"இங்க பாருங்க பெண்கள தேவையில்லாம தொட்டா சும்மா விட மாட்டேன்னு CM ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்காரு, அதனால இந்த தண்ணிய போட்டு சீண்டுற வேலைலாம் வச்சிக்க கூடாது புரியுதா"..
பெண்களும் எதனா பண்ணா உடனே கம்ப்ளைண்ட் பண்ணனும் சரியா - பேருந்தில் ஏறி ஆண், பெண் இருவருக்கும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்திய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை
#Tiruppur | #SingapenAthiradipadai | #Women | #Police | #Awareness | #PolimerNews
👮தாம்பரம் மாநகர காவல் ஆணையர் திரு.சஞ்சய் குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படையை ஆய்வு செய்து, அதில் பணியாற்றும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். #singappen#singappenspecialforce#tnpolice#tambaramcitypolice
மார்ச் 8
பெண்கள் தின விழாவில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) உருவாக்கப்படும் என்று அறிவித்தார் தலைவர் @TVKVijayHQ.
ஜூன் 9
அதை வெறும் அறிவிப்பாக அல்லாமல், செயல்படுத்தியும் காட்டியுள்ளார்.
"பாட்டி, அம்மா, அக்கா, தங்கை" என்று வெறும் வார்த்தைகளாகக் கூறாமல், தமிழக பெண்களை தனது உறவுகளாக உணர்வுப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார். அதனால்தான் நேற்று நடைபெற்ற சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில், "ஒரு அரசின் வெற்றி என்பது மாநிலத்தின் பெண்களும் குழந்தைகளும் மரியாதையுடன் வாழ்கிறார்களா என்பதில்தான் இருக்கிறது" என்று கூறினார்.
"பாதுகாப்புடன்" என்று அல்ல, "மரியாதையுடன்" என்று அவர் குறிப்பிட்டதில் ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. "பாதுகாப்புடன்" என்பதில் ஆதிக்கத்தின் நிழல் இருக்கிறது, "மரியாதையுடன்" என்பதில் சமத்துவம் வெளிப்படுகிறது.
சமூகநீதி மற்றும் சமத்துவத்தை வெறும் பேச்சளவிலோ, ஏட்டளவிலோ அல்லாது செயலிலும் கடைப்பிடித்து வருகிறார்.
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்தத் திட்டம் எவ்வளவு பெரிய நம்பிக்கையை அளிக்கும் என்பதை அவர்கள் மட்டுமே முழுமையாக உணர முடியும்.
எதிர்தரப்பினர் "Pink Patrol", "Amma Patrol" போன்ற திட்டங்களைச் சுட்டிக்காட்டலாம். ஆனால் அவை பெரும்பாலும் விளம்பர அளவிலேயே இருந்தன; வீரியமான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
ஓர் திட்டத்தை அறிமுகப்படுத்தினால் மட்டும் போதாது, அதனைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மக்கள் அதன் முழுப் பயனையும் அடைய வேண்டும். இதைத்தான் முந்தைய அரசுகள் செய்யத் தவறியுள்ளன.
₹354 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 2,500 பணியிடங்களை உருவாக்கி இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது எளிதாகக் கடந்துபோகும் விஷயமல்ல. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் தவெக அரசு எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதற்கு இதுவே சான்று.
சிலர், "பெண்களுக்கு பெண்களை வைத்தே பாதுகாப்பு அளிக்கிறார்கள்" என்று விமர்சிக்கலாம். ஆனால் ஆண் காவலர்களிடம் பகிரத் தயங்கும் பல விஷயங்களை பெண்கள், பெண் காவலர்களிடம் தயக்கமின்றி பகிர்வார்கள். அவர்களின் அனுபவங்களையும் அச்சங்களையும் பெண் காவலர்களால் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும்.
இன்று பேருந்து நிலையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் SSF படையினர் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
SSF என்பது பத்தோடு பதினொன்றாக இணையும் திட்டமல்ல. இது நாளை மற்ற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக மாறும்; இன்று கேலி செய்பவர்களே நாளை பாராட்டும் திட்டமாக இருக்கும்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கியதற்காகவே எங்கள் அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி.
Love you na @CMOTamilnadu ❤️
இன்று மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான அளவில் ஏற்படும் பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் ஏற்படும் மின் தடங்கல்களை உடனடியாக சீர் செய்யும் வகையில் 125 சிறப்பு மின்தடை பழுது சரிசெய்யும் ரோந்து வாகனங்களின்..(1/2)
டெல்லி சென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
டெல்லி சென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
டெல்லி சென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
டெல்லி சென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
மின்வெட்டைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
500 பேர் கொண்ட 125 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க 10 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.