துறையூரில் தன்னுடைய பகுதியில் உள்ள குறைகளை கூற சென்ற கார்த்தி என்ற நபரை தாக்கியதோடு மட்டுமல்லாமல்,
விவகாரம் பூதாகரம் ஆனதும் அவரை மிரட்டி வீடியோ பதிவு செய்த தவெக சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர்.
குறைகளை கூற வந்தவரை தரக்குறைவாக பேசி தாக்கியது மட்டுமல்லாமல், ஆளும்கட்சி அதிகார திமிரில் இப்போது கொலை மிரட்டல் வேறு விடுத்துள்ளார் தவெக அரசின் ஆச்சரியக்குறி உறுப்பினர்.
இப்போதாவது இந்த ஆச்சரியக்குறி அரசு, துணை சபாநாயகர் ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க முன்வருமா?
இல்லை இந்த பிரச்சனையை மறைக்க வழக்கம்போல மடைமாற்று அரசியல் செய்யப் போகிறதா?
@TVKVijayHQ
#பொய்க்கால்_குதிரை_அரசு
வெறும் விளம்பர அறிக்கைகளாலும், கேமராக்களுக்கு முன்னால் நடத்தும் போலி ஆய்வுகளாலும் ஒரு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை ஒருபோதும் சரிசெய்துவிட முடியாது.
@actorVijay
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள்.
ஒரே நாளில் 11 கொலைகள்-
தீபாவளி நாளான்று பட்டாசு சத்தத்திற்கு இணையாக தேனி, கடலூர், திருச்சி, சென்னை, சிவகங்கை, திருவள்ளூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொலைச் சத்தமும் கேட்டிருக்கிறது தமிழ்நாட்டில்!
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்து, மாநிலம் முழுவதும் ரத்தக் களறியாக மாறியிருப்பது நெஞ்சை பதற வைக்கிறது.
"ரோட்டில் நின்றால் கொலை... தட்டிக்கேட்டால் படுகொலை!" என்னும் அளவிற்கு ரவுடிகளும் குற்றவாளிகளும் தெருக்களில் அச்சமின்றி நகர்வலம் வரும் அளவிற்கு நாட்டின் சட்டம் ஒழுங்கைத் தள்ளியிருக்கிறது தவெக அரசு.
இதில் உச்சகட்ட கொடுமையாக, தேனியில் பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களையே ரவுடிகள் அடித்துக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
"காக்கிச் சட்டைக்கே இங்கே பாதுகாப்பில்லை என்றால், சாமானிய மக்களுக்கு எங்கே இருக்கும் பாதுகாப்பு?"
அஇஅதிமுக ஆட்சியில் கம்பீரமாக நிமிர்ந்து நின்ற தமிழ்நாடு காவல்துறை, இன்றைக்கு ஆளத் தெரியாத ஆச்சரியக்குறி தவெக அரசால் கலகலத்துப் போய் நிற்பது மிகுந்த வேதனைக்குரியது.
அரசியல் என்பது சினிமா செட் அல்ல; முதலமைச்சர் நாற்காலி என்பது 'பஞ்ச் டயலாக்' பேசுவதற்கான மேடையும் அல்ல என்பதை இந்த 'ரீல்' முதல்வர் @actorVijay அவர்கள் இப்போது புரிந்து கொள்வார்?
படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களின் குடும்பத்திற்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 40 லட்ச ரூபாய் நிதி உதவி என்பது போதுமானது அல்ல.
அஇஅதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்கட்சியாக இருந்தபோதும் சரி, Line Of Duty-ன் போது உயிரிழக்கும் காவலர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளோம். இந்த அரசும், கடந்த 14.10.2026 அன்று வெளியிட்டுள்ள அரசாணையில், பணியின்போது துணிச்சலுடன் உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என கூறியுள்ளது.
தான் போட்ட அரசாணை கூட இந்த ஆச்சரியக்குறி அரசுக்கு நியாபகம் இல்லை என்பதுதான் இங்கு ஆச்சரியமாய் இருக்கிறது.
அந்த வகையில், திரு. செந்தில்குமார் குடும்பத்தினருக்கும் ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என இந்த அரசைக் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
ஒரே நாளில் 11 கொடூரக் கொலைகளை செய்து தமிழகத்தை பதற வைத்த அனைத்துக் குற்றவாளிகள் மீதும் மிகக்கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@AIADMKOfficial
'மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை' என்று கூறியுள்ள கர்நாடக மாநில முதலமைச்சருக்கு பதில் அளிக்காமல் வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய்யின் வாடகைக் கால் கூட்டணி அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 12 படுகொலைகள் நடந்த செய்தி பொதுமக்களின் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கும் இந்த சூழ்நிலையில், இதைப் பற்றி கேள்வி கேட்டால் ஒரு பொறுப்புள்ள அமைச்சர் கூறும் பதில் என்ன தெரியுமா?
