Tamil Nadu govt’s big plan to restore Cooum River.
30 days time to prepare DPR for contractor from day of letter of award
Key focus areas: Identify condition of river, encroachments, sewage outfall assessments, land utility assessment, operational and maintenance plan and implementation plan.
3.7 kms targeted for restoration
All downstream areas
Napier to Cooum
Sivananda Salai to Periyar Bridge
Link Road to Dams Road
அரசியல் மேடைகள் தந்தை பெரியார் காலத்தில் பகுத்தறிவைக் கற்பிக்கும் பள்ளிகளாக இருந்தன; அறிஞர் அண்ணா காலத்தில் அரசியல் அறிவை வளர்க்கும் பல்கலைக்கழகங்களாக இருந்தன. ஆனால், அண்ணாவிற்குப் பிறகு தி.மு.க., அரசியல் மேடைகள் தனிநபர் தாக்குதல் மேடைகளாக மாறின; அதுவும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இயங்கும் தி.மு.க-வின் தற்போதைய மேடைகள், ஆபாசப் பேச்சுக்கள் - அசிங்கமான வார்த்தைகள் - அவதூறு கருத்துக்களை மட்டுமே பரப்பிக் கொண்டிருக்கும் அருவருப்பான மேடைகளாக மாறிவிட்டன.
அதுவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தோற்று வீட்டில் முடங்கி இருக்கும் தி.மு.க., தன் ஆற்றாமையை, காழ்ப்புணர்வை தன் ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படுத்துகிறது. அவற்றில் சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் மேடைகளை தி.மு.க-விற்கு எதிரணியில் இருக்கும் அரசியல் கட்சிகளை, அரசியல் கட்சிகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் ஆபாசமாகத் தாக்கும் களங்கம் சூழ்ந்த களமாகப் பயன்படுத்தி வருகிறது.
அந்தவகையில், சென்னையில் நடைபெற்ற தி.மு.க மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பெண் பேச்சாளர் ஒருவர் , தமிழ்நாட்டு மக்களால் மிகப்பெரிய நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களை மிகவும் தரக்குறைவான முறையில் விமர்சனம் செய்கிறார். அதை மேடையில் இருக்கும் சென்னை மாநகர மேயர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் மேயர் பிரியா அவர்கள் கைகொட்டி சிரித்து ரசித்துக் கொண்டிருக்கிறார். தி.மு.க-வின் நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராகவும் உள்ள திருமதி.கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்கள் தலைகுனிந்து மௌனமாக இருக்கிறார். அவர் அந்தப் பேச்சாளரைக் கண்டிக்காதது ஒருபுறம் என்றால், மறுபுறம் சொந்தக் கட்சியினர் பேசும் பேச்சுக்களை கேட்க முடியாமல் திருமதி.கனிமொழி அவர்களே தலைகுனிந்து கூனிக்குறுகும் அளவுக்குத்தான் இன்றைய தி.மு.க மேடைகளின் தராதரம் இருக்கிறது. இதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். மேலும், உடனடியாக, சட்டப்படியான முறைகளில், தி.மு.க-வின் இதுபோன்ற அநாகரீக செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதையும் அழுத்தமாக வலியுறுத்துகிறேன். அப்போதுதான் ஜனநாயகமும் ஆரோக்கியமான அரசியலும் வலுப்பெறும். அதனால், தி.மு.க மேடையில் அநாகரீக முறையில் பேசிய அந்தப் பெண் பேச்சாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.
நாகரீக அரசியல், பண்பான அரசியல் என்று வெறும் வார்த்தைகளில் மட்டும் பேசிக் கொண்டிருக்கும் தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இவற்றை எல்லாம் கண்டிக்காமல் வழக்கம்போல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அல்லது "அவரே இதுபோன்ற கொச்சையான பேச்சுக்களை கேட்டு ரசித்து ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறாரா?" என்ற கேள்விக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், இதுபோன்ற அவதூறுகளால், ஆபாசப் பேச்சுக்களால் தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக உருவாகி உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி மறைத்துவிட முடியாது. ஆனால், தி.மு.க-வின் இதுபோன்ற ஆபாச நடவடிக்கைளால், அந்தக் கட்சியும் அதன் தலைமையும் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் இல்லங்களில் இருந்து முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும் என்பது உறுதி!
