரு. எம்.எஸ்.ஜனார்த்தனம் விரிவான அறிக்கை ஒன்றை அளித்தார். முதலமைச்சர் ஜெயலலிதா அவரை நேரில் அழைத்து விவாதித்தார். என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். உடனடியாக 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்காகப் புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்றார். மறுநாளே அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. 69 விழுக்காடு இடஒதுக்கீடு காக்கப்பட்டது.
#கோ_சுகுமாரன்
#KoSugumaran
தி இந்து ஆங்கில நாளேட்டில் மூத்த இதழாளர் பி.கோலப்பன் "A new brand of politics in Tamilnadu" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் முந்தைய ஆட்சிகளில் செய்யாத ஒன்றான 8 பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக ஆக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத திமுக ஆதரவு 'paid suodo intellectuals' பதில் அளிக்கின்றோம் என்ற பெயரில் காழ்ப்புணர்ச்சியை கக்கி வருகின்றனர். பாவமாக இருக்கிறது.
#கோ_சுகுமாரன்
#KoSugumaran
அரசியலில் தாத்தாக்கள், அப்பாக்கள், 'பூமர் அங்கிள்கள்' காலம் முடிந்துவிட்டது. இனி இளைஞர்கள் கையில்தான் அரசியல். இதில் நல்லதும், கெட்டதும் இருக்கிறது.
#கோ_சுகுமாரன்#KoSugumaran#GenZ
திமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்திய அரசை ஆதரிக்கும் என விவாதம் எழுந்துள்ளது. திமுகவிற்கு மக்களவையில் 22 உறுப்பினர்கள் உள்ளனர்.
#கோ_சுகுமாரன்#KoSugumaran
https://t.co/UkBWmxq6Ex
பள்ளிநெலியனூர் பக்கரி அவர்கள் காலமான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. மார்க்சிய இலெனினிய இயக்கத்தில் தோழர் செந்தாரகை அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர். பாடல்கள் பாடி மக்களிடத்தில் கொள்கையை விதைத்தவர். தென்னார்க்காடு மாவட்டம் என்று இருந்த விழுப்புரம், கடலூர் மாவட்ட சிற்றூர்களில் பரப்புரை செய்து இயக்கத்திற்கு வலுவூட்டிய அரசியல் செயற்பாட்டாளர். #வீரவணக்கம்
#கோ_சுகுமாரன்
#KoSugumaran
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் திரு. காதர் மெகிதீன் அவர்கள் ஊடகத்தினர் கேள்விகளுக்குப் பதில் அளித்த முறை, தேர்ந்த அரசியல் தலைவருக்கான நிதானம், எளிய சொற்களில், பாசாங்கற்ற, உண்மையான பதில்களாக இருந்தன. கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவர்களோடு நெருக்கமாக இருந்து அரசியல் செய்த மூத்த தலைவர். #வாழ்த்துகள்
விசிக ஆட்சியில் பங்கெடுப்பது காலத்தின் கட்டாயம். ஒரு கட்சி அதிகாரத்தில் இருந்தால் நிறைய செய்ய முடியும். ஆட்சி தவறான பாதையில் போனால் உள்ளிருந்துப் போராடி சரி செய்ய முடியும். கட்சி உடைந்தாலும் கவலைப்பட தேவையில்லை. இதுபோன்று நெருக்கடியான காலத்தில் கட்சியில் இருந்து விலகியவர்கள் காணாமல் போவார்கள் என்பதுதான் கடந்தகால வரலாறு. சில நாட்கள் பரபரப்பான செய்தி வரும். அவ்வளவுதான்.
#கோ_சுகுமாரன்
#KoSugumaran
இராசேந்திரசோழன் சிலை பொன்னேரியில் அமைய வேண்டும்.
சோழர்களின் கங்கை வெற்றியின் நினைவாக வெட்டப்பட்ட சோழகங்கம் எனும் நீர்மயமான வெற்றித் தூண்.
இது சர்வதேசப் பறவைகளின் வலசைத் தடத்தில் உள்ளது.
வரலாற்றில் மனித முயற்சியால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நீர்நிலை அமைப்பு.
தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கு இது துணை செய்யும்.
பரதபிரதமர் திரு.மோடி அவர்கள் கங்கை நீரைக் கொண்டு வந்து இந்த ஏரியில் தான் தரையிறங்கினார்.
இந்திய அரசு இவற்றைக் கவனத்தில் கொண்டு பொன்னேரியைத் தூர்வாரி புனரமைத்து சிலை நிறுவி சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்.
Rajaram Komagan பதிவு.
#கோ_சுகுமாரன்
#KoSugumaran
#gkcpuram #gangaikonadacholapuram #PrimeMinisterNarendraModi #archaeological #RajendraChola #TNPolitics #TNGovt