"பண்டிகை காலங்களில் இதெல்லாம் புதிதல்ல... எதிர்க்கட்சிகள் தான் வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள்!"
என்ன ஒரு பொறுப்பற்ற,
திமிரான பதில்!
பண்டிகை காலம் என்றால் கொலைகள் நடப்பது சகஜம் என்று ஒரு அமைச்சரே நியாயப்படுத்தலாமா?
மக்களின் உயிரைக் காக்க வேண்டிய கடமையில் இருந்து நழுவி, இதை ஒரு சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்லத் துடிப்பது எந்த வகையில் நியாயம்?
நாட்டின் சட்டம்-ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு அமைச்சரின் இந்த ஒரு பதிலே சான்றாக நிற்கிறது.
கொலைகள் நடப்பது உண்மை: ஆனால் அது எதிர்க்கட்சிகளின் அவதூறா?
மக்களின் பயம் உண்மை,
ஆனால் அது பண்டிகை காலத்து "சாதாரண விஷயமா"?
மக்களின் உயிரையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய உயரிய பொறுப்பில் இருக்கும் அமைச்சரே,
தன்னுடைய அரசின் நிர்வாக தோல்வியை மறைக்க இப்படி சாக்குபோக்கு சொல்வதும், எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவதும் பொறுப்பற்றத்தனத்தின் உச்சம்!
பட்டிமன்ற புகழ் @imrajmohanஅமைச்சரே... பண்டிகை காலம் என்பது மக்கள் சந்தோஷமாக இருக்கத்தானே தவிர, இரத்தக் களறியைப் பார்த்து அஞ்சி நடுங்க அல்ல!
குற்றங்களைக் கட்டுப்படுத்தத் துப்பில்லாமல்,
தங்களது அரசின் நிர்வாக கோளாறை மறைக்க அதை நியாயப்படுத்தும் வார்த்தைகளை பேசுவது அமைச்சர் பொறுப்புக்கு அழகல்ல.
இனியாவது வெறும் வாய் வார்த்தை சாக்குபோக்குகளை எல்லாம் நிறுத்திவிட்டு, நாளுக்கு நாள் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க முயற்சியாவது செய்யுங்கள்.
ரீல் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சி அமைந்ததில் இருந்து தமிழகத்தில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நிர்வாகத் திறனற்ற,நிர்வாக கோளாறுடைய தவெக அரசால் முடியவில்லை.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
பாலியல் SIR-களின் Address-ஆக மாறிய தவெக!
“பெண்கள் பாதுகாப்பில் நம்பர் 1 ஆட்சியாக இருக்கும்” என்று சொன்ன முதல்வரின் கட்சியினராலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அவலம்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கும் சமூக நீதியும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதையே சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன.
•சாத்தான்குளம் அருகே பெண் ஒருவரை வீடு புகுந்து மர்மநபர் வெட்டிக் கொலை செய்துள்ளதாகவும்,
•கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே Lift கேட்டு சென்ற சிறுவன் மாயமானதாகவும்,
•கோவையில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஜாதிய பாகுபாட்டால் மாணவன் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும்
வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.
தமிழ்நாட்டில் நடக்கும் கொலைகளை எல்லாம் பார்த்தால், திரு. @actorvijay ஆட்சிக்கு வந்ததும் குற்றவாளிகள் எல்லாம் தங்களை “#LeoDas”-ஆக நினைத்துக் கொண்டு வலம் வருகின்றனரோ என்று தான் சந்தேகிக்கத் தோன்றுகிறது.
கொள்கை (?), கூட்டணி என எல்லாவற்றிலும் “சமூகநீதி” என்று பெயர் வைக்கும் இந்த ரீல்ஸ் முதல்வரின் ஆட்சியில் ஜாதிய பாகுபாட்டால் ஒரு மாணவன் உயிரிழந்து இருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மேடைகளில் பேசும் டயலாக் எல்லாம் இப்போது எங்கே போனது?
ஸ்ரீபெரும்புதூர், செஞ்சி சிறுமிகளைத் தொடர்ந்து, ஊத்தங்கரை சிறுவனைக் காணவில்லை. ஸ்ரீபெரும்புதூர் சிறுமி மீட்கப்பட்ட நிலையில், செஞ்சி சிறுமியை இன்னும் இந்த அரசு கண்டுபிடிக்கவில்லை. தொடர்ந்து சிறுவர்கள் காணாமல் போவது பெற்றோர்களை என்ன வேதனைக்கு உள்ளாக்கும் என்பதெல்லாம் இந்த முதல்வருக்கு கொஞ்சமாவது புரியுமா?
இது ஒரு Pattern-ஆக நடப்பது போன்ற சந்தேகம் கூட இந்த அரசுக்கு வரவில்லையா?