ஒரு காலத்தில் அழகிய தமிழின் அடுக்குமொழிகளால் கட்சியை வளர்த்த தி.மு.க-வினர் இன்றைக்கு அசிங்கமான பேச்சுக்கள், ஆபாசமான வாக்கியங்கள், கொச்சையான வார்த்தைகளுக்குள் முடங்கிப்போய் கிடக்கின்றனர். அவர்களை முறைப்படுத்தி கட்சியை வளர்க்கும் வழி தெரியாமல் அந்தக் கட்சியின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். தந்தை பெரியாரின் பகுத்தறிவு - சுயமரியாதை - சமூகநீதிக் கருத்துக்களையும் பேரறிஞர் அண்ணா அவர்கள் அரசியலுக்கு வகுத்துக் கொடுத்த கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற இலக்கணத்தையும் மறந்துவிட்ட தி.மு.க-வினர்... அவர்களுடைய இதுபோன்ற அவதூறுகளையும் ஆபாசப் பேச்சுக்களையும் கடந்துதான் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் தமிழக மக்களின் மனங்களிலும் நிரந்தர வெற்றியைப் பெற்றுள்ளார்; இனியும் பெற்றுக் கொண்டே இருக்கப்போகிறார் என்பதையாவது மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
குடிநீர்,சுகாதாரம் என அடிப்படை வசதிகளிலும் விவசாயம்,இயற்கை வளம் என அடிப்படை ஆதாரங்களிலும் மகளிர் நலன் மற்றும் அனைத்து மக்கள் நலன் சார்ந்து உணர்வுப்பூர்வமாக இயங்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
வன்மையான கண்டனங்கள்!
மேடை நாகரிகம் துளியும் இல்லாமல்
பெண்களை தரக்குறைவாகப் பேசிய திமுக தலைவருக்கும், எதிர்க் கட்சித் தலைவருக்கும், தமிழ்நாட்டு மக்கள் இடைத்தேர்தல் தோல்வி மூலமாகத் தண்டனை வழங்கி, தக்க பாடம் புகட்டினார்கள்.
நாகரிகம் இல்லாத நாராசப் பேச்சுதான்
திமுக மகளிர் அணிக்கும் வாடிக்கை என்பது சென்னை பொதுக்கூட்டத்தில் நிரூபணம் ஆகி இருக்கிறது.
தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
மாண்புக்குரிய முதலமைச்சர் அவர்களை அவமதித்து, திமுக மேடையில் நின்றுகொண்டு,
நாக்கூசாமல் பேசியிருக்கிறார் திமுக மகளிர் அணிப் பெண்மணி ஒருவர்.
அருகில் அமர்ந்திருந்த சென்னை மேயர் பிரியா இந்த நாராசப் பேச்சைக்கேட்டு குதூகலித்து சிரிக்கிறார்.
மேடையில் அமர்ந்திருந்த திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி MP இந்த இழிவான பேச்சுக்கு சிறு எதிர்ப்பைக்கூட காட்டாமல் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்.
'"தேர்தலில் தோற்ற விரக்தி உங்களுக்கு இருக்கலாம். அதற்காக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைத் தரக்குறைவாகப் பேசுவதும், அதை மேடையில் நின்று ரசிப்பதும் எந்த வகையான அரசியல் பண்பாடு?"
ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் நிற்பது மட்டும் பெருமையல்ல - பொதுவாழ்வில் கண்ணியத்தையும் பொறுப்பையும் காப்பதில்தான் பெண்களின் உண்மையான பெருமை இருக்கிறது.
கனிமொழி MP அவர்களே, மேயர் பிரியா அவர்களே, உங்கள் முன்னிலையில் நடந்த தரம் கெட்ட பேச்சை நீங்கள் கண்டிக்கப் போகிறீர்களா, இல்லை மௌனமாகக் கடந்து செல்லப் போகிறீர்களா?
