While TN politicians are squabbling over tiruvalluvar's clothes, a neighborly biscuit brand came up with a brilliant mass distribution of the Tirukkural.
Brittania, God bless you.
தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக கர்நாடகாவை சார்ந்த திரைப்பட (ஜனநாயகன் ) தயாரிப்பாளர் வெங்கட் நாராயணாவை நியமித்துள்ளார் முதல்வர் விஜய் அவர்கள்
தமிழக பிரதிநிதியாக இருக்க தமிழ்நா���்டை சார்ந்த யாருக்கும் தகுதியில்லையா ? @CMOTamilnadu
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய���ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநித��யாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்நாட்டின் இளம் சதுரங்க வீரர் அன்புமகன் பிரக்ஞானந்தா அவர்கள் நார்வே சதுரங்க தொடர் - 2026 வாகையர் பட்டத்தை வென்று தமிழ் மண்ணிற்கும், மக்களு���்கும் அளப்பரிய பெருமை சேர்த்துள்ளதை அறிந்து பெருமிதமும், பேருவகையும் அடைந்தேன்.
உலகின் முன்னணி சதுரங்க வீரர்களையெல்லாம் வீழ்த்தி இந்தியப் பெருநாட்டிலேயே முதன்முறையாக நார்வே சதுரங்கப் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ள பிரக்ஞானந்தா, சதுரங்க ��ட்டத்தில் தமக்குள்ள அளப்பரிய தனித்திறன் மூலம் உலக வாகையர் பட்டத்தை வெல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.
வருங்காலங்களில் மேலும் பல பன்னாட்டு சதுரங்கப் பட்டங்களை வென்று, உலகின் முதல்நிலை சதுரங்க வீரராகத் திகழ அன்புமகன் பிரக்ஞானந்தாவிற்கு என்னுடைய பேரன்பும், வாழ்த்துகளும்!
@rpraggnachess