Flagging off #HinduMunnani Vinayagar Chaturti Visarjan Yatra in #SouthChennai, #Velachery.
காவிமயமான #தென்சென்னை தொகுதி.
வேளச்சேரியில் இந்து முன்னணி நடத்தும் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தப்போது.
பாரதப் பிரதமரை இழிவுபடுத்தும் ‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்திக்குக் கடும் கண்டனம்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி வரும் பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களை, நேற்று ஒரு பொது மேடையில் கேலி, கிண்டல் செய்து, மிமிக்ரி நடிகரைப் போலக் கேலிக்கூத்துகளை அரங்கேற்றியிருக்கும் அரசியல் கோமாளி @RahulGandhi-யின் செயலுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராகுல் காந்தி இதுபோல் பொது மேடைகளில் நடந்துகொள்வது முதல் முறையல்ல; தொடர் தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட கடுமையான விரக்தியின் வெளிப்பாடாகத் தொடர்ச்சியாக இவ்வாறு செய்து வருகிறார். உண்மையில் ராகுல் காந்தி என்பவர் ஒரு முழுநேர மக்கள் தலைவரே கிடையாது; அவர் ஒரு 'பார்ட் டைம் அரசியல்வாதி'. ஒவ்வொரு தேர்தல் முடிவின்போதும் வெளிநாடுகளுக்குச் சென்று உல்லாசப் பயணம் மேற்கொள்வதையே வழக்கமாகக் கொண்டவர்.
எப்போதாவது அரசியல் மேடைகளுக்கு வந்து இதுபோன்று மலிவான நாடகங்களை அரங்கேற்றிவிட்டு, அடுத்த நாளே தனது உல்லாச வாழ்க்கைக்குத் திரும்பிவிடும் ஒருவரை இந்திய மக்கள் எப்படித் தங்கள் தலைவராக ஏற்பார்கள்? அதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாமல், அந்த விரக்தியையும் வெறுப்பையும் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மீது இம்முறையில் காட்டிக்கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கண்ணியத்தை மறந்து, தன்னைத்தானே ஒரு கேலிப்பொருளாக மாற்றிக்கொண்டுள்ள ராகுல் காந்தி, இனியாவது தனது நாடக அரசியலைக் கைவிட வேண்டும். மேடைகளில் அரங்கேற்றும் மலிவான கேலிக்கூத்துகள் மூலம் மக்களைத் திசைதிருப்பிவிடலாம் என்ற அவரின் பகற்கனவு ஒருபோதும் பலிக்காது. எனவே இனியாவது சுயபரிசோதனை செய்துகொண்டு அவர் பொறுப்புடன் செயல்படத் தவறினால், அவரது அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற கோமாளி வேடங்களே மிஞ்சும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Scoundrels & political imbeciles like @RahulGandhi can spend a lifetime trying to buy the respect of Indians but neither inherited privilege nor accumulated wealth can manufacture class.
Money & Power can be inherited. Character, culture & class cannot. They have to come from upbringing.
Rozgar Mela வாயிலாக இதுவரை 12.75 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கி, இளைஞர்களின் கனவுகள் நிறைவேற கரம் கொடுத்திருக்கிறார் பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள்..!!
இன்றைய தினம் சேலத்தில் திருவேணி குழுமத்தின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தேன்.
மணமக்கள் இருவரும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொண்டேன்.
இந்த நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர்கள் திரு. @KPRamalingamMP அவர்கள், திரு. @Chakravarthy257 அவர்கள் மாநிலச் செயலாளர் திரு. @VinojBJP அவர்கள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் உடன் கலந்து கொண்டனர்.
Blessed to participate in #VinayagarChaturthi program in #SouthChennai Parliamentary Constituency, #Virugampakkam Assembly Constituency organized by Hindu Munnani.
#தென்சென்னை பாராளுமன்ற தொகுதி, #விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று, விநாயகப் பெருமானை தரிசித்து வழிபாடு செய்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்து சமுதாயத்தின் ஒற்றுமை, பண்பாடு மற்றும் ஆன்மிகப் பாரம்பரியத்தைப் பாதுகாக்க தனது வாழ்நாளை அர்ப்பணித்த இந்து முன்னணி நிறுவனர், ஆன்மிகமும் தேசிய சிந்தனையும் கொண்ட சமூகப் பணியாளர் திரு. ராமகோபாலன் ஜி அவர்களின் பிறந்த நாள் இன்று!
சமூகத்தில் ஆன்மிக விழிப்புணர்வையும், நமது பாரம்பரியத்தின் மீதான பற்றையும் வளர்க்க அவர் மேற்கொண்ட பணிகள் பல தலைமுறைகளுக்கும் ஊக்கமளிக்கும். எளிமை, அர்ப்பணிப்பு, துணிவு ஆகியவற்றுடன் அவர் ஆற்றிய சமூகப் பணிகளை போற்றி வணங்குவோம்.
Attended the Vinayagar Chaturthi worship program grandly organized by the BJP Youth Wing in Sowcarpet, Chennai, along with State Youth Wing Secretary Thiru. Akhil Kumar.
சென்னை சௌகார்பேட்டையில் பா.ஜ.க இளைஞரணி சார்பாக விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று, விநாயகப் பெருமானை தரிசித்து வழிபாடு செய்தேன். மேலும், மாநில இளைஞரணி செயலாளர் திரு. அகில் குமார் உடனிருந்தார்.
"பாரத் மாதா கீ ஜே" என்று தேச உணர்வோடு முழங்கினால்… "சங்கி" என்று முத்திரை குத்தும் கூட்டம்.
அதே "நாரே தக்பீர்…" என்ற இந்த கோஷத்தை எழுப்பினால் மூடிட்டு அமைதியாக வேடிக்கை பார்க்கும்.🤧
ஏன் என்றால்… ‘Dhurandhar’ படம் பார்த்தவர்களுக்கு இந்தக் கோஷம் எதற்காக என்பது புரியும்.🚶🏻♂️
Since the juice preparation took time, the rowdies threw a petrol bomb into the store, says the news.
Yesterday a person threatened to throw a bomb over “Bharat Mata Ki Jai” slogan. Now this.
These guys make it sound like making bombs is easy. Will Vijay nip this in bud?😒
पंजाब की युवा पीढ़ी को नशे की ओर धकेलकर पूरी तरह से दिशाविहीन किया गया है। वहां की राजनीतिक पार्टियों ने भी सत्ता पाने के लिए नशे का विषय उठाया और सत्ता पाने के बाद उसे अपना उद्योग समझ लिया है।
जब सत्ता के संरक्षण में ये सभी चीजे चलती रही तो भाजपा उसके खिलाफ आंदोलन में उतर रही है।
प्रधानमंत्री श्री @narendramodi जी ने 2 अगस्त को नशे के खिलाफ जनांदोलन छेड़ा है।
पंजाब भाजपा भी जिन लोगों ने नशे के कारण अपने परिवारजनों को खोया है, उनके साथ इस यात्रा में निकलेगी।
हम इस यात्रा के माध्यम से पंजाब में लोगों के साथ मिलकर नशे के खिलाफ एक बड़ी लड़ाई लड़ने का आंदोलन खड़ा करेंगे।
-राष्ट्रीय अध्यक्ष श्री @NitinNabin
நம் பாரத தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள கடம்பூர் ஸ்ரீ மாரியம்மன் மஹாலில் “Narendra Modi Ji – The Architect of New India” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பேச்சரங்கில் கலந்து கொண்டு உரையாற்றியதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி திரு. கடம்பூர் ராஜசேகர் அவர்களின் சிறப்பான ஏற்பாட்டில் இந்நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்வில் தமிழக பா.ஜ.க. மாநில துணைத் தலைவர்கள் திரு. @DuraiswamyVpd அவர்கள், திரு. @DolphinSrithar அவர்கள், மாநிலச் செயலாளர் திரு. சதீஷ் அவர்கள், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் திரு. ரகுராமன் அவர்கள், சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. குமார் அவர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் கலந்துகொண்டனர்.
Glimpses from the wedding ceremony of Ranipet BJP Youth Wing District President, dear brother Jeevanantham. Wishing the couple a joyous married life.
இராணிப்பேட்டை பா.ஜ.க இளைஞரணி மாவட்ட தலைவர் , அன்பு சகோதரர் ஜீவானந்தம் அவர்களின் திருமண விழாவின் சில தருணங்கள். மணமக்கள் பல்லாண்டு வாழ்க.