இந்த கள்ள மவுனத்தின் மூலமாக, நீங்களும் திமுக வின் ஆபாச - அநாகரிக DNA கொண்டவர்கள்தான் என்பதை நிரூபிக்கப் போகிறீர்களா?
தமிழ்நாட்டு மக்கள்,திமுக வினரின் ஆபாச - அநாகரிக பேச்சுக்களை உற்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி வரும் எல்லா தேர்தல்களிலும் அநாகரிக திமுக வுக்குத் தோல்வியைத் தான் பரிசாக வழங்குவார்கள்.
அண்மையில் இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றி கழகத்திற்கு வெற்றி தேடிக் கொடுத்த தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அவசியமான மக்கள் நல திட்டங்களை தந்திருக்கிறார்.
குறிப்பாக தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் பரப்புரையின் போது குடிநீர் பிரச்சனையை மக்கள் முக்கியமானதாக எடுத்துரைத்தனர்.
அவர்களுக்கு நல்லதொரு தீர்வாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தாராபுரம், காங்கேயம், குண்டடம், பொங்கலூர், வெள்ளகோவில், மூலனூர் ஒன்றியங்களில் மக்கள் பயன் பெரும் வகையில் 1,439 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி ஆற்று நீரினை ஆதாரமாகக் கொண்ட புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தினை அறிவித்துள்ளார்.
மேலும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாசன கால்வாய்களை தூர்வார பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் அறிவித்துள்ளார்.
இலவச வீட்டு மனை பட்டாக்கள், கிராமங்களுக்கு மேல்நிலை குடிநீர் தொட்டிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு தீர்வாக சிறப்பான திட்டங்களை வழங்கி இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு திருப்பூர் பொறுப்பு அமைச்சர் என்கிற முறையிலும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி மக்களின் சார்பாகவும் நமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
மக்கள் மீதான அன்புக்கும் மக்களின் நம்பிக்கைக்கும் என்றும் உரியவர் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
மதுராந்தகத்திற்கு முதலமைச்சர் விஜய் அறிவித்த முக்கியத் திட்டங்கள்:
🔹 நீர்நிலைகள் சீரமைப்பு, தடுப்பணைகள்.
🔹 விவசாயத்திற்குக் கொள்முதல் நிலையங்கள், கிடங்கு, விதைப் பண்ணை.
🔹 ரூ.20 கோடியில் அரசு மகளிர் கல்லூரி.
🔹 ரூ.10 கோடியில் அவசர சிகிச்சைப் பிரிவு.
🔹 வாரச்சந்தை, அறிவுசார் மையம், பெண்களுக்கான தங்கும் விடுதி.
🔹 ஏழைக் குடும்பங்களுக்குக் குடியிருப்புகள்.
🔹 கிராமப்புறங்களுக்குக் கூடுதல் பேருந்துகள்.
🔹 பள்ளி தரம் உயர்வு, மினி விளையாட்டு மைதானம்.
🔹 கூடுதல் மின்மாற்றி.
🔹 மதுராந்தகம் ஏரியில் சுற்றுலாப் பூங்கா.
நீர்வளம் முதல் கல்வி, மருத்துவம் வரை மதுராந்தகத்தின் வளர்ச்சியை மையப்படுத்தியத் திட்டங்கள்!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் புதிய திட்டங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் புதிய திட்டங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மழைவெள்ளத்தால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay visited the Integrated Command and Control Centre at the Ripon Building of the Greater Chennai Corporation today (18.10.2026) and reviewed the relief operations carried out following heavy rainfall in areas under the Greater Chennai Corporation. Subsequently, at the review meeting, the Hon’ble Chief Minister instructed officials to take appropriate measures to prevent rain-related adverse impacts on the public.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப் பார்வையிட்டும் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
#CMJosephVijay
Chief Minister C Joseph Vijay visits the Greater Chennai Corporation (GCC) headquarters at the Ripon Building in Chennai to inspect its monsoon war room
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் இன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ,பொதுமக்களுக்கு மழைவெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும், கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் பாராட்டி கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.இரவு முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர்த் தேக்கமின்றி சீரான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு மழைவெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @AadhavArjuna | @arunraajkg | @AdvocateVenkatP |