அதிமுக ஆட்சிக்காலம் வேலைவாய்ப்பை உருவாக்கிய ஆட்சி என்றால், திமுக ஆட்சியில் ஏன் இத்தனை சரிவு?
மின்சார வாரியத்தில் அம்பலமானது திமுகவின் தோல்வி!
TNEB-யில் அம்பலமானது திமுகவின் வேலைவாய்ப்புத் தோல்வி!
🟢 அதிமுக ஆட்சியில்: 19,767 நியமனங்கள்!
🔴 திமுக ஆட்சியில்: 7,083 மட்டுமே!
கடந்த 2021-2026 காலகட்டத்தில் வெறும் 343 நியமனங்கள் மட்டுமே நடந்துள்ளதாக வெள்ளை அறிக்கை கூறுகிறது. சுமார் 70,000 காலிப்பணியிடங்களை உருவாக்கி மின்வாரியத்தைப் பலவீனப்படுத்தியது யார்? திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் எங்கே போனது? மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது!
👇
2021–2026: வெறும் 343 நியமனங்கள் மட்டுமா?
கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் மின்சார வாரியத்தில் வெறும் 343 பேர் மட்டுமே நியமிக்கப்பட்ட அவலம்!
அதேநேரம், சுமார் 70,000 காலிப்பணியிடங்கள் உருவாகி மின்வாரியமே பலவீனமடைந்துள்ளது.
இளைஞர்களுக்குச் சொன்ன வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் எங்கே?
👇
மின்சார வாரியத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது யார்?
70 ஆயிரம் காலிப்பணியிடங்களை வைத்துக் கொண்டு நிர்வாகத்தை முடக்கியது ஏன்?
வேலைவாய்ப்பில் உண்மையான சாதனை யாருடையது என்பதை மக்கள் உணரும் நேரம் இது! மக்களுக்குப் பதில் சொல்லுமா திமுக?
#NEWSJTAMIL #ADMKOFFICIAL #EPSTAMILNADU #TTVDhinakaran #ammkofficial #draramadoss #TANGEDCO #EBRecruitment #PowerSector #TamilNadu #DMKvsADMK #Employment #JobCrisis #VacancyCrisis #ElectricityBoard #WhitePaper #RecruitmentTruth #SaveTNEB #TamilPolitics #PeopleNeedJobs #GovernmentAccountability #EmploymentMatters #TamilNaduNews #ViralTamil #newsj
எந்த துறை அமைச்சரும் அவங்க கேள்விக்கு பதில் சொல்ல மாட்டாங்க…
அவ்வளவு ஏன்…. சட்டம் ஒழுங்கு பத்தி கேட்டா முதல்வர் கூட பதில் சொல்ல மாட்டாரு!
தமிழக சட்டப்பேரவையின் வரலாற்றில் இந்த பேரவை ஒரு விநோதம், விசித்திரம் தான்..!!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
உச்ச நீதிமன்றம் காவிரி நதிநீர் தொடர்பாக இறுதித் தீர்ப்பு வழங்கி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பின்பு, மீண்டும் ஒரு நடுவர் மன்றம் கோரி, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஜீவாதாரப் பிரச்சனையில் அரசியல் புரிதலற்றுச் செயல்படும் பொய்க்கால் குதிரை அரசுக்கு அரசியல் பாடம் எடுத்த, சட்டசபை நாயகர், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சி நிரல் நாள் 19.6.2026-ன், வ.எண் 5ல், தெரிவிக்கப்பட்ட அரசினர் தனி தீர்மானம் மூலம் கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை நான் ஆதரித்து பேசினேன்.
எனக்கு அடுத்து உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் தன்னுடைய உரையில் ஏற்கனவே திருத்தம் ஒன்று அளித்திருப்பதாகவும், அது பற்றிய கருத்தை தெரிவித்தார்கள். உடனடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து, 'நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பான ஒரு பத்தியை' இணைக்கலாம் என தெரிவித்தார்கள்.
