மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு. எங்கள் பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் நீண்ட நேர மின் தடையைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu
@CMOTamilNadu பெண்களுக்கு வேலைவாய்ப்புடன் பாதுகாப்பான குடியிருப்பு வசதியும் கிடைக்கும் வகையில், அதிகளவில் பெண் பணியாளர்களை கொண்ட பெரிய தனியார் நிறுவனங்கள் கட்டாயமாக விடுதி வசதிகளை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டுவர வேண்டும்.
@CMOTamilnadu Rajahmundry → Rajamahendravaram எனப் பழமையான பெயர் மீட்டெடுக்கப்பட்டதைப் போல, Pallavaram → Pallavapuram போன்ற நமது ஊர்களின் தொன்மையான பெயர்களையும் வரலாற்றுப் பாதுகாப்பிற்காக மீட்டெடுக்க பரிசீலிக்கலாம்.
@CMOTamilnadu Chennai என்ற பெயருடன் Madras என்ற வரலாற்றுப் பெயரையும் இணைத்து பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இது நமது நகரின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்க உதவும்.
சென்னையின் பல பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளன. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu
ECR விரிவாக்கப் பணிகளில் ஏராளமான பனைமரங்கள் வெட்டப்படுகின்றன. வெட்டப்படும் பனைமரங்களுக்கு ஈடாக, அவற்றின் சுற்றுச்சூழல் மதிப்பை கருத்தில் கொண்டு பல மடங்கு பனை மற்றும் உள்ளூர் மரக்கன்றுகளை நட வேண்டும். நடப்பட்ட மரங்களை தொடர்ந்து பராமரிக்கவும் நடவடிக்கை தேவை. @CMOTamilnadu
@CMOTamilnadu சென்னையில் மழைக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால், கால்வாய்களை முன்கூட்டியே தூர்வாரி சீரமைத்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
@CMOTamilnadu அரசு பேருந்துகளில் வசதியான இருக்கை வசதி இல்லை. பழுதடைந்த மற்றும் குறுகிய இருக்கைகளால் பயணிகள் சிரமப்படுகின்றனர். அனைத்து பேருந்துகளிலும் தரமான, வசதியான இருக்கைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவும்.
அறிவியல் வளர்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு தமிழ்நாடு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். Space, AI, Robotics, Semiconductor போன்ற துறைகளில் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை ஊக்குவித்து, இளைஞர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். @CMOTamilnadu
மாண்புமிகு @CMOTamilnadu அவர்களே, NHAI மற்றும் பொதுக் கட்டுமானப் பணிகளுக்காக அகற்றப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் ஈடாக மரக்கன்றுகள் நடப்பட்டு, அவை வளர்வதையும் உறுதி செய்யும் வலுவான கண்காணிப்பு முறை தேவை. பசுமை தமிழ்நாட்டிற்கான முக்கியமான நடவடிக்கையாக இதை செயல்படுத்த வேண்டுகிறோம்.
கனிம வளத்தை மட்டுமே நம்பி முன்னேறிய நாடுகளின் இன்றைய நிலையை ஆய்வு செய்ய வேண்டும். இயற்கை வளம் இருந்தும் சில நாடுகள் இன்று ஏழ்மை நிலையில் உள்ளன. தமிழ்நாடு கனிம வளத்தைப் பாதுகாத்து, நீடித்த தொழில் மற்றும் மனிதவள வளர்ச்சிக்கு முன்னுரிமை தர வேண்டும். @CMOTamilnadu
சோழர், பல்லவர் காலத்தில் உருவாக்கி பாதுகாத்த நீர்நிலை மேலாண்மை முறைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள், தடுப்பணைகளைப் பாதுகாத்து மேம்படுத்தினால், நீர்வளம் பெருகி தமிழ்நாடு வளம்பெறும். @CMOTamilnadu
கமிட்டிகளில் மழையில் நனைந்து கிடக்கும் நெல் மூட்டைகளைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. நெல்லைப் பாதுகாக்க போதுமான குடோன்கள், உலர்த்தும் வசதிகள் மற்றும் அறிவியல் சேமிப்பு முறைகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்தப்பட வேண்டும். விவசாயியின் உழைப்பு வீணாகக் கூடாது. @CMOTamilnadu
புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு முன், அவற்றின் சுற்றுச்சூழல் தாக்கத்தை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய வேண்டும். வளர்ச்சியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் இணைந்து செல்லும் வகையில் தொழில்கள் அமைக்கப்பட வேண்டும். @CMOTamilnadu@PMOIndia
சென்னை மட்டும் வளர்வதைவிட, அனைத்து மாவட்டங்களும் வளர வேண்டும். முதலீடு, தொழில், வேலைவாய்ப்புகளை பிற மாவட்டங்களுக்கும் பரவலாக்குங்கள். சென்னையின் வளர்ச்சிச் செலவுகள் பிற மாவட்டங்களின் வளர்ச்சிக்கும் விதையாகட்டும். தமிழ்நாடு முழுவதும் வளம்பெறட்டும்! @CMOTamilnadu
புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள அரசு கல்லூரிகள் மூலம் சிறப்பு உதவித்தொகை வழங்க வேண்டும். தொழில் நிறுவனங்களின் CSR மற்றும் sponsorship மூலம் AI, Robotics, Space, Semiconductor போன்ற துறைகளில் மாணவர்களின் திறனை ஊக்குவிக்க வேண்டும். @CMOTamilnadu@PMOIndia
நீர்வளப் பாதுகாப்பு, புதிய நீர்த்தேக்கங்கள் மற்றும் தடுப்பணைகள் அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மழைநீரை சேமித்து, நிலத்தடி நீரை உயர்த்தி, விவசாயத்தையும் குடிநீர் தேவையையும் பாதுகாப்பதே நீண்டகால வளர்ச்சிக்கு அடித்தளம். #CMOTamilNadu
நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்
கேரளா மலை உள்ளது ஆறுகள் உள்ளது ஆனால் மலை உடைக்க. தடை செய்ய பட்டுள்ளது ஆறுகள் உள்ளது மணல் அல்ல தடை செய்ய பட்டுள்ளது மக்கள் சிந்திக்க வேண்டும் கேரளம் கழிவுகள் கொட்ட தமிழக குப்பை தொட்டியா சிந்திக்க வேண்டும் @CMOTamilnadu
மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு,
தமிழர்களின் அறிவியல் சாதனைகள், தமிழ்வழி அறிவியல் மரபுகள் மற்றும் புதுமைகள் குறித்து பள்ளிப் பாடங்களில் கூடுதல் முக்கியத்துவம் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இது அறிவியல் மனப்பான்மையையும் நம் பாரம்பரியப் புரிதலையும் வளர்க்கும்.
மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு,
தமிழ்நாடு பள்ளிப் பாடப்புத்தகங்களில் தமிழ் வரலாறு, தமிழ்ப் புலவர்கள், தமிழரசர்கள் மற்றும் தமிழர் பண்பாடு குறித்த பாடங்களுக்கு மேலும் முக்கியத்துவம் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இது அடுத்த தலைமுறைக்கு நம் மரபை அறிமுகப்படுத்தும்.