சாத்தான்குளம் மற்றும் கோவை வழக்குகளில் தொடர்புள்ளோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும்,
மாயமான சிறுவர்களை மீட்டு, இந்த விவகாரத்தை தீவிரமாக அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
பிரபல சமையற் கலைஞர் “பத்மஸ்ரீ”
செப் தாமு (எ) தாமோதரன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
செப் தாமு அவர்கள் இந்தியாவின் சிறந்த சமையற்கலைஞர்களில் ஒருவராக அறியப்பட்டவர். சமையலில் கின்னஸ் சாதனை புரிந்தவர்.
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மீதான பெரும் பற்றால் 2013-ம் ஆண்டில் தன்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டவர்.
எப்போதும் இன்முகத்துடன், தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளில் தோன்றி மகிழ்வித்த அவரை தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
திரு. செப் தாமு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், சமையல் துறை மற்றும் சின்னத்திரையைச் சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை
தஞ்சாவூர் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. வி. பண்டரிநாதன் அவர்கள் நேரில் சந்தித்து, தி.மு.க-வில் இருந்து விலகி மீண்டும் தாய்க் கழகத்தில் இணைந்தார்.
தவெக நாகை மாவட்ட நிர்வாகி பூபாலன் தொடர்பான மாபெரும் போதைப்பொருள் வழக்கு பற்றி மத்திய நிதி அமைச்சகம் செய்தி வெளியிட்டும் இன்று வரை தமிழக முதல்வர் பதில் சொல்லாமல் மவுனம் காப்பது ஏன்?
18.10.2026 அன்று @FinMinIndia வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், “one of the biggest narcotics seizures in Tamil Nadu’s coastal region in recent years” என்று கூறியுள்ளது.
இது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா @CMOTamilNadu ?
இது ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் Network-ஆக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு பொறுப்பில் இருக்கின்ற முதல்வராக, Atleast ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சிக்காரரின் இந்த Walter White Behaviour குறித்து திரு. ஜோசப் விஜய் அவர்கள் வாய் திறப்பார் என்று காத்திருந்து பார்த்தால், சட்டசபையில் எதிர்கட்சி பேசும் பொது எப்படி இருப்பாரோ, அதேபோல் மவுன சாமியாராகவே இருக்கிறார்.
கடந்த ஆட்சியில், ஜாபர் சாதிக் வழக்கில் மெத் போதைப் பொருளுக்கான Pseudoephederine என்ற மூலப்பொருள் சிக்கிய வழக்கே மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தவெக நிர்வாகி பூபாலன் வழக்கிலோ, Fully processed Meth Crystal-களே, அதுவும் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 கிலோ சிக்கி இருக்கிறது.
ஆளுங்கட்சி பின்னணியில் இவ்வளவு பெரிய International Drug Mafia நடந்திருக்கும் போது, யாருக்காக Anti Drug Marathon ஓடிக்கொண்டு இருந்தார் ரீல்ஸ் முதல்வர் ?
இந்த லட்சணத்தில், இதுகுறித்து செய்தி வெளியிடும் ஊடகங்களை தவெக நாகை நகரச் செயலாளர் பால்ராஜ் என்பவர் மிரட்டல் வேறு விடுக்கிறாராம்.
அப்படியென்றால், இந்த போதைப்பொருள் விவகாரம் ஆளுங்கட்சி தலைமைக்கு தெரிந்து, அவர்கள் துணையோடு தான் நடக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? உங்கள் கட்சிக்காரர் குற்றத்திற்கு பொறுப்பேற்று பதில் சொல்ல முடியாமல், ஊடகங்களை மிரட்டினால் மட்டும் செய்தி மறைந்து விடுமா?
@CMOTamilNadu அவர்களே,
For Your Information,
இந்த போதைப்பொருளைக் கூட உங்கள் அரசின் காவல்துறை பிடிக்கவில்லை. மத்திய அரசின் DRI அமைப்பு தான் பிடித்திருக்கிறது. இதற்கே நீங்களும், உங்கள் தலைமையிலான ஆச்சரியக்குறி அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
மாற்றம் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்திருக்கும் உங்களிடம் இருந்து இது பற்றி ஒரு விளக்கமாவது வருமா?
@AIADMKOfficial
எனக்கு கழகம் வேறு; தொண்டர்கள் வேறு அல்ல! கழகமே எனது உயிர்மூச்சு! கழகத் தொண்டர்களே எனது உயிர்நாடி!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள்.
அவர் நடந்தார், அவர் டிராக்டர் ஓட்டினார், அவர் டீ குடித்தார்,அவர் கார் கதவைத் திறந்தார், காரில் ஏறினார் என்றெல்லாம் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதால் தமிழக மக்களுக்கு என்ன பயன்?
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
"கல்லாப்பெட்டி கூட்டணி" என யாரை விமர்சித்தாரோ, ஆட்சி அதிகாரத்திற்காக அவர்களிடமே கூட்டணி சேர்ந்து அந்தர் பல்டி அடித்தவர் தான் முதலமைச்சர் விஜய்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தலைமையில்,
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் அஇஅதிமுக 55-ஆம் ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், கழக வளர்ச்சி பணிகள் குறித்தும் சேலம் புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.