பொதுவாக தீர்மானத்திற்கான திருத்தங்கள் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டு, பேரவையில் பின்னர்தான் சேர்க்கப்பட வேண்டும். வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவர் கொண்டுவந்த திருத்தத்துடன் கூடிய தீர்மானத்தை முன்மொழியப்படாமல், வழிமொழியப்படாமல், விவாதிக்கப்படாமல், வாக்கெடுப்பிற்கும் விடப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது சட்டமன்ற விதிகளுக்கு முற்றிலும் முரணானது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 19.6.2026 சட்டமன்ற நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்தோமே தவிர, முதலமைச்சர் கடைசியாக மொழிந்த இடைச் செருகல் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை.
திருத்திய தீர்மானம் அரசினர் தனித் தீர்மானம் ஆகாது. இத்தீர்மானம் யாரை மகிழ்விக்க ? யாரை வஞ்சிக்க ?
@AIADMKOfficial
புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்து ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் என்பவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆளுங்கட்சி தவெக நிர்வாகியால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதேபோல், சென்னை ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் செய்திகள் வருகின்றன.
இன்றைய முதலமைச்சர் பதவி ஏற்கும் போது சொன்ன “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இது தானா?
தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது, எப்படி நல்லா இருக்க முடியும்?
உங்கள் ஆட்சியில் குற்றம் செய்யும் உங்கள் கட்சியினர் மட்டும் தான் நன்றாக இருப்பது போல் தெரிகிறது.
தன் கட்சித் தலைவர் முதலமைச்சராக இருப்பது பற்றியோ, அவர் கையில் இருக்கும் காவல்துறை மீதோ இவர்களுக்கு எந்த பயமும் வராமல் இருப்பது ஏன்?
மேற்கூறிய வழக்குகளில் எந்த வித ஒளிவு மறைவோ, அரசியல் குறுக்கீடோ இல்லாமல் நியாயமான விசாரணை நடைபெற்று, குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்றை பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை; குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்; அச்சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
கோவை மாவட்டம் சூலூர், பள்ளபாளையம், பாரதிபுரம் பகுதியைச் சார்ந்த 10 வயது சிறுமி கடந்த 21.05.2026 அன்று மாலை சமூக விரோதிகளால் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிப்பதாக உள்ளது.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்ந்ததால், பொதுமக்களின் மிகுந்த வெறுப்புக்கு உள்ளாகினர். சமூகக் குற்றங்கள் நிகழ, போதைப் பொருட்கள் கலாச்சாரம் அதிகரித்தது மிக முக்கிய காரணமாக விளங்கியது. இதனால் கடந்த ஆட்சியாளர்களின் மீது பொதுமக்கள் மிகுந்த வெறுப்பில் இருந்தனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கு தற்போதைய இந்த நிகழ்வு சான்றாக உள்ளது. இந்நிகழ்வில் காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் இது போன்ற சமூகக் குற்றவாளிகளை காவல்துறை உடனுக்குடன் கண்டுபிடித்து அதிகபட்ச கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போர்க்கால பாதுகாப்பு நடவடிக்கைகளையும் போதை பொருட்கள் நடமாட்டத்தையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்கவும், குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடாக ரூபாய் 1 கோடியும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். உங்களின் கடின உழைப்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த தகுதியான வெற்றி இது.
மேல்நிலைக் கல்வியில் அடியெடுத்து வைக்கும் நீங்கள், உங்களின் தனிப்பட்ட ஆர்வம் மற்றும் திறமைக்கு ஏற்ற துறையைத் தேர்ந்தெடுத்து, சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.
தேர்வில் வெற்றியைத் தவறவிட்டவர்கள், துவண்டு போகாமல், 'முயற்சித் திருவினையாக்கும்' என்பதை நினைவில் கொண்டு, 'என்னால் முடியும்" என்ற நம்பிக்கையோடு மீண்டும் முயற்சி செய்யுங்கள். அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது.
அனைவரும் வாழ்வில் நல்ல நிலையை அடைய வாழ்த்துகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், இன்றைய தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக மூத்த நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு #அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
@TVKVijayHQ
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்