With Our TamilNadu Chief Minister @CMOTamilnadu@actorvijay anna 🫠✨📈🗯️✊
Anna is shining bright ⭐️🙌🏿
Shared the Happiness and the Musical Bonding We love ❤️🙌🏿
@TVKVijayHQ
Congratulations once again to our Honourable Chief Minister Thalapathy Vijay Anna on winning the final battle.
His historic victory is a true lesson in how a person must remain resilient during times of adversity and stay committed to one’s principles despite all the obstacles that come his way.
This is not just political success, but the people’s mandate for a new path and new hope for Tamil Nadu.
ஒரு பேரே வரலாறு!
@TVKVijayHQ
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்க��். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று, அடுத்த கட்டமான, கல்லூரிக் கல்வியை நோக்கி முன்னேறவுள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும், என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
திறமைகளுக்கும், கனவுகளுக்கும் எண்ணற்ற வாய்ப்புகள் உருவாகியிருக்கும் இந்த காலத்தில், தாங்கள் விரும்பும் துறையில் கல்வி கற்று, சமுதாயத்திற்கு பயனுள்ள சாதனையாளர்களாக உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
தேர்வில் எதிர்பார்த்த முடிவை பெறாத மாணவர்கள் மனம் தளர வேண்டாம். தோல்வி என்பது முடிவு அல்ல; அது இன்னொரு முயற்சிக்கான தொடக்கம். நம்பிக்கையுடனும் கடின உழைப்புடனும் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு மாணவரின் எதிர்காலமும், சிறப்பாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
புதிய மாற்றம்! வளர்ச்சிக்கான மாற்றம்! என்பனவற்றை தங்கள் வாக்குப் புரட்சியால் சாதித்துக் காட்டி, தமிழக வெற்றிக் கழகத்தை மாபெரும் சரித்திர வெற்றி பெற வைத்த தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் ��ன்றி!
அதிகார மிரட்டல்கள், ஆண்ட கட்சியினர் கொடுத்த நெருக்கடிகள், வாக்குகளுக்காக வாரி இறைக்கப்பட்ட ஊழல் பணம் என்பதை எல்லாம் முற்றிலும் புறந்தள்ளி, நல்லதொரு மாற்றத்தை தொடங்கி வைத்துள்ள தமிழக வாக்காளர்களின் நேர்மையை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட என்னை, தங்கள் வீட்டில் ஒருவனாக, அண்ணனாக, தம்பியாக, மகனாக நினைத்து என்னை வெற்ற��� பெற வைத்த வில்லிவாக்கம் வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி!
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்தி��ும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொ��்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் ச���்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு ��ன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் க���ட்டணியை ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு எங்களது நன்றி. மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்குப் பாராட்டுகள்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், அதன் மக்கள் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும��� செய்யும்.
A special and heartfelt shoutout to my dear brother, Vijay! Emerging as the single largest party in your very first election is impressive. Wishing you immense strength and success as you embark on this new chapter of service. God be with you.
My sympathies are with Didi. Congratulations to BJP and others.
@TVKVijayHQ@MamataOfficial@BJP4India
அரசியல் வரலாறு
அண்ணன் வழியில் திரும்புகிறது!!
இலவசத்தை மதிக்காது
பணத்தை ஏற்காது
ஜாதியை வேறோடு வெறு��்து
மாற்றத்தை மதித்து
ஒருவிரல் புரட்சியை
உலகம் அறியச்செய்த
தமிழ்ச் சொந்தங்களுக்கு
கோடி நன்றிகள்..
அண்ணனின் ஆட்சி..
அனைவருக்குமான ஆட்சி…
❤️💛❤️
#TVK
ஜோசப் விஜய் என்னும் நான்…!
தைரியத்திற்கு கிடைத்த வெற்றி.
எளியோர் பலர் வென்றதில் மட்டற்ற மகிழ்ச்சி. வளமான ஆட்சியை நிறுவுங்கள்.
வாழ்த்துகள் 💪🏿
@TVKVijayHQ#TVK#TVKVijay #2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு எங்களது நன்றி. மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்குப் பாராட்டுகள்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், அதன் மக்கள் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களு